என் மலர்
கோவில்கள்
அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி, பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் ‘மாரியம்மன்’ என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள்.
அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி, பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் ‘மாரியம்மன்’ என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலய வரலாற்றை இங்கு பார்ப்போம்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது திருக்கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம மக்கள், தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு வனப்பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.
ஒரு பட்டியிலிருந்த காராம் பசு ஒன்று, பால் கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமலும் தன் கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று கவனித்தான். அந்த பசு தன் பாலை தினந்தோறும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்குப்புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தான். இதுபற்றி மாட்டின் உரிமையாளரிடமும், ஊர் மக்களிடமும் கூறினான். மேலும் அந்தப் பசுவின் செய்கையை மறுநாள் அனைவரையும் அழைத்துச் சென்று காட்டவும் செய்தான்.
அந்த காட்சியைக் கண்ட அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். இது தெய்வத்தின் திருவிளையாடல் என்று நினைத்து கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்வதற்காக, முட்புதர்களை அகற்றியபோது அங்கு புற்று ஒன்றும், அதன் அருகில் வேங்கை மரத்தின் அடியில் சுயம்பு லிங்கம் ஒன்றும் இருப்பது தெரியவந்தது. அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அருள் வந்து, வாக்கு கூறினார். அதில், ‘தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதி மாடுகளை ஓட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்தச் சூழலில் தங்கிவிட்டேன். என்னை, ‘பண்ணாரி’ எனப் போற்றி வழிபட்டு வாருங்கள்’ என்றார்.
அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்து கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்னர் சிறிய கோவில் அமைத்து, அம்மனுக்கு பத்மபீடத்துடன் திருவுருவம் செய்யப்பட்டது. அம்பிகையை பயபக்தியுடன் துதிக்கும் அன்பர்களுக்கு வேண்டியதை வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கிறாள். அமாவாசை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் உத்திரம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு பூச்சாற்று நடத்தப்படும். வியாழனன்று மஞ்சள்நீர் உற்சவமும், திருக்கோவிலாரால் அன்னதானமும் நடைபெறும். அன்று அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று மாலை அம்மனுக்கு திருவிளக்குப் பூசை நடைபெறும். மேற்படி பூசையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.
இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள், குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு ‘கரும்பு வெட்டுதல்’ என்று பெயர். இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.
இந்த கோவிலில் விநாயகர், பொம்மையராயன் அம்மன் திருச்சன்னிதிக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் கோவில் கட்டிடத்தை ஒட்டிய வகையில் மேற்குப் பார்த்த வண்ணமாக பொம்மையராயசுவாமியும், முன் மண்டபத்தில் கிழக்குப் பார்த்த வண்ணமாக விநாயகரும் இடம் பெற்றிருக்கின்றனர். அம்பிகையின் திருக்கோவிலுக்குத் தெற்குப் பக்கத்தில் மேடை மீது மாதேசுவர திருமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தெப்பக்கிணற்றுக்கு அருகில் மேற்குப் பார்த்த சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் சருகு மகா மாரியம்மன் வீற்றிருக்கிறாள். இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 131 வது தேவாரத் தலம் ஆகும். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவர் திருப்பெயர் : அமிர்தகலசநாதர்
இறைவியார் திருப்பெயர் : அமிர்தவல்லி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : நால்வேத தீர்த்தம்
வழிபட்டோர் : சாக்கியநாயனார், பிரம்மா
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 131 வது தேவாரத் தலம் ஆகும். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.
சாக்கியநாயனார்:
காஞ்சிபுரம் அருகே மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார்.
எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்ற போது வழியில் ஒரு சிவலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு அந்த இடத்தில் பூஜைக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது.
சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், அவர் விசியெறிந்த கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன் ஒருவருக்குத் தான் இவர் உணமையான பக்தியால் இவ்வாறு செய்கிறார் என்பது புரியும்.
இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.
உலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். அம்மன் தவம் செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. விசேஷமான தெட்சிணாமூர்த்தி உள்ளார். லிங்கோத்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார்.
அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு.
கோவில் அமைப்பு:
இது ஒரு கிழக்கு நோக்கிய கோவில். முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் உள்ள ஒரு நுழைவாயில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. நுழைவாயிலுக்கும் 3 நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.
கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத்தக்கது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார்.
இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
சிறப்புக்கள் :
அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு. வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன். சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.
போன்: 9865306840, 9788202923
அமைவிடம் :
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்
இவ்வாலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.
இறைவியார் திருப்பெயர் : அமிர்தவல்லி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : நால்வேத தீர்த்தம்
வழிபட்டோர் : சாக்கியநாயனார், பிரம்மா
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்
தல வரலாறு:

காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பிவைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார்.
அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் "பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால்தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்" என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தான்.
பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங் கினார். "துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்" என்று ஆசி கூறி அனுப்பினார். பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல் வழி காட்டுமாறு வேண்டி நின்றான்.
துர்வாச முனிவர், பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார். அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான், பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே, வல்லக்கோட்டை முருகப்பெருமான் திருக்கோவில். வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபய கரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது. பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள், வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. 7 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை.
வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இந்தப் பகுதி இருந்தது. அந்த அசுரன், தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதையடுத்து தேவர்கள், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருப்பெருமானும் தேவர்களின் துயரைத் துடைக்க எண்ணினார். அதன்படி அசுரனை அழித்து அவனுக்கு முக்தி அளித்தார். மேலும் அசுரனின் வேண்டுகோள்படி, இந்த ஊர் 'வல்லன் கோட்டை' என்று சிறப்பு பெறும் என்றும் அருளினார். அந்த வல்லன்கோட்டையே, தற்போது வல்லக்கோட்டை என்று மருவி உள்ளதாக பெயர் காரணம் சொல்லப்படுகிறது.
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை வெகு விமரிசையாக நடை பெறும்.
அருணகிரிநாதர் பாடிய தலம்
அருணகிரிநாதர் தல யாத்திரையாக பல ஆலயங்களுக்குச் சென்று வந்தார். திருப்போரூர் முருகனை தரிசித்த அவர், அன்றிரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், 'கோடைநகர் மறந்தனையே..' என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர், கனவில் தோன்றிய முருகப்பெருமானை நினைத்தபடி, திருத்தணி செல்லும் வழியில் வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். மேலும் அந்த முருகப்பெருமானின் மீது 8 திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார்.

கந்தக்கடவுள் குடியிருந்து அருள்புரியக்கூடிய அற்புதமான இடங்களை அறுபடை வீடுகளாக குறிப்பிடுகின்றோம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பும், வரலாறும் உண்டு.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது மரபு. கந்தக்கடவுள் குடியிருந்து அருள்புரியக்கூடிய அற்புதமான இடங்களை அறுபடை வீடுகளாக குறிப்பிடுகின்றோம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பும், வரலாறும் உண்டு. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை அறுபடை வீடுகளாகும்.
திருப்பரங்குன்றம்
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு முதல் நூலாக திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இத்தலத்தில் தான் பாடியுள்ளார். இத்தலமானது சமய ஒற்றுமையை நிலைநாட்டும் தலமாக விளங்குகிறது. அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் “திருப்பரங்குன்றம்” எனப்படுகிறது. திருமண தடையை அகற்றும் தலமாகவும் விளங்குகிறது.
திருச்செந்தூர்
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். பிறவாமை என்னும் வரம் தருகின்ற தலமாகவும் உள்ளது. மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருகை புரிவதாக நம்பப்படுகிறது. இத்தலம் பற்றி சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையை இன்பமாக்கும் வெற்றியை தருவதால் “ஜெயந்தி நாதர்” எனவும் அழைக்கப்படுகிறார். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் திருச்சீரலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது.
பழனி
மூன்றாவது படை வீடாக விளங்கும் இந்த தலம் செல்வத்திற்கு அதிபதியாகவும், செவ்வாயின் சிறப்புகளையும் கொண்டது. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழனி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழனியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். பழனி கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. திருஆவினன்குடி என்ற பெயரும் இந்த தலத்திற்கு உண்டு.
சுவாமி மலை
நான்காவது படைவீடாக விளங்கும் இத்தலம் தன்மகனின் உபதேசம் கேட்ட தந்தையாக, தந்தைக்கு உபதேசம் செய்த மகனாக எழுந்தருளி அருள்புரியக்கூடிய சிறப்பு தலமாகும். தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் “சிவகுருநாதன்” என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார். இத்திருத்தலம் “திருவேரகம்” எனவும் அழைக்கப்படுகிறது.
திருத்தணி
ஐந்தாவது படைவீடாக விளங்கும் இத்தலம் அஞ்சுதலை நீக்கி ஆறுதலை கொடுக்கும் தலமாகும். தானம், தர்மங்களை பற்றி விளக்கும் தலமாக சிறந்து விளங்குகிறது. வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகவும் புராணங்கள் கூறுகிறது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். தணிகை முருகன் கோவில் என்றும் அழைப்பர். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் “தணிகை” என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. குன்றுதோறாடல் எனவும் இந்த தலம் அழைக்கப்படுகிறது.
சோலைமலை
அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக விளங்குவது சோலைமலை. அவ்வையாரிடம்,“சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,” என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோவில் கொண்டிருக்கிறார். இறையருள் என்னும் மெய்யறிவு வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். இந்த தலத்தில் முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நூபுரகங்கையில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு நிகராகும்.
