என் மலர்
கோவில்கள்
களாச் செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தல இறைவனுக்கு ‘கரவிந்தீஸ்வரர்’ என்றும், இந்த ஊர் ‘கரவிந்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலானது. ‘உடையார் கோவில்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.
பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திரச் சோழன், வெண்ணிப்போருக்கு தயாராகிக்கொண்டிருந்தான். ஓரிடத்தில் களாச் செடிகள் நிறைந்திருந்த காடு இருந்தது. அங்கு தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைத்தான். அப்படி வைக்கும்போது ஒரு சிவலிங்கம் அவனது கண்ணில் பட்டது.
அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய பிரம்மன், “படைப்புத் தொழிலால் உண்டான கர்வம் காரணமாக நான் பாவத்திற்குள்ளானேன். அந்த பாவம் நீங்க ஈஸ்வரரை வேண்டினேன். அவர் என்னை பூலோகத்திற்குச் சென்று சதுர்வேதங்களையும் தீர்த்தங்களாக அமைத்து, இங்குள்ள களாக் காட்டுக்குள் லிங்கத்தை வழிபட்டு வந்தால் பாவம் நீங்கி, மீண்டும் படைப்புத் தொழிலைச் செய்யலாம் என்று அருளினார். நான் வழிபாடு செய்த லிங்கத்தையே நீ இன்று கண்டாய். நீ நான்கு புறமும் தீர்த்தம் அமைத்து அதன் நடுவில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடு” என்று கூறி மறைந்தார்.
மன்னனும் அவ்வாறே செய்தான். திரிபுவன மாதேவிப் பேரேரி என்னும் பெரிய குளத்தை நான்கு புறமும் அமைந்தாற்போல் வெட்டினான். அதன் நடுவே ஆலயத்தை அமைத்து, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். களாச் செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தல இறைவனுக்கு ‘கரவிந்தீஸ்வரர்’ என்றும், இந்த ஊர் ‘கரவிந்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலானது. நான்கு வேதங்களும் நான்கு புறமும் நீராக அமைய அதன் நடுவே இத்தல இறைவன் வீற்றிருக்கிறார். எனவே திருக்களா உடையார் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. அதோடு அந்த பெயராலேயே இந்த ஊரும் ‘உடையார் கோவில்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.
இத்தல இறைவனின் பெயர், திருக்களாவுடையார், கரவந்தீஸ்வரர் என்பதாகும். அம்மனின் திருநாமம், தர்மவல்லி. இந்த அன்னை, தர்மமே படர்கொடியாக விளங்குபவள். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக களாச்செடி உள்ளது. இந்தச் செடியோடு நன்னாரி கொடியும் படர்ந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. ஆதியில் இந்த ஆலயம் ‘கரவிந்த வனம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக்கோவிலின் பெருமைகளைப் பற்றி கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கோவிலின் கிழக்கில் உள்ள குளத்தின் பெயர், ‘ரிக் வேத தீர்த்தம்’. பங்குனி மாத பவுர்ணமி நாளில் இந்த குளத்தில் நீராடினால் புண்ணியங்கள் வந்து சேரும். தெற்கு பக்கம் உள்ள குளத்தின் பெயர், ‘யஜுர் வேத தீர்த்தம்’. ஆனி மாத வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியிலும், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போதும் இந்த தீர்த்தத்தில் நீராடினால், செல்வ வளம் பெருகும். மேற்கு பகுதியில் உள்ளது ‘சாம வேத தீர்த்தம்’. அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி வந்தால், ஞானத்தை அடையலாம். வடக்கில் இருப்பது ‘அதர்வண வேத தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் பெறலாம். சந்ததிகளுக்கு நன்மைகள் வந்து சேரும். இந்த தீர்த்தத்தில் நீராடும்போது பஞ்சாட்சர மந்திரத்தை பாராயணம் செய்தால், துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
இந்த ஆலயத்தை வலம் வருவது, இந்த பூமியையே வலம் வந்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று இந்த நான்கு தீர்த்தங்களிலும் நீராடி வழிபாடு செய்து வந்தால் வேண்டிய வரத்தைப் பெறலாம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மூன்று பிரகாரங்கள் உள்ளன. முன் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. உள்கோபுரம் இரண்டு நிலைகளைக் கொண்டது. இரண்டாம் பிரகாரத்தின் தெற்கில் நந்தவனம், கோவிலுக்கு வெளியே வசந்த மண்டபம், கோவிலுக்கு எதிரில் திருக்குளம், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.
உட்பிரகாரத்தில் மேற்கு வரிசையில் முக்குறுணி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், இரட்டைப் பிள்ளையார், முருகன் சன்னிதி, வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், கஜலட்சுமி, பூலோகநாதர் சன்னிதிகளும், வடக்கில் திருக்களா விருட்சம், சண்டிகேஸ்வரர் சன்னிதியும், கிழக்கில் வாகன மண்டபம், மடப்பள்ளி அமைந்துள்ளன. உள் மண்டபத்தில் மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். இந்த ஆலயத்தில் சரஸ்வதிக்கு அருகிலேயே ராகு-கேது இருக்கின்றனர். எனவே ராகு-கேது திசை நடைபெறுபவர்கள், இங்கு வந்து சரஸ்வதியை வழிபட்டால் தீமைகள் குறையும்.
