என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் பறிமுதல்"
- இரண்டு பயணிகளிடம் சுங்கத்துறையினர் தீவிர சோதனை.
- உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த, யூசுப் அலி சையது மற்றும் திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர், கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, இரண்டு பயணிகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது அவர்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் மற்றும் குங்குமப்பூ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் வி. பழனியாண்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- விமானத்தில் பயணம் செய்த 11 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனிபா (வயது 32), தாய்லாந்தில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (35), இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 11 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது 13 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 265 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தை சேர்ந்த யாசர்(30) என்பவரை சோதித்ததில் அவரிடமிருந்து ரூ.50 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். ரூ.1 கோடியே 54 லட்சம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 14 பேரையும் கைது செய்து தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
- அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.1 கோடி 59 லட்சம் மதிப்புடைய 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் தங்க கட்டிகளை கொடுத்தது யார்? அதனை சென்னை விமான நிலையத்தில் வாங்க வந்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
- இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி விமா ன நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் போதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.63.80 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.12.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி கொண்டு வந்த லேப்டாப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் சிக்கியது.
இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த ரூ.23.07 மதிப்பிலான 449 கிராம் என மொத்தமாக 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.