என் மலர்
கோவில்கள்
ஆந்திர மாநிலத்தில் பெனுகொண்டா வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
‘கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம். ஆரிய வைசியர் குலத்தினர், தாங்கள் செய்த புண்ணியம் மற்றும் வழிபாட்டு பலன்கள் காரணமாக திருக்கயிலை மலையில் வாழும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்களில் சோமதத்தன் என்பவரின் மகள் கீர்த்தி. இவள் பேரழகு படைத்தவள். அவளது அழகில் மயங்கிய சித்திரகண்டன் என்ற கந்தர்வன், அவளை மணம் செய்ய விரும்பி, தன் விருப்பத்தினை வைசிய குல முனிவர்களிடம் தெரிவித்தான்.
இதற்கு கீர்த்தியும், முனிவர்களும் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரகண்டன், “பூலோகத்தில் பிறந்து அக்னியில் விழுந்து அழிந்து போவீர்களாக” என்று வைசியர்களுக்கு சாபம் கொடுத்தான். “அகம் பாவம் பிடித்த நீயும், பூலோகத்தில் பிறந்து தலை வெடித்து அழிவாய்” என்று வைசியர்களும் பதிலுக்கு சாபம் கொடுத்தனர். இதற்குப் பிறகும் கூட சித்திரகண்டன், கீர்த்திக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். இதனால் பொறுமை இழந்த வைசியர்கள் நந்திதேவரிடம் முறையிட, சித்திரகண்டனை நந்திதேவர் தன் பார்வையால் எரித்து அழித்தார்.
இதையடுத்து கீர்த்தியின் தந்தையும், தாயும் பூலோகத்தில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரைஅருகே உள்ள பெனுகொண்டாவில் வந்துதித்தனர். கீர்த்தியின் தந்தைகுசுமச் செட்டியாகவும், தாயார் குசுமாம்பிகையாகவும் பிறந்தனர். இவர்களது மகளான கீர்த்தி, வாசவாம்பாள் எனும் வாசவியாக பிறந்தாள். வாசவியின் உடன்பிறந்த சகோதரராக நந்திதேவரே, விரூபாட்சன் என்ற பெயரில் அவதரித்தார். இதே காலத்தில் ராஜமகேந்திரவரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த விஷ்ணுவர்தன், தான் சென்ற இடம் எல்லாம் வெற்றி வாகை சூடினான். விஷ்ணுவர்தன் வேறு யாருமல்ல, முனிவர்களால் எதிர் சாபம் பெற்ற சித்திரகண்டன் என்னும் கந்தர்வன் தான்.
விஷ்ணுவர்தன், வெற்றிக் களிப்பில் பெனுகொண்டா நகருக்கு வந்தான். அங்கே வாசவியைக் கண்டு காதலுற்றான். எப்படியாவது வாசவியை மணக்க ஆசைப்பட்டான். வாசவியின் தந்தையிடம் பெண் கேட்டான். வைசிய குலத்தில் தோன்றிய பெண்ணை, சத்திரிய குலத்தில் தோன்றிய அரசனுக்கு மணம் முடித்து தர இயலாமையை எடுத்துக் கூறியும், விஷ்ணுவர்தன் கேட்பதாக இல்லை. அவர்கள் குடும்பத்தை துன்புறுத்தத் தொடங்கினான். தொடர்ந்து வற்புறுத்தினான். இதையடுத்து தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் கூறுவதாக குசுமச் செட்டி கூறினார். 18 நகரங்களில் இருந்து 714 கோத்திரத்தார் குசுமச் செட்டியின் அழைப்பால் வந்து சேர்ந்தனர்.
பெனுகொண்டா நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடி பிரச்சினையை விவாதித்தனர். 612 கோத்திரக்காரர்கள் ‘பெண் கொடுக்கலாம்’ என்று உடன்பட்டனர். மீதமுள்ள 102 கோத்திரக்காரர்களும் ‘பெண் கொடுக்க வேண்டாம்’ என்றனர். இதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். இவ் வளவு பிரச்சினைக்கும் தானே காரணம் எனக் கருதிய வாசவி, இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள்.
அவள் கட்டளைப்படி அங்குள்ள நகரேஸ்வரர் எனும் சிவபெருமான் ஆலயத்தின் முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள். அவளுடன் 102 கோத்திரக்காரர்களும் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டு விட்டு, தங்கள் மனைவியர்களுடன் அக்னிப் பிரவேசம் செய்து திருக்கயிலையை அடைந்தனர். வாசவி அக்னிப்பிரவேசம் செய்த செய்தியைக் கேட்டவுடன், விஷ்ணுவர்தன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது.
இதனைக் கேள்விப்பட்ட அவனது மகன் ராஜராஜேந்திரன், தன் தந்தையின் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு, பிராயச்சித்தமாக தன் ராஜ்ஜியம் முழுவதையும் வைசியர்களுக்கே காணிக்கையாகக் கொடுத்தான். ஆனால் அங்கிருந்த 102 கோத்திரக்காரர்களின் வாரிசுகளும் அதனை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தில் இருந்து பார்வதிதேவியின் வடிவாக, கன்னிகா பரமேஸ்வரியாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின்பு தன்னுடன் அக்னிப்பிரவேசம் செய்தவர்களை வாழ்த்தினாள்.
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் உள்ளது. கோமுட்டி எனும் ஆரிய வைசியர்களின் காசி என பெனுகொண்டா போற்றப்படுகிறது. கருவறையில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இங்கு விநாயகர், நகரேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வேங்கடேஸ்வர பெருமாள், காலபைரவர், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. குழந்தை பாக்கியம், திருமண வரம், தம்பதிகள் ஒற்றுமை என வேண்டும் வரங்கள் தருபவளாக வாசவி தேவி அருள்கிறாள்.