சிவக்குமார், முதுகலை தமிழ் முதலாமாண்டு, செந்தமிழ்க்கல்லூரி,மதுரை.

தர்மபுரி நகரின் கோட்டை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது, மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தர்மபுரி நகரின் கோட்டை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது, மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக்கோவில். துர்வாசர், காசியபர், அகத்தியர், பரத்வாஜர், கவுசிகர் ஆகிய 5 முனிவர்களாலும், இந்திரன், வருணன், எமன், நிருதி, அக்னி, வாயு, குபேரன் மற்றும் அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பாண்டவர்கள், ஐராவதம் என்னும் வெள்ளை யானை, யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோராலும் வழிபாடு செய்யப்பட்ட தலம் இதுவாகும். இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனேஸ்வரர் என்றும், இறைவி காமாட்சி அம்மன் என்றும் வழிபடப்படுகிறார்கள். இந்த ஆலயம், தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாக உள்ளது. சிறுவனின் விருப்பத்திற்காக, சிவபெருமானே வேதியர் உருவில் வந்து, அவிர்பாகத்தை வாங்கிய சிறப்புமிக்க கோவில் இது.
கோவில் கருவறையில் சிவலிங்க உருவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர பீடமாக அமைந்திருக்கிறது. சிவலிங்கம் 36 தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் பட்டைகளைக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. மூலவர் கருவறையின் முன்பாக மகர மண்டபத்தில் இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை பல டன் இருக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இதனால் இவை ‘தொங்கும் தூண்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆலய விதானத்தில் வட்ட வடிவிலான அமைப்பில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அருள்புரிகிறார். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும். மூலவரின் கருவறை வாசலில் உள்ள கஜலட்சுமி உருவம், இருபுறமும் மாறுபட்ட முறையில் நீர் சொரியும் யானைகளைக் கொண்டதாக இருக்கிறது. இத்தல முருகப்பெருமானும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் சபரிமலை ஐயப்பனைப் போல, குந்தணமிட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். மயிலின் வாயிலும், முருகப்பெருமானின் காலடியிலும் நாகங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் சன்னிதியில் உள்ள விநாயகர் உருவம் மற்றும் அவரது சன்னிதிக்குரிய விமானம் ஆகியவை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கிறது.
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. அதாவது18 படிகள் கொண்ட உயர்ந்த குன்று அமைத்து அதன்மேல் அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை 15 யானைகள் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதியில் நீர் தெளித்து வழிபட்டால் நாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தால், ராமாயணக் காவியத்தின் சிறப்புகள் முழுவதும் புடைப்புச் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோவில்கள் அடிப்பாகம் ஒளியும், நிழலும் விழுமாறு மேடு பள்ளமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனுக்கு வழிபாடு நடைபெறுவது போல, இந்தக் கோவிலில் எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு. பவுர்ணமியில் காமாட்சிக்கும், அமாவாசையில் ராஜதுர்க்கைக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொளள்லாம்.
தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி ‘கருத்திட்டைக்குடி’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது ‘கரந்தட்டான்குடி’ என்றும், ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது.
இங்குள்ள இறைவன், ‘வசிட்டேசுவரர்’, ‘கருவேலநாதர்’, ‘கருணாசாமி’ என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், ‘பெரியநாயகி’, ‘திரிபுரசுந்தரி’ என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.
சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது.
பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவிலின் கருவறை, விமான கட்டிடக்கலை, கருவறை சுவர்களில் காணப் பெறும் மிகச்சிறந்த சிற்பங்கள் போன்றவை, சோழர் கால வரலாற்றில் புதிய அரிய பல தகவல்களை தருகின்றன. கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கு திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. கரந்தை மக்கள் வந்து வழிபட்டுச் செல்ல தெற்கு நோக்கிய கோபுர வாசலாய் மற்றொன்று உள்ளது. மற்றொரு வாசல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசல்களை ஒட்டியுள்ள மகாமண்டபம் பிற்காலத்து திருப்பணியாகும். இதன் தரையில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற சிற்பமும் அதையொட்டி ஒரு கல்வெட்டும் உள்ளன.
கோவிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, ‘இந்தக் கோவில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்’ எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது. அன்று முதல் இந்தப் பகுதி ‘கருந்தட்டான்குடி’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘கரந்தை’ என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த குளத்தில் புனித நீராடி கருணாசாமியை வழிபாடு செய்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருமணம், உயர்கல்வி, ஞானம், உயர் பதவிகள், ஆட்சித்திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றை வேண்டுவோருக்கு, வேண்டியதை அருளிடும் இந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் ஒருமுறை தவறாமல் சென்று கருணாசாமியின் அருளைப் பெறுவோம்.
