என் மலர்
கோவில்கள்
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் நேர்த்திக்கடனுக்காக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிடாய் விருந்தைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
மதுரையிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் சிவகங்கை செல்லும் ரோட்டின் வடபுறம் ரிங்ரோட்டில் இருக்கிறது பாண்டி முனீஸ்வரர் கோயில். இங்கு 39 சென்ட் இடத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகில் மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்’ வீற்றிருக்கிறார். 200 ஆண்டுகளுக்கும் முந்தைய வழிபாட்டு தலப்பெருமைக்குரிய இக்கோயில் இருக்கும் இடம், முன்பு மதுரை மாநகரமாக திகழ்ந்தது என்கின்றனர்.
மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததென்றே தொல்லியல் கூற்றுகளும் இருக்கிறது. அதனாலேயே இந்த பாண்டீஸ்வரரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்றழைக்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலைச் சுற்றிய, வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் இருக்கின்றன. பாண்டி முனீஸ்வரர் முன்பு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் என்றும் கூறப்படுகிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து சமபந்தி விருந்தாக உணவுண்ணும் ‘ஒற்றுமைத் திருவிழா’ நடப்பதும், இக்கோயிலின் மிக உன்னத நிகழ்வாக இருக்கிறது. இங்கு நடக்கும் கூட்டு வழிபாடும் சிறப்பாகும். தென் மாவட்டத்தினர் மட்டுமல்லாது, தமிழகம் கடந்தும் வெளிமாநிலத்தவர், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். ‘கிடாய்’ வெட்டி, ‘பொங்கல் வைத்து’ வழிபாடு செய்வதே இக்கோயிலுக்கான சிறப்பாகும்.
கறி உணவுடன் கடவுளுக்கு மதுவும், சுருட்டும் என படைக்கப்பட்டு, மனிதன் இவற்றைக் கடந்தும் நேயத்துடன் ஒன்றுபடுகிற வாழ்வியலை இக்கோயில் வழிபாடு அனைவருக்கும் உணர்த்தி வருகிறது. முன்பு வாரத்தில் வெள்ளி, செவ்வாய்தான் விசேஷம். ஆனால் இப்போதோ பாண்டி கோவில் ‘முனீஸ்வரர் கோயிலில்’ ‘தினந்தோறும் திருவிழா’ என்று சொல்லும் அளவிற்கு பக்தர்கள் வருகை இருக்கிறது. பாரம்பரிய பூசாரிகளால் பூஜிக்கப்படும் இக்கோயிலில், எல்லா முகூர்த்த நாட்களிலும் கூட்டம், மேலும் எகிறுகிறது.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பாண்டி முனீஸ்வரரை தேடிவந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களது வீடுகளில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் பாண்டிமுனீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கின்றனர். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறிய உடன், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகங்கை சந்திப்பு வரையிலான சாலையில் பாண்டிகோவில் முன்பு பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களும், கார்களும் அணிவகுத்து நிற்பதை காணலாம். பிரமாண்ட கட்டிடம் எல்லாம் பாண்டிகோவிலுக்கு கிடையாது.
சிறிய கோபுரத்துடன் அமைந்துள்ள இந்த கோவிலில் குறிப்பிட்ட வம்சாவளியினர் பூஜைகளை நடத்தி வருகின்றனர். பல மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அழகர்கோவில் குலதெய்வமாக இருப்பதை போல, எண்ணிலடங்கா குடும்பத்தினருக்கு வேண்டும் வரம் அளிக்கும் தெய்வமாக பாண்டிமுனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சமயகருப்பு எனும் தெய்வத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 1,500 ஆடுகளுக்கும் குறையாமல் நேர்த்திக்கடனாக பலி கொடுக்கப்படும். கிராமத்தில் இருந்து வருபவர்கள் தங்களின் சொந்தபந்தங்களை அழைத்து வந்து கறி விருந்து கொடுப்பார்கள்.
அங்குள்ள தலைமை பூசாரி சிவாஜி கூறியதாவது:-
இந்த கோவிலின் 4-வது தலைமுறை பூசாரியாக நான் இருக்கிறேன். எனது மூதாதையர்கள் கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எனது கொள்ளுப்பாட்டியின் கனவில் ஜடாமுனீஸ்வரர் தோன்றி, “இந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் நான் இருக்கிறேன். என்னை எடுத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை முடித்து காட்டுவேன்” என கூறியுள்ளார். அதன்படி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஜடாமுனீஸ்வரர் சிலையை தோண்டி எடுத்துள்ளனர். அப்போது இருந்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் பூசாரியாக இருந்து ஜடாமுனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம்.