அமைவிடம்
சென்னையில் இருந்து சுமார் 398 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலத்தில் பெனுகொண்டா வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

சக்திவாய்ந்த தெய்வமாக அருள்பாலித்து வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே கத்தரிநத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
‘கங்கையிற் புனித காவிரி’ பாயும் சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சாவூர், உலகமே வியக்கும் வகையில் சைவநெறிச் செம்மல், திருமுறை கண்ட ராஜராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த பெரிய கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது. நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அருள்பாலித்து வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே கத்தரிநத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
ஒரு காலத்தில் இந்தக் கிராமம் ‘சப்தரிஷி நத்தம்’ என்று பெயர் பெற்று இருந்தது. திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதும், தென் காளகஸ்தியாகவும் அமைந்துள்ள இக்கோவிலில், ஞானாம்பிகை என்ற பெயருடைய தேவியுடன், காளகஸ்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவில் ராகு, கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் எதிரில், பெரிய குளம் ஒன்று உள்ளது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று சுவடுகளை தன்னுள் பொதித்து கொண்டு இந்த சிவாலயமும், அம்மன் ஆலயமும், திருக்குளமும் திகழ்கின்றன. மிகவும் பழமைவாய்ந்த இந்தக் கோவில் செங்கல்லால் ஆன ஒற்றை திருச்சுற்று மதிலுடன் கம்பீரமாக எழுந்துள்ளது.
இந்த சிவாலயம் சோழர் காலத்தில் திகழ்ந்த ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், இறைவன் காளகஸ்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை, கயிலாய தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகிய திருமேனிகள் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய சிறப்பு படைப்புகளாகும். பழங்காலம் முதற்கொண்டு இந்தக் கோவில், செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சையை ஆண்ட மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலின் முன்மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், முதலாம் துக்கோஜி எனும் துளஜா என்பவரின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. இந்த சாசனம் ஆங்கீரஸ ஆண்டு கார்த்திகை மாதம் பதினேழாம் நாளில் எழுதப்பெற்றதாகும். அது கி.பி. 1752-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் நாளாகிய செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். ராய மானிய துக்கோஜி மகாராஜா, சப்தரிஷிநத்தம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ காளகஸ்தீஸ்வர சுவாமிக்கு சர்வமானியமாக நிலம் அளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஒரு சமயம் இறைவனுடைய சாபத்தால் பிடிக்கப்பட்ட சப்தரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், பல்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிந்தும் சாபவிமோசனம் பெற முடியாமல் தவித்தார்கள். அதன் பிறகு அந்த 7 பேரும் சப்தரிஷிநத்தம் என்ற இந்தத் திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர்.
ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் இந்த கோவில் குளத்தில் நீராடி காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களின் சாபம் நீங்கப்பெற்று கடுமையான நோயும் நீங்கப்பெற்றனர் என தல புராணம் தெரிவிக்கிறது.
திருமண தடை நீக்கும் பரிகார தலமாக திகழும் இக்கோவிலில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் திருமண தடையை நீக்கும் பரிகார பூஜை நடைபெறுகிறது.
குடும்ப ஒற்றுமைக்கு இக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வத்திற்கு ஸ்ரீ காலபைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் விசேஷமாக நடந்து வருகிறது.
அமைவிடம்
தஞ்சாவூர்- நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சை நகரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் கத்தரிநத்தம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு பஸ் வசதி ஏதும் இல்லை. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங் களிலோ, நடந்தோ சென்று வரலாம்.
டி. ஆரூண், பிள்ளையார்பட்டி.

பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும். ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.
ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச ஆரண்ய தலங்கள் முறையே
1. திருகருக்காவூர் – விடியற்காலை
2. அவளிவநல்லூர் – காலை
3. அரதைபெரும்பாழி – உச்சிவேளை
4. ஆலங்குடி – மாலை
5. திருக்கொள்ளம்புதூர் – அர்த்தசாமம் ஆகியவை ஆகும்.
திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.
திருகருக்காவூர் – முல்லைவனம் – விடியற்காலை வழிபாடு
திருகருக்காவூர்
திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி வரை) விடியற்காலை வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் முல்லை வனம் ஆகும்.
இத்தல இறைவன், விநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தங்களாவர். ஊர்த்துவ முனிவரின் சாபத்தினால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்தால் அன்னை கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இறைவனுக்கு அபிசேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும்.
அவளிவநல்லூர் – பாதிரி வனம் – காலை வழிபாடு
அவளிவநல்லூர்
அவளிவநல்லூர் கும்பகோணத்திலிருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.
இத்தல இறைவன் சாட்சிநாதர் என்றும் அம்மை சௌந்தர்யவல்லி என்று அழைப்படுகின்றனர். இத்தலம் காலை (காலை 8.30 முதல் 9.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் பாதிரி வனம் ஆகும். இத்தலத்தின் அர்ச்சகரின் மூத்த மகளான சுசீலை அம்மைநோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்திருந்தாள். தலயாத்திரிரை சென்று திரும்பிய சுசீலையின் கணவன் அர்ச்சகரின் இளைய மகளை தன் மனைவி என்றான்.
அர்ச்சகரின் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன் அம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி சுசீலையை அவள்தான் இவள் என்று சுசீலையை அவளது கணவனுக்கு அடையாளம் காட்டினார். எனவே இவ்வூர் அவளிவநல்லூர் என்றும், இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுசீலையும் இறைவனின் ஆணைப்படி திருக்குளத்தில் நீராடி கண்பார்வையும், அழகும் திரும்பப் பெற்றாள்.
இத்தல இறைவனை வராக மூர்த்தியும், காசியப்ப முனிவரும் வழிபட்டு பேறு பெற்றனர். இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 100-வது தலமாகும்.
