search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weekend"

    • கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுநாள் வாரவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களையொட்டி, பொது மக்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பஸ்கள் என கூடுதலாக இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மொத்தம் 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 19 , 20 ஆகிய தேதிகளில் சென்னை தடத்தில் 100 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 19, 20 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறை ப்பூண்டி, வேதாரணியம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்க ளிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கும்பகோணம் கோட்டம் சாா்பில் நாளை 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து போக்குவ ரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் கூறியிருப்பதாவது:-

    வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் நாளை மற்றும் சனிக்கிழம இயக்கப்படவுள்ளன.

    இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்கு செல்ல 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில்கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.
    • கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில்கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடபேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். 

    • கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
    • இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். கோடை சீசனில் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆகியவற்றை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தரை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் வார விடுமுறை நாளான நேற்றும், இன்றும் சுற்றுலாப் பயணிகள் மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, படகுக் குழாம் போன்ற பகுதிகளில் அதிகமாக குவிந்தனர்.

    தற்போது கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மேலும் வரும் காலங்களில் இந்த இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்துமிடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் எனவும் கோடை விடுமுறை முடிந்த பின்பும் இன்னும் தாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    கோவையில், வார இறுதி நாட்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
    கோவை:

    கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அதிகாலை 1 மணிக்கு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் 50 முதல் 60 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 150 முதல் 160 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை 6 ஆயிரத்து 218 வழக்குகளும், அதே கால கட்டத்தில் நடப்பு ஆண்டில் 14 ஆயிரத்து 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை கோர்ட்டுக்கு சென்று செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வாகன ஓட்டிகளை வலியுறுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதின் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத் தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை 196 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதே கால கட்டத்தில் 111 பேர் இறந்துள்ளனர்.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 96 ஆயிரத்து 761 வழக்குகளும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 180 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×