1930-களில் இந்த கோவிலை அரசுடைமையாக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் மூதாதையர், நீதிமன்றங்களை நாடி, அரசுடைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோவில் என உத்தரவு பெற்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்த கோவிலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றோம். அங்கு, இந்த கோவிலை அரசு கண்காணிக்கலாம். ஆனால் நிர்வாகத்தை பரம்பரைக்காரர்களிடம் கொடுத்து விடுங்கள் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எங்கள் மூதாதையர் பாண்டி என்பவர் பூசாரியாக இருந்தார். அவர் பெயரையும் சேர்த்து பாண்டிமுனீஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டு அதுவே தற்போதைய கோவில் பெயராக அமைந்துவிட்டது.
உண்மையில் ஜடாமுனீஸ்வரர்தான் தெய்வத்தின் பெயர். அவரை வணங்கி, வேண்டுபவர்களுக்கு உரிய காரியத்தை அவர் முடித்து கொடுக்கிறார். அதற்காக பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
கிடாய், கோழிகளை பாண்டிமுனீஸ்வரருக்கு அருகில் இருக்கும் சமயகருப்பு எனும் தெய்வத்தின் முன்பாக பலி கொடுக்கும் வழக்கம் தான் உள்ளது. பாண்டிமுனீஸ்வரருக்கு என பலி கொடுப்பதில்லை. இவருக்கு பொங்கல், பால், பன்னீர்தான் விருப்பமான பொருட்கள்.
நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதால் பாண்டிமுனீஸ்வரரை குலதெய்வத்தை போல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வணங்கி செல்கின்றனர்.
இந்துக்கள் மட்டுமல்ல. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இங்கு வருகின்றனர். பல ஆயிரம் பேரின் நம்பிக்கையை முனீஸ்வரர் பெற்றதையே இது காட்டுகிறது. தற்போது பலர் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற என்ன செய்வது என கேட்கிறார்கள். அதற்கு நாங்கள், விருப்பப்பட்டால் சமயகருப்பை நினைத்து உங்கள் வீடுகளிலேயே பலி கொடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுவோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி கோவில் வாசலிலேயே தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை - அம்மாபேட்டை வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவனுடைய சாபத்தால் பாதிக்கப்பட்ட மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகள் விமோசனம் தேடி அலைந்தனர். பல தேசங்கள் அலைந்து திரிந்த அவர்கள் இறுதியாக புன்னைக் காட்டிற்குத் தெற்கே உள்ள ஒரு இலுப்பை காட்டிற்கு வந்தனர். சாபம் காரணமாக தொழுநோயால் அவதிப்பட்ட அவர்கள், அந்த இலுப்பைக் காட்டில் தங்களுடைய நிலையை எண்ணி வருந்தி, அங்கே கோயில் கொண்டிருந்த காளஹஸ்தீஸ்வரரை வழிபடத் தொடங்கினர்.
இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் கோயிலுக்கு எதிரே இருந்த திருக்குளத்தில் மூழ்கி எழுந்து, வழிபட்டு பிறகு தவமும் மேற்கொண்டனர். ரிஷிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்ட காளஹஸ்தீஸ்வரர், சாபத்தை விலக்கி, அவர்களின் நோயையும் நீக்கி அருள்பாலித்தார். ஒரே நேரத்தில் ஏழு ரிஷிகளும் வழிபாடு செய்ததால் இந்த தலம் சப்தரிஷி நத்தம் என அழைக்கப்பட்டது. அழகிய இலுப்பை மரங்கள் நிறைந்த அந்த காட்டின் நடுவே காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்து வந்தார்.
இதையறிந்த சோழ மன்னனாகிய முதலாம் ராஜராஜசோழன், தன் தந்தை எப்படியெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எடுத்து ஈசனின் மனம் குளிர வழிபாடுகளை நடத்தினாரோ அதேபோல் தன்னுடைய பக்தி நெறியையும் வெளிப்படுத்த விரும்பினார். அதன்படி தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இந்த கோயிலை நிறுவியுள்ளார் முதலாம் ராஜராஜன். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பகுதியில் வளமான பல பகுதிகளை உருவாக்கி அவற்றுக்குத் தலைநகராக சிங்கவளநாட்டை அமைத்தார்கள்.
தலைநகரின், தலையாய இறைவனுக்கு சிறப்பு செய்ய விரும்பி, இந்த கோயிலை நிர்மாணித்தார்கள். காளஹஸ்தீஸ்வரர் ஏழு அடி உயரத்திலும் பதினைந்து அடி சுற்றளவிலும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார். சோழர்களின் ஆட்சியில் காளஹஸ்தீஸ்வரருக்கு செங்கல்கற்களால் திருக்கோயிலை வடிவமைத்தார்கள். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மராட்டியர்கள் 18ம் நூற்றாண்டில் இக்கோயிலை புதுப்பித்தனர்.