அரதைபெரும்பாழி – வன்னிவனம் – உச்சிக்கால வழிபாடு
அரதைபெரும்பாழி
அரதைபெரும்பாழி கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.
இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார்.
அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக திகழ்வதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. இத்தல இறைவனை வழிபட நவகிரக தோசங்கள் நீங்கும். கடன் தொல்லை ஒழியும்.
ஆலங்குடி – பூளைவனம் – மாலை வழிபாடு
ஆலங்குடி
ஆலங்குடி கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு இறைவனார் ஆபத்சகாயேசுவரர், அம்மை ஏலவார் குழலி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இத்தலம் சாயாரட்சை எனப்படும் மாலை (மாலை 5.30 முதல் 6.00 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் பூளைவனம் ஆகும். பாற்கடலில் தோன்றிய விசத்தை அருந்தி உலக உயிர்களை காத்த இடம் ஆதலால் இவ்விடம் ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேசுவரர் ஆவார்.
முசுகுந்த சக்கரவர்த்தி தன் மந்திரியும், சிவபக்தருமான அமுதோகர் என்பவரது சிவபுண்ணியத்தில் பாதியளவை கேட்டு மந்திரி சம்மதிக்காததால் அவரின் தலையைக் கொய்ய உத்தரவிட்டான். மந்திரியின் தலையைக் கொய்தவுடன் அமுதோகர் என்ற சப்தம் இத்தலம் முழுவதும் கேட்டதும் அரசன் தன் தவறுக்கு வருந்தி இத்தல இறைவனை வணங்கி சாப விமேசனம் பெற்றான்.
அம்மை இவ்விடத்தில் இறைவனை திருமணம் செய்ய தவம் இயற்றி இறைவனை கணவனாகப் பெற்றார். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 98-வது தலமாகும்.
திருகொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தசாம வழிபாடு
திருக்கொள்ளம்புதூர்
திருக்கொள்ளம்புதூர் கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வில்வவனேசுவரர் அம்பிகை சௌந்தர்ய நாயகி என்று அழைக்கப்படுகின்றனர்.
இத்தலம் அர்த்தசாமம் எனப்படும் இரவு (மாலை 7.30 முதல் 8.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் வில்வவனம் ஆகும். திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது காவிரியின் கிளைநதியான முள்ளியாற்றில் வெள்ளம் பெருகியது. அப்போது சம்பந்தர் இறைவனை நினைத்து பதிகம் பாட ஓடம் தானாகவே ஓடி மறுகரையை அடைந்தது என்பது வரலாறு.
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேசன், இடைக்காடர், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர், வரகுணபாண்டியன், கோசெங்கட்சோழன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டு மேன்மை அடைந்தவர் ஆவர். சித்த பிரமை உள்ளவர்கள், மனகுழப்பத்தில் தவிப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனத்தெளிவு பிறக்கும். மனநோய் நீங்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 113-வது தலமாகும்.
நாமும் பஞ்சஆரண்ய தலங்களில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை அடைவோம்.

பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தலங்கள் கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் பஞ்ச கிருஷ்ண சேத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகள் நடைபெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தலங்களில் அடியவர்கள் திருமாலின் தரிசனத்தைப் பெற்றுள்ளனர்.
திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் அமைந்துள்ளன. இவற்றைப் பற்றி பார்ப்போம்.
லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி :
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார். சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.
கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார். இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.
108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர். வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம் :
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது. ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது. திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.
இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது. திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.
திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.
நீலமேகப் பெருமாள், திருக்கண்ணபுரம் :
இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும். இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும். இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.
பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை :
இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.
பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது. திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.
இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார். வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
கஜேந்திர வரதப்பெருமாள், கபிஸ்தலம் :
இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான். அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான். கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.
திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார். இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.
ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.
உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் :
இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம். இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார். இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.
பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.
நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.

திருச்சி அருகில் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இறைவியின் பெயர் பாலாம்பிகை. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கருப்பை நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் தற்காலத்தில் பல பெண்களை வேதனைப்படுத்தும் உபாதைகளாக உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகளை தீர்த்து அருளும் ஆலயம் ஒன்று உள்ளது என்ற தகவல் தெரியுமா உங்களுக்கு? திருச்சி அருகேயுள்ள பேட்டைவாய்த்தலை ஆலயம்தான் அது.
இத்தல இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறினமையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள தீர்த்தமும். ஆலய கருவறை நிர்மாணம் நிறைவடையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுதும் நீங்கியது. நீண்ட நாட்களாக கிடைக்காதிருந்த குழந்தை பாக்கியமும் கிட்டியது.
இச்சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயில் மண்டபத்தில் தென்பகுதியில் உள்ள தூணில் ‘பிரம்மஹத்தி’ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் வெட்டிய வாய்க்கால்தான் இப்போது உய்யக்கொண்டான் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இது திருச்சி விளைநிலங்களுக்கான பாசனத்துக்கு உதவுகிறது. இதே ஊரில் பொற்றாள பூவாய் சித்தர் என்பவர் வாழ்ந்துள்ளார். அவர் சித்த மருத்துவராகவும் இருந்துள்ளார். அக்காலத்தில் இங்குள்ள பெண்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களுக்கும் மேலாக மாதவிலக்கு ஏற்பட்டுள்ளதாம்.
வேதனையில் வருந்திய பெண்களுக்கு சித்தர் என்னென்னவோ மருந்து தந்தும் பயன் ஏற்படவில்லை. பிறகு இத்தலத்து இறைவி பாலாம் பிகையிடம் சித்தர் மனமுருகி முறையிட்டார். அந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்தாள் அன்னை. அதன்படி தனக்காக விரதமிருந்து தன்னை வழிபடும் பெண்களின் பிரச்னைகளும் வேதனையும் தீரும்படியாக அருளினாள். மாதாந்திர சிக்கல் மட்டுமல்லாமல், கருப்பைக் கோளாறுகள் எல்லாமும் நிவர்த்தியாயின.
