என் மலர்
கோவில்கள்
ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் மார்க்கத்தில் உள்ளது 300 வருடங்கள் பழமையான முத்தியாலம்மன் ஆலயம். இந்த ஆலய வரலாற்றைப் பார்ப்போம்.
ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் மார்க்கத்தில் வரும் சக்கரக் கோட்டைக் கண்மாய். இங்கிருந்து இடது புறம் ராமேஸ்வரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் பயணித்தால், 300 வருடங்கள் பழமையான முத்தியாலம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய வரலாற்றைப் பார்ப்போம்.
தல வரலாறு :
ஆந்திராவில் இருந்து ராஜபாளையத்தில் குடியேறிய தம்பதியருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜாதகம் குறித்த ஜோதிடர், ‘இந்தக் குழந்தைக்கு பதினோரு வயது பத்து நாள் வரை தான் ஆயுள் பாக்கியமுள்ளது’ என்றார்.
பதறிப்போன பெற்றோர், கேரளம் சென்று பிரசன்னம் பார்த்தனர். அவரும் அப்படியே கூற, ‘என்ன பரிகாரம் செய்யலாம்?’ என்று கேட்டனர்.
அதற்கு பிரசன்னம் பார்த்து சொன்னவர், ‘ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் சென்று பரிகார பூஜை செய்தால் குழந்தையின் ஆயுள் நீடிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.
உடனே அவர்கள் குழந்தையைக் கூட்டிக் கொண்டு, ராமேஸ்வரம், தேவிபட்டினத்தில் பூஜைகள் செய்து விட்டு, திருப்புல்லாணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு உடைமரத்தடியில் இளைப்பாறினர். அப்போது அந்தக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டது. சோகத்தைத் தாங்கிக்கொண்டு, குழந்தைக்கான இறுதி காரியங்களைச் செய்து விட்டு வீடு திரும்பினர்.
ஒரு நாள் பெற்றோரின் கனவில், அந்தப் பெண் குழந்தை தோன்றியது. ‘நான் இறந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி, என்னை குலதெய்வமாக வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் ஏற்பட செய்கிறேன்’ என்று கூறி மறைந்தது. இதையடுத்து ராமநாதபுரம் அரண்மனையில் கோவில் எழுப்ப அனுமதி கேட்டு, உத்தரவு கிடைத்ததும் பனை மரங்களைக் கொண்டு மேற்கூரை அமைத்து ஆலயம் எழுப்பினர். பிறகு ஒரு சின்னப் பெண் வடிவில் வடிக்கப்பட்ட கற்சிலையை பிரதிஷ்டை செய்தனர். இந்த ஆலயத்தில் உள்ள முத்தியாலம்மன், தற்போது அந்தப் பகுதியின் காவல் தெய்வமாக விளங்குவதாக தல புராணம் சொல்கிறது.
ஆலய அமைப்பு :
ஆலயத்தில் நாம் முதலில் காண்பது, ஆலய முகப்பில் உள்ள வேப்பமரம். இதற்கு வலது மற்றும் இடது புறத்தில் சுமை தாங்கி கற்களில் மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. அடுத்து விசாலமான மண்டபம் இருக்கிறது. இதன் மேற்கூரை முகப்பில் வடக்கு நோக்கிய திசையில் கஜலட்சுமி நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அந்த மேற் கூரையில் சங்கு, சக்கரம் மற்றும் நான்கு மூலைகளிலும் அனுமன், கருடன் சுதைச்சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் உள்ளே உள்ள எட்டுதூண்களிலும் சங்கு, சக்கரம், திருநாமம், இரண்டு மீன்கள் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் சதுர வடிவில் யாக குண்டம், பலிபீடம் மற்றும் அம்மன் கருவறையை நோக்கி சிம்ம வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை விமானத்தில் நான்கு மூலைகளில் நான்கு யாழிகள் சுதைச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே கல் கட்டிடத்தில் முத்தியாலம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு கரத்தில் தாமரை மலர் ஏந்தியும், மறு கரத்தை மடியில் வைத்தபடியும் குழந்தை வடிவில் புன் சிரிப்புடன் காட்சி தருகிறார்.
