search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா ஓட்டலில் வரவேற்பு பெண்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்
    X
    கோவா ஓட்டலில் வரவேற்பு பெண்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்

    கோவா ஓட்டலில் சூதாடிய காட்சிகளை பேஸ்-புக்கில் பதிவிட்ட புதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

    கோவா ஓட்டலில் சூதாடிய காட்சிகளை பேஸ்-புக்கில் பதிவிட்ட புதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்திரசேகரன். இவர், கடந்த 18-ந் தேதி விமானம் மூலம் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அங்கு அவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். மேலும், கோவாவில் பிரபலமான (கேசியானா) சூதாட்ட விடுதிக்கும் சென்றுள்ளார்.

    அவர், தான் சென்ற பகுதிகளை படங்களுடன் பேஸ்-புக்கில் பதிவிட்டார். சூதாட்ட விடுதிக்கு செல்வது, வரவேற்பு பெண்களுடன் நிற்பது, சூதாடுவது, வெற்றி பெற்ற அறிவிப்பு திரையில் வருவது போன்றவகளை தனது பேஸ்-புக்கில் பதிவிட்டுள்ளார்.



    ஒரு போலீஸ் அதிகாரி சுற்றுலா சென்று சூதாடி கொட்டமடித்திருப்பது புதுவை காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மீது புதுவை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

    சமூக வலைத்தளத்தை நல்ல வி‌ஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மீறி செயல்பட்டால் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது. #tamilnews
    Next Story
    ×