பிரம்மதேவன் பூலோகம் வந்து கரவந்தீஸ்வரரை வழிபட்டதற்கு ஆதாரமாக, இத்தல சிவலிங்கத்தின் பாணத்தில் பிரம்மன் அமர்ந்த பூஜை செய்வது போன்ற அமைப்பு காணப்படுகிறது.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஒரு அலங்கார வளைவு உள்ளது. அதில் நுழைந்து தெற்கில் சென்றால் உடையார்கோவிலை அடையலாம்.

ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில். சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.
ராமாயணத்தின் பெரும்பகுதி நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இங்கு ராமர் ஏற்படுத்திய நவக்கிரஹம் நவபாஷாணம் என அழைக்கப்பட்டு தேவிபட்டினத்தில் உள்ளது.
கடலின் நடுவில் உள்ள நவபாஷாணத்தில் வழிபட்டால் நவக்கிரகதோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.ராமர் இலங்கைக்கு செல்லும்போது திருப்புல்லணை என்ற இடத்தில் தங்கி சென்றார் அதாவது இவர் தங்கியபோது தர்ப்பைபுல்லில் படுத்துறங்கினார் அதனால் திருப்புல்லணை எனப்பெயர் ஏற்ப்பட்டு காலப்போக்கில் திருப்புல்லாணி எனப்பெயர் மாறியது.இந்தக்கோவில் ராமவதாரத்துக்கு முந்தைய கோவில் தசரதசக்கரவர்த்தி இங்குள்ள ஆதிஜெகநாதரை வணங்கிய பாயாச நைவேத்யம் செய்தார்.
அதற்கு பிறகே ராமர் பிறந்தார்.அதனால் பிள்ளையில்லாதவர்கள் இங்கு உள்ள பத்மாசனித்தாயாரையும் ஜெகநாதபெருமாளையும் வணங்கினால் குழந்தைபிறக்கும் என்பது ஐதீகம்.சேதுக்கரையில் இருந்து ராமர் இலங்கைக்கு சென்றார் இங்கிருந்து செல்வதற்க்கு ஆஞ்சநேயர் பாலம் அமைக்க உதவினார்.அதனால் சேதுக்கரையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது.இந்த சேதுக்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்யப்படுகிறது.மேலும் இலங்கை சென்று விட்டு சீதாப்பிராட்டியை மீட்டபிறகு ராமேஸ்வரம் வந்த ராமர் சிவலிங்கத்தை பூஜித்து வணங்கினார்.
அதுவே ராமேஸ்வரம் என இந்துக்களின் புனிதத்தலமாக போற்றப்படுகிறது.எந்த ஒரு செயலுக்கும் விநாயகர் வழிபாடு மிக முக்கியம்.முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே கோவில்களில் இருக்கும் அனைத்து கடவுளையும் வழிபடுகிறோம்.பிள்ளையார் சுழி போட்டே அனைத்து வேலைகளையும் தொடங்குகிறோம்.அப்படி ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில். இங்கு சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.
ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும் ஒரு முக்கிய காரணம் விழாக்காலங்களில் சித்திபுத்தி தேவிகளுடன் இந்த விநாயகர் காட்சி தருவது சிறப்பு.இதுகோவிலாக இருந்தாலும் இங்கு உள்ள விநாயகருக்கு மேற்கூரைஇல்லாமல் வெயில்படும்படி அமைத்திருப்பது சிறப்பு.கடுமையான நோய்களை இந்த விநாயகர் போக்குகிறார்.எந்த ஒரு பெரியகாரியத்திற்க்கும் இவரை வணங்கி அடுத்த காரியத்தை தொடங்கினால் வெற்றி நம் வசம்தான் ஏனென்றால் ராமருக்கே வெற்றியை கொடுத்தவர் இவர்.கேதுவால் அவஸ்தைக்குள்ளாவோர் இவரை வணங்கினால் விநாயகர் கேது தோஷத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்.
கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது.
:ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி,பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளில் சென்று தேவிபட்டினம் தாண்டி உப்பூர் என்ற ஊரில் இறங்கவேண்டும் அங்குதான் இந்த விநாயகர் கோவில் உள்ளது.

தஞ்சையில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையாருக்கென்றே தோன்றிய கிராமமாகும். ஊர் மட்டுமல்ல, பிள்ளையாருக்காகவே இந்த ஊரில் ஒரு கோவிலும் அமைந்துள்ளது என்றால் இந்த ஊரின் சிறப்பு நமக்கு தெரியவரும்.
தஞ்சையில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பிள்ளையார்பட்டி என்னும் கிராமம். பிள்ளையாருக்கென்றே தோன்றிய கிராமம் இது. ஊர் மட்டுமல்ல, பிள்ளையாருக்காகவே இந்த ஊரில் ஒரு கோவிலும் அமைந்துள்ளது என்றால் இந்த ஊரின் சிறப்பு நமக்கு தெரியவரும்.
இங்குள்ள பிள்ளையார் கோவிலில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பிள்ளையார் வீற்றிருக்கிறார். இத்தல மூலவர் ‘ஹரித்ரா விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரே கல்லி னால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. ஒன்பதாம் நூற்றாண்டை சிறப்பித்த மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில்தான், இந்த வியத்தகு ஊரும், கோவிலும் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்...
