search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "substandard food"

    • தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • பொதுமக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
    • புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    ஈரோடு:

    ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு உணவு பாதுகாப்பு துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் தற்போது உணவு தொடர்பான பொது மக்களின் புகார் நடவடி க்கைகளை எளிதாக்கும் விதமாக விரைவு நடவடி க்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

    இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை டைப் செய்யாமல் மிக எளிதாக விவரங்களை தேர்ந்தெடுக்கு ம் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவா க்கப்பட்ட புதிய இணைய தளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tnfood safety consumer App பதிவிறக்கம் செய்யப்பட்டு ள்ளது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்க ளை பொதுமக்கள் இதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், கைபேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம்.

    மேலும் புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி நேர முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கை உடனடி யாக எடுக்கப்பட்டு புகார் தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்றார்.

    • தரமற்ற உணவு வழங்கிய 10 நிறுவன ங்களுக்கு தொடர்ந்து 7நாட்கள் அவகாசம் வழங்கி திருத்தம் செய்து அறிக்கை வழங்க பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
    • உதாசீனம் செய்து வந்த 8 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கம்பம், சின்னமனூர், போடி நாயக்கனூர், தேனி, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் நகர் மற்றும் வட்டார பகுதிகளில் சபரிமலை யாத்திரை செல்லும் வழித்தடங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரி வளாக ங்கள்,சந்தை, பஸ் நிலைய பகுதிகளில் உள்ள உணவகங்கள், இறைச்சி வியாபார கடைகள்,

    மளிகை கடைகள் மற்றும் பேக்கரி, டீக்கடைகளில் அந்தந்த வட்டார பகுதிகளில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்ட உணவு தொழில் மேற்கொள்ளும் இடங்கள் ஆய்வு மேற்கொண்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் ஒழுங்கு முறை விதிமுறைகள் படி பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்காதது மற்றும் அரசு தடை செய்த 75 மைக்ரான் குறைவுள்ள உணவு தரம் அல்லாத பிளாஸ்டிக் பைகள், தாள்கள், டம்ளர், தட்டுகளில் சூடான உணவு பொருட்களை பயன்படுத்து வது, சமையல் எண்ணெயை திரும்ப திரும்ப உணவு தயாரிக்க மறுசுழற்சி செய்வது,

    அரசின் RUCO திட்டத்தின் கீழ் பயோடீசல் தயாரிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மறுசுழற்சி செய்யும் சமையல் எண்ணெயை வழங்காமல் இருப்பது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி நிறுவனங்க ளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உணவு பாதுகாப்பு சட்ட விதி-55 ல் வழங்க பட்டது.

    அறிவிப்பு பெற்று கொண்டு மேம்படுத்தி கொள்ளாத 39 வியாபார இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆய்வு மேற்கொண்டு 15 நாட்கள் அவகாசம் வழங்கி திருத்திக் கொள்ள பதிவு தபால் மூலம் மேம்பாட்டு அறிக்கை வழங்கப்பட்டது. 

    இதனை பொருட்படுத்தா மல் இருந்த 10 நிறுவன ங்களுக்கு தொடர்ந்து 7நாட்கள் அவகாசம் வழங்கி திருத்தம் செய்து அறிக்கை வழங்க பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் எந்த வித அபிவிருத்தி நடவடிக்கை களும் மேற்கொள்ளாமல் அலட்சிய போக்கில் சுய லாபநோக்கில் தொடர்ந்து பொதுமக்கள் ஆரோக்கிய த்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த எட்டு நிறுவனங்களுக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

    வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வழங்கிய நோட்டீஸ் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மூன்று முறை அவகாசம் வழங்கி பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மேம்பாட்டு அறிக்கை ஆகியவற்றை உதாசீனம் செய்து வந்த இந்த 8 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

    மேலும் சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவன ங்களுக்கு வியாபாரத்தை நிறுத்தி கொள்ள உத்தரவு வழங்க பட்டது. உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை விதிமுறைகள் படி மேம்பாட்டு செயல் முறை உத்தரவில் அறிவுறுத்திய குறைகளை கலைந்து உரிமம் புதுப்பிக்க வும் எச்சரிக்கப்பட்டது. இந்த தகவலை தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராகவன் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தே பக்தர்கள் குழுவாகவும், தனியாகவும் நடந்து செல்வதால் விடிய விடிய மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
    • பெரும்பாலான ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு தயாரித்து வழங்கப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    கூடலூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வாகனங்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரையாகவும் சபரிமலைக்கு நடந்து பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். குமுளி அடுத்துள்ள புல்மேட்டு பாதையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம்.

    ஆனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தே பக்தர்கள் குழுவாகவும், தனியாகவும் நடந்து செல்வதால் விடிய விடிய மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. கடும் பனியிலும் பக்தர்கள் சாலையில் பஜனை பாடியபடி செல்கின்றனர். இவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடலூர், கம்பம் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தங்கி உணவு சாப்பிட்டு வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு தயாரித்து வழங்கப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    பழைய மாவால் செய்த இட்லி, தோசை, சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவுகள் வினியோகம் செய்து வருகின்றனர். ஆனால் விலையும் மற்ற ஓட்டல்களை விட சற்று அதிகரித்தே விற்பனையாகிறது. சுகாதாரமற்ற உணவை அதிக விலை கொடுத்து வாங்கி உண்பதால் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் பல வித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த ஓட்டல்களை முறையாக ஆய்வு செய்து சுகாதாரமற்ற உணவு தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இனி வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சபரிமலை சன்னிதானத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கேன்களில் கூட தண்ணீர் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆங்காங்கே கிடைக்கும் கடைகளில் மட்டுமே தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இது போன்ற சூழலில் உணவகங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கொடைக்கானல் நகரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சுற்று லாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்ப ட்டது.
    • ஒரு ஓட்டலில் பழைய சப்பாத்தி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட சிக்கன் ஆகியவை சுமார் 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சுற்று லாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்ப ட்டது. எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் ஆய்வு செய்தனர்.

    மூஞ்சிக்கல் நாயுடுபுரம் டெப்போ பகுதி, லேக் ரோடு ஆகியபகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு ஓட்டலில் பழைய சப்பாத்தி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட சிக்கன் ஆகியவை சுமார் 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாள ர்களுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது. மேலும் பிளா ஸ்டிக் பயன்படுத்திய ஒரு உணவகத்துக்கு ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்ப ட்டது. தொடர்ந்து விதிமீறல் நடப்பது கண்டறியப்பட்டால் ஓட்டல்களுக்கு சீல் வைக்க ப்படும் என்று எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதி உணவக உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் சிக்கன் 65 போன்ற உணவுப் பொருட்க ளில் இனி செயற்கை வண்ணம் கலப்பது இல்லை என உணவக உரிமை யாளர்கள் உறுதியளித்து உள்ளனர்.

    ×