search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Constituency"

    • பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
    • வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த கூட்டத்திற்கு வாலிபர் ஒருவர் வயல் வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


    ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தியபோது பாம்புடன் பிரசார கூட்டத்திற்கு வந்தவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 5,69,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    சேலம்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    சேலம் தொகுதியில் 16,11,982 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,48,809 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் 5,68,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,32,040 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 49 ஆயிரத்து 435 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா 32 ஆயிரத்து 219 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 57 ஆயிரத்து 191 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் அதிமுக வேட்பாளரை விட 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    சேலம்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

    சேலம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் பார்த்திபன் 3,62,810 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 2,70,051 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். அமமுக வேட்பாளர் வீரபாண்டி 30 ஆயிரத்து 99 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா 20 ஆயிரத்து 465 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மண்கண்டன் 36 ஆயிரத்து 812 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    1980-க்கு பிறகு தி.மு.க. சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சேலம் தொகுதியை கைப்பற்றுகிறது.
    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    1952-ம் ஆண்டு முதல் 2014 வரையிலான சேலம் பாராளுமன்ற தேர்தல்களில் தனித்தும், கூட்டணி வைத்தும் 7 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு முறை சுயேட்சையாகவும் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.

    1980-க்கு பிறகு தி.மு.க. சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சேலம் தொகுதியை கைப்பற்றுகிறது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 67 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட உமாராணி 2 லட்சத்து 88 ஆயிரத்து 939 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் 2 லட்சத்து 1,265 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் 46 ஆயிரத்து 477 ஓட்டுகள் பெற்றார்.
    ×