சப்தரிஷிகள் தவம் புரிந்ததால், முதலில் சப்தரிஷி தலம் என அழைக்கப்பட்டு, இன்று கத்தரிநத்தம் என மருவிவிட்டது. சோழ தேசத்தில் காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்து வருவதால், இந்த தலம் தென்காளஹஸ்தி என போற்றப்படுகிறது. காளஹஸ்தீஸ்வரருக்கு இணையாக அமர்ந்து அழகிய தோற்றத்தோடு அருள்கிறார் அம்பாள் ஞானாம்பிகை. காளஹஸ்தீஸ்வரருடைய இடப்பக்கத்தில் அமர்ந்து பக்தர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்கிறார்.
இந்த தலத்தில் கொடிமரமும் ராஜகோபுரமும் இல்லை. வழக்கமாக கோயிலின் முன்மண்டபத்தில் காட்சியளிக்கும் விநாயகருக்கு பதிலாக இங்கே நாகதேவதையும், முருகனும் அருள் புரிகிறார்கள். ஆனால், கன்னி மூலையில் அமர்ந்தபடி நம்மை நோக்கி கருணையுடன் பார்க்கிறார் முதன்முதற்கடவுள் கணபதி. அவருக்கு இடது பக்கத்தில் கைலாய தட்சிணாமூர்த்தி தன்னுடைய கையில் பாம்பினை பிடித்தவாறு தரிசனம் தருவது அபூர்வமான அமைப்பு. ஒவ்வொரு சிவாலயத்திலும் லிங்கோத்பவர் இருப்பார், ஆனால் இக்கோயிலில் காளஹஸ்தீஸ்வரர்ருக்கு நேர் பின்னால் அர்த்தநாரீஸ்வர் அழகுற அமைந்திருக்கிறார்.
அவருக்கு எதிரே வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் உள்ளார். கோயில் ஓம் எனும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தலத்தில் சண்டீகேஸ்வரரை சுற்றிவராமல் நேராகச் இறைவனை தரிசனம் செய்யலாம். பைரவர் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் குறைகளைக் களைகிறார். புதுமையாக நவகிரக சூரியன் மேற்கு நோக்கியபடியும், சந்திரன் கிழக்கு நோக்கியபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பக்தர்களின் ராகு-கேது தோஷத்தை இத்தல இறைவனான காளஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தோஷம் களைய, கோயில் திருக்குளத்தில் நீராடி பின்னர் காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் பதினாறு செல்வங்களையும் பெற்றிடலாம். குறிப்பாக திருமணத் தடைகள் விலகும்; குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
தஞ்சை - அம்மாபேட்டை வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தஞ்சையிலிருந்து பேருந்து மற்றும் புன்னைநல்லூரிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன. கோயில் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9442347166, 9487029230 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது சங்கரநாராயணர் திருக்கோவில். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும்.
சங்கர நாராயணர் சன்னிதி :
இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. மூலவர் சன்னிதி பிரகாரத்தில் புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். இவ்வாறு வழிபட நாக தோஷங்கள் அகலும்.
பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்த நாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய்தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.
ஆடித் தபசு :
சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர்.
தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.
இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ஆடித்தபசு ஆகும்.
சங்கர நாராயணராக காட்சி :
அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓருருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக் கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது.
இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.
12 நாள் திருவிழா :
கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. அம்பாள் சன்னிதி முன்புள்ள ஸ்ரீசக்கரம், ‘ஆக்ஞா சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம்.
ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.
தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மீண்டும் தவம் :
பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள்.
இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
நோய் தீர்க்கும் புற்றுமண் :
இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய்கள் தீர்ந்து விடுகின்றன. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக்கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும்.
புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்டவிடாமல் குடும்பத்தை காக்கும்.
திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் பேராவூரணி தாலுகாவில் விளங்குளம் என்ற கிராமத்தின் நடுவே, ‘அட்சயபுரீஸ்வரர்’ என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அபிவிருத்திநாயகி உடனாய அட்சயபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் விளங்குளம் என்ற கிராமம் இருக்கிறது. எழில் கொஞ்சும் அந்த அழகிய கிராமத்தின் நடுவே, ‘அட்சயபுரீஸ்வரர்’ என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அபிவிருத்திநாயகி உடனாய அட்சயபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.