ஆரூண், பிள்ளையார்பட்டி.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஜார் என்ற இடத்தில் இருக்கும் விக்னேஷ்வர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஜார் என்ற இடத்தில் இருக்கும் விக்னேஷ்வர் திருக்கோவில். இந்த திருத்தலம் பூனாவில் இருந்து நாராயண்காவ் ஜுன்னூர் செல்லும் வழியில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் தல வரலாற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
முன் ஒரு காலத்தில் ஹேமாவதி என்னும் நகரை, அபிநந்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பதவி, செல்வம் ஆகிய எல்லாவற்றிலும் அளவற்ற ஆசை இருந்தது. தான் நினைத்த பதவிகளை எல்லாம் வகித்து வந்தான். இதையடுத்து அவனுக்கு, தேவலோகத்தில் உள்ள இந்திரனின் பதவியை அடைய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதற்காக பிரம்மதேவனை நினைத்து பெரிய யாகம் ஒன்றை செய்யத் தொடங்கினான். இதுபற்றியச் செய்தியை, மூவுலகங்களுக்கும் சென்றுவரும் நாரத முனிவர், இந்திரனிடம் தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த இந்திரன், காலன் என்பவனை பூலோகத்திற்கு அனுப்பி, அபிநந்தன் செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டான். அதன்படியே பூலோகம் வந்த காலன், அபிநந்தனின் யாகத்தை கலைத்தான். அதோடு பூலோகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வைதீகச் செயல்கள் அனைத்தையும் அழித்துவிட்டான். இதனால் அந்த காலன், ‘விக்னாசுரர்’ என்ற அசுரனாக உருவெடுத்தான். அவனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் துன்பத்தில் உழன்றன. அந்த அசுரனைக் கண்டு மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலைவிரித்தாடியது.
இதனால் தேவர்கள் அனைவரும் கஜானனன் எனப்படும் விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். இதையடுத்து தேவர்களுக்கு, மக்களுக்கும் துன்பங்களை நீக்க விநாயகப்பெருமான் முடிவு செய்தார். தேவர்களையும், உலக உயிர்களையும் காப்பதாக வாக்களித்த விநாயகர், பராசர முனிவருக்கு பிள்ளையாகப் பிறந்தார். பின்னர் விக்னாசுரனுடன் போர் புரிந்தார். விநாயகரின் ஆற்றலைக் கண்ட பயந்து நடுங்கிய விக்னாசுரன், அவரிடம் அடைக்கலம் அடைந்ததோடு, தான் செய்த பிழையை பொறுத்து அருளும்படி மன்னிப்பு வேண்டினான்.
உடனே விநாயகப்பெருமான், “என்னை வழிபடுபவர்கள், என்னுடைய பக்தர்கள் யாரையும் நீ ஒன்றும் செய்யக்கூடாது” என்று கட்டளையிட்டு, விக்னாசுரனுக்கு மன்னிப்பு வழங்கினார். அப்போது விக்னாசுரன், தன்னுடைய பெயரையும் விநாயகரின் பெயருக்கு முன்பால் சூடிக்கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அதன்படியே அவனது பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால் விநாயகர் சூடிக்கொண்டார். இதன் காரணமாக, இத்தல விநாயகப்பெருமான், ‘விக்னேஷ்வர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த நாமத்தை உச்சரிப்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் உடனடியாக சித்தியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த விநாயகர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய வாசலை அடைந்ததும் உள்ளே சபா மண்டபம் காணப்படுகிறது. அந்த மண்டபத்தில் ஒரு அழகான, கம்பீரமான விக்னேஷ்வரின் மூர்த்தி ஒன்று உள்ளது. இந்த மூர்த்தியின் தும்பிக்கை, இடதுபக்கம் திரும்பியது போல் காட்சி தருகிறது. இந்த விநாயகரின் இரண்டு கண்களிலும் மாணிக்கம் வைக்கப்பட்டுள்ளது. தலையில் வைரமும், வயிற்றில் ரத்தினமும் பதிக்கப்பட்டுள்ளது. விநாயகரின் இரண்டு பக்கத்திலும் பித்தளையால் செய்யப்பட்ட சித்தி- புத்தி தேவியரின் திருமேனிகள் காட்சி அளிக்கின்றன. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கிக்கொள்வதற்காக, இங்கு தர்மசாலா எனப்படும் இலவச தங்கும் விடுதிகள் இருக்கின்றன.
ஆதிசங்கரனின் ஷண்மத அமைப்பில், மகாராஷ்டிரத்திற்கு ‘காண்பத்யம்’ சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘கவுமாரம்’ என்று சொல்லப்பட்ட முருகன் எப்படியோ அப்படித்தான், மகாராஷ்டிராவில் கணபதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவருக்கான நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அனைவரும் தரிசிக்க வேண்டிய தலங்களில் இதுவும் ஒன்று.

