பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது

அரசு விடுமுறை தினத்தன்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டு தனமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது
Published on

தென்காசி:

பாவூர்சத்திரத்தை அடுத் துள்ள மேலப்பாவூர், வேம்படி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகையா ( வயது 61 ), மேல அரியப்பபுரம், குமார சாமிபுரத்தை சேர்ந்த குத்தா லிங்கம் (54 ), மலைய ராமபுரம் அன்பு நகரை சேர்ந்த வைத்திலிங்கம் ( 36), மேலப்பாவூர் பால்பண்ணை தெரு முத்துசாமி (63), கரிசலூர் கீழத்தெருவை சேர்ந்த தங்கசாமி (42) ஆகியோர் அரசு விடுமுறை தினத்தன்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டு தனமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com