search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavurchatram"

    • அரசு விடுமுறை தினத்தன்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டு தனமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தை அடுத் துள்ள மேலப்பாவூர், வேம்படி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகையா ( வயது 61 ), மேல அரியப்பபுரம், குமார சாமிபுரத்தை சேர்ந்த குத்தா லிங்கம் (54 ), மலைய ராமபுரம் அன்பு நகரை சேர்ந்த வைத்திலிங்கம் ( 36), மேலப்பாவூர் பால்பண்ணை தெரு முத்துசாமி (63), கரிசலூர் கீழத்தெருவை சேர்ந்த தங்கசாமி (42) ஆகியோர் அரசு விடுமுறை தினத்தன்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டு தனமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

    • நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் பள்ளியின் முன் பக்க சுற்றுசுவர் இடிக்கப்பட்டு அதில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி நுழைவாயில் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பள்ளி கேட் திறந்தே காணப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் தென்காசி - நெல்லை மெயின்ரோடு நான்கு வழி சாலை அருகே அமைந்துள்ளது த.பி.சொக்கலால அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் கீழப்பாவூர் வட்டார வள மையம் இங்கு செயல்பட்டு வருகிறது.

    காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் பள்ளியின் முன் பக்க சுற்றுசுவர் இடிக்கப்பட்டு அதில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை இடிக்கப்பட்ட சுற்றுசுவர் புதிதாக கட்டப்படவில்லை. மேலும் பள்ளி நுழைவாயில் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பள்ளி கேட் திறந்தே காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன் மா ணவர்களின் உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளையும் சேதப்படுத்தி செல்கின்றனர். அரசு உடனடி யாக பள்ளிக்கு முன்புற சுற்று சுவர் அமைத்து நுழைவு வாயில் கேட்டை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • ஒரு லிட்டர் மருந்தை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மில்லி வீதம் ஒரு மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்என செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    தென்காசி:

    தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதியாண்டு மாணவிகள் கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் கிராம மக்களுக்கு தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது.

    இது தென்னைக்கு தேவையான சத்துகளையும்,வளர்ச்சி ஊக்கிகளையும் வழங்குகின்றது. இதனைதெளிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான தேங்காய்கள் பிடிப்பதுடன் குறும்பை உதிர்வையும் குறைக்கின்றது. ஒரு லிட்டர் மருந்தை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மில்லி வீதம் ஒரு மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்என செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாணவிகள் வழங்கிய செயல் விளக்கத்தில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
    • கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் முரளி சங்கர் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள அரியப்பபுரம் வெள்ளை பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

    கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று நல்ல தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கிராமம் முழுவதும் காய்ச்சல் நோயாளிகள் உள்ளார்களா என கணக்கெடுக்கப்பட்டது. கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் பாரதி கண்ணம்மா மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சிகள் வல்லுநர் பாலாஜி, வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் ஸ்ரீமுக நாதன், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், சுப்ரமணியன் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
    • பாவூர்சத்திரம் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் , பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கல்லூரணி, மடத்தூர், திப்பணம்பட்டி, சடையப்பபுரம், கீழப்பாவூர், கொண்டலூர், சிவகாமிபுரம். ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

    அவர்களுக்கு பாவூர்சத்திரம் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் , பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி பங்கேற்று பக்தர்கள் அனைவரும், சாலையின் வலது புறம், கூட்டமாக செல்லாமல், வரிசையாக செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ் மற்றும் காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயணசிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
    • ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் குறித்த விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான எஸ்.ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் செல்வன், இலக்கிய அணி தலைவர் பொன்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் குமார்பாண்டியன் வரவேற்றார்.

    மாவட்டத்தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் குறித்த விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் கிழக்கு வட்டார தலைவர் தங்கரத்தினம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா,

    கீழப்பாவூர் நகர தலைவர் சிங்ககுட்டி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் பூபால்பாண்டியன், சீனிவாசகம், ராமர், வக்கீல் உமாபதி, நேசமணி, மாதவன், தங்கபழம், செல்வன், தாமோதரன், சின்னராஜா, சிவன்பாண்டியன், மாரியப்பன், சத்தியமூர்த்தி, அமர்நாத், தவசிமுத்து தங்கராஜ், தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறும்பலாப்பேரி கிராம கமிட்டி தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

    • பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளருமாகிய இளங்கோ தலைமை தாங்கினார்.

    அரிமா சங்க பொருளாளர் பரமசிவம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜான்சி ராணி வரவேற்புரை ஆற்றினார். ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கினார்.

    இதில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆனந்த செல்வி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் சாக்ரடீஸ் , சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் சிவபார்வதி நாதன் நன்றி கூறினார். அரிமா சங்க உறுப்பினர்கள் ஆனந்த், சுப்புராஜ், தங்கராஜ், சினேகா பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×