ராஜராஜ சோழனின் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான ஆலயம் என்றால் அது தஞ்சை பெருவுடையார் கோவில் எனப்படும், பெரியகோவில்தான். இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக ராஜராஜ சோழன், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். காவிரியின் பிறப்பிடமாக இருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து இந்த பிள்ளையாரை எடுத்து வந்ததாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.
அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் (சேதம்) அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். அந்த ஊரும் பிள்ளையார்பட்டி என்று பெயர்பெற்றது.
இப்போது உள்ள கோவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சோழர் கால கட்டிட அமைப்பில் கோவில் அமைந்துள்ளது. 11 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ள பிள்ளையாரை பீடத்தில் அமர்த்தி, அதன் மீது ஆலயத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கான அடையாளங்களும் உள்ளன. பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்தக் கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதையொட்டி தற்போது பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இங்கு புதிதாக ஐயப்பன், சிவன், நவக்கிரக சன்னிதிகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கோவிலில் சிவன், நவக்கிரகம், கால பைரவர் ஆகிய சன்னிதிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது விசேஷமானது. இந்த ஆலயத்தில் கார்த்திகை சோம வார வழிபாடு, பிரதோஷம், அஷ்டமி பூஜை, கிருத்திகை வழிபாடு ஆகியவை விமரிசையாக நடைபெறும்.
கேது நிவர்த்தி தலம்
இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி (தொப்புள்) அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது. விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருக்கிறது.
அமைவிடம்
தஞ்சையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலை வில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உண்டு. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ் மூலமும் சென்று வரலாம்.
-டி.ஆரூண், பிள்ளையார்பட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் ஆலயத்தின் எதிரே ஈசான மூலையில் மாண்டூக நதிக்கரையியில் அமைந்துள்ளது ‘புழுங்கல் வாரி விநாயகர் கோவில்’. இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருக்கோவில் பிரசித்திபெற்றது. அந்த ஆலயத்தின் எதிரே ஈசான மூலையில் மாண்டூக நதிக்கரையியில் அமைந்துள்ளது, கற்பக விநாயகர் கோவில். ‘புழுங்கல் வாரி விநாயகர் கோவில்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது.
முன்காலத்தில் தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரு வணிகர் இருந்தார். அவர் தன்னுடைய வியாபாரம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தான் நினைத்த காரியம் வெற்றிபெற வேண்டும் என்றும் நினைத்து விநாயகரை வழிபட்டார்.
அப்போது அங்கே ஓர் அசரீரி ஒலித்தது. “உன் வேண்டுதல்கள் நிறைவேறும். என்னை இங்கிருந்து தூக்கிச்செல்” என்றது அந்தக் குரல். வணிகரும் அந்த அசரீரியின் வாக்குப்படியே, விநாயகர் சிலையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். அப்படி தூக்கிக்கொண்டு செல்லும்போது, பாரம் தாங்காமல் மாண்டூக நதிக்கரை அருகே அந்தச் சிலையை கீழே வைத்துவிட்டார். பின்னர் அங்கிருந்த ஆன்மிக அடியார் ஒருவரிடம் நடந்தவற்றை கூறினார்.
அந்த அடியார், ஒரு அர்ச்சகரை அழைத்து வந்து, தினமும் விநாயகருக்கு வழிபாடுகள் செய்யும்படி கூறினார். அதன்படியே அந்த அர்ச்சகரும் வழிபாடு செய்து வந்தார். ஆனால் விநாயகரின் வழிபாட்டிற்கு அரிசி தேவைப்பட்டது. அது பற்றி அந்த அர்ச்சகர், அடியாரிடம் கேட்டார்.
மறுநாள் காலை விநாயகர் சிலை அருகே ஒரு படி புழுங்கல் அரிசி இருந்தது. வீட்டில் இருந்து அப்போதுதான் வந்த அர்ச்சகர், அந்த அரிசியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அங்கு யாராவது இருக்கிறார்களா.. என்று தேடிப்பார்த்தார். யாரும் இல்லை. அப்போது விநாயகரின் சிலைக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது. “அந்த அரிசியை எடுத்து பூஜை செய். நீ வரும் முன்பாக இங்கே தினமும் ஒரு படி அரிசி இருக்கும்” என்றது.
அர்ச்சகரும் அந்த அரிசியைக் கொண்டு நைவேத்தியம் செய்து விநாயகருக்கு படைத்து பூஜைகளை செய்தார். பின்னர் அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். தன்னுடைய வழிபாட்டிற்காக இறைவனே புழுங்கல் அரிசியை வழங்கியதால், இத்தல விநாயகருக்கு ‘புழுங்கல் வாரி விநாயகர்’ என்ற பெயர் வந்தது. இன்று வரை பக்தர்கள் மூலமாக இந்த விநாயகருக்கு தினமும் புழுங்கல் அரிசி வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த விநாயகரை வழிபாடு செய்தால் கேட்ட வரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் இந்த விநாயகரின் மீது, சூரியனின் ஒளி படும் விதத்தில் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் தாமரைப் பூவிற்குள் இருந்தபடி அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்கலாம். லிங்கத்திற்குள் பராசக்தியின் உருவம் பொறிக்கப்பட்ட அமைப்பும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் பல விதமான யாகங்கள் நடத்தப்படுகின்றன. ஒரே கல்லில் விநாயகரும், ஆஞ்சநேயரும் வடிக்கப்பட்ட சிலை அற்புதமாக உள்ளது. இதற்கு ‘ஆதியந்தபிரபு’ என்று பெயர். ஆக்ரோஷத்திற்கு பெயர் போன துர்க்கை அம்மன், இங்கு ஆனந்த துர்க்கையாக புன்முறுவல் பூத்தபடி அருள்கிறாள்.