கருவறையை சுற்றி வருகையில் வலது புறத்தில் கருப்பண சுவாமி சன்னிதி அமைந்துள்ளது. இந்த ஆலய அம்மனுக்கு, இவர் காவல் தெய்வமாக விளங்குவதாக கூறுகின்றனர். அடுத்து விநாயகர் சன்னிதி உள்ளது. எந்த ஆலயத்திலும் இல்லாத அமைப்பாக வெளிப்பிரகார முடிவில் இந்த சன்னிதி அமைந்துள்ளது. விநாயகருக்குப் பக்கத்தில் இரண்டு ஐந்து தலை நாகங்களின் கற்சிலைகள் காணப்படுகின்றன.
இவ்வாலயத்திற்கு பின்புறம் பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தை ‘அம்மன் கோவில் குளம்’ என்றே அழைக்கின்றனர். குளத்திற்குள் ஒரு கிணறும் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கான நீர் எடுக்கப்படுகிறது.
ஆலய திருவிழாக்கள் :
வைகாசி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வருடாபிஷேகம் நடை பெறுகிறது. ஆடி மாதத்தில் கிராம மக்கள் அக்னி சட்டி, முளைப்பாரி சுமந்து கிராமத்தை வலம் வந்து ஆடி உற்சவத்தை கொண்டாடு கிறார்கள். நவராத்திரியில் அம்மனுக்கு பலவித அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் வைணவ மரபுப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்கத் தலமாகக் கடவில் மகாலட்சுமி கோவில் திகழ்கிறது.
அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்கத் தலமாகக் கடவில் மகாலட்சுமி கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் கேரளா மாநிலம், ஆலப்புழை மாவட்டம், பள்ளிப் புரம் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பகுதியில் நெசவுத் தொழில் செய்து வந்த சில குடும்பத்தினர், வாழ்வாதாரத்தினைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கேரளாவிலுள்ள சேர்த்தலா அருகிலுள்ள ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றனர். அங்கு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் காஞ்சீபுரத்தில் வழிபட்டு வந்த மகாலட்சுமியை நினைத்து வழிபட்டனர்.
அங்கு அவர்களது தொழிலுக்கு நல்ல மதிப்பும், வருவாயும் கிடைத்தது. அவர்களது வாழ்வுக்குத் தேவையான அனைத்து வளங்களும் பெருகின. மகிழ்ச்சியடைந்த அவர்கள், காஞ்சீ புரத்தில் இருக்கும் மகாலட்சுமியைத் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கோவில் கொள்ள வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற மகாலட்சுமியும், காஞ்சீபுரத்தில் இருந்து முதலை ஒன்றின் மேல் அமர்ந்து அவர்கள் இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள்.
அங்கிருக்கும் குளம் ஒன்றின் கரையில் தாங்கள் வழிபட்டு வந்த மகாலட்சுமி வந்திறங்கி இருப்பதை அறிந்த மக்கள், அங்குப் புதிதாக கோவில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யத் தொடங்கினர் என்கிறது இந்தக் கோவில் தல வரலாறு.
கோவில் அமைப்பு :
இக்கோவிலில் இருக்கும் மகாலட்சுமி கிழக்கு நோக்கி நின்ற நிலையில், முன்புற வலது கையில் நெற்கதிர்கள், இடது கையில் கிளி, பின்புற வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு ஆகியவைகளைக் கொண்டிருக்கிறாள். எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் செல்வ லட்சுமியாக (ஐஸ்வரிய லட்சுமி) வழிபடப்படும் இந்த தேவி, ‘கடவில் ஸ்ரீ மகாலட்சுமி’ என்று அழைக்கப்படுகிறார். கேரள மாநிலத்தில் மகாலட்சுமிக்கென்று அமைந்த ஒரே கோவில் இது என்பதால், இவரை மலையாள மகாலட்சுமி என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், கொடுங்காளி, சேத்திர பாலகர்கள் இருக்கின்றனர். ஆலயத்தின் நுழைவு வாசலில் ஒன்பது கோள்களுக்கான அதிதேவதைகள் ஒரே இடத்தில் இருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.
