என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feeling"

    • கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு.
    • என் குழந்தைக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.

    பெற்றோர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் குழந்தைகளின் அமைதி, அதாவது கூச்ச சுபாவம். கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பாகும். மனோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி 10-20 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்பொழுதே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. கூச்சம் என்பது அமைதியின் ஒரு வெளிப்பாடே. அவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுப்படுத்தி, அதிலிருந்து வெளியேக்கொண்டு வாருங்கள். கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது குறித்த சில யோசனைகளை காணலாம்.

    முத்திரை குற்றுவதை நிறுத்துங்கள்

    முதலில், என் குழந்தைக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள். இதில் சிலர் பெருமைக்கொள்வார்கள். இதில் பெருமைக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. வீட்டில் நம் குடும்பத்தினர் மட்டுமே இருப்போம். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் மற்ற முகங்களை பார்த்திருக்கமாட்டார்கள். ஒரு பொதுவெளியில் அதாவது ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ செல்லும்போது புதுமுகங்களை பார்ப்பர். தெரியாதவர்கள் என்பதால் சில குழந்தைகள் பேசமாட்டர்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். பெற்றோர்கள்தான் இவர்கள் நம் உறவினர், நண்பர் எனக்கூறி அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அந்த பயத்தை போக்கவேண்டும். புதிய நபர்களை பார்க்கும்போதும் அல்லது பொது இடத்திற்கு செல்லும்போதும் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் இதைவிடுத்து அவன் என்னமாதிரி அமைதியா இருப்பான் என கூறுவார்கள். பின்னர் அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என இவர்களே கூறுவர். இதுபோல உங்களுடையை குணாதிசியம் என லேபிளிடாமல் அது கூச்ச சுபாவமா அல்லது சங்கடமா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அப்படி பேசுவதற்கு சங்கடம் எனும்போது அதனை விளக்கி சரிசெய்யுங்கள். 

    கூச்சத்தை பலவீனமாக பார்க்கவேண்டாம்

    முதலில் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு அது புதிதாக இருக்கும். முதல்நாள் பள்ளி வகுப்பறையை கற்பனை செய்துகொள்வோம். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே ஓடி, ஓடி விளையாடுவார்கள், சிரிப்பார்கள், அங்குள்ள பொருட்கள், புத்தகங்களை எடுத்து பார்ப்பார்கள், துறுதுறுவென இருப்பார்கள். மற்ற குழந்தைகள் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல புதிய முகங்கள் பழக பழக அவர்களும் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பள்ளி மட்டுமின்றி வீட்டிலும் சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். இதனைப் பார்க்கும் பெற்றோர்கள் பலரும் மந்தமாக இருக்கிறான் எனக் கூறுவார்கள். அது மந்தம் இல்லை. அமைதி. அனைத்து குழந்தைகளும் ஒரே சுபாவத்தை கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் அமைதியை பலவீனமாக பார்க்கவேண்டாம்.


    குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுதல் கூடாது

    குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்

    கொஞ்சம் தைரியமாக இருக்கும் குழந்தைகள் கூச்ச சுபாவத்திற்கு ஆளாகமாட்டார்கள். மனதில் பயம் இருந்தால்தான் சில குழந்தைகள் பேசமாட்டார்கள். அதனால் குழந்தைகள் எதையாவது எண்ணி பயத்தில் இருக்கிறார்களா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பயத்தில் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசுங்கள். கோபத்தில் சில பெற்றோர்களே குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுவர். அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் சுபாவங்களை வைத்து பிள்ளைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    தனியாக விடவேண்டும்

    குழந்தைகளோடு எப்போதும் ஒன்றாக இருப்பதை தவிர்க்கவேண்டும், அதாவது பொதுஇடங்களில். குழந்தைகளை பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நிறையபேர் இருக்கும் அந்த இடத்தில் அவர்களை சுதந்திரமாகவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் அதில் கவனம் செலுத்த தொடங்கினால் கொஞ்சம் அவர்களை விட்டு தள்ளிச்செல்லுங்கள். தேவைப்பட்டால் திரும்பி பிள்ளைகளிடம் செல்லுங்கள்.

    வெளிப்படைத்தன்மையை பாராட்டுங்கள்

    குழந்தைகள் அவர்களுக்கு புதிதாக ஒரு விஷயம் தெரியவரும்போது நம்மிடம் வந்து ஆர்வமாக கூறுவார்கள். நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் சிலர் அதை காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் பேசுவதை ஆர்வமாக கேளுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் தவறாக இருந்தாலும், எடுத்தவுடன் கோபப்பட வேண்டாம். அதை வெளிப்படையாக சொல்வதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். பின்னர் தவறை சுட்டிக்காட்டி திருத்தவேண்டும். திட்டினால் அடுத்தமுறை சொல்லமாட்டார்கள். மறைக்க நினைப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையாய் இருப்பதை பாராட்டி, அப்படியே தொடர அனுமதிக்கவேண்டும்.

    • உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை,:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறந்தவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பெ.வடமலை. இவர் வடமலை கணக்கம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.பின்னர் உற்பத்தி நிர்வாகத்தில் முதுகலைபட்டய படிப்பும் அதைத்தொடர்ந்து கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். அதன் பின்பு 1990 ல் உடுமலையில் வக்கீல் யூ.கே. ஆறுமுகம் என்பவரிடம் இளம் வக்கீலாக சேர்ந்தார்.

    பின்னர் 1995 -ம் வருடம் நடைபெற்ற நீதித்துறைக்கான தேர்வில் வெற்றி பெற்று குற்றவியல் நடுவர் நீதிபதியாக பதவி ஏற்றார்.அதன் பின்னர் 2007 சார்பு நீதிபதியாகவும், 2013 இல் சென்னை கூடுதல் முதன்மை பெருநகர் நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கான பதிவாளராகவும் பணிபுரிந்தார். அதன் பின்பு பல்வேறு பகுதியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக வடமலை நியமனம் செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து நீதிபதிக்கு பாராட்டு விழா நடத்துவது என உடுமலை வக்கீல் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் வக்கீல் சங்கத் தலைவர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார்.அதைத்தொடர்ந்து நீதிபதிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் (பொறுப்பு), தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதையடுத்து 50 ஆண்டு காலம் வக்கீல் பணியை நிறைவு செய்த மூத்த வக்கீல்கள் புருஷோத்தமன், வெங்கடாசலபதி,ஜெயராமன், ஜெயபாலன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கியும் சால்வை அணிவித்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பெ.வடமலை சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பள்ளி படிப்பு முதல் சட்டம் படித்தது வரையிலான நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததுடன் உடுமலை வக்கீல் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து உடுமலை நீதிமன்றங்களில் யு.கே.ஆறுமுகம் என்பவரிடம் இளம் வக்கீலாக பணிபுரிந்ததையும், நீதித்துறைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் இளம் வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு மேன்மை அடைய வேண்டும் என்றும் பேசினார். விழாவின் முடிவில் வக்கீல் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு மற்றும் உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர் நீதிபதிகள்,வக்கீல் சங்க துணை தலைவர் சிவராமன்,பொருளாளர் பிரபாகரன் ,செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×