‘சப்த மாதர்கள்’ தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.
பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு பேரும், ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எழுவரும் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.
ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரையில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய 7 பருவங் களைக் கடந்து வருகிறாள். இந்தப் பருவங்களுக்கு இடையில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏராளம். பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, இந்த ‘சப்த மங்கை தலங்கள்’ அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..
சக்கரமங்கை
சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது ‘சக்கரமங்கை’. இதனை ‘சக்கரப்பள்ளி’ என்றும் அழைப்பார்கள். பேச்சு வழக்கில் தற்போது இந்த ஊர் ‘ஐயம்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறது. சப்த மாதர்களில் பிராம்ஹி வழிபட்ட தலம் இது. மூலவராக சக்கரவாகேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகையின் பெயர், தேவநாயகி. பார்வதிதேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இது. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் ஐயம்பேட்டை உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதிதான் சக்கரப்பள்ளி ஆகும்.
அரியமங்கை
சப்த மாதர்களில் மகேஸ்வரி வழிபட்ட இந்தத் தலம், சப்த மங்கை தலங்களின் வரிசையில் இரண்டாவது ஆகும். இங்குள்ள இறைவன் ‘அரிமுக்தீஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘ஞானாம்பிகை’ என்றும் பெயர் பெற்றுள்ளனர். ‘அரி’ என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணு வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு இந்தப் பெயர் வந்தது. இந்த ஆலயத்தில் பார்வதிதேவிக்கு, தன் ஜடாமுடியில் உள்ள கங்கையின் தரிசனத்தை சிவபெருமான் காட்டியருளினார். தலவிருட்சமாக நெல்லி மரம் உள்ளது. தஞ்சாவூர் -கும்பகோணம் சாலையில் சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலடி என்ற இடத்தில் இறங்கி இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.
சூலமங்கை
கவுமாரி எனப்படும் சூலமங்கை வழிபட்ட தலம் இது. சப்த மங்கை தலங்களில் மூன்றாவது ஆலயம். தற்போது இந்த ஊர் ‘சூலமங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பெயர், கிருத்திவாகேஸ்வரர். அம்பாளின் பெயர், அலங்காரவல்லி. பார்வதிக்கு, சிவபெருமானின் சூல தரிசனம் கிடைத்த தலம் இதுவாகும். அம்பாள் இங்கு, மங்கை வடிவில் காட்சியளிக்கிறாள். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இந்த ஆலயத்தில் சனி பகவான், தன் குருவான பைரவருடன் அருகில் நின்றபடி தரிசனம் தருகிறார். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், ஐயம்பேட்டைக்கு மிக அருகாமையிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.
நந்திமங்கை
சப்த மாதர்களில் ஒருவரான வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. சப்த மங்கை தலங்களில் 4-வதான இந்த ஆலயம் நல்லிச்சேரி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. நந்திதேவரால் சிவபெருமான் பூஜிக்கப்பட்ட தலமாகவும் இது இருக்கிறது. திருவையாறில் பஞ்சாட்சர உபதேசம் பெற்ற நந்தி, இத்தலத்தில் சித்திஅடைந்ததாக சொல்லப்படுகிறது. இறைவன்- ஜம்புநாத சுவாமி, இறைவி- அகிலோண்டேஸ்வரி. பார்வதி தேவி, இங்கு சிவபெருமானின் திருக்கழல் தரிசனத்தைப் பெற்றாள். நாவல் மரம் தல விருட்சமாக உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலை வில் நல்லிச்சேரி திருத்தலம் இருக்கிறது.
பசுமங்கை
பசுபதிகோவில் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம், சப்த மங்கை தலங்களில் 5-வது ஆகும். சப்த மாதர்களில் வராகி வழிபட்ட ஆலயம் இது. காமதேனு என்னும் பசு, இறைவனை நினைத்து வழிபட்டதால், இந்த ஊருக்கு ‘பசுபதிகோவில்’ என்ற பெயர் நிலைத்தது. இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர் என்றானது. அம்பாளின் பெயர், பால்வள நாயகி என்பதாகும். இந்த ஆலயம் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டது. பார்வதிதேவிக்கு, தன்னுடைய உடுக்கை தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. ஆலய தல விருட்சம், வில்வம். தஞ்சாவூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பசுபதிகோவில் அமைந்துள்ளது.
