துணை ஜனாதிபதி தேர்தல் - ஜெகதீப் தங்கருக்கு நிதிஷ் குமார் ஆதரவு

துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க கவர்னரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
Published on

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதை முறைப்படி அறிவித்தார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ஜெகதீப் தங்கருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com