என் மலர்

  நீங்கள் தேடியது "black shirt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

  2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இதையடுத்து முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரி பினராய் விஜயன் செல்லும் பாதையில் கறுப்பு சட்டை அணிந்து செல்லும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

  இந்நிலையில் கோழிக்கோட்டில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவிற்கு கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு கலரில் மாஸ்க் அணிந்து சென்ற மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  இதற்கிடையே கேரளாவில் முதல்-மந்திரி செல்லும் பாதையில் கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணியில் ஈடுபட்டனர்.
  • 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

  மதுரை

  மதுரை மாநகராட்சியில் சுகாதார பிரிவில் நிரந்தர பணியாளர்கள், தொகுப் பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என பல்வேறு முறைகளில் 100 வார்டுகளிலும் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று காலை ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் காந்தி மியூசியம் முன்பு திரண்டனர்.

  இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார பணியா ளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.

  பேரணி மதுரை மாநக ராட்சி அண்ணா மாளி கையில் நிறைவடைந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

  அதில், தூய்மை பணியா ளர்களுக்கு எதிராகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசாணை எண் 152-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ. 172 வழங்க வேண்டும்.

  அனைத்து பணியாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 ஆண்டு காலமாக தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்று பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.
  • தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை, நவ.24-

  தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். "ஒப்படைப்பு விடுப்பை ரத்து செய்ய கூடாது, கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைபடி உயர்வை உடனே வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) கருப்பு சட்டை அணிந்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் கருப்புச் சட்டை மயமாக காட்சி அளித்தது.

  இதுகுறித்து மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நடராஜன் கூறுகையில், "ஒப்படைப்பு விடுப்பு ரத்து, அகவிலைப்படியை காலம் தாழ்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கருப்பு சட்டை அணிந்து வேலை பார்த்தனர். மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். #TNAssembly #DMKMLAs
  சென்னை:

  தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

  இந்நிலையில் முதல் நாளான இன்று காலை சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். தூத்துக்குடி போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்துள்ளனர்.  வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

  இந்த கூட்டத் தொடர் ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.  #TNAssembly #DMKMLAs
  ×