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது ‘வலங்கைமான்’ என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது, சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்
தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், அந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதும், பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்தான். ஆனால் அந்த நேர்த்திக்கடனானது, குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவது, இன்னும் பிற வேண்டுதல்களுக்காக அபிஷேக ஆராதனைச் செலவுகளை ஏற்றுக்கொள்வது, கோவிலுக்கு பொருட்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என்றுதான் பெரும்பாலும் இருக்கும். ஆனால் உயிரை காத்து அருளிய தெய்வத்துக்கு, பூரணமாக குணமடைந்ததும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக் கிடந்து, கோவிலைச் சுற்றி வலம் வந்து செலுத்தும் நேர்த்திக்கடன் கொஞ்சம் அபூர்வமானதுதான்.
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது ‘வலங்கைமான்’ என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது, சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில். வலங்கைமான் கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலின் அருகிலேயே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலும், பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் திருமடமும் உள்ளது. வலங்கைமான் மகாமாரியம்மன், உருவத்தில் சிறியவள்; எளிமையானவள். ஆனால் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளை விட பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள். மாரியம்மன், குழந்தை ரூபத்தில் இந்தத் தலத்தில் அருள்வதாக தல புராணம் சொல்கிறது.
தல வரலாறு
சுமார் 230 ஆண்டுகளுக்கு முன், வலங்கைமான் ஊரின் அருகில் உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோவில் பக்கத்தில் ஒரு குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை வலங்கைமானில் உள்ள ஏழைப் பெண் ஒருத்தி எடுத்து வளர்த்து வந்தாள். இந்த நிலையில் அந்தக் குழந்தை வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டது. அன்று இரவு ஊர் மக்களின் கனவில் வந்த அந்தக் குழந்தை, “எனக்கு உடல் இல்லையே தவிர உயிர் இருக்கிறது. நான் மாரியம்மன். நான் தான் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுபவர்களுக்கு உயிருக்கு அபயம் தந்து காப்பேன்” என்று கூறி மறைந்தது. இதனைக் கேட்டதும் ஊர் மக்கள் குழந்தை சமாதியில் ஆலயம் எழுப்பினர். அன்று குழந்தை வடிவில் வலங்கைமானுக்கு வந்த மாரியம்மனே, இன்று சீதளாதேவி மகா மாரியம்ம னாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்.
நான்கு திருக்கரங்களுடன் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டபடி வீர சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி மகா மாரியம்மன் வீற்றிருக்கிறாள். வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியும், இடது மேற்கரத்தில் சூலமும், இடது கீழ்கரத்தில் கபாலமும் வைத்திருக்கிறாள். அம்மனின் இரு தோள்களிலும் இரண்டு நாகங்கள் உள்ளன. இத்தல மாரியம்மனை தீபமேற்றி வழிபட்டு அர்ச்சித்தால், நாக தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் விநாயகர், இருளன், பேச்சாயி, பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் உடனாய மதுரைவீரன் சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன. வாய் பேச முடியாத குழந்தைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து மாரியம் மனுக்கும், பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாக சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
‘அபிராமி அந்தாதி’ பாராயணம் செய்து வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்துவழிபட்டால் சுபகாரியத்தடைகள் அகலும். உடலில் எந்தப் பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் வருவது இந்தத் தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபி ஷேக பாலையும், வேப் பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகிவிடும்.
கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம் மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேகப் பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண்பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும் என்கிறார்கள். கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண்மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சை சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.
உயிருக்கு போராடுபவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், தீராத நோய்களால் உயிர் பயத்தில் அவதியுறுபவர்கள் இத்தலம் வந்து அம்மனை வேண்டிக் கொள்ள வேண்டும். அல்லது நோயாளிகளின் உறவினர்கள் இங்குவந்து அம்மனிடம் உயிர் காக்க வேண்டி, அம்பாளிடம் ‘பாடை காவடி நேர்ச்சை’ செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், அம்மன் நிச்சயம் உயிரை காத்துக் கொடுப்பாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நேர்த்திக்கடனை ஆலயத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவின் போது செலுத்த வேண்டும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழி யில் 9 கிலோமீட்டர் தொலை வில் வலங்கைமான் அமைந்துள்ளது. இங்குள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் அருகில்தான், மிகவும் பழமையான வலங்கைமான் பெரியநாயகி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் இருக்கிறது. பொதுவாக சிவபெருமானின் இடக்கரத்தில் மான் இருக்கும். ஆனால் இங்கு சிவபெருமானின் வலக்கரத்தில் மான் உள்ளதாம். இதனால் ‘வலக் கை மான்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், நாளடைவில் ‘வலங்கைமான்’ என்றானது.