‘அட்சயம்’ என்றால் பொன், பொருள், உணவு உள்ளிட்ட தேவையானவற்றை அள்ள அள்ள குறையாத வகையில் வழங்கும் பாத்திரம் என்பதாக இலக்கியங்களும், புராணங்களும் சித்தரிக்கின்றன. அந்த வகையில் இங்குள்ள சிவபெருமானும், கருணையையும், அருளையும், நீண்ட ஆயுளையும், செல்வச் செழிப்பையும், புகழையும், நல்ல வாழ்க்கையையும் அள்ளி அள்ளி கொடுப்பவராக சிவலிங்க திருமேனியோடு அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை தினத்தன்று, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் மனதார வேண்டி வழிபடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் இத்தல அட்சயபுரீஸ்வரர் வாரி வழங்குவதாக ஐதீகம். அன்றைய தினம் அன்னதானம் செய்தாலோ, ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்தாலோ, சிறிய அளவில் தங்கம் வாங்கினாலோ, உப்பு வாங்கினாலோ, தியானம் மற்றும் தவம் செய்தாலோ, சுப நிகழ்ச்சிகளை நடத்தினாலோ, அவை அனைத்தும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பெருகும் என்பது இறைவனின் வரமாகும்.
பூரம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய மிகச் சிறந்த தலமாக, இந்த அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், ஆயுதங்கள் ஏதுமின்றி மங்கள சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனீஸ்வரன், இங்கு தன்னுடைய இரு மனைவியர்களான நீலாதேவி மற்றும் பிரதியுக்ஷா தேவி ஆகியோருடன் காணப்படுகிறார். இந்த சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், எம பயம், விபத்து போன்ற ஆபத்துகள் நீங்கி மங்களகரமான வாழ்வு அமையும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்றிணைய வாய்ப்பு உருவாகும்.
இந்த சிவாலயத்திற்குள் நுழைந்ததுமே ஒருவர் வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நிதர்சனமான உண்மை என்கின்றனர், பக்தர்கள். அபிஷேகப் பிரியராக இருக்கும் சிவபெருமானுக்கு, இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று சிறப்பான வழிபாடுகள் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கும் வளமும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்க இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்து வரலாம்.

இந்த ஆலயத்தைத் சுற்றி வரும் போது, நின்ற திருக்கோலத்தில் கோதண்டராமர், இந்த ஆலயம் தோன்ற காரணமான சுக முனிவர், குழந்தை வடிவ கண்ணன் காட்சி தருகின்றனர்.
துவாபர யுகம் முடிந்து, கலியுகம் தொடங்க இருந்த காலகட்டம் அது. கலியுகத்தில் நடைபெற இருக்கும் தீமைகள், துன்பங்களை முன்கூட்டியே அறிந்த முனிவர்களும், ஞானிகளும், அதன் வீரியங்கள் ஓரளவேனும் குறைய வழி தேடினர். அவர்கள் முன்பாகத் தோன்றிய நாரதர், “அனைவரும் பல புண்ணிய தலங்களுக்கு பிரிந்து சென்று, இறைவனை நினைத்து தவம் செய்வோம்” என்றார். அதன்படி ஒவ்வொருவரும் ஒரு புண்ணிய தலத்தைத் தேடிச் சென்றனர்.
நாரதரும், சுக முனிவரும் புண்ணிய தலத்தைத் தேடி தென்னிந்திய பகுதிக்கு வந்தனர். ஓரிடத்தில் மூன்று மலைகளைத் தொடராகக் கொண்ட பகுதி அவர்கள் கண்ணில் பட்டது. அந்த இடத்தில் தவம் செய்யும்படி சுக முனிவரைப் பணித்தார், நாரதர். அவரது வாக்குப்படி அந்த இடத்திலேயே, தர்ப்பை புல் கொண்டு ஆசனம் அமைத்து, அதன்மேல் அமர்ந்து நாராயணரை நினைத்து கடுமையான தவத்தை மேற்கொண்டார், சுக முனிவர்.
