என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோகோவிச்"

    • இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை
    • 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் தோல்வியடைந்தார்

    ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் ஜோகோவிச் விளையாடினார்.

    இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடிது கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற புதிய சாதனையை கார்லோஸ் அல்காரஸ் படைத்துள்ளார்

    25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா?
    • இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-4ம் நிலை வீரரான ஜோகோவிச் ( செர்பியா ) மோதுகிறார்கள்.

    6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான அவர் தற்போது தான் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். கடந்த ஆண்டு அல்காரஸ் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 8-வது தடவையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.

    38 வயதான ஜோகோவிச் 25-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளரான அவர், கடைசியாக 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த கிராண்ட்சிலாமும் பெறவில்லை.

    5 கிராண்ட் சிலாம் போட்டிக்கு பிறகு ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் 38-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 தடவை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்)-ஐந்தாவது வரிசையில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள்.

    சபலென்கா 5-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறார். ரைபகினா முதல் கிராண்ட் சிலாம் பட்டத்துக்கு காத்திருக்கிறார்.

    • முதல் மற்றும் 3-வது செட்டை சின்னர் கைப்பற்றினார்.
    • கடைசி இரண்டு செட்டுகளையும் ஜோகோவிச் எளிதாக கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா ஓபனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதியில் ஸ்வெரேவை கடும் போராட்டத்திற்குப் பின் 5.30 மணி நேரம் தாக்குப்பிடித்து அல்காரஸ் வீழ்த்தினார்.

    2-வது அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்- இத்தாலி வீரரும் 2025 சாம்பியனுமான சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் ஜோகோவிச் முதல் செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

    3-வது செட்டில் சின்னர் கை ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால 4-வது செட்டை 6-4 எனவும், 5-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 4 மணி நேரமும் 9 நிமிடங்களும் தேவைப்பட்டது.

    • 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
    • 6-1, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எதிரியை வீழ்த்தினார் ரூட்.

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்ட்டினெசை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 12-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியா பெலூசியை எதிர்கொண்டார். இதில் ரூத் 6-1, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மேலும், வாரிங்கா, டேவிடோவிச், எல். தியென், சிலிச் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக், அன்ட்ரீவா, மெர்ட்டென்ஸ், அனிசிமோவா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • 2006-ல் இருந்து 40 இடத்திற்கு மேல் சரிந்ததில்லை.
    • தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.

    2026-ல் இன்னும் டென்னிஸ் சீசனை தொடங்காத முன்னணி வீரரான ஜோகோவிச், ஆண்களுக்கான தரவரிசையில் 20 வருடமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    ஜோகோவிச் 2026-ல் இளம் வீரராக முதல் பிரெஞ்ச் ஓபன் போட்டியிலேயே காலிறுதிக்கு முன்னேறி உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். அதில் இருந்து டென்னிஸ் உலக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    பல ஜாம்பவான்கள் வந்து சென்றுள்ளனர். எல்லோரையும் சந்தித்துள்ளார். பெடரர் முதல் நடால் வரை சந்தித்துள்ளார். தற்போது இளம் தலைமுறையினரையும் சந்தித்துள்ளார்.

    டென்னிஸ் போட்டியில் ஏற்றம் இறக்கத்தையும் சந்தித்துள்ளார். இருந்தபோதிலும், 2006-ல் இருந்து டென்னிஸ் தரவரிசையில் 40 இடங்களுக்கு மேல் ஒருபோதும் போனதில்லை.

    தற்போது ஜோகோவிச் 4-வது இடத்தில் உள்ளார். அல்காரஸ், ஜெனிக் சின்னெர், ஸ்வெரேவ் ஆகியோர் முதல் 3 இடத்தில் உள்ளனர்.

    • அரையிறுதியில் நோவக் ஜோகோவிச், மொனாக்கோவின் வேலண்டின் வச்ராட் உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் வச்ராட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாக்கோவின் வேலண்டின் வச்ராட் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் வச்ராட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    வச்ராட் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெதெவ் அல்லது ஆர்தர் ரிண்டர்க்னெக்கை எதிர்கொள்வார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ஜாமே முனார் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் முனாரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் ஜோகோவிச், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க் உடன் மோதுகிறார்.

    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
    • அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்தார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச் அரைறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் விளையாடிய இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டுகளித்தார்.

    ஒரே சீசனில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்ததை கண்டு தோனி மகிழ்ச்சிடைந்தார். 

    • அமெரிக்க வீரர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • மகள் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் ஆட்டம் போட்டார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

    முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் விளையாடிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை முடிவடைந்தது. ஜோகோவிச்சின் மகள் தாராவின் பிறந்த நாள் இன்று. மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி பெற்ற கையோடு டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடினார். இது அங்கிருந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

     முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
    • சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லெனார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள டெய்லர் பிரீட்ஸ் (அமெரிக்கா), ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர் கொண்டார்.

    இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 13 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் கிரஜ்கோவா ( செக் குடியரசு) வெற்றி பெற்றார்.

    செக் குடியரசுவை சேர்ந்த வோண்ட் ரூகோவா 6-4, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரைபகினாவை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    • 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென் காவை தோற்கடித்தார்.
    • சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த 32-வது வரிசையில் உள்ள லுசியானோ டார்டெரியை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 44 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-7 ( 4-7 ),6-2 ,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 50 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன், பிரான்சிஸ்தியபோ (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பிய னும், முதல் நிலை வீராங்க னையுமான சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் கனடா வை சேர்ந்த லெய்லா பெர்னாண்டசை சந்தித்தார். இதில் சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), புக்சா (ஸ்பெ யின்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    7-வது வரிசையில் இருக்கும் ஜாஸ்மின் பயோ லினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை எம்மா நவரோவா (அமெரிக்கா) ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    ×