என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் தரமற்ற உணவு தயாரித்த ஓட்டலுக்கு அபராதம் அதிகாரிகள் அதிரடி
- கொடைக்கானல் நகரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சுற்று லாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்ப ட்டது.
- ஒரு ஓட்டலில் பழைய சப்பாத்தி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட சிக்கன் ஆகியவை சுமார் 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சுற்று லாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்ப ட்டது. எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் ஆய்வு செய்தனர்.
மூஞ்சிக்கல் நாயுடுபுரம் டெப்போ பகுதி, லேக் ரோடு ஆகியபகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு ஓட்டலில் பழைய சப்பாத்தி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட சிக்கன் ஆகியவை சுமார் 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாள ர்களுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது. மேலும் பிளா ஸ்டிக் பயன்படுத்திய ஒரு உணவகத்துக்கு ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்ப ட்டது. தொடர்ந்து விதிமீறல் நடப்பது கண்டறியப்பட்டால் ஓட்டல்களுக்கு சீல் வைக்க ப்படும் என்று எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதி உணவக உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் சிக்கன் 65 போன்ற உணவுப் பொருட்க ளில் இனி செயற்கை வண்ணம் கலப்பது இல்லை என உணவக உரிமை யாளர்கள் உறுதியளித்து உள்ளனர்.