search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mansoon session"

    ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். #Sterlite #MansoonSession
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், அங்கு நிலத்தடி நீரில் மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்ததை விட அதிகளவிலான தனிமங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. லெட், கேட்மியம், குரோமியம், மாங்கனீசும் இரும்பு மற்றும் அர்செனிக் ஆகிய தனிமங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட நீரில் உள்ளது. 

    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு தனிமங்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும், நிலத்தடி நீரில் உள்ள மாசுக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    மக்களவையில் தனது உரையை முடித்த பின்னர் மோடியை ராகுல் கட்டிப்பிடித்ததற்கு கருத்து தெரிவித்த பாஜக பெண் எம்.பி பாதல், “கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது இடமில்லை” என கூறினார். #NoConfidenceMotion #RahulHugsModi
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார். தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற அவர் மோடியை கட்டிப்பிடித்தார்.

    மோடியும் சிரித்துக்கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய பாஜக பெண் எம்.பி பாதல், “முன்னா பாய் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது உகந்த இடமில்லை” என தெரிவித்தார். இதனை அடுத்து பாதலை சபாநாயகர் உட்கார வைத்தார். (முன்னாபாய் என்ற இந்தி படத்தில் அனைவரையும் கட்டிப்பிடித்து அமைதிப்படுத்துவது போல காட்சிகள் இருக்கும். தமிழில் இது வசூல்ராஜா என்ற பெயரில் வெளியானது)

    ராகுல் காந்தி பாலிவுட்டில் நடிக்க போகலாம் என மற்றொரு பாஜக பெண் எம்.பி கிரண் கெர் தெரிவித்தார். “ராகுல் வயதளவில் வளர்ந்து விட்டாலும் அவர் குழந்தை போல நடந்து கொள்கிறார்” என ராகுலின் கட்டிப்பிடித்தல் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் கூறியுள்ளார்.
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன. #MansoonSession #TeluguDesam #NDA
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இன்னும், மூன்று கூட்டத்தொடர்கள் மட்டுமே மீதம் இருப்பதால் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருகிறது. இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், அவை சுமுகமாக நடக்க எம்.பி.க்கள் உதவ வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், நாளை தீர்மானத்தை கொண்டு வர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவோம் என ஆர்.ஜே.டி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

    நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அபாயம் இல்லை என்றாலும், இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில், ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால் எப்படி முறியடிப்பது என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடக்க இருக்கிறது. #Monsoonsession #Parliment
    புதுடெல்லி:

    பாராளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. அப்போது, மழைக்கால கூட்டத்தொடரை அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை முறைப்படி விரைவில் அறிவிக்கும். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 
    முத்தலாக் மற்றும் ஓ.பி.சி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
    ×