தவத்தின் பயனாக பத்மாவதி தாயார் உடனாய ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோலத்தில், சுக முனிவருக்கு திருமால் காட்சி அளித்தார். அவரை வணங்கிய சுக முனிவர், “இத்தலம் வந்து வழிபடுபவர்களுக்கு, கலியுகத்தில் ஏற்படும் தீய எண்ணங்களில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும். அதோடு இங்குள்ள மலையை வணங்குபவர்களுக்கும், நற்கதியை வழங்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
இந்த ஆலய மூலவரின் பெயர் ‘சுக ஸ்ரீனிவாசப் பெருமாள்’ என்பதாகும். தாயாரின் திருநாமம், ‘சுக பத்மாவதி தாயார்’. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக தர்ப்பை உள்ளது. இங்குள்ள தீர்த்தம், ‘சுக தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுவாமியும், தாயாரும் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்கள். எனவே இவர்களை வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இங்குள்ள மலை மீது சுக முனிவர் தவம் இயற்றியதால், இதற்கு ‘சுக மலை’ என்று பெயர். இந்த மலை மீது அரிதான கல்லால் ஆன தீபம் இருக்கிறது. இந்த கல் தீபத்தை நாரதர் ஏற்றி வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள், இன்றும் இந்த கல் தீபத்தை தரிசிக்க முடியும். இந்த மலையில் சுக முனிவர் தவம் செய்த இடம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஆலயத்தைத் சுற்றி வரும் போது, நின்ற திருக்கோலத்தில் கோதண்டராமர், இந்த ஆலயம் தோன்ற காரணமான சுக முனிவர், குழந்தை வடிவ கண்ணன் காட்சி தருகின்றனர். மேலும் நரசிம்மரின் நர்த்தன திருக்கோலம், கிருஷ்ணரின் காலிங்க நர்த்தனம் மற்றும் கோபியர்களுடன் வேணுகோபாலன் நடனம்புரியும் சிற்பங்களும் சிறப்பு மிக்கவையாக உள்ளன. ஆலயத்தின் தென்பகுதியில் கல்லால் ஆன புற்று உள்ளது.
அமைவிடம்
செய்யாறு- வந்தவாசி சாலையில் எச்சூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் சென்றால் திருப்பதி தாங்கல் என்ற ஊரில் இந்த ஆலயம் இருக்கிறது.

சொரிமுத்து அய்யனார் திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.
இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
தல வரலாறு:
இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.
அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.
இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.
இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.
அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.
இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.
அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.
நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆடி அமாவாசை திருவிழா :
அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.
செருப்பு காணிக்கை:
குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.
மணி விழுங்கி மரம் :
இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.

கலியுகத்தில் வாழும் தெய்வமாக பூரி ஜெகந்நாதர் போற்றப்படுகிறார். இந்த தலத்தில் உள்ள தீர்த்தமானது, மோட்சத்தை தரக்கூடிய சிறப்புமிக்கது என்கிறார்கள்.
வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகாநாத், கிழக்கே ஜெகந்நாத் பூரி ஆகிய ஆலயங்கள், மிகவும் முக்கியமான புண்ணிய தலங்களாக கருதப்படுகின்றன. இந்த நான்கிலும் ஜெகந்நாத் பூரியே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பத்ரிநாத், துவாரகாநாத், ராமேஸ்வரம் ஆகிய ஆலயங்களை தரிசனம் செய்த பிறகே, பூரி ஜெகந்நாதரை வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. மற்ற மூன்று தலங்களிலும் நீராடல், நித்திரை போவது, அலங்காரம் செய்துகொள்வது போன்ற செயல்களைச் செய்யும் இறைவன், பூரியில் மட்டும், வயிறார உணவை ஏற்றுக்கொள்பவராக அருள்புரிகிறார். கலியுகத்தில் வாழும் தெய்வமாக பூரி ஜெகந்நாதர் போற்றப்படுகிறார். இந்த தலத்தில் உள்ள தீர்த்தமானது, மோட்சத்தை தரக்கூடிய சிறப்புமிக்கது என்கிறார்கள்.
சத்ய யுகத்தில் பண்டு வம்ச அரசரான இந்திரத்துயும்னன், அவநிதி நகரை ஆண்டு வந்தான். விஷ்ணுவின் தீவிர பக்தனான இந்த மன்னன், மகாவிஷ்ணுவுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான். அதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டான். அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. “பாங்கி நதி ஓடும் பகுதியில் நீரில் ஒரு மரக்கட்டை மிதந்து வரும். அந்த கட்டையில் என்னுடைய உருவத்தை செதுக்கி வழிபட்டு வா” என்றது அந்த குரல்.