பொற்றாள பூவாய் சித்தர் இந்த ஆலயத்தில் இறைவனுடன் ஜோதி வடிவில் இணைந்துள்ளார். சித்தரின் உருவம் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வடபுற தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இறைவன், இறைவியை வழிபட்ட பின்பு பெண்கள் தங்களுக்கான பிரத்யேக பிரச்னைகளை (குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் பருவம் எய்தாத நிலை, மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பை உபாதைகள், குழந்தைபேறு இல்லாமை போன்றவை) பிரார்த்தனை சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர்.
அதன் பிறகு இறைவன், இறைவி படத்தை பெற்று 7 முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் உளமாற பூஜைகள் செய்து வருகிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்களுடைய அந்த வேதனைகள் தீருகின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு தீர்ந்து மகிழும் பெண்கள் தம் நன்றியைத் தெரிவிக்க இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் இருக்கிறார்கள். திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது பேட்டைவாய்த்தலை.
சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. ரயில் வசதியும் உள்ளது. கரூர் செல்லும் பேருந்திலும் வரலாம். பேட்டைவாய்த்தலை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊரினுள் உள்ளது இத்திருக்கோயில். கோயிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம். காலை 7 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம். இங்கு பாம்புபுரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிகச் சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம். இங்கு பாம்புபுரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற, தென்கரை தலங்களில் 59-வது தலம் என்று சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. மேலும் இந்தக் கோவில் மிகச் சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலில் உள்ள இறைவனை, ஆதிசேஷன், ராகு மற்றும் கேது, அஷ்டமா நாகங்கள் ஆகியோர் சிவராத்திரியின் மூன்றாம் ஜாமத்தில் வழிபட்டு தங்கள் சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் கோவிலில் பாம்புபுரேஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவனும், வண்டார் பூங்குழலியம்மை என்ற பெயரில் இறைவியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயத்தில் இருந்த சிவபெருமானை, விநாயகப்பெருமான் வழிபட்டார். அப்போது ஈசனின் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன், உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் தன்னுடைய சக்தியை இழக்கும் படி சபித்தார். இதனால் உலகத்தைத் தாங்கக்கூடிய ஆதிசேஷன், ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக இனங்கள் அனைத்தும் தங்களின் சக்தியை இழந்து தவித்தன. இதையடுத்து அவர்கள் அனைவரும் ஈசனை வேண்டி பரிகாரம் கேட்டனர்.
அதற்கு ஈசன், “அனைவரும் பூலோகத்தில் உள்ள சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் சென்று, சிவராத்திரி நாளன்று என்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார். அதன் படியே ஆதிசேஷன் தலைமையில் நாக இனங்கள் அனைத்தும், சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புநாதரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
திருப்பாம்புரம் கோவிலின் ராஜகோபுரம், மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் காணப்படுகிறது. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார். பூங்குழலி அம்மையின் சன்னிதியும் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கிறது.
இது ஒரு ராகு - கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம் ஆகும். கும்பகோணம், திருநாகேஸ்வரம், காளகத்தி, கீழப்பெரும்பள்ளம், நாகூர் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் வழிபட்ட பலன், திருப்பாம்புரம் தலம் ஒன்றை தரிசித்தாலே கிடைக்குமாம். இங்கு ராகுவும் கேதுவும் ஓருடலாக இருந்து, சிவபெருமானை தங்களின் நெஞ்சில் வைத்து வழிபட்ட தலமாகும். எனவே ராகு-கேது பரிகாரத் தலங்களில், இது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள், 18 வருட ராகு தசை நடப்பவர்கள், 7 வருட கேது தசை நடப்பவர்கள், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருப்பவர்கள், ராகு புத்தி அல்லது கேது புத்தி நடப்பவர்கள், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடை இருப்பவர்கள், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் பூசாரிகள் சொல்லும் பரிகாரங்களைச் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம். சிலர், ராகு -கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இந்தக் கோவிலில் உள்ள வன்னி மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்பாம்புரத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் கற்கத்தி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றாலும் திருப்பாம்புரம் திருத்தலத்தை அடைய முடியும். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

கிருஷ்ணர் நிரந்தரமாக அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலங்கள் 5 உள்ளன. அந்த ஐந்து கோவில்களும் ‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
கிருஷ்ணர் நிரந்தரமாக அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலங்கள் 5 உள்ளன. அந்த ஐந்து கோவில்களும் ‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம் ஆகியவையே அந்த ஐந்து தலங்களாகும். இந்தக் கோவில்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
திருக்கண்ணங்குடி
நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆழியூர் பள்ளிவாசல். இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கண்ணங்குடியை அடையலாம். இங்கு லோகநாதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீதேவி-பூதேவி உடனாய லோகநாதர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் லோகநாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறாள். உற்சவர்கள் தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.
முன் காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வந்த வசிஷ்ட முனிவர், வெண்ணெயில் கிருஷ்ணரை செய்து வழிபட்டார். அந்த பக்தியில் மயங்கிய கண்ணன், வெண்ணெயில் இருந்து சிறுவனாக வெளிப்பட்டார். பின்னர் வசிஷ்டருக்கும், மற்ற முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தார். இங்கேயே நிரந்தரமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்ற முனிவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணன் குடியமர்ந்த இடம், ‘கண்ணன்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது ‘திருக்கண்ணங்குடி’ என்று வழங்கப்படுகிறது.