போலீசாரின் மண்டகப்படி
இந்த ஆலயத்தில் நடைபெறும் பங்குனி மாத பெருவிழாவின் போது, வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு நாள் மண்டகப்படி வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு காரணக் கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, வலங்கைமான் காவல் நிலையத்தில் 1942-ம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றார். அந்தச் சமயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் போது பாடைக் காவடி மற்றும் அலகு காவடி போன்றவை எடுக்க அந்த அதிகாரி தடைவிதித்தார். அதோடு பக்தர்களை துர்வார்த்தைகளால் திட்டியும், கைத்தடியால் அடித்தும் விரட்டினார். அப்படி அவர் செய்த சில மணி நேரத்திலேயே அவரின் இரண்டு கண் பார்வையும் பறிபோனது. அம்மை நோயும் அவரது உடலை பாதித்தது.
இத்தல அன்னையின் கோபத்தால்தான் இப்படி நேர்ந்தது என்பதை உணர்ந்த அந்த போலீஸ் அதிகாரி, ஒரு பேப்பரில் ‘இனிமேல் எந்த அதிகாரியும் என்போல் பாடை கட்டி விழாவுக்கும், இறை காரியத்திற்கும் தடையாக இருக்காதீர்கள்’ என்று எழுதி கையெழுத்திட்டார். அன்று முதல் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து பங்குனி மாத திருவிழாவின் போது ஒரு நாள் மண்டகப்படி கொடுக்கும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கொல்லூர் திருத்தலம். இங்கு பிரசித்திபெற்ற மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த தேவியைப் பற்றிய சிறிய தகவல்களை இங்கே பார்ப்போம்..
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கொல்லூர் திருத்தலம். இங்கு பிரசித்திபெற்ற மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அன்னை மூகாம்பிகை, கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். இந்த தேவியைப் பற்றிய சிறிய தகவல்களை இங்கே பார்ப்போம்..
* மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக இருப்பதால், கலைத்துறையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த கலைஞர்களும், தங்கள் திறமையில் சிறப்படைய கொல்லூர் மூகாம்பிகையை வணங்கி வரலாம். இந்த ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்சலி செய்கிறார்கள்.
* இந்த அன்னைக்கு தினமும் மூன்று விதமாக அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்படி காலையில் காளிதேவியின் அம்சமாகவும், உச்சிப் பொழுதில் திருமகளான லட்சுமிதேவியின் அம்சமாகவும், இரவில் கலைமகள் சரஸ்வதிதேவியின் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
* பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் உள்ள மூலவர் விக்கிரகங்கள், கற்சிலையாகத்தான் இருக்கும். ஆனால் மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் தோன்றிய அம்மன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பற்றி சிற்பிகளிடம் சொல்லி, அதன்படி ஒரு பஞ்சலோக சிலையை வடிக்கச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.
* அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையை அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.
* இந்த ஆலயத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்புவாக உள்ள லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. அந்த அபிஷேக நேரத்தில், சிவலிங்கத்தின் மீது கீற்று போல காணப்படும் ரேகையை நாம் தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் தங்கக் கவசம் கொண்டு லிங்கம் மூடப்பட்டிருக்கும்.
* அம்மனைத் தரிசிக்க வருபவர்கள், இயன்றவரை ஒரு நாளாவது முழுமையாக தங்கி ஆலயத்திலேயே அதிக நேரம் இருந்து வரிசையில் பலமுறை நின்று நித்திய பூஜைகள் அனைத்தையும் கண்குளிரக் கண்டு மூகாம்பிகையின் அருளைப் பெறுதல் வேண்டும்.
* ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள், இத்தல மூகாம்பிகை. இந்த அன்னைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.
* மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
* கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள சவுபர்ணிகா நதியில், 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும்.
* மூகாம்பிகை ஆலயத்துக்கு, ‘அறிவுக்கோவில்’ என்ற பெயரும் உண்டு. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்திருக்கும். லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

‘கும்பகோணம்’மகாமக உற்சவம் அன்று 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இவற்றில் 12 சிவாலயங்களில் 6 சிவாலயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது, ‘கும்பகோணம்’. இங்கு நடைபெறும் மகாமக உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இவற்றில் 12 சிவாலயங்களில் 6 சிவாலயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
நாகேஸ்வரர்
கும்பகோணத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, நாகேஸ்வரர் திருக்கோவில். பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு, அதன் பாரத்தை தாங்கும் சக்தி இல்லாமல் போனது. இதனால் மகாவிஷ்ணுவை வணங்கிய ஆதிசேஷன், தனது இயலாமையை எடுத்துரைத்து, தொடர்ந்து பூமியைத் தாங்கும் சக்தியைத் தருமாறு வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணு, “நீ.. கும்பகோணம் சென்று அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக்கொண்டு அபிஷேகித்து நாகேஸ்வரரை வணங்கு. அதன் மூலம் பூமியைத் தாங்கும் வல்லமை உனக்குக் கிடைக்கும்” என்று அருளினார். அதன்படியே கும்பகோணம் வந்து நாகேஸ்வரரை வணங்கிய ஆதிசேஷன், பூமியைத் தாங்கும் முழு சக்தியையும் பெற்றார். இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு வடக்கு திசையில் சிவகாமி அம்மை சன்னிதியும், தென் திசையில் சிங்கமுக தீர்த்தமும் இருக்கின்றன.