தாழமங்கை
சப்த மாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம், தாழமங்கை. சப்த மங்கை தலங்களில் இது 6-வது திருத்தலமாகும். இறைவன்- சந்திரமவுலீஸ்வரர் என்றும், இறைவி - ராஜராஜேஸ்வரி என்றும் பெயர் பெற்றுள்ளனர். அகத்திய முனிவர், தாம் இயற்றிய அபூர்வமான நாமாவளிகளை இங்கு வைத்து பாடியதாக சொல்லப்படுகிறது. பார்வதிதேவிக்கு, பிறை சந்திர தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. இங்கு தாழை மரம் தலவிருட்சமாக உள்ளது. தாழமங்கை, தாயமங்கலம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் அழிந்துவிட்டதாகவும், தஞ்சாவூர்- கும்பகோணம் சாலை யில் ஆலயம் மட்டும் எஞ்சியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
திருப்புள்ளமங்கை
சப்த மங்கை தலங்களில் 7-வது தலம். சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம். இத் தல இறைவன், ‘பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், சவுந்திரநாயகி என்பதாகும். பார்வதிதேவி, சிவபெருமானின் நாக தரிசனத்தை பெற்ற தலம் இது. ஆல் மரம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது. இந்த ஆலயமும் பசுபதிகோவில் பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
தல வரலாறு:
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.
பஞ்சமுகத்திற்கான காரணம்:
ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.
இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.
தல சிறப்பு:
ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
கோவில் அமைப்பு:
12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, லட்சுமணன், சத்ருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது.
இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும்.பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் கல்:
சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார்.
இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலி கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகரில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் கன்னிமூல கணபதி, கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோவிலின் தலவிருட்சம் அரச மரமாகும்.
தல வரலாறு
குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் சங்கிலி கருப்பராயரை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தற்போது கோவில் அமைந்துள்ள இடம், முன்பு விவசாய பூமியாக இருந்துள்ளது. மாலை நேரங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் செல்லும்போது ராஜநாகம் ஒன்று அவர்களை தண்ணீர் பாய்ச்ச விடாமல் தடுத்துள்ளது. இதனால் பயந்துபோன விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் திரும்பிச் சென்றுள்ளனர். அன்று இரவு அவர்களது கனவில் தோன்றிய சங்கிலி கருப்பராயர் இப்பகுதியில் தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் சகல ஐஸ்வர்யம் தருவதுடன், வேண்டிய வரங்களை அருள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கருப்பராயருக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
கிழக்கு திசை நோக்கி சங்கிலி கருப்பராயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அரச மரம் ஒன்று இருந்தது. அந்த மரம் திடீரென்று பட்டுப்போய் கீழே விழுந்தது. இருப்பினும் அந்த மரம் சங்கிலி கருப்பராயரின் அருளால் மீண்டும் துளிர்த்து தற்போது மரமாக வளர்ந்து உள்ளது.
திருவிழா
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரி தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் கருப்பராயருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சாமிக்கு அரிவாள், கத்தி, சூலம், கண்மலர், நாய் பொம்மை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 9 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஆடிமாதம் அமாவாசையன்று கோவில் ஆண்டு திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மூலவருக்கு பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணியளவில் சங்கிலி கருப்பராயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதன் பிறகு 7 நாட்களுக்கு பிறகு ஆடுகள் பலியிடப்படும். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து செல்வார்கள்.

மும்பையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் லேண்யாத்ரி கிராமத்தில் உள்ளது கிரிஜாத்மக விநாயகர் கோவில். மலைக்கோவிலான இந்த ஆலயத்தை அடைய, 307 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.
புனேவில் இருந்து வடக்கே 94 கிலோமீட்டரில், குக்கடி நதிக்கரையில் அமைந்திருக்கிறது லேண்யாத்ரி என்ற ஊர். இந்த ஊர் கணேஷ புராணத்தில் ஜீர்ணாபுரம், லோகன்பர்வத் ஆகிய பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து ஜுன்னூர் 155 கிலோமீட்டர் ஆகும். ஜுன்னூர் செல்ல மும்பையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. அங்கிருந்து லேண்யாத்ரி கிராமம் வெறும் 8 கிலோமீட்டர் தான். இந்த ஊரில்தான் கிரிஜாத்மக விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று. மலைக்கோவிலான இந்த ஆலயத்தை அடைய, 307 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். படியேறிச் செல்ல முடியாதவர்களுக்காக, டோலி வசதியும் உள்ளது.
‘விநாயகப்பெருமான், தனக்குப் பிள்ளையாக வரவேண்டும்’ என்று நினைத்த பார்வதிதேவி, அதற்காக லேண்யாத்ரி மலையின் குகையில் அமர்ந்து கடுமையான தவம் செய்தாள். பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக, பார்வதியின் முன்பு கணேஷ மூர்த்தி தோன்றினார். “உன் விருப்பம் போலவே உன் மகனாகத் தோன்றி, அனைவரது துன்பங்களையும் நீக்கி, விருப்பங்களை நிறைவேற்றுவேன்” என்று கூறி மறைந்தார்.
அதன்பிறகான ஒரு சதுர்த்தி நாளில், பார்வதிதேவி தன்னுடைய கையில் இருந்து சந்தனத்தைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அது உயிர்ப்பெற்று விநாயகப்பெருமானாக மாறியது. அந்தக் குழந்தைக்கு ‘கணேஷ்’ என்று பெயர் சூட்டினாள். எந்த ஒரு பணியையும் தொடங்கும் முன்பாக, கணேஷனை நினைத்து வழிபட்டபிறகு தொடங்கினால், அந்த காரியம் தடையின்றி நடைபெறும் என்று பார்வதிதேவி ஆசீர்வதித்ததாக இந்த ஆலய வரலாறு சொல்கிறது.