வழிபாடு:
கேரள நாட்காட்டியின் படி மகரம் (தை) மாதத்தில் வரும் புனர் பூசம் நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் மற்றும் மகரசங்கராந்தி நாள், கும்பம் (மாசி) மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கர்கடகம் (ஆடி) மாதம் முழுவதும் கேரளாவில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவதுண்டு. அதே போன்று இக்கோவிலிலும் மகாலட்சுமித் தாயாருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தனு (மார்கழி) மாதத்தில் இந்த ஆலயத்தில் 12 நாட்கள் நடைபெறும் ‘களபபூஜை’ தனித்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.
திருமணத் தடை நீங்க :
இக்கோவிலில் சூரிய உதயத்தின் போது, இங்குள்ள மகாலட்சுமி வந்திறங்கிய குளத்திலுள்ள நீரைச் சிறிது எடுத்து அருந்தி மகாலட்சுமியை வழி படுபவர்களுக்கு, விஷ்ணு- மகாலட்சுமி இருவரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். மேலும் திருமணத் தடைகள் இருந்தால் அவை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு எட்டு வகையான செல்வங்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஐஸ்வரிய லட்சுமி :
செல்வம், ஞானம், உணவு, மனஉறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் எனும் எட்டு வகையான செல்வங்களை (ஐஸ்வரியம்) வழங்கும் கடவுளாகச் செல்வ லட்சுமி (ஐஸ்வரிய லட்சுமி) இருக்கிறார். இதனால் லட்சுமியை, அஷ்ட லட்சுமி என்றும் சொல்கின்றனர்.
உப்பு ஏரியில் சுவையான குடிநீர் :
உப்புத் தன்மையுடன் இருக்கும் மிகப் பெரிய ஏரிக்கு அருகில், மகாலட்சுமி வந்து இறங்கிய நீர் நிலை இருக்கிறது. ஆனால் இந்த நீர்நிலையில் மட்டும் சுவையான குடிநீர் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மகாலட்சுமி இறங்கியதாகக் கருதப்படும் அந்த இடத்தை இன்றும் பராமரித்து வருகின்றனர். தொடக்கக் காலத்தில் மகாலட்சுமியை இங்கு கொண்டு வந்து சேர்த்த முதலைக்குத் தினமும் உணவு கொடுத்துக் கோவில் அருகிலேயே வழிபட்டு வந்ததாகவும், பிற்காலத்தில் முதலையின் சிலையைக் கல்லால் வடித்துக் கோவில் கருவறையின் அருகில் வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேர்த்தலா என்ற இடம். இங்கிருந்து வடகிழக்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மகாலட்சுமி ஆலயத்திற்கு சேர்த்தலாவில் இருந்து சில தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியேச் சென்று வழிபடுவது தான் சிவராத்திரி ஓட்டம் என அழைக்கப்படுகிறது.
மகா சிவராத்திரி அன்று சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அந்த நாளில் குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியேச் சென்று வழிபடுவது தான் சிவராத்திரி ஓட்டம் என அழைக்கப்படுகிறது.
1. முன்சிறை திருமலை மகாதேவர் கோவில்:
சிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தான் தொடங்குகிறது. கோவில் மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டினம் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவில் உருவானது பற்றிய கதைகள் உள்ளன. மதுரை நாயக்க அரசர்களில் தலைசிறந்தவரான திருமலை நாயக்கரின் தாயான உதிச்சி, குழந்தைப்பேறு வேண்டி முன்சிறை சிவன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் தங்குவதற்காக கட்டப்பட்ட அரண்மனையே உதிச்சிக் கோட்டை எனப்பட்டது. உதிச்சிக்கு முன்சிறை மகாதேவர் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. அவள் வேண்டியபடியே அந்த குழந்தைக்கு கோவிலின் பெயரிலான திருமலை என்னும் பெயரை சூட்டினாளாம். கோவிலில் உள்ள தங்க அங்கியும், கீரிடமும் திருமலை நாயக்கரால் வழங்கப்பட்டது என கூறுகிறார்கள்.