கோடீஸ்வரர்
கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது. எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார். அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.
அபிமுகேஸ்வரர்
சிவபெருமான் வேடனின் உருவம் தாங்கி வந்து, அமுத குடத்தை அம்பு எய்து சிதைத்தபோது, அந்த குடத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு, ‘நாளிகேரம்’ என்ற பெயர் உண்டு. தென்னை மரத்தின் அடியில் தோன்றியதால், இத்தல இறைவன் ‘நாளிகேசர்’ என்று அழைக்கப்பட்டார். இத்தல அம்பாளின் திருநாமம், ‘அமுதவல்லி’ என்பதாகும். ஒரு முறை மகாமக குளத்தில் நீராடுவதற்காக நவ கன்னியர்கள் வருகை தந்தனர். அவர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த நாளிகேசர், மேற்கு நோக்கி திரும்பினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘அபிமுகேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அபிமுகம் என்றால் நேர்முகம் என்று பொருள்.
காளகஸ்தீஸ்வரர்
இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி அருகே உள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்தான். ஆனால் நாம் பார்க்கப்போவது அதேபோன்று, கும்பகோணம் உப்பிலியப்பன் ஆலயம் அருகே அமைந்துள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருப்பதி அருகே உள்ள காளகஸ்தியில் செய்ய வேண்டிய பரிகார பூஜைகளை, அங்கே செல்ல முடியா தவர்கள், இந்த ஆலயத்தில் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயம் வந்து, இத்தல இறைவனை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். இங்குள்ள துர்க்கை அம்மனை வேண்டினால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம்கார வடிவில் அமைந்துள்ள அம்மனின் பிரகாரத்தில் உள்ள மணியை அடித்தால், ‘ஓம்’ என்ற நாதம் ஒலிப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.
அமிர்தகலசநாதர்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார். எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.
ஏகாம்பரேஸ்வரர்
கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவருடன், காமாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதியின் இருபுறமும் தீட்டப்பட்டுள்ள காயத்ரி தேவியின் திருவுருவமும், காமாட்சி அம்மனின் ஒவியமும் காண்போரை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளன. ஏகாம்பரேஸ்வரர், காளியம்மன் மற்றும் நவக்கிரகங் களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில், சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தல அம்மனை வேண்டிக்கொண்டால், விரைவில் நோய் குணமாகும்.
கோவை மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. இதில் சின்னவேடம்பட்டியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில், சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு கன்னிமூல கணபதி, மங்கையம்மன், நாகம்மன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. வடக்கு திசை நோக்கி பிளேக் மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் அம்மனை மனமுருகி வழிபட்டால், அவர்களின் நோய் தீருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் சின்னவேடம் பட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து வந்தார். ஒரு சமயம் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து மாரியம்மனாக பாவித்து வணங்கி வந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் நாச்சியப்பனை, கேலி- கிண்டல் செய்தனர். இருப்பினும் அவர் அந்தக் கல்லுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. நாட்கள் செல்லச் செல்ல நாச்சியப்பனின் செயலால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்களில் சிலர், “நாச்சியப்பா... வெறும் கையின் மீது ஒரு பூச்சட்டி (அக்னிசட்டி) ஏந்தி, 3 முறை ஊரைச் சுற்றி வந்தால் அம்மன் இருப்பதாக நம்புகிறோம்” என்றனர்.
இதனை நாச்சியப்பனும் ஒத்துக்கொண் டார். ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு சட்டியில் அக்னி வளர்க்கப்பட்டது. நாச்சியப்பன் ஒரு கண நேரம் கண்களை மூடி, அம்மனை வழிபட்டார். “தாயே நான் உன் மீது வைத்திருக்கும் அளவற்ற பக்தியை இந்த உலகம் உணர்ந்து கொள்ள இந்த அக்னிசட்டியை, பூச்சட்டியாக மாற்றி அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். பின்னர் அந்த அக்னி சட்டியை தன் கைகளில் ஏந்தினார். உடனே கூடியிருந்த மக்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என்று பக்தி குரல் எழுப்பினர். நாச்சியப்பன் எந்தவிதமான பதற்றமும் இன்றி, ஊரை மூன்று முறை வலம் வந்து அக்னி சட்டியை இறக்கி வைத்தார். ஊர் மக்கள் அனைவரும், அம்மனின் அருளையும், நாச்சியப்பனின் பக்தியையும் புரிந்துகொண்டனர்.
