search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரளி"

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
    • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

    ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

    அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

    உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

    மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

    புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

    புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

    கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

    தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    • இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
    • சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    கடன்களை தீர்க்கும் செவ்வரளி

    "அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான்.

    சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும்.

    இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.

    ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான்.

    மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது.

    சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

    அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

    அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

    மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும்.

    வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.

    இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.

    திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது.

    உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.

    • ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்.
    • ஆரஞ்சு ரோஜா-ஆர்வமுள்ள பக்தி

    மலர்களின் மகத்துவம்

    ஒருவரது மனதை நிலைப்படுத்தும் சக்தி மலருக்கு உண்டு. 'கொடிரோஸ்' மலரை அன்னை, 'சுமுகமான மலர்' என்றழைத்தார். இம்மலர் வீட்டில் இருந்தால் சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும். சுமுகமாக வாழ்க்கை கிடைக்கும் என்கிறார். 

    ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்


    அசோக மலர்   - கவலையின்மை

    அரளி (வெள்ளை) - தெய்வ சிந்தனை

    அல்லி (சிவப்பு)  - திருமகளின் அருள்

    அலரி (வெண்மை)  - இறைநினைவு

    ஆவாரம்பூ - கூர்த்தமதி

    இரங்கூன் மல்லி - விசுவாசம்

    ஊமத்தை  - தவம்

    எள்ளுப்பூ - சமரசம்

    எருக்கம்பூ- தைரியம்

    எலுமிச்சைப்பூ- கற்புத்திறன்

    கத்திரிப்பூ- பயமின்மை

    கருவேலம்பூ- ஞானம்

    காகிதப்பூ- பாதுகாப்பு

    சண்பகம்- உள்ளம் பக்குவப்படுதல்

    சம்பங்கி- படைப்புத்திறன்

    சாமந்தி- வீரியசக்தி

    சாமந்தி  - முழு அமைதி

    செம்பருத்தி- விரைந்து செயல்பாடு

    சிவப்பு செம்பருத்தி- நிறைந்த சக்தி

    செங்காந்தள்- சச்சரவின்மை

    சூரியகாந்தி- கலை நுண்ணறிவு

    கொத்தமல்லிப்பூ- மென்மை

    கொடிரோஸ்- சுமுகம்

    கொய்யாப்பூ- நிதானம்

    டிசம்பர்பூ- விழிப்புணர்வு

    (வெண்) தாமரை- இறையருள்

    தாழம்பூ- ஆன்மீகமனம்

    தும்பைப்பூ- உண்மைவழிபாடு

    தூங்குமூஞ்சிப்பூ- விவேகம்

    நந்தியாவட்டை- தூயமனம்

    நாகலிங்கப்பூ (சிவப்பு)- செல்வவளம்

    நித்யகல்யாணி (சிவப்பு)- சுயநலமின்மை

    நித்யகல்யாணி (வெண்மை)- நல்ல முன்னேற்றம்

    பருத்தி ரோஜா- தெய்வீக அருள்

    பன்னீர்ப்பூ- சாந்தமான உணர்வு

    பவளமல்லி- தெய்வீக ஆர்வம்

    பாதாம்பூ- ஆன்மீக உணர்வு

    பாரிஜாதம்- தூய ஆர்வம்

    பாகல்பூ- இனிமை

    பாக்குமரப்பூ- தெம்பு

    பீர்க்கம்பூ- அன்புமனம்

    புன்னைப்பூ- உடலில் அமைதி

    புகையிலைப்பூ- பகுத்தறிவு

    பூசணிப்பூ- தாராளம்

    பூவரசம்பூ- ஆரோக்கியம்

    பெருக்கொன்றை- சேவைமனப்பான்மை

    பெட்டுனியா- உற்சாகம்

    மகிழம்பூ- பொறுமை

    மனோரஞ்சிதம்- தெளிவான சிந்தனை

    மல்லிகை- தூய்மை

    மரமல்லிகை- உருவமாற்றம்

    (பவழ) மல்லிகை- இறைவேட்கை

    மாதுளம்பூ- தெய்வபக்தி

    விருட்சிப்பூ- மன அமைதி

    வேப்பம்பூ- ஆன்மீக இன்பம்

    வாடாமல்லி- மரணமிலா வாழ்வு

    வேலம்பூ- தெய்வீக ஞானம்

    ஆரஞ்சு ரோஜா- ஆர்வமுள்ள பக்தி

    சிவப்பு ரோஜா- ஆழ்ந்த உணர்வு

    வெள்ளை ரோஜா- பூர்ண தெய்வபக்தி

    இளஞ்சிவப்பு ரோஜா- சரணாகதி

    ×