search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thudiyalur"

    • 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    1-வது வார்டு செயலாளர் சாந்திபூஷன் அனைவரையும் வரவேற்றார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி திருப்பூர் சிவசாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குநர் ரங்கநாதன், தலைமை பேச்சாளர் எடப்பாடி சிவசண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பார்கள் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றனர்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், எம்ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வீரபாண்டி விஜயன், பொதுக்குழு உறுப்பினர் ஐ.கே.எஸ்.சதீஷ்குமார், பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன், நகர செயலாளர்கள் ரகுநாதன், ஆனந்தன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜன், ஊராட்சித்தலைவர்கள் ரவி, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் பூக்கடை ரவி, மாணிக்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் கவிச்சந்திரமோகன் நன்றி கூறினார்.

    • டாக்டர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே திருச்சி மாவட்டம் அயனாம்பட்டியை சேர்ந்த பாரத் (வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாரத்துக்கு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்றார். அப்போது அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் பாரத்தை அவரது நிறுவனத்தினர் பொள்ளாச்சியில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு பணி மாறுதல் செய்தனர். கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை பாரத் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

    பின்னர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பாரத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 6 பவுன் தங்க நகைகளை கொள்ளயடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் ரூபேஸ்குமார் (வயது45).

    இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி ரூபேஸ்குமார் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கை செயின், மோதிரம், வளையல் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளயடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரூபேஸ் குமார் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • கடந்த 1½ மாதங்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
    • 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சியில் பன்னீர்மடை கார்டன், சூர்யா கார்டன், வாரி கார்டன் என பல பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்மடை கார்டன், சூர்யா கார்டன், வாரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று காலை ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடும் வரை ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடமாட்டோம் என கூறி கோஷங்களை எழுப்பியதுடன், ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த நகருக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் கார்த்திகேசுவரி சுந்தர்ராஜ், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஈஸ்வரி மற்றும் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் முறையாக விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள், உடனடியாக தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    துடியலூர் அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் விபத்தில் பலியானார்.

    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (28) தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்ரீதேவி (24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதம் ஆகிறது.

    ஸ்ரீதேவி தனியார் நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் தங்கள் நிறுவனத்தில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    தெப்பம்பட்டி பிரிவு முருகன் நகரில் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஸ்ரீதேவி சம்பவ இடத்திலே இறந்தார். பிரேம் குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துடியலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    மதுரை மாவட்டம் மனக்காலகுடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தடாகம் அருகே உள்ள ஆனைகட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த யானை லட்சுமணனை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துடியலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என்.மில் ராகவேந்திரா கார்டனை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்வர்ணலதா (வயது 29). தனியார் நிறுவன ஊழியர்.

    ஸ்வர்ணலதாவுக்கு நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.

    இது குறித்து ஸ்வர்ண லதா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் அந்த வாலிபருக்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். ஆனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.இதனால் கடந்த சில நாட்களாக ஸ்வர்ணலதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழக்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார்.

    சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஸ்வர்ணலதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×