பின்னர் நாச்சியப்பனையும் அவர் கும்பிட்டு கொண்டிருந்த கல்லையும் வணங்கிய ஊர் மக்கள், “நாச்சியப்பா.. உன் பக்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. பூச்சட்டியை கையில் ஏந்தி வலம் வந்ததால் இன்று முதல் உன் பெயர் பூநாச்சி. நீ இங்கு வைத்து கும்பிட்டு கொண்டிருக்கும் அம்மன், மாரியம்மன். இந்த அம்மனின் வருகையால் நம் ஊரில் தற்போது பரவியிருக்கும் கொடிய நோயான பிளேக் நோய் நீங்கினால் அது அம்மனின் தெய்வீக அருளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்றனர்.
பிறகு ஊர் மக்கள் எல்லோரும் கூடி முடிவு செய்தபடி, பூநாச்சி வணங்கி கொண்டிருந்த அம்மனை எடுத்து வந்து ஊருக்குள் இருந்த மங்கையம்மன் கோவிலில் வைத்து வணங்கினார்கள். அடுத்த நாளே இந்த ஊரில் பிளேக் நோய் குணமாகத் தொடங்கியது. இதனால் இந்த அம்மனுக்கு ‘பிளேக் மாரியம்மன்’ என்று பெயர் ஏற்பட்டது.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தல அம்மனை வேண்டிக்கொண்டால், விரைவில் நோய் குணமாகும். அப்படி நோய் அவதியில் இருந்து விடுபட்டவர்கள், அம்மனுக்கு பூ, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், சேலை ஆகியவற்றை நேர்த்திக்கடனாக வழங்குவதுடன், பொங்கல் வைத்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். பூ நாச்சியப்பன் மண்கொண்டு கட்டிய கோவில் சிதிலமடைந்ததால், தற்போது கல் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கப்படி மங்கையம்மன் கோவில் வெட்டவெளி மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்கரகம், சக்தி கரகம், பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மங்கையம்மனுக்கு கரும்பு கொண்டு பந்தல் அமைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சின்னவேடம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கர்நாடக உள்ள தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயமும் ஓன்று. இவற்றில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் பற்றி இங்கு காண்போம்.
குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தமிழ்நாட்டில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயமும், கர்நாடக மாநிலத்தில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயமும் முக்கியமானவைகளாக அறியப்படுகின்றன. இவற்றில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் பற்றி இங்கு காண்போம்.
கிருஷ்ணர் மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையில் இருந்து அரசாட்சி செய்தவர். சிறுவயதில் கண்ணன் தவழ்ந்து வரும் அழகை அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. காரணம் அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அந்த இரவிலேயே ஆயர்பாடியில் இருந்த யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்ந்து வந்தார், கிருஷ்ணர். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெற்றனர்.
ஆயர்பாடியில் சிறுகுழந்தை வடிவில் தவழ்ந்த அதே திருக்கோலத்தில், தொட்டமளூர் திருத்தலத்தில் அருள்கிறான், கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இக்கோவிலைக் கட்டியுள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்களும் இங்கே காணப்படுகின்றன. கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவரை தரிசிக்கலாம். இங்கு மூலவராக ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை, ராமர் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. ‘அப்ரமேயன்’ என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.
மூலவருக்கு அடுத்தபடியாக தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்தவண்ணம் அரவிந்தவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். இவரை வெள்ளிக்கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும். நவராத்திரி, வரலட்சுமி விரதம் ஆகிய நாட்களில் தாயாருக்கு சிறப்பாக திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளை யில் இத்தல அரவிந்தவல்லி தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.
அடுத்து பிரகார வலம் வருகையில் கிழக்கு பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு, குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலைமுடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து தவழும் அந்த நவநீத கிருஷ்ணன், அப்படியொரு அழகு. சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். மகான் ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம்.
ஒரு முறை மகான் புரந்தரதாசர், தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது கோவில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாடியதும், ஆலயக் கதவு திறந்துகொண்டது. புரந்தரதாசரின் பாடல் வரியைக் கேட்டுதான் தவழும் கோலத்தில் இருந்த கண்ணன், தன் தலையை திருப்பிப் பார்ப்பதாக தல வரலாறு சொல்லப்படுகிறது. நவநீத கிருஷ்ணன் சன்னிதி அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி வெண்ணைய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திரப் பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பிப்பவர்கள் ஏராளம்.
அமைவிடம்
பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலை யில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னப்பட்டினா என்னும் ஊரில் இருந்து, 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் தொட்டமளூரை அடையலாம். சென்னை - மைசூர் ரெயிலில் சென்று சென்னபட்டினா ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால் பத்து நிமிடத்தில் கோவில் வாசலில் இறங்கலாம்.