திருக்கண்ணமங்கை
திருவாரூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை. இங்குள்ளது பக்தவச்சலப் பெருமாள் திருக்கோவில். முன்காலத்தில் இந்த இடம் ‘கிருஷ்ணாரண்யம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் வசித்த பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள், லட்சுமி தேவி. இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய அந்த தேவியை தரிசிக்க, தேவர்கள் அனைவரும் கூடினார்கள். ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து லட்சுமிக்கு அபிஷேகம் செய்தது. அதானாலேயே இங்குள்ள தாயார், ‘அபிஷேகவல்லி’ என்று அழைக்கப்படுகிறாள்.
பிருகு முனிவரோ, தன் மகளை ‘கிருஷ்ண மங்கை’ என்று அழைத்தார். இதுவே பிற்காலத்தில் ‘திருக்கண்ணமங்கை’ என்று இத்தலம் பெயர் பெறக்காரணம். ‘மகளை, பகவான் கிருஷ்ணருக்கே மணம் முடிக்க வேண்டும்’ என்று காத்திருந்தார் பிருகு முனிவர். அதன்படியே பக்தவத்சலன் என்ற திருப்பெயரோடு வந்த இறைவன், லட்சுமிதேவியை மணந்துகொண்டார். இங்கு இறைவனும், இறைவியும் மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். கிருஷ்ணருக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், அதைக் காண தேவர்கள் பலரும் குவிந்தனர். மேலும் இங்குள்ள இறைவனின் கல்யாண கோலத்தை அனுதினமும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, தேவர்கள் அனைவரும், தேனீக்களாக உருவெடுத்து கூடுகட்டி, அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்வதாக ஐதீகம். இன்றும் தாயார் சன்னிதியின் வடக்கு பக்கம் உள்ள சாளரத்தின் மீது தேன் கூடு இருப்பதை காண முடியும்.
திருக்கோவிலூர்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (திரிவிக்ரமர்) உள்ளது. இத்தல தாயாரின் திருநாமம் ‘பூங்கோவல் நாச்சியார்’. முன் காலத்தில் மிருகண்டு முனிவர் என்பவர், வாமன மற்றும் திரிவிக்ரம அவதாரக் கோலங்களைக் காண வேண்டும் என்பதற்காக கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அவரது தவத்தைக் கண்டு பிரம்மன் வியப்படைந்தார். உடனே மிருகண்டு முனிவரின் முன்பாகத் தோன்றி, “முனிவரே.. தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு இறைவன் வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று தவம் செய்யுங்கள்” என்று பணித்தார். அதன்படியே அந்த தலத்திற்குச் சென்று தவம் இருந்த மிருகண்டு முனிவருக்கு, வாமன மற்றும் திரிவிக்ரம தரிசனம் கிடைத்தது.
இத்தலம் முன்காலத்தில் ‘கிருஷ்ணன் கோவில்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. மிருகண்டு முனிவருக்கு, திரிவிக்ரமராக தரிசனம் தரும் முன்பு இருந்த கிருஷ்ணன் சன்னிதி, தற்போதும் இந்த ஆலயத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. சாளக்கிராமத்தால் ஆன திருமேனியைக் கொண்ட ஆதிகிருஷ்ணர், இங்கு ஆனந்த கோலத்தில் அருள்புரிகிறார். இதை அறிந்த துர்க்கையும், விந்திய மலையில் இருந்து புறப்பட்டு இங்கு வந்து கோவில் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு எழுந்தருளியுள்ள திரிவிக்ரமன், தனது இடது கரத்தில் சக்கரமும், வலது கரத்தில் சங்கும் ஏந்தி அருள்பாலிக்கிறார். அவரது திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், கண்டத்தில் கவுஸ்துபமும், காதுகளில் குண்டலமும் காணப்படுகின்றன. இந்த ஆலயம் முக்தி தலமாகவும் திகழ்கின்றது.
திருக்கண்ணபுரம்
கண்வ முனிவர் என்பவர், நாரதரிடம், “நாராயணனின் நாமத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால், அவனது தரிசனம் கிடைக்கும்?” என்று கேட்டார். அதன்படி நாரதர் சுட்டிக்காட்டிய இடமே, தற்போதைய திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் நீலமேகப்பெருமாளாக அருள்பாலிக்கிறார். இங்கு வந்து தவம் இயற்றி தன்னை வழிபட்ட கண்வ முனிவருக்கு, அதிசுந்தரனாக பெருமாள் திருக்காட்சி கொடுத்தார். எனவே இத்தலம் ‘கண்வபுரம்’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘திருக்கண்ணபுரம்’ ஆனது. திருவரங்கத்திற்குச் சென்று வழிபட்ட விபீஷணன், “கிடந்த கோலத்தை கண்டேன்.. நடையழகை காண்பேனோ?” என்று கேட்டார். அதற்காக பெருமாள், நடையழகு காண்பித்தருளிய தலம் இதுவாகும். கோவில் அர்ச்சகர் ஒருவர், தன் காதலிக்கு சூட்டிய மாலையை பெருமாளுக்கு சாற்றி விட்டார். மேலும் அந்த மாலையை கோவிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு வழங்கினார். அதில் இருந்த நீளமான முடியைக் கண்ட மன்னன், கோபத்துடன் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரித்தான். அதற்கு அந்த அர்ச்சகர், “பெருமாளுக்குரிய முடி (சவுரி)தான் அது” என்று பொய் பேசினார். பின்னர் கோவிலுக்குச் சென்று இறைவனிடம் தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். மறுநாள் மன்னன் ஆலயத்திற்கு வந்தபோது, உண்மையிலேயே பெருமாளின் பின்புறம் நீளமான முடி இருந்தது. இதன் காரணமாகவே இத்தல இறைவன், ‘சவுரிராஜப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.
