search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student kills"

    போடி அருகே கோவில் திருவிழாவில் பிளஸ்-2 மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மகன் சுபாஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். இவர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்காக கொட்டக்குடி ஆற்றில் கரகம் எடுக்க தனது நண்பர்களுடன் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அந்தியூர் அருகே வாகனம் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 16). செம்புளிச்சாம் பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தட கள வீரராகவும் இருந்தார்.

    இவர் கடந்த 22-ந் தேதி அதிகாலை வாக்கிங் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் தினேஷ்குமார் மீது மோதி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை செம்புளிச்சாம்பாளையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்தியூர்-பவானி மெயின் ரோடு செம்புளிச்சாம்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் கூடினர். அவர்கள் அங்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. #tamilnews
    தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற மாணவி பலியான சம்பவம் குறித்து காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருடைய மகள் அசீகா (வயது 19). இவர் நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் மகள் நிவேதிதா (18), கோபால் மனைவி அர்ச்சனா(25), சந்திரப்பா மகள் மாணிக்கியா(20). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி அசீகா, நிவேதிதா, அர்ச்சனா, மாணிக்கியா ஆகிய 4 பேரும் அதே பகுதியில் உள்ள தங்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

    அந்தநேரம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அசீகா உள்ளிட்ட 4 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி அசீகா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய காரை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    எண்ணூரில் உறவினர்களை பார்ப்பதற்காக வந்த மாணவர் தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
    ராயபுரம்:

    கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மஞ்சுநாதன் (21). இவர் புழல் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    உறவினர்களை பார்ப்பதற்காக மாணவர் மஞ்சுநாதன் எண்ணூர் சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து கொருக்கபேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    திருமங்கலத்தில் பந்தை எடுக்கச் சென்றபோது மாணவன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் ஆண்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கதிர்வேல் (வயது 9). 4-ம் வகுப்பு மாணவன்.

    நேற்று கருப்பசாமி தனது மனைவியுடன் திருமங்கலத்தில் நடைபெற்ற ஒரு விசே‌ஷத்திற்கு சென்றார். கதிர்வேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

    வீட்டு முன்பு தோட்டத்தில் அவன் பந்து விளையாடி உள்ளான். எதிர்பாராத விதமாக பந்து அங்குள்ள கிணற்றுக்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக கதிர்வேல் இறங்கி உள்ளான்.

    அப்போது நிலை தடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனால் தண்ணீரில் மூழ்கிய கதிர்வேல் பரிதாபமாக இறந்தான். வீடு திரும்பிய கருப்பசாமி மகனை தேடிய போது கிணற்றுக்குள் அவன் பினமாக இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வாலாஜாவில் கிணற்றை எட்டி பார்த்த 3-ம் வகுப்பு சிறுவன் தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா அனந்தலை பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் அனு (வயது 10), மகன் ஆகாஷ் (8). இவர்களில் ஆகாஷ், அதே பகுதியில் உள்ள நிதியுதவிப் பெறும் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தான்.

    இன்று காலையில் அக்காளுடன் ஆகாஷ், வீட்டருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றான். அப்போது, அங்குள்ள கிணற்றை எட்டி பார்த்த ஆகாஷ், தவறி கிணற்றுக்குள் விழுந்தான்.

    இதில் தண்ணீரில் மூழ்கிய ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கேரள மாநிலம் பாலக்காடு கொல்லங்கோடு ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு தத்தமங்கலம் குற்றிக்காடு பகுதியை சேர்ந்த தேவி மகன் ஜூபின் (வயது 18). என்ஜினீயரிங் மாணவர். இதே பகுதியை சேர்ந்த மணிகண்டனின் மகன் சுமேஷ் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இவர்கள் கொல்லங்கோடு ரெயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஜூபின் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய சுமேசை பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாஸ், டி.எஸ்.பி. செய்தாலி ஆகியோர் வந்தனர். ஜூபினின் உடலை பரிசோதனை செய்தபோது சிம்கார்டு இல்லாத ஒரு செல்போன், ரூ.3100 பணம், மற்றும் மோட்டார் சைக்கிள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஜூபின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்ககாக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது வாலிபர்கள் தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியே வந்த ரெயில் மோதி இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவதாக கூறினர்.

    பலியான ஜூபின் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×