இந்தக் கோவில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இது ஒரு குகைக் கோவில் ஆகும். ஆலயத்தின் முன்பு பெரிய விசாலமான சபா மண்டபம் அமைந்துள்ளது. அங்குள்ள தூண்கள் அனைத்தும் சித்திர வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு கண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. விநாயகரின் திருமுகம் தெற்கு நோக்கியபடி இருக்கிறது. விநாயகரின் இரு பக்கங்களிலும், அனுமனும், சங்கரரும் இருக்கிறார்கள். இந்த கருவறையில் உள்ள விநாயகருக்கு, பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூஜை செய்து வழிபடலாம் என்பது சிறப்பம்சமாகும்.
இந்த விநாயகருக்கு தினமும் காலையில் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் பிரமாண்டமான முறையில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. சந்ததுக்காராம் மற்றும் அவரது குரு ராகவ சைதன்யர் ஆகியோர் இத்தல விநாயகரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

கும்பகோணத்தில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்வதுண்டு.
மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும் மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.
இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்’. இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்’. இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங் குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும்.
கருவறை தேவக் கோட்டத்திலும் பிரகாரத்திலும் விநாயகர், ஜூரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்த கன்னிகள், சமயக்குரவர்கள், பால சுப்பிரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டா தேவி, மூன்று துர்க்கைகள், சண்டிகேஸ்வரர், சூரியன், காளீஸ்வரர், நாகராஜர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
மகரிஷி மோட்ச தலம் :
மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.
மூன்று துர்க்கைகள் :
வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கை களையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், அஷ்டமியில் பைரவர் சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.
மாசி மாதம் 13,14,15 தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மேல் விழுகிறது. இறைவனுக்கு சூரிய பூஜை செய்து முடித்து சில மணி நேரங்களில் இறைவியின் திருப்பாதங்களில் சூரிய ஒளி படுவதைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

அன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள், முதன்மையானவள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள், சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்...
கடல் மல்லை என்று அழைக்கப்படும் மாமல்லபுரத்தில் அருகே அமைந்துள்ள கடம்பாடி கிராமத்தில் கருணை பொழியும் மகமாயி ஆக வீற்றிருக்கும் கடம்பாடி சின்னம்மன் வரலாற்றை நாம் பார்க்கலாம்.
ஜமதக்னி முனிவர் தன் மகன் பரசுராமரை ஆரத்தழுவிக் கொண்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை செயலாக்க தன் அன்னையின் தலையை கொய்துவிட்டு வந்திருக்கிறாரே, பெற்றவளை இழந்த கவலையோடு, தந்தையைப் பார்க்கிறார் பரசுராமர். ஜமதக்னி முனிவரோ, என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். அந்தக் காரிருள் வேளையில் தன் மகன் என்ன கேட்பான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தந்தை கேட்டவுடன் கொடுத்து விடுவார் என்பதை பரசுராமரும் உணர்ந்திருந்தார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து மகாசக்தியை பூவுலகுக்கு கொண்டுவர ஆயத்தம் ஆனார்கள். ஆதிசக்தியை உலகம் முழுவதும் பொங்கி எழச் செய்ய பணிவாய் பரசுராமர் தன் தந்தையின் முன்பு கைகூப்பி மென்மையான குரலில் பேச ஆரம்பித்தார்.
தங்களின் கட்டளைப்படி என் தாயின் சிரம் கொய்து வீசிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்று சொன்னதால் கேட்கிறேன், என் தாய் எனக்கு வேண்டும், வெட்டுண்ட தலைகள் இணைய வேண்டும், என்று கேட்டுவிட்டு அமைதியார் நின்றார்.
ஜமதக்னி கண்கள் மூடினார். மகாசக்தி பூவுலகை மையமாக்கி, பரசுராமர் போன்ற மகத்தான ரிஷிகளால் தான் பரவவேண்டும் எனக் காத்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.
போ, உன் தாயின் சிரசையும், உடலையும் ஒன்றுசேர், அவள் உயிரோடு எழுவாள் என்றார். பரசுராமர் அந்த இருட்டில் தன் தாயின் சிரசை கையில் தாங்கினார். கைகளால் துழாவி உடலை எடுத்து இணைத்தார். மெல்ல நிலவொளியில் பார்த்தார். அதிர்ந்தார். தன் தாயின் சிரசும் வேறொரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர் பெற்றிருந்தது. ஆதிசக்தி எளிமையாக எல்லா இடத்திலும் அமர திருஉளங்கொண்டாள். பரசுராமர் அந்த சக்தியின் அருளில் நனைந்தெழுந்தார். அவள் நானிலம் எங்கும் பரவி அமர்ந்தாள். தேசத்தின் எல்லை, நகரத்தின் மையம், கடைக்கோடி கிராமம் என்று எல்லா இடத்திலும் மிக பலமாக தன்னை இருத்திக் கொண்டாள்.