ராவணன் சீதையை சிறைவைத்த முதல் இடம் என்பது மற்றொரு கதை. ராமனும், லட்சுமணரும் சீதையை காணாமல் தேடி வந்தபோது திருமலை சிவனை கண்டு வழிபட்டனர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மூலவர் சூலபாணி என அழைக்கப்படு வதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக்கடவுளான பிரம்மனை முருகன் சிறைபிடித்து வைத்தான். இந்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவமே சூலபாணி என்ற கதையும் உண்டு.
2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
இரண்டாவது ஆலயம் திக்குறிச்சி மகாதேவர் கோவில். முன்சிறை திருமலை கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வழி 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் கோவில் கிழக்கு பார்த்தது. ஆனால் மக்கள் வடக்கு வாசலையே பயன்படுத்துகிறார்கள். நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் எடுக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் ஒரு கதை வழங்குகிறது. இக்கோவிலில் நந்தி இல்லை. இக்கோவிலில் மார்கழி, சதய நட்சத்திரத்தில் கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் விழா நடக்கிறது. கோவிலில் நிலையான கொடிமரம் இல்லை. திருவிழா காலங்களில் கமுகுமரத்தை வெட்டி கொடிமரமாக நடுகின்றனர்.
3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
திக்குறிச்சி ஊரில் இருந்து கிழக்கே அருமனை வழி 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் மூலவரான சிவன், வீரபத்திரர் என அழைக்கப் படுகிறார். வீரபத்திரரும், காளியும் தட்சனை வதம் செய்த பிறகு தியானம் செய்வதற்கு திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர். இறைவன் ஆற்றை பார்க்கவே மேற்கே அமர்ந்திக்கிறான். மூலவரின் எதிரே நந்தி சற்று ஒதுங்கி இருக்கிறது. சிவன் கோபத்தின் உச்சியில் இருந்ததால் நந்தி இப்படி ஒதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தலத்தில் வழிபடுவது வழக்கம். இக்கோவிலின் சிறப்பு கோவிலை ஒட்டியிருக்கும் அருவி. தமிழகத்தில் உள்ள அருவிகளில் அதிக நாட்கள் தண்ணீர் விழும் இந்த அருவி திற்பரப்பு அருவி.
4. திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில்.
மூன்றாவது கோவிலான திற்பரப்பு கோவிலில் இருந்து கிழக்கு தெற்காக குலசேகரம் சந்திப்பு வழி 8 கிலோ மீட்டர் சென்று திருநந்திக் கரை அடையலாம். இக்கோவில் நந்தி என்ற சமண துறவியின் பெயரால் அறியப்படுகிறது. இந்த ஊர்த்தலைவர் உளுத்துப்பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரை கோவில் சிவலிங்கம் மிதப்பது போல் கனவு கண்டார். அடுத்த நாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும் ஊர் மக்கள் கண்டனர். பின்னர் அரசரின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது. இதுதொடர்பாகவும் ஒரு கதை உள்ளது. இக்கோவில் உருவான காலத்தில் எல்லா லட்சணமும் பொருந்திய ரிஷபம் ஒன்று இவ்வூருக்கு வந்தது. அது ஊர் மக்களை பயமுறுத்தி யது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியை தன் எதிரே அமர்த்திக் கொண்டார். அது எழுந்து விடாமல் இருக்க குழியில் அமர்த்திக் கொண்டார். கோவில் கருவறை வட்டவடிவிலானது. கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களை குறிப்பன.

5. பொன்மனை தீம்பிலான் குடி மகாதேவர் கோவில்.