அசரீரியின் வாக்குப்படியே, பாங்கி நதியில் ஒரு மரக்கட்டை கிடைத்தது. அந்த கட்டையில் இறைவனின் சிற்பத்தை வடிக்க பல சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் யாரும் அந்த பெரும் முயற்சியை செய்ய முன்வரவில்லை. அப்போது ஒரு முதியவர், தான் இறைவனின் உருவத்தை செதுக்கித் தருவதாக கூறியதோடு, சில நிபந்தனைகளையும் விதித்தார். அதன்படி தன்னை ஒரு தனி அறையில் வைத்து பூட்டிவிடும் படியும், 21 நாட்கள் கழித்து அந்த அறையை திறக்கும்படியும் கூறினார். இடையில் அறைக் கதவை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அதன்படியே அந்த முதியவர், நதியில் மிதந்து வந்த கட்டையுடன், தனி அறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்கள் ஆன நிலையில், மன்னனின் மனைவிக்கு அந்தச் சிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய ஆவல் உண்டானது. மனைவியின் வற்புறுத்தல் காரணமாக, முதியவர் சொல்லிய சொல்லை மீறி, அந்த அறையின் கதவை மன்னன் திறந்தான். அங்கு சிற்பியைக் காணவில்லை. இதைக் கண்டு மன்னனும், மக்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கே ஜெகந்நாதர், பலராமர், சுபத்திரா ஆகியோரின் உருவங்கள் அரைகுறையாக செதுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
மனைவியின் வற்புறுத்தலால் தான் செய்துவிட்ட பிழையை எண்ணி மன்னன் வருந்தினான். அப்போது மீண்டும் அங்கே ஓர் அசரீரி ஒலித்தது. “இங்கே அரைகுறையாக இருக்கும் சிலைகளையே வைத்து, ஆலயம் அமைத்து வழிபடு” என்றது அந்தக் குரல். முகத்தோற்றம் முழுமையாக செய்யப்பட்ட நிலையில், உடல் பகுதி நிறைவுபெறாத அந்தச் சிலையே பூரிஜெகந்நாதர் ஆலயத்தில் மூர்த்தங்களாக வைக்கப் பட்டன.
சத்ய யுகத்தில் இந்திரத்துயும்னன் கட்டிய ஆலயம், காலப்போக்கில் அழிந்து போனது. இதையடுத்து கி.பி. 1200-ம் ஆண்டு அனந்தவர்மன் என்ற அரசனால் தற்போதுள்ள ஆலயத்தின் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் அனந்தவர்மனின் பேரன் அனங்க பீம்தேவ் ஆட்சிக்காலத்தில் முடிவடைந் ததாக சொல்லப்படுகிறது. ஆலயத்தின் நான்கு புறமும் வாசல்கள் அமைந்துள்ளன. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பல தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கின்றன. ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் பிரமாண்டமான மடப்பள்ளி உள்ளது. இது உலகின் மிகப்பெரிய சமையலறை என்று பெயர் பெற்றது. இதில் தினமும் 600 சமையல்காரர்கள் பிரசாதம் தயாரிக்கும் பணி களை மேற்கொள்வார்களாம். இங்கு சமைக்கப்படும் உணவானது, ஜெகந்நாதருக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்ட பிறகு, அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அமைவிடம்
வங்காள விரிகுடா கடலின் கரையில் பூரி நகரம் அமைந்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், கட்டாக்கில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தத் தலம் உள்ளது. பூரி ரெயில்நிலையத்தில் இருந்து தென்கிழக்கு ரெயில் மார்க்கத்தில் ஹவாடாபுரி ரெயில் நிறுத்தத்தில் இறங்கினால், நகரின் உட்பகுதியில் ஜெகந்நாதர் ஆலயம் இருக்கிறது.

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய பரிகார தலங்கள் உள்ளன. அங்கு சென்று வழிபாடு செய்தால் ராகு கேது தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
*காளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.
*கீழப்பெரும்பள்ளம்: மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. .
* திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி வாருங்கள்.
*கும்பகோணம்: நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
* பாமணி: மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர்.
*திருப்பாம்புரம்: கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
*வாஞ்சியம்: கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.
* நாகூர்: நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.
*பேரையூர்: புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.
*நயினார்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.
*நாகமுகுந்தன்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
* நாகப்பட்டினம்: காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.
* சென்னை-குன்றத்தூர்: பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
*சென்னை-கெருகம்பாக்கம்: சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் இத்தலம் உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.
*கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்.
*திருக்களாஞ்சேரி: மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் அருள்பரப்புகிறார்.
*ஆம்பூர்: வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி சமேத நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

1000 ஆண்டுகள் பழமையான சுருட்டப்பள்ளியில் பார்வதி தேவிவுடன் சிவபெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம்.
பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை இங்கு தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள். சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை.
சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக் கொள்கிறேன் “ என்று நந்தி பதிலளித்தார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். சுருட்டப்பள்ளி சென்று வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை. கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள்.
அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.

திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோவில். இந்த கோவிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மூலவர் : சுத்தரெத்தினேஸ்வரர்
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி
இத்திருத்தலத்தில் உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரே கல்லால் ஆன "பஞ்ச நதன நடராஜர்" அருள்புரிகிறார்.. இத்தல நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும்....திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் பாடாலூர் அருகே 5km தொலைவில் உள்ளது.
ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது. சிவகாமி அம்மையும் அழகோ அழகு.வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட சிறுநீரக நோய்கள் தீரும் அனுபவ உண்மை...இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது
ஸ்தல வரலாறு :
பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.
காயத்துடன் சிவலிங்கம்.......... ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.
அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.
அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.
இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் :
ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.
ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோவில் அமைப்பு :
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.
மேற்கூரையில் நவக்கிரகங்கள்:
ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.
இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கி நந்தி :
மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.
அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது. இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.
அபூர்வ நடராஜர் :
இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.
அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:
ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நோய் தீர்க்கும் தீர்த்தம்:
உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதற்கு சான்றாக ராஜராஜசோ ழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர். தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
சக்தி வாய்ந்த காலபைரவர்:
இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
சந்தன காப்பு அலங்காரம்:
மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்,
ஊட்டத்தூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்கோவில் யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தலம் ஆகும். இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்கெல்லாம் தலைமை தாங்கியது. இந்த கஜேந்திரன் பொதிகை மலைக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி சூரியனை வணங்கி குற்றாலத்திற்கு சென்று சிவமது கங்கையில் நீராடி திருக்குற்றாலநாதரை வணங்கிய பின் மகா விஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாளநல்லூருக்கு வந்தது.
அத்தாள நல்லூரில் உள்ள தாமரைகுளத்தில் நீராடி தாமரைப் பூக்களை பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது. தாமரை பறிக்கும்போது நாதமுனிவரின் சாபத்தால் முதலை வடிவம் கொண்ட ஊர்த்துவன் என்கிற கந்தர்வன், கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டான். யானை எவ்வளவோ முயன்றும் முதலை தன்பிடியைவிடவில்லை. யானை துதிக்கையில் தாமரையை வைத்து ஆதிமூலமே என்று அழைத்தது. மகாவிஷ்ணு கருடவாகனத்தில் வந்து தன் சக்ரா யுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார்.இதன் காரணமாக இந்த தலம் யானைக்கு அருள் செய்த தலம் எனவும் ஆனையைக் காத்த தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
அத்தி என்றால் யானை. யானையை ஆட்கொண்டதால் அத்தாளநல்லூர் என்று இந்த ஊர் பெயர்பெற்றது. கல்வெட்டுகளில் இந்தஊரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுர, பொய்மாம் பூம்பொழில் என்றும் இத்தலத்து கடவுளை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பெருமாள் யானைக்கருள் செய்த திருவிளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 24 தலங்கள் குறிப்பிட்டப்பட்டாலும் மத் பாகவதத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதுவே கஜேந்திர மோட்சத்தலமாகும். தாமிபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் பரிகாரத்தலம் என்ற புனிதம் பெற்றது. திருக்கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு வடக்காகப்பாய்கிறது. இதனால் இந்த தீர்த்த கட்டம் கங்கைக்கு நிகரானது. நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோயில் பின்பகுதியில் தாமிரபரணி நதி உள்ளதால் ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக கருதி வழிபடப்படுகிறது.
இந்தத்தூணிற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர்களால் ஆன சட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக்தர்களால் செய்யப்படுகிறது.இக்கோயிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணிவரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கிறது. தினமும் நான்குகால பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையும் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும் தைப்பூச திருவிழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு முக்கூடலில் இருந்து பஸ்வசதி உள்ளது. அருகே வீரவநல்லூர் ரயில் நிலையம் உள்ளது.

பூனாவில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, தேவூர். இங்கு ‘சிந்தாமணி விநாயகர் ஆலயம்’ அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பூனாவில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, தேவூர். இங்கு ‘சிந்தாமணி விநாயகர் ஆலயம்’ அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் ஆலயத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த விநாயகரைப் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்..
முன்னொரு காலத்தில் அபிஜித் என்ற அரசன் இருந்தான். அவனது மனைவியின் பெயர், குணவதி. இந்த தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு முறை அந்த அரசனை, வைஸம்பாயன முனிவர் சந்தித்தார். அவர் மன்னனிடம், பிரம்ம தேவரை நினைத்து தவம் இயற்றும்படி கூறினார். முனிவர் சொன்னபடியே, தம்பதியர் இருவரும் காட்டிற்குச் சென்று கடுமையான தவம் இருந்தனர். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கண’ என்று பெயரிட்டனர். அவன் வளர்ந்ததும், மக்கள் அனைவரும் ‘கண ராஜா’ என்று அழைத்தனர். கண ராஜா பலமும், புத்திசாதுர்யமும் கொண்டவனாக விளங்கினான்.
