என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"
- வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது.
- பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
மார்ச் மாதம் 3-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அன்று நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது. பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
அதன்படி, மார்ச் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
அதன்பிறகு புனித சடங்குகள் நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரவு 8.30 மணியளவில் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தால் மார்ச் 3-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, நெறிமுறைகளுக்கு உட்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், காணிக்கையாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
பக்தர்கள் மேற்கண்ட தகவல்களை கவனத்தில் கொண்டு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு தங்கள் திருமலை யாத்திரையை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
- தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர்.
நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். தனது மகன்களுடன் வந்த தனுஷ் அங்கிருந்தவர்களை பார்த்து கைகூப்பி வணங்கியபடி சென்றார்.
- கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடந்தது.
கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ரதசப்தமி முன்னிட்டு இன்று ஏழுமலையான் ஒரே நாளில் 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை தங்க கருட வாகனத்திலும், 1 முதல் 2 மணிவரை அனுமந்த வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார்.
மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷம் எழுப்பினர். கற்பூரத்தை ஏற்றி தீபாரதனை செய்தனர்.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடக்கிறது. தீர்த்த வாரிக்குப் பிறகு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவர்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ரத சப்தமி விழாவை காண நேற்று முதல் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் கூடுதலாக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு நேர ஒதுக்கீட்டு தரிசனம் மற்றும் வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதியில் நேற்று 76, 654 பேர் தரிசனம் செய்தனர். 34. 080 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.81 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.
காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது.
- 14 வகையான அன்னப்பிரசாதம் காலை முதல் இரவு வரை 85 உணவு கவுண்ட்டர்களில் வினியோகம் செய்யப்படும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரே நாளில் சூரியப்பிரபை வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விட்ச வாகனம், சர்வபூபால வாகனம், சந்திரபிரபை வாகனம் ஆகிய 7 வாகனங்களில் மலையப்ப சாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், ரத சப்தமி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. 14 வகையான அன்னப்பிரசாதம் காலை முதல் இரவு வரை 85 உணவு கவுண்ட்டர்களில் வினியோகம் செய்யப்படும் என்றார்.
ரத சப்தமியையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள், குழந்தைகள் பெற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இன்று முதல் 26-ந் தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது.
வி.ஐ.பி. தரிசனத்தை தவிர, அனைத்து பரிந்துரை கடிதங்களும் நாளை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, சங்கராந்தி தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ , காபி, பால், உணவு, தண்ணீர் ஆகியவை தன்னார்வல்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.
- வருகிற 12-ந் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வருகிற 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தரிசனத்திற்கு பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-
கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது. வருகிற 12-ந் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவ வேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம். பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறிய முடியும் என்றார்.
- 25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
- வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25-ந்தேதி ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:-
25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
- இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இன்று ஏகாந்த சேவைக்குப் பிறகு, வைகுண்ட வாசல் மூடப்பட்டது.
இதன் மூலம், கோவிலில் வழக்கமான தரிசன முறை மீண்டும் அமலுக்கு வந்தது. இன்று முதல் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் சேவைகளும் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, வைகுண்ட துவார தரிசனத்தின் போது திருமலையில் சாதனை எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது. முதல் நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைந்தனர்.
வைகுண்ட துவார தரிசன நாட்களில் ரூ.40.43 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.
முந்தைய ஆண்டுகளிலும், வைகுண்ட தரிசனத்தின் போது உண்டியல் வருமானம் சாதனை அளவில் பதிவானதாக தெரிவித்தனர்.
- ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர்.
- தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னுரிமை என்ற அடிப்படையில் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.
வைகுண்ட துவார தரிசனம் வழியாக தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு கோவிலில் தினசரி வழிபாடு வழக்கம்போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 9 நாட்களில் 7, 09,831 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர். ரூ.36.86 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 85, 752 பேர் தரிசனம் செய்தனர். 19,443 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
- அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக வைகுண்ட துவார தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள்கள் குவிந்தனர்.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர். ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எவ்வளவு பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர் என கணித்து குறைந்த நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதித்தனர்
அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதியில் நேற்று 88,662 பேர் தரிசனம் செய்தனர். 24, 417 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
- மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணியில் இருந்து மாலை 6.47 மணி வரை சுமார் 3½ மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. கோவில் சுத்தி உள்ளிட்ட பரிகாரச் சடங்குகள் முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணம் காரணமாக கோவிலில் மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்க இருந்த அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்காரச் சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






