search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு கடை"

    • நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
    • கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு அவற்றின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடையை மறைத்து நின்றால் வியாபாரம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இருக்கைகளை அகற்றிவிட்டதாக குற்றச்சாட்டு
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இந்த கடைகள் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பயணிகள் அமர்வதற்காக வைக்கப்பட் டிருந்த இருக்கைகளை அகற்றிவிட்டு வைத்துள்ளனர். இத னால் பயணிகள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் தவிக் கின்றனர்.

    முறையாக குப்பைகளை அகற்றுவது இல்லை. இரவு நேரங்களில் பாலூட்டும் தாய்மார்கள் அறை குடிமக்க ளின் கூடாரமாக மாறி உள்ளது.

    மேலும் பஸ் நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதால், இங்கு மின்விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    எனவே பயணிகளுக்கு பயன்படும் வகையில் அடிப்படை வசதி முழுமையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. எனவே அதனை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்ற ப்பட்டன. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அருள்புரம் வரை பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும், விபத்துக்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவினாசி- திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி - கொச்சின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 9-6-2022 தேதிக்குள் மேற்படி ஆக்கிரமிப்புகளை தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்பு ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ள இடங்களில் இன்று 2-7-2022 முதல் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர். ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது அதனையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
    • கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் முன்புறம் பல ஆண்டுகளுக்கு மேலாக பழக்கடை, பூக்கடை, வளையல்கடை, குங்குமம், விபூதி, மஞ்சள்தூள், மாலை, தேக்காய் கடைகளை நடத்தி வருகின்றனர் .

    காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்த நெரிசலை குறைக்க மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றினர்.

    அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×