search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக கடத்தப்பட்ட  35.6 கிலோ தங்கம் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள்

    இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக கடத்தப்பட்ட 35.6 கிலோ தங்கம் பறிமுதல்

    • காரை சோதனையிட்ட அதிகாரிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
    • தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க சாவடியில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அப்போது அந்த வழியாக வந்த காரில் பயணித்த 3 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்ட அதிகாரிகள், அவர்கள் காரில் மறைத்து கடத்தி கொண்டு வந்த ரூ.18.34 கோடி மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டு தங்கத்தை மீட்டு, பறிமுதல் செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் முதன்மையான கடத்தல் தடுப்பு அமைப்பான டிஆர்ஐ சென்னையில் மேற்கொண்ட தீவிர கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளால் ஏப்ரல் மாதம் முதல் தமிழக கடற்கரை வழியாக 105 கிலோவுக்கு மேல் கடத்தப்பட்ட வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×