என் மலர்

  நீங்கள் தேடியது "Student election"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள்.
  • தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலை மையில் மாதந் தோறும் ஒரு கூட்டம் நடத் தப்படும்.

  கோவை:

  கோவை கோட்டைமேடு பகுதியில் நல்லாயன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 130 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இந்த பள்ளியில் மாணவர் தேர்தல் வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்தல் கடந்த 1-ந் தேதி வேட்பு மனு தாக்கலுடன் தொடங்கியது.

  அன்று மாலை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 4-ந் தேதி தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

  இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணைத் தலைவர், உணவுத்துறை தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், சுற்றுச்சூழல் துறை தலைவர் ஆகிய பதவிகளுக்காக மாணவர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் 4 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இன்று காலை பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

  மாணவர்கள் அனைவருமே மிகுந் த ஆர்வத் துடன் வந்து வரிசை யில் நின்று தங்களது வாக்கை செலுத்தினர். வாக்களித்த மாணவர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது.

  இந்த தேர்தலில் 138 மாணவர்கள், 6 ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் ஒருவர், கல்வி அதிகாரி ஒருவர், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர் ஒருவர் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் 118 பேர் என மொத் தம் 285 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு இன்று மாலை வரை நடக் கிறது. இந்த தேர்தல் குறித்து ஆசிரியர்கள் கூறிய தாவது:-

  மாணவர்களுக்கு ஜன நாயக மாண் பை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

  தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலை மையில் மாதந் தோறும் ஒரு கூட்டம் நடத் தப்படும். தேர்த லில் தேர்ந்த ெடு க்கப்பட்டவர்கள் கடமையை சரியாக செய்யா விட்டால் அவர்கள் மீது மாணவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

  மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள்.

  இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ந் தேதி நடக்கிறது.இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 11-ந் தேதி பதிவி பிரமாணம் எடுத்து கொள்வார்கள்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்கு எண்ணிக்கை வரும் 30-ந் தேதி நடைபெறும் எனவும், டிசம்பர் 1-ந் தேதி பதவிப்பிரமாணம் நடைபெறும் எனவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

  கோவை:

  கோவை கோட்டைமேடு பகுதியில் நூற்றாண்டைக் கடந்த தனுயார் தொடக்கப்பள்ளியில் தற்போது 135 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரான்சிஸ் கிளமென்ட் விமல் உள்ளார். இப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

  இந்த பள்ளியில் மாணவர்களுக்குத் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தலைமைப் பொறுப்பு, அதன் கடமைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஏதுவாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

  கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போது மாணவர் தலைவர், துணைத் தலைவர். உணவுத் தலைவர், தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

  கடந்த 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு பதவிக்கும் 5-ம் வகுப்பில் பயிலும் தலா 3 பேர் வீதம் போட்டியிட்டனர். கடந்த 25-ந் தேதி பிரசாரம் நடைபெற்றது. இதில், மனு தாக்கல் செய்த மாணவர்கள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பிரசாரம் செய்தனர்.

  இதையடுத்து நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

  இந்த ஆண்டு பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கும் வாக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வரிசையாக நின்று வாக்களித்தனர். தேர்தல் நாளான நேற்று மாலை 5.30 மணி வரை 200 வாக்குகள் பதிவாகியிருந்தன.

  வாக்கு எண்ணிக்கை வரும் 30-ந் தேதி நடைபெறும் எனவும், டிசம்பர் 1-ந் தேதி பதவிப்பிரமாணம் நடைபெறும் எனவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுத்தேர்தலை போன்று பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கை விரலில் மையிட்டு, ஐ-பேடில் வாக்களித்தனர்.
  கோவை:

  கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் நிர்வாக குழுவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், தலைவி, விளையாட்டு செயலாளர், கலை இலக்கிய செயலாளர் ஆகிய 4 பொறுப்பாளர்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய அணிகளை கொண்ட 4 அணித்தலைவர் மற்றும் 4 துணை தலைவர்கள் என மொத்தம் 12 பொறுப்புகளுக்கு 38 மாணவ-மாணவிகள் போட்டியிட்டனர்.இவர்கள் சக மாணவர்களிடம் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.  இதற்காக பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள அரங்கில் 8 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐ-பேடு வைக்கப்பட்டிருந்தது. வாக்குபதிவை பள்ளியின் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி வாக்களித்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் அந்தோணிராஜ், தலை மை ஆசிரியை அனிதா, மழலையர் பள்ளி பொறுப்பாளர் மீரா ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக அவர்களுக்கு பொதுத்தேர்தலில் வைப்பது போல கை விரலில் மை வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவர்கள், 12 பதவிகளுக்கு போட்டியிடும் மாணவ-மாணவிகளின் புகைப்படங்களை தொட்டு இணைய தளம் மூலம் வாக்களித்தனர். அவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால் பொதுத்தேர்தலில் உள்ளது போன்று ‘நோட்டா’ வாக்கு பதிவு செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்கவில்லை.

  இதுகுறித்து பள்ளி நிறுவனர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா ஆகியோர் கூறியதாவது:-

  பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்கும் போதே அரசியல் அறிவுபெறவேண்டும். தேர்தல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை.நாட்டின் நலன் கருதி அதை தவற விடக்கூடாது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தலை நடத்தினோம். இதில் 742 மாணவ-மாணவிகள், 86 ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 832 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்கு பதிவு எண்ணப்பட்டு, 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

  இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். 
  ×