நாளை முதல் 4 நாட்களுக்கு 250 சிறப்பு பஸ்கள்

விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கும்பகோணம் கோட்டம் சாா்பில் நாளை 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
நாளை முதல் 4 நாட்களுக்கு 250 சிறப்பு பஸ்கள்
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து போக்குவ ரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் கூறியிருப்பதாவது:-

வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் நாளை மற்றும் சனிக்கிழம இயக்கப்படவுள்ளன.

இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்கு செல்ல 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டு க்கொள்ளப்படுகிறது.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com