என் மலர்
நீங்கள் தேடியது "விஜயவாடா"
- விநாயகர் சிலை முழுவதும் இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன.
- விநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா, வித்யாதரபுரம் பஸ் நிலையம் அருகே முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் செய்யப்பட்ட 72 அடி உயர மகா கணபதி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை முழுவதும் இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன. இந்த விநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விநாயகரின் ஒரு பக்கம் நாகேஸ்வர சாமியும், மறுபுறத்தில் ஸ்ரீ வாசுகி கன்னிகா பரமேஸ்வரி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 40 கலைஞர்களால் கடந்த 2 மாதங்களாக விநாயகர் சிலையை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாக விழா குழுவினர் தெரிவித்தனர்.
- சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும். தற்பொழுது வரும் 30-ந் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது.
அதன்படி மதுரையிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் (30 நிமிடம்) கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
- சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.
இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.
உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், மண்டல வாரியாக, 99.75 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.60 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 99.30 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 99.26 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் முதல் 4 இடங்களை தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி ( 77.94%) , உத்தரபிரதேசத்தில் நொய்டா (90.46%) மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது.






