search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Face book"

    • மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உட்பட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.

    இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக மேலும் 4,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் தனது மனைவி இடையூறு எதுவும் இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார். #MarkZuckerberg
    நியூயார்க்:

    இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் உயிருடன் இருக்கும் தனது மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.

    மார்க் ஷூகர் பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா. இரவு நேரத்தில் இவர் இடையூறு எதுவும் இன்றி தூங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தயரிக்கிறார். தூங்கும் போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.

    மனைவி தூங்குவதற்கு வசதியாக ஷூகர்பெர்க் தயாரித்துள்ள மரப்பெட்டி

    காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலா ஒளியை உமிழ்கிறது. காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.

    இந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும், வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #MarkZuckerberg
    கோவையில் பேஸ்புக் மூலம் பழகி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைதான 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    கோவை:

    கோவை பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர் சபரிராஜன்(வயது 25). என்ஜினீயர்.

    இவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் அப்பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று மாணவிக்கு போன் செய்த சபரிராஜன் சுற்றுலா செல்லலாம் என ஆசை காட்டி ஊஞ்சவேலம்பட்டி பகுதிக்கு அழைத்தார். இதை நம்பி மாணவி அவருடன் காரில் சென்றார்.

    காரில் சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதிஷ்(28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார்(24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) ஆகியோர் இருந்தனர். தாராபுரம் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சபரிராஜன் மாணவியின் சுடிதாரை விலக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட, அதை சதிஷ் செல்போனில் வீடியோவில் படம் பிடித்தார்.

    அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் ஆவேசமடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்துக் கொண்டு, மாணவியை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர்.

    இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சபரிராஜன் உள்பட 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இக்கும்பல் சமீபத்தில் வெளியான ‘அடங்க மறு’ சினிமா போன்று அழகான இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்து பழக்கம் ஏற்படுத்தி, தனியாக வரவழைத்து ‘குரூப்’பாக சேர்ந்தும், தனித்தனியாகவும் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

    பேஸ்புக்கில் பழக்கமாகும் மாணவிகள், இளம் பெண்களின் செல்போன் நம்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை திருநாவுக்கரசு செய்து வந்துள்ளார். அந்த நம்பரில் சபரிராஜன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் பேசி பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.

    இவர்களிடம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் சிக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.

    முதல்முறையாக மாணவி புகார் கொடுத்ததால் இந்த கும்பல் சிக்கி உள்ளது. புகார் கொடுத்த மாணவிக்கு போதிய பாதுகாப்பு செய்து கொடுத்த போலீசார், இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
    திருவண்ணாமலை இளம்பெண்ணின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மகளுக்கும், பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு அந்த பெண் பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு அவர் கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அந்த பெண்ணை அவர் பெங்களூருவிலேயே விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

    அந்த பெண் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர், அந்த பெண்ணின் ஆபாச படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன் தந்தையிடம் கூறினார். அவர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூரு வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பேஸ்புக்கில் போலீசை கண்டித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூடு குறித்து பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இதில் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து பேஸ்புக்கில் ஒரு விமர்சனம் வெளியானது.

    அதில், ‘தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற போலீசாரை சும்மாவிடக்கூடாது. போலீஸ் நிலையத்தை தாக்க வேண்டும். போலீஸ் வாகனங்களை உடைக்க வேண்டும். போலீசாரின் குடும்பத்தையும் விடக்கூடாது’’ என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    பேஸ்புக்கில் இதை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் போலீசுக்கு எதிராக இந்த கருத்தை பதிவு செய்தவர் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரியை சேர்ந்த பாலாஜி (31) என்பது தெரியவந்தது. இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகர்.

    இதையடுத்து பாலாஜியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசுக்கு எதிராக கலவரம் செய்ய பொது மக்களை தூண்டியதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார்.

    பின்னர் நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலாஜி செங்கல்பட்டு 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். #ThoothukudiProtest
    கோவா ஓட்டலில் சூதாடிய காட்சிகளை பேஸ்-புக்கில் பதிவிட்ட புதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்திரசேகரன். இவர், கடந்த 18-ந் தேதி விமானம் மூலம் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அங்கு அவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். மேலும், கோவாவில் பிரபலமான (கேசியானா) சூதாட்ட விடுதிக்கும் சென்றுள்ளார்.

    அவர், தான் சென்ற பகுதிகளை படங்களுடன் பேஸ்-புக்கில் பதிவிட்டார். சூதாட்ட விடுதிக்கு செல்வது, வரவேற்பு பெண்களுடன் நிற்பது, சூதாடுவது, வெற்றி பெற்ற அறிவிப்பு திரையில் வருவது போன்றவகளை தனது பேஸ்-புக்கில் பதிவிட்டுள்ளார்.



    ஒரு போலீஸ் அதிகாரி சுற்றுலா சென்று சூதாடி கொட்டமடித்திருப்பது புதுவை காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மீது புதுவை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

    சமூக வலைத்தளத்தை நல்ல வி‌ஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மீறி செயல்பட்டால் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது. #tamilnews
    ×