search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணி
    X

    பேரணியில் பங்கேற்ற பெண் தூய்மை பணியாளர்கள். 

    தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணி

    • தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணியில் ஈடுபட்டனர்.
    • 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் சுகாதார பிரிவில் நிரந்தர பணியாளர்கள், தொகுப் பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என பல்வேறு முறைகளில் 100 வார்டுகளிலும் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று காலை ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் காந்தி மியூசியம் முன்பு திரண்டனர்.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார பணியா ளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.

    பேரணி மதுரை மாநக ராட்சி அண்ணா மாளி கையில் நிறைவடைந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், தூய்மை பணியா ளர்களுக்கு எதிராகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசாணை எண் 152-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ. 172 வழங்க வேண்டும்.

    அனைத்து பணியாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 ஆண்டு காலமாக தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்று பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    Next Story
    ×