என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagdeep Dhangar"

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
    • ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவின் மறைவால் கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார்.

    அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர்மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • ஜெகதீப் தன்கரை பதவிநீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்தனர்.
    • காங்கிரஸ், திரிணாமுல், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் பாராளுமன்ற மேல்சபையின் தலைவராக இருக்கிறார். அவருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே அவையில் மோதல் ஏற்படுகிறது. ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையே, ஜெகதீப் தன்கரை பதவிநீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அதில் கையெழுத்திட்டனர்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதத்துடன் மேலும் ஒரு எம்.பி. ஆதரவு தேவை. அப்படி ஆதரவு இருந்தால்தான் மேல்சபை தலைவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.

    இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:

    மாநிலங்களவை தலைவர் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சியும், அவர்களது கூட்டணியும் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டன.

    துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்ஜி எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். எப்போதும் விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபட்டவர். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவர் சபையை வழிநடத்தும் விதத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. தலைவர் மீது நாங்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

    • துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.
    • இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க கவர்னரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதை முறைப்படி அறிவித்தார்.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ஜெகதீப் தங்கருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்தார்.

    ×