அப்படி, தென் தமிழகத்தில் சக்தியின் முழு இருப்பாக பெரியபாளையம், ஊத்துக்காடு, சமயபுரம், கண்ணபுரநாயகி, படவேடு, கொல்லனூர், வீராம்பட்டிணம் என்று ஏழு தலங்களில் மகாசக்தியாக அமர்ந்தவள், சற்று நிதானித்து அந்த மாமல்லபுரம் என்னும் கடற்கரையை ஒட்டிய கிராமத்திற்குள் நுழைந்தாள். பச்சைப் பசேலென சிலிர்த்திருக்கும் வேப்ப மரத்தடியில் புற்றாய் பொங்கினாள். பிரபஞ்ச சக்தியாக இருந்தது, ஆணுமல்லாது, பெண்ணுமல்லாது, அருவுருவாய் அசைந்தது, தான் ஒரு உருவோடு வெளிப்பட வேண்டுமென சங்கல்பித்துக் கொண்டது, மெல்ல பெண்ணுருவாய் தன்னை மாற்றிக் கொண்டது.
புற்றுக்குள் இருந்த பாம்பை ஆடையாக்கி சேலையாய் சுற்றிக் கொண்டாள். நாகத்தை குடையாக்கி கவிழ்த்து கூர்மையாய் பார்த்தாள். இரு காதுகளிலும் சிறு சிறு துளையாக்கி அதில் சிறு பாம்புக் குஞ்சுகளை குண்டலங்களாக்கி அணிந்து கொண்டாள். அவைகள் அழகாய் படமெடுத்து ஆடின. இரவு நேரங்களில் நெடிதுயர்ந்து நின்ற தேக்கு மரங்களில் பாம்புகளை கயிறாக்கி விளையாடினாள். கிராம மக்கள் சட்டென்று விழித்துப் பார்க்க அந்த மகிழந்தோப்பில் மறைந்தாள். ஊர் பெரியவரின் கனவில் தான் வேப்பமர புற்றுக்குள் இருப்பதாக சொல்லி மறைந்தாள். தொடர்ந்து ஊர் மக்கள் எல்லோர் கனவிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.
நான் நிரந்தரமாக இந்த ஊரிலேயே தங்கி உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவேன். தேக்கு மரங்களில் கயிறு கட்டி, அலகு குத்தி
அந்தப்புரத்தில் ஆடினால், நான் மகிழ்வேன் என்றாள். ஊராரும் விசித்தரமான அவளது ஆசையை பிரார்த்தனையாக நிறைவேற்றினர். தேக்கு மரத்தில் கடம் ஆடியதால் அந்த கிராமத்திற்கு கடம்பாடி என்ற பெயர் வந்தது. எல்லா அம்மன்களும் தென்தமிழகம் முழுவதும் தங்களை இருத்திக் கொண்டு இறுதியாக இங்கு வந்ததால் இந்த அம்மனுக்கு சின்னம்மன் என்று பெயரிட்டு அன்போடு அழைத்தனர். அவளும் அந்த கடம்பாடி கிராமத்தை தன் கருணை வழியும் கண்களால் காத்தாள்.
கோயிலின் முன் மண்டபமும், கருவறையும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பல மாபெரும் மன்னர்கள் தலைதாழ்த்தி அம்மனின் பாதம் பற்றி அவளது அருளை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதே உயிர்ப்போடு விளங்குகிறாள். சின்னம்மனின் சந்நதி அதிர்வுகள் நிறைந்து காணப்படுகிறது. கோயிலின் இடதுபுறம் பெரிய குளமும், அதில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவமும், தீமிதி திருவிழாவும் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாகதோஷ பிரார்த்தனைத் தலம் ஆக விளங்கும் கடம்பாடி சின்னம்மன் பல்வேறு தோஷங்களை நீக்குகிறாள்.
அம்மை நோய் குணமடைய இங்கு வந்து தீர்த்தம் சாப்பிட்டால் விரைவில் குணமடையும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை பக்தர்களுக்கு வாரி வழங்கும் அன்னையாக திகழ்கிறார். மேலும் ஆடிப்பூரத்தில் ஆடிப்பூர தீமிதி திருவிழா, நவராத்திரி திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, ஆடிமாதத்தில் கோயில் முன்பு பொங்கலிட்டு ஆடித்திருவிழா என பல்வேறு திருவிழாக்களால் பக்தர்களை மகிழ்விக்கிறார்.
சின்னம்மனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். வந்து தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வை வளமாக்குவாள். அன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள், முதன்மையானவள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள், சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்...

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திசவிளக்கு கிராமம். இங்குள்ள கொல்லங்கரடு மலையில், ஸ்ரீவைர முனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த கொல்லங்கரடு மலையில் கிழக்கு நோக்கி சமயபுரத்தம்மன், ஸ்ரீவைர முனீஸ்வரர், விநாயகர், முருகர் ஆகிய தெய்வங்களும், மேற்கில் அசுரரும், வடக்கில் காமதேனு, வைர குருமணி உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இதில் வைர குருமணி தனது வலது காலை தலையின் மேல் வைத்து யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்கிறார். மற்ற கோவில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீவைர முனீஸ்வரர்.
வாரந்தோறும் திங்கள், வெள்ளி மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் சேலம் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். பிற்பகல் 1 மணியளவில் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனைதொடர்ந்து மாலை 6 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.
தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச்செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோவிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள். மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச்செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இந்தக் கோவிலின் ஆண்டு விழா வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடிப்பெருக்கு அன்று சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக அன்று அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சித்தர் கோவிலுக்கு நடந்து செல்வார்கள். பின்னர் அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் அருவி மற்றும் கிணறுகளில் குளித்துவிட்டு பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி ஏந்தி, அலகு குத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவிலுக்கு செல்வார்கள்.
அன்னதானம்
பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அன்னதானம், குளிர்பானம் மற்றும் மோர் ஆகியவை வழங்குவார்கள். மேலும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெறும். ஊர்வலத்தில் வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பால் மற்றும் தீர்த்தக்குடத்தில் உள்ள புனித நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து அசுரர் தெய்வத்திற்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கப்படும். ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று தெளிப்பார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யம் கிடைப்பதாக பக்தர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.

மகாவிஷ்ணு சில இடங்களில் அமர்ந்த கோலத்திலும், சில இடங்களில் நின்ற கோலத்திலும், இன்னும் சில இடங்களில் சயன (கிடந்த) கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். அப்படி அவர் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சில தலங்களைப் பற்றி சிறு குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..
வைணவ மூர்த்தியாக இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு பல்வேறு இடங்களிலும் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் அமர்ந்த கோலத்திலும், சில இடங்களில் நின்ற கோலத்திலும், இன்னும் சில இடங்களில் சயன (கிடந்த) கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். அப்படி அவர் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சில தலங்களைப் பற்றி சிறு குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..
திருவட்டாறு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது திருவட்டாறு திருத்தலம். இது திருவனந்தபுரத்திற்கு கிழக்கே 51 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு அருளும் இறைவன், ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் சயன கோலத்தில் மேற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். ஆதிசேஷனின் மீது சயனித்திருக்கும் இந்தப் பெருமாள், 18 அடி நீளம் கொண்டவர். இவர் கடுகு- சர்க்கரை கலவையால் உருவானவர். இந்தப் பெருமாளை, மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். தாயாரின் திருநாமம், மரகதவல்லி நாச்சியார்.
திருவனந்தபுரம்
மலைநாட்டு திருத்தலமான திருவனந்தபுரத்தில், பாம்பணை மீது பள்ளிகொண்ட கோலத்தில் அனந்த பத்மநாம சுவாமி வீற்றிருக்கிறார். இவர் 12 ஆயிரம் சாளக்கிராம கல்லாலும், அஷ்டபந்தன கலவையாலும் உருவாக்கப்பட்டவர். இவர் ஆதியில் பிரமாண்ட உருவம் கொண்டிருந்தார். பரமனின் உடல் அனந்தபுரத்திலும், திருமுகம் தெற்கே எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவல்லத்திலும், திருப்பாதங்கள் வடமேற்காக 12 கிலோமீட்டர் தூரம் உள்ள திருப்பாப்பூர் திருத்தலத்திலும் அமைந்திருந்ததாம். இதைக் கண்ட திவாகர முனிவர், அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மேனியை சுருக்க வேண்டினார். அதன்படி தன் உருவை 18 அடியாக பெருமாள் சுருக்கிக்கொண்டார். இங்குள்ள தாயார் பெயர், ஸ்ரீஹரி லட்சுமி.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தேவர்களுக்காக, காலநேமி என்ற அசுரனை சக்கராயுதம் கொண்டு அழித்தார், பெருமாள். பின்னர் சக்கராயுதத்தை புண்ணிய நதிகளில் நீராட்டி, ஒரு ஆலமரத்தின் அடியில் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டார். இதுவே ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத் தலம். மூலவர் ரெங்கமன்னார். தாயார் ஆண்டாள். இந்த ஆலயம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒன்று வடபத்ரசாயி கோவிலாகவும், இன்னொன்று தென்மேற்கில் நாச்சியார் கோவிலாகவும் காணப்படுகிறது. இந்த இரண்டு கோவில்களுக்கும் இடையே உள்ள நந்தவனத்தில்தான் ஆண்டாள் நாச்சியார் தோன்றினாள்.
திருப்பேர் நகர்
தஞ்சாவூர் மார்க்கத்தில் உள்ளது கோவிலடி. திருப்பேர் நகர் எனப்படும் இந்த இடத்தில் அப்பக்குடத்தான் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. காவிரி-கொள்ளிடம் நதிகளுக்கிடையில் இந்த தலம் உள்ளது. இத்தல பெருமாள் புஜங்க சயனத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரிகிறார். தாயார் திருநாமம் கமலவல்லி என்பதாகும். இங்குள்ள பெருமாள், தனது வலது கையில் அப்பக்குடம் ஒன்றை வைத்திருக்கிறார்.
திருமோகூர்
மதுரைக்கு வடகிழக்கே 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருமோகூர். ராஜ கோபுரத்துடன் நான்கு பிரகாரங்கள் கொண்டதாக இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, அதில் ஒரு துளி இங்குள்ள குளத்தில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த குளத்திற்கு தெற்கே பெருமாள் பள்ளிகொண்டுள்ளார். பெருமாள் மோகினியாக வந்து தேவர்களுக்கு அமிர்தம் வழங்கிய தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள பெருமாளின் கோலத்தை, ‘பிரார்த்தனா சயன கோலம்’ என்கிறார்கள். தாயார் திருநாமம், மோகனவல்லி என்பதாகும்.