ஒரு முறை கபிலமுனிவர் வசித்த குடிலுக்குச் சென்றான், கண ராஜா. முனிவர், தன் ஆசிரமம் நாடி வந்த இளவரசனை வரவேற்று தகுந்த மரியாதையை வழங்கினார். மேலும் தன்னிடம் இருந்த சிந்தாமணி ரத்தினத்தைக் கொண்டு, அறுசுவை உணவுகளை வரவழைத்து இளவரசனுக்கு விருந்து படைத்தார். அந்த அற்புதத்தைக் கண்ட கண ராஜா, தனக்கு அந்த சிந்தாமணி ரத்தினத்தை தரும்படி கேட்டான். ஆனால் அதற்கு கபில முனிவர் மறுத்துவிட்டார். இதனால் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த ரத்தினத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கபில முனிவர், துர்க்கை அம்மனை நோக்கி பிரார்த்தனை செய்தார். முனி வரின் பிரார்த்தனையை ஏற்ற துர்க்கை, விநாயகரை நோக்கி தவம் இருக்கும்படி வலியுறுத்தினாள். கபில முனிவரும் அப்படியே செய்தார். முனிவரின் கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், அவருக்கு முன்பாகத் தோன்றினார்.
அவரை வணங்கிய முனிவர், கண ராஜாவிடம் இருந்து சிந்தாமணி ரத்தினத்தை மீட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தார். இதன் காரணமாக விநாயகருக்கும், கண ராஜாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் கண ராஜாவை வதம் செய்து, சிந்தாமணி ரத்தினத்தை மீட்டு, கபில முனிவரிடம் ஒப்படைத்தார், விநாயகர். ஆனால் கபில முனிவர் அதை தானே வைத்துக் கொள்ளாமல், அந்த சிந்தாமணி ரத்தினத்தை மாலையாக கோர்த்து, விநாயகரின் கழுத்தில் அணிவித்துவிட்டார். இதனாலேயே இத்தல விநாயகருக்கு ‘சிந்தாமணி விநாயகர்’ என்ற பெயர் வந்தது.
இது தவிர மற்றொரு தல புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்த்துவிடுவோம்..
கவுதம முனிவரின் மனைவி, அகல்யா. அவளது அழகில் மதி மயங்கிய தேவேந்திரன், ஒருநாள் அதிகாலையில் கவுதமர் நதிக்கு நீராடச் சென்ற நேரத்தில், அவரது உருவத்தில் அகல்யாவை நெருங்கினான். இதனை தனது ஞான திருஷ்டியால் அறிந்த கவுதமர், இந்திரனுக்கு சாபம் அளித்தார். இதனால் இந்திரனின் உடல் அருவருக்கத்தக்க வகையில் விகாரமாக மாறிப்போனது. இதனால் வருத்தம் அடைந்த இந்திரன், கவுதம முனிவரிடம் சாப விமோசனம் வேண்டினான்.
அவர் விநாயகரை வழிபடும்படி, இந்திரனுக்கு வழிகாட்டினார். அதன்படி கதம்ப மரங்கள் அடர்ந்த வனத்தில், ஒரு கதம்ப மரத்தின் அடியில் அமர்ந்து விநாயகப்பெருமானை, அனுதினமும் பூஜித்து வந்தான், இந்திரன். இவன் இறை வழிபாட்டிற்கு முன்னதாக நீராடிய நதி, ‘சிந்தாமணி நதி’ என்று அழைக்கப்படுகிறது. மரத்தின் அடியில் தேவர்களின் தலைவனான இந்திரன் அமர்ந்து விநாயகரை பூஜித்ததால், இந்த ஊர் ‘தேவூர்’ என்று பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதம் பிரதமை திதியில் இருந்து சப்தமி வரையிலும், மாசி மாதத்தில் பிரதமை திதியில் இருந்து அஷ்டமி திதி வரையிலும் உற்சவங்கள் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன. மூன்று கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு, உற்சவ காலங்களில் மட்டும் மக்கள் அருகில் சென்று அர்ச்சனை, நைவேத்தியங்கள் செய்யலாம். இத்தல விநாயகர், சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர் ஆவார். விநாயகரின் கண்களில் ரத்தினமும், நெற்றியில் மாணிக்கமும் பதிக்கப்பட்டுள்ளன.