திருக்கபிஸ்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கபிஸ்தலம். இங்குள்ள கஜேந்திர வரதர் திருக்கோவிலில், கஜேந்திர வரதப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம், லோகநாயகி என்பதாகும். கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. இந்திரத்யும்னன் என்னும் மன்னன், விஷ்ணுவின் மீது அதீத பக்தி வைத்திருந்தான். அதன்காரணமாக ஒரு முறை அங்கு வந்த துர்வாச முனிவரை கவனிக்கத் தவறினான். இதனால், அவனை மதம் பிடித்த யானையாக மாறும்படி முனிவர் சபித்துவிட்டார். யானையாக மாறினாலும், அந்த மன்னனுக்கு விஷ்ணுவின் மீதான பக்தி அப்படியே இருந்தது.
கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட அந்த யானை, ஒரு நாள் குளத்தில் நீர்குடிக்க இறங்கியது. அப்போது அந்த குளத்திற்குள் இருந்த முதலை, யானையின் காலை கவ்விப் பிடித்துக்கொண்டது. இந்த முதலையும், முன் ஜென்மத்தில் கந்தர்வனாக இருந்து சாபம் பெற்றவன்தான். முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் யானை பிளிறியது. ஒரு கட்டத்தில் ‘ஆதிமூலமே..’ என்று யானை கூப்பிடவும், கருட வாகனத்தில் வந்த விஷ்ணு பகவான், யானைக்கும், முதலைக்கும் சுய உருவைக் கொடுத்து அருள்பாலித்தார். அனுமன், சுக்ரீவன் மற்றும் பிற வானரங்கள் வழிபட்ட தலம் என்பதால், இது ‘கபிஸ்தலம்’ என்றானது. ‘கபி’ என்பதற்கு ‘வானரம்’ என்று பெயர்.

இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது, திருக்காட்கரையப்பன் கோவில். இந்த ஆலயத்தில்தான், கேரளத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் ‘ஓணம் திருவிழா’ உருவானதாக சொல்லப்படுகிறது. அது என்ன வரலாறு என்பதைப் பார்ப்போம்.
புராணத் தகவல்
பிரகலாதன் என்ற விஷ்ணு பக்தனின் பேரன்தான் மகாபலி சக்கரவர்த்தி. இவரும் விஷ்ணுவின் மீது பக்தி கொண்டவர்தான். அசுர குலத்தைச் சேர்ந்த இந்த மன்னன், மலையாள தேசத்தை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் மகாபலி சக்கரவர்த்திக்கு, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.
அந்த வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். அதன்படி தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாக கூறினார்.
மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்குச் சென்றார். ஆனால் அங்கு அதற்கு முன்பாகவே தானம் அளிக்கும் நிகழ்வு முடிவடைந்திருந்தது.
அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.
வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார்.
ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைக் கொண்டு தானமளிக்க முன் வந்தான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்து வெளியேறினார்.
மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.
அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.
அப்போது மகாபலி, “இறைவா என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்” என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.
மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம் என்று சிலர் இத்தலத்தின் வரலாற்றைத் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.
மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.
இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.
இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேந்திரம் பழங்களை படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது. ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவில். சில நாட்களுக்கு முன்பு உலகமே வியக்கும் படி அம்மன் ஊஞ்சலில் ஆடிய அதிசயம் இங்கு நடந்தது. இந்த கோயில் இருந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேய்ச்சல் காடாக இருந்து.
இந்த பகுதியில் புல் மேய்ந்து வீடு திரும்பும் பசு ஒன்று பாலில்லாமல் தினமும் வீடு திரும்புவதை பார்த்த உரிமையாளர் அடுத்த நாள் பசுவின் பின்னால் சென்று பார்த்த போது ஒரு ஐந்து தலை நாகம் புற்றிலிருந்து வந்து பசுவிடம் பால் குடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பிறகு அவர் கனவில் தோன்றிய காளி தான் அந்த புற்று உள்ள இடத்தில் கோயில் கொள்ள விரும்புவதாக கூறி மறைந்தார். இதை அடுத்து இங்கே காளி சிலை பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்கபட்டது.
இந்த கோயிலில் குடி கொண்டுள்ள காளி தன்னை வழிபடுபவர்களுக்கு கனவில் வந்து பலன் சொல்லுவதாக நம்பப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது பூசாரியின் கனவில் தோன்றிய காளி உடனே சென்று அந்த பெண்ணை காப்பாற்றுமாறு கூறினாள்.
அன்றிலிருந்து பக்தர்களின் கனவில் அடிக்கடி வந்து பலன் சொல்கிறாள். இன்றைக்கும் இந்த அம்பாளை மனதில் நினைத்தபடி உறங்கினால் கனவில் நம் கோரிக்கைகளுக்கு பதில் தருகிறாள்.
மேலும், இந்த கோயில் தீர்த்தம் சோம்பலை போக்கி சுறுசுறுப்பை தருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் கார்த்தி கை தீபத்தின் போது விளக்கு ஏற்றி வைத்து விட்டு கோயிலை பூட்டினர் பிறகு வீட்டிற்கு செல்லும் முன் உள்ள பொருத்தப்பட்டிருந்த காமிராவை பார்த்த போது கருவறையில் வெள்ளை நிற உருவம் திரைச்சீலையின் பின் அசைவதை பார்த்தனர்.
ஏதாவது தீ பிடித்திருக்க கூடுமோ என்று எண்ணினர் பிறகு உற்றுப் பார்த்த போது ஒரு பெண் உருவம் முன்பும், பின்னுமாக ஊஞ்சலாடுவது தெரிந்து அதிர்ந்தார்கள், தொடர்ந்து இந்த காட்சியை கோயில் நிர்வாகிகள் 2 மணி நேரம் பார்த்திருக்கிறார்கள்.
