என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire accidents"

    • கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இங்கு வந்த மர்ம நபர்கள் பந்தலில் தீ வைத்து சென்று விட்டனர்.

    தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து எரியோடு அ.தி.மு.க. செயலாளர் அறிவாளி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதன் அருகே அரசு பள்ளி, போலீஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் நடந்த தீ விபத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் தீ வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
    • வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது.

    வெள்ளகோவில் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில், நாட்ராய சாமி கோவில் வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான , எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழ ந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. சமையல் முடிந்தவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கேஸ் பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடி விட வேண்டும்.

    வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்க கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக் கூடாது. பொதுமக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தித் துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்பநிலையில் அணைக்க தீதடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்படும் என வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    • அப்பகுதியில் புகைமூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
    • உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    உடுமலை :

    குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரத்தில் இருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையில் உப்பாறுஓடை உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    ஓடையில் முள் காடுகள் வளர்ந்துள்ளன. இதில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது .இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • காற்று வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் தனியார் பஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக புறநகர் பஸ்கள், மினி பஸ்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகரிலும், நெல்லை மாவட்டத்திலும் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்களுக்கான பராமரிப்பு மேற்கொள்ளும் பணிமனை தச்சநல்லூர் பகுதியில் உள்ளது.

    இதில் நேற்று இரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பழுதாகி நின்ற பஸ்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 1 மணி அளவில் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தொடர்ந்து அருகில் மற்றொரு பஸ்சிலும் தீ பரவி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.

    உடனடியாக பாளை தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 பஸ்சிலும் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் ஒரு பஸ் முற்றிலும் எரிந்தது. மற்றொரு பஸ் பாதி எரிந்தது.

    இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றியது எப்படி என்பது குறித்து விசாரித்தனர். மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? அல்லது வெல்டிங் எந்திரத்தினை பயன்படுத்தி பணி செய்தபோது, தீப்பொறி பரவியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×