search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்கப்படுமா?- பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு
    X

    பள்ளி சுவர் இடிக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

    பாவூர்சத்திரம் அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்கப்படுமா?- பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

    • நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் பள்ளியின் முன் பக்க சுற்றுசுவர் இடிக்கப்பட்டு அதில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி நுழைவாயில் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பள்ளி கேட் திறந்தே காணப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் தென்காசி - நெல்லை மெயின்ரோடு நான்கு வழி சாலை அருகே அமைந்துள்ளது த.பி.சொக்கலால அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் கீழப்பாவூர் வட்டார வள மையம் இங்கு செயல்பட்டு வருகிறது.

    காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் பள்ளியின் முன் பக்க சுற்றுசுவர் இடிக்கப்பட்டு அதில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை இடிக்கப்பட்ட சுற்றுசுவர் புதிதாக கட்டப்படவில்லை. மேலும் பள்ளி நுழைவாயில் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பள்ளி கேட் திறந்தே காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன் மா ணவர்களின் உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளையும் சேதப்படுத்தி செல்கின்றனர். அரசு உடனடி யாக பள்ளிக்கு முன்புற சுற்று சுவர் அமைத்து நுழைவு வாயில் கேட்டை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×