இது சமூக வளைதளங்களில் பரவியது. காளியே இப்படி ஊஞ்சல் ஆடியதாக பக்தர்கள் பரவசமடைகிறார்கள். இது சிறந்த ராகு தோஷ நிவர்த்தி தலமாக இருக்கிறது. செவ்வாய் , வெள்ளி அன்று ராகு காலத்தில் காளி சன்னிதி முன்பு விளக்கேற்றி வழிபட்டால் திருமண தடை ராகு தோஷம் விலகுகிறது.

திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காயாமொழியில் பிரசித்திபெற்ற காரையடி சுடலைமாடன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்திபெற்ற காரையடி சுடலைமாடன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுடலைமாடன், முண்டன்சாமி, பிரம்ம சக்தி, பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், இசக்கியம்மன், செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும். மூலவரான காரையடி சுடலைமாடன், கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத வினைகள் தீருவதுடன், குழந்தைப்பேறு கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன், தொழில் வளமும் பெருகும்.
காரையடி சுடலைமாட சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடைபெறும். இந்த விழாவை ஒட்டி அருகில் உள்ள பலவேசம் முத்து சாமிக்கு, திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும். செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பலவேசம் முத்துகோவிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு, பக்தர்கள் மேள தாளங்களுடன் செல்வார்கள். பின்னர் அங்குள்ள குளம் மற்றும் கிணற்றில் குளித்துவிட்டு அருஞ்சுனை காத்த அய்யனார் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். அதன்பின்னர் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். நண்பகல் 12 மணியளவில் பலவேசம் முத்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பிறகு சுவாமிக்கு படைக்கப்பட்ட படக்கஞ்சி, பானகாரம் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.
பலவேச முத்து கோவிலில் இரவு 9 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும். அதன்பிறகு முளைப்பாரியை சுற்றி பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து மேளதாளத்துடன் சுடலைமாட சுவாமி கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்குள்ள பேச்சி அம்மன் முன்பு முளைப்பாரி வைக்கப்படும். முன்னதாக சுவாமி வரலாற்றைக் கூறும் விதமாக கணியான் கூத்து நடைபெறும். சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள், பேச்சியம்மன், பிரம்மசக்தி, இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங் களுக்கு ஆளுயர மாலைகளும், எலுமிச்சை மாலை, வாழைத்தார், தேங்காய், பழம், பனியாரம் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஐயம்பந்தி, செங்கடசாமி, சிவனந்த பெருமாள், வயணப்பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பேச்சியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கு செங்கிடா, பன்றி, கோழி ஆகியவை பலியிடப்படும். அதன் பின்னர் சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தலை வாழை இலையில் ஆடு, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன் பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். இத்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவர் திருப்பெயர் : மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்,
இறைவியார் திருப்பெயர் :பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி்,
தல மரம் : கருங்காலி மரம் , மருதமரம்,
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
வழிபட்டோர் :அம்பன், அம்பாசுரன்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,
தல வரலாறு:
இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சோமாசிமாற நாயனார் சோமயாகஞ் செய்த தலம்.
அம்பன், அம்பாசூரன் அசுரர்களைக் கொன்ற பாவந்தீர காளி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட தலம், வெளிப்பிரகாரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது.
அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் இதுவாகும்.
5 நிலை கோபுர வாயில் வழியஇத்தலம் கோயில் திருமாகாளம் என வழங்கும். அம்பன், அம்பாசூரன் இருவரையும் கொன்ற காளி பாவந்தீர இறைவனை இத்தலத்துப் பூசை செய்தாள். மாகாளரிஷியும் பூசித்த தலம். காளிகோயில் தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. வைகாசி மாதத்தில் சோமாசிமாறர் யாக உற்சவம் நடைபெறும். சிறிய உருவமுடைய பாணலிங்கம். குவளை சாத்தப்பட்டுள்ளது.
மதங்கரிஷி என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்தார். அவருக்கு "ராஜமாதங்கி' என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பெரியவளானதும், இறைவன் தோன்றி, ""வேண்டும் வரம் கேள் என்றார்''. அதற்கு அவள்,""நான் தங்களுடன் தினமும் திருமண கோலத்தில் இத்தலத்தில் இருக்க விரும்புகிறேன்,''என்றாள். திருமண தடையுள்ளவர்கள் அம்மனுக்கு இரண்டு அரளி மாலை சாத்தி அதில் ஒன்றை தங்கள் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.
சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார். யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர். தந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார்.
ஆகையால் சோமாசிமாள நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தமபதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள். இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மகநாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்தருளினார். சோமாசிமாள நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்றழைக்கின்றனர்.
வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்.றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தோற்று தேவேந்திரன் இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.
மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.
அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும். இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இந்த ஆலயத்தில் பத்திரகாளி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இவர் தொழில் அபிவிருத்தி, திருமண வரம், கல்விச் செல்வம் உள்ளிட்ட பல்வேறு வரங்களை வாரி வழங்குபவள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை, பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் எலுமிச்சைப் பழ மாலை மற்றும் சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் - ஐந்து நிலைகள். உள்ளே விசாலமான இடைவெளி. வலப்புறம் அலங்கார மண்டபம். இடப்புறம் மருதப்பர் சந்நிதி. பிராகாரத்தில் மோக்ஷலிங்கம், காளிகோயில் சிவலோக நாதர் சந்நிதி, யாகசால முதலியன உள்ளன. இரண்டாவது கோபுரம் அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
உள்ளே சென்றால் பிராகரத்தில் வன்மீகநாதர், சோமாசியார், அவர் மனைவி சுசீலை, அறுபத்துமூவர், விநாயகர், சுப்பிரமணியர், மேலே உயரத்தில் சட்டநாதர் சந்நிதி, மகாலட்சுமி, ஈசான ஜ்வரஹரலிங்கங்கள், நவக்கிரகம், நடராச மண்டபம், சனீஸ்வரர், பைரவர், தண்டபாணி முதலிய சந்நிதிகளைத் தொழலாம். கருவறையில் காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன் இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார்.
