search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admit"

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். #BJP #AmitShah
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக ஆட்சி இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முழு வீச்சில் வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்,

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #BJP #AmitShah
    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை மோடி சுப்ரீம் கோர்ட்டில் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #NarendraModi #RafaleDeal #SupremeCourt #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் எனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.



    அதன்படி மத்திய அரசு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விலைப்பட்டியலை தனியாக தாக்கல் செய்தது. ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார். இந்திய விமானப்படையை கேட்காமலேயே ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் மூலம் தொழில் அதிபர் அம்பானியின் சட்டை பாக்கெட்டுக்குள் ரூ.30 ஆயிரம் கோடி திணிக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மேலும், சத்தீஷ்கார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தலையணைக்குள் இருந்த பணம் வெளியே வந்ததாக மோடி கூறினார். அவர் சொன்னது சரிதான். ஆனால் யாருடைய பணம் பறிக்கப்பட்டது என்பதை அவர் சொல்லவில்லை. அது ஏழை மக்களின் பணம். அவர்கள்தான் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் வங்கிகளின் முன்பாக கால்கடுக்க காத்துக் கிடந்தனர். எந்த கோடீசுவரராவது இதுபோல் நீண்ட வரிசையில் நின்றார்களா?... கோட்டு, சூட்டு அணிந்தவர்கள் யாரையாவது நீண்ட வரிசையில் பார்க்க முடிந்ததா?

    இந்தியாவின் பிரதமர் கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உதவினார். அவர் ஏழைகளின் பணத்தை பறித்துக் கொண்டார். அதனால் பணக்காரர்கள் மட்டும்தான் பலன் அடைந்தனர்.

    சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NarendraModi #RafaleDeal #SupremeCourt #RahulGandhi
    திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Dmk #Stalin #ApolloHospital
    சென்னை:

    திமுக தலைவராக முக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.

    இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.
    #Dmk #Stalin #ApolloHospital
    ×