போன்: +91- 4366-291 457, +91- 94427 66818
அமைவிடம் :
தமிழ் நாடு மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இதில் ஆறு சிவாலயங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களை வழிபட கண்கோடி வேண்டும் என்பார்கள். உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் மகாமக உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இதில் 12 சிவாலயங்களில் முதல் ஆறு சிவாலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்ப்போம்.
ஆதிகும்பேஸ்வரர்
பிரளய காலத்தின் முடிவில் கும்பத்தில் இருந்து தோன்றியவர், ஆதி கும்பேஸ்வரர். இவர் மங்களாம்பிகையுடன் மங்களகரமாக அருளாட்சி செய்துவருகிறார். கும்பகோணம் நகரின் மையத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. 9 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்த தலம். ஆதி கும்பேஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் சிறப்பு, கும்ப வடிவில் இருப்பதாகும். அம்பாள் மங்களாம்பிகை, தாமரை பீடத்தின் மீது 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த ஆலயத்தில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. இங்குள்ள கல் நாதஸ்வரம் இத்தல சிறப்பை உயர்த்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர்
கும்பகோணம் பஸ்நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, காசி விஸ்வநாதர் கோவில். இத்தல இறைவன், சதுர வடிவ கருவறையில் வீற்றிருக்கிறார். தனிச் சன்னிதியில் விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவநதிக் கன்னியர்கள் அருள்புரிகிறார்கள். கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய 9 பேரும் தெற்கு நோக்கி நிற்கின்றனர். இவர்களில் காவிரித்தாய் நடுநாயகமாக வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். ராமபிரான் வழிபட்ட தலம் இது. ராவணனை வதம் செய்யும் முன்பாக, அகத்தியரின் வாக்குப்படி இத்தல இறைவனை ராமபிரான் வழிபாடு செய்ததாக தல புராணம் சொல்கிறது.
சோமேஸ்வரர்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ள ஆலயம் இது. இரண்டு ஆலயத்திற்கு இடையில் ஒரு மதில் சுவர் மட்டும்தான் இருக்கிறது. நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் ‘வியாழ சோமேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அந்தப் பெயர் தற்போது மருவி ‘ஏழை சோமேஸ்வரர்’ என்றாகிவிட்டது. சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு ‘சோமேஸ்வரர்’ என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் போதுமானது. இத்தலத்திற்கு ‘குடந்தை காரோணம்’ என்ற பெயரும் உண்டு.
கவுதமேஸ்வரர்
கும்பகோணம் மகாமக குளத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது, கவுதமேஸ்வரர் கோவில். முன்காலத்தில் இந்த ஆலயம் ‘யக்ஞோபவிதேஸ்வரர் கோவில்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. பிரளய காலத்தின்போது கும்பத்தில் இருந்த வெண் கயிறு நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அது விழுந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அங்கு ஆலயமும் அமைக்கப்பட்டது. அதுவே ‘யக்ஞோபவிதேஸ்வரர் கோவில்’ ஆகும். பின்காலத்தில் இங்கு கவுதம முனிவர் வருகை தந்தார். அவரது பாவம் விலகுவதற்காக அவர் இத்தல இறைவனை வழிபாடு செய்தார். இதனால் இங்குள்ள இறைவனும், ‘கவுதமேஸ்வரர்’ என்று வழங்கப்படலானார். கவுதம முனிவர் நீராடிய தீர்த்தம், ‘கவுதம தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.
ஆதிகம்பட்ட விஸ்வநாதர்
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு தென்மேற்கில் சிறிது தொலைவிலேயே இந்தக் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் தூமகேது என்ற முனிவர், கும்பகோணத்தின் சிறப்பு பற்றி அறிந்து தனது சீடர்களுடன் இங்கு வந்து தங்கினார். அந்த இடம் ‘மாலதிவனம்’ என்று அழைக்கப்பட்டது. கும்பேஸ்வரரை வழிபடும் முன்பாக, தான் தங்கியிருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், தூமகேது முனிவர். அப்போது அவருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடம், ‘இந்த வனத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று கேட்டார். அதன்படியே இறைவனும் இங்கு இருந்து அருள்பாலிக்கத் தொடங்கினார். இங்குள்ள அன்னை ஆனந்த நிதி என்ற பெயருடன் விளங்குகிறார். இந்த அன்னையை வழிபட்டால், 16 வகை செல்வங்கள் வந்து சேரும்.
பாணபுரீஸ்வரர்
கும்பகோணத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது பாணபுரீஸ்வரர் திருக்கோவில். இறை வன் சிவபெருமான், வேடன் உருவில் வந்து அமுத குடத்தை உடைக்க அம்பு எய்த இடம் ‘பாணபுரி’ ஆனது. அதுவே தற்போது ‘பாணா துறை’ என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் வியாச முனிவர், காசியில் நீராடியபோது பாவத்திற்கு ஆளானார். உடனே அவர் இறைவனை வேண்டி, தன்னுடைய பாவத்தைப் போக்க வழி கூறும்படி கேட்டார். இறைவனும் மனமிரங்கி, முனிவரை கும்பகோணத்திற்குச் சென்று வழிபடும்படி வழிகாட்டினார். வியாச முனிவர், அப்படி வந்து தங்கியிருந்து பூஜித்த இடம்தான் பாணபுரி. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பார்கள். அதுபோல சிறிய ஆலயமாக இருந்தாலும், இங்கு அருள்பாலிக்கும் பாணபுரீஸ்வரர் எல்லையற்ற சக்திகளை கொண்டவர்.