திருநந்திக் கரையில் இருந்து கிழக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இக்கோவில் தொடர்பாக வாய்மொழி கதை உள்ளது. இது காடாக இருந்த சமயம் காணிக்காரர் என்னும் சமூகத்தை சார்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தை கண்டான். இது ஊர் மக்களுக்கு தெரிந்து அங்கே ஒரு கோவிலை கட்டினர். அது தீம்பிலான்குடி என்னும் பெயரால் வழங்கப்பட்டது. கருவறை லிங்கத்தின் மேல் வெட்டுப்பட்ட அடையாளம் உள்ளது. இது தலப்புராண கதையுடன் தொடர்புடையது.
லிங்கத்துக்கு ஆவுடையில்லை. அஷ்டபந்தனம் செய்யப்படாத சுயம்புலிங்கம். சிவாலய ஓட்டக்காரர் களுக்கு தினைக்கஞ்சி, நல்லமிளகு சாறுத்தண்ணீர், சக்கா எரிசேரி தானமாய் கொடுப்பது காலங்காலமாய் நடக்கிறது. இதன் சுவைக் காகவும், உடல் வலி போக்கும் மருந்து தன்மைக் காகவும் பக்தர்கள் இவற்றை அருந்த அந்த இடத்துக்கு விரும்பி வருகின்றனர். ஆயில்ய பூஜைக்கு பெண்கள் அதிகம் கூடுகிறார்கள். திருமணம் ஆகாத பெண்கள் 41 நாட்கள் வில்வ இலையால் இந்த இறைவனை பூஜித்தால் நினைப்பது நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.
6. திருப்பன்னிபாகம் கிராத மூர்த்தி கோவில்
பொன்மனையில் இருந்து சித்திரங்கோடு குமாரபுரம் முட்டைக்காடு வழி 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோவில் தொடர்பான தலபுராணம் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்த அர்ஜூனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையது. பூஜையின்போது புல்லாங்குழல் இசைக்கப்பட்ட கோவில். மகா சிவராத்திரி விழா ஒன்று தான் இங்கே நடக்கும் சிறப்பு விழா. பிற விழாக்கள் இல்லை.
7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
பன்னிரு சிவாலயங்களில் 7-வது கோவிலான கல்குளம் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் திருப்பன்னி பாகத் தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சிவனுக்கும், அம்மனுக்கும் தனிக்கோவில்கள் உள்ளன. இரு கோவில்களையும் இணைக்கும் மண்டபம் உண்டு. பன்னிரு சிவாலயங்களில் அம்மனுக்கு தனிக்கோவில் இருப்பது இங்கு மட்டும் தான்.
இக்கோவிலின் மேற்கே தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்க உயரம் 160 சென்டி மீட்டர். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டான். அந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டினான் என்பது ஒரு கதை.
8. மேலாங்கோடு காலகாலர் கோவில்.
ஏழாவது ஆலயமான பத்மநாபபுரம் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலாங்கோடு ஊரில் அக்கா, தங்கை என இரண்டு இசக்கிகளின் கோவில்கள் உள்ளன. அக்கா கோவிலின் அருகே சிவன் கோவில் உள்ளது. இந்த சிவனை தரிசிக்க என்று தனியாக பக்தர்கள் வருவதில்லை. இசக்கியை தரிசிக்க வருபவர்களே சிவனையும் தரிசிக்க வருகின்றனர். இதனால் சிவனுக்கு செவ்வாயும், வெள்ளியும் தான் உகந்த நாளாக இருக்கிறது.
இக்கோவில் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறார். மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனிடம் தவமிருந்தார். சிவன் 16 வயது மட்டும் வாழும் அறிவுள்ள பக்தியுள்ள ஒரு ஆண் வேண்டுமா, அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டான். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கிய போது சிவன் கோவிலினுள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனை குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் எனப்பட்டான். கருவறை மூலவர் காலகாலர் என அழைக்கப்படுகிறார். பன்னிரு சிவாலயங்களில் நேர்ச்சையாக வெடிவழிபாடு உள்ள ஒரே கோவில் இதுதான்.

9. திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில்:
நாகர்கோவில் -திருவனந்தபுரம் நெடுஞ்சாலை வழி தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வில்லுக்குறி பாலத்தின் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் காடாக இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சியை இந்த கோவிலின் உருவாக்கத் திற்கு காரணமாக கூறுகின்றனர். ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தை கண்டனர். இந்த அதிசயத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தை பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் எனப்பட்டார். இக்கோவிலில் உள்ள நந்தி தொடர்பாகவும் ஒரு கதை உண்டு. இக்கோவில் நந்தி சிற்பம் செதுக்கியபோது அது உக்கிரம் அடைந்தது. அதன் கொம்பை சிற்பி உடைத்தார். அதன் அடையாளம் இப்போதும் தெரிகிறது.
10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்:
வில்லுக்குறி சந்திப்பை கடந்து தக்கலை கேரளபுரம் ஊர்களின் வழி தென்மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் திருவிதாங் கோடு உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் தெற்கே சிவன் கோவிலும், வடக்கே விஷ்ணு கோவிலும் உள்ளன. 2 கோவில்களின் முன் பகுதியில் செப்புக் கொடிமரங்கள் உள்ளன. மூலவர் லிங்க வடிவினர். கருவறை வாசலை விட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும்படி உள்ளது. இக்கோவிலில் மார்கழி திருவிழாவும், சிவராத்திரி திருவிழாவும் முக்கியமானவை. சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.
11. திருப்பன்றிக் கோடு மகாதேவர் கோவில்:
நாகர் கோவில்- திருவனந் தபுரம் சாலையில் உள்ள தக்கலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளியாடி அருகே உள்ளது. இக்கோவில் தொடர்பான கதை மகாபாரதம், அர்ச்சுனன் தபசுடன் தொடர்புடையது. அர்ச்சுன னுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ச்சுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ச்சுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றாக வராக அவதாரக்கதையுடன் இக்கோவில் புராணத்தை இணைத்துள்ளனர். கருவறை வட்ட வடிவில் உள்ளது. உள்பகுதி சதுர வடிவிலானது. மேற்கூரை கூம்பு வடிவினது. கார்த்திகை அஷ்டமி விழா, மாசி சிவராத்திரி விழா முக்கியமானது.
12. நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:
பன்னிரு சிவாலய ங்களில் நிறைவான சிவாலயம். மார்த்தாண் டத்தில் இருந்து கருங்கல் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சிவனும், திருமாலும் ஒருவரே என்ற தத்துவத்தை எடுத் துரைக்க, இறைவன் சங்கர நாராயணாக காட்சி தருகிறார். இங்கு சிவாலயமும், சங்கர நாராயணன் ஆலயமும் தனித்தனியாக அமைந்துள்ளன. இந்த 2 ஆலயத்தின் இடையே ஓர் அழகிய தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் சிவாலயம் ஓடும் பக்தர்கள் நீராடி சங்கர நாராயணனை வழிபட்டு சிவனும், திருமாலும் ஒருவரே என்ற உண்மையை உணர்ந்து மன நிம்மதி அடைந்து ஏகாதசி அன்று தொடங்கிய விரதத்தை சிவராத்திரி அன்று நிறைவு செய்வார்கள்.

சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. நாளை கீழ்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.
சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது நல்லது. அப்பொழுது சிவ பெருமானுடைய நமச் சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.
1. திருவைகாவூர்:-
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூரில் எழுந்தருளி உள்ளவர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் இறைவி சர்வ ஜனரட்சகி.
இத்தலத்தைச் சம்பந்தர், நாவுக்கரசர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர்.
2. திருவண்ணாமலை:-
பிரம்மனும் திருமாலும் சிவபெருமான் நெருப்புவில் நின்ற போது முடி, அடி தேடித்தோல்வி அடைந்து சிவபெருமானை வணங்கிய தலம் திருஅண்ணாமலை. வணங்கிப் போற்றிய இருவருக்கும் காட்சி தந்தது சிவராத்திரி அன்றே ஆகும்.
3. திருக்கடவூர்:-
மார்க்கண்டேயன் சிவனைச் சிவராத்திரி அன்றும் பூசித்துக் கொண்டிருந்த போது எமன் வந்து பாசக்கயிற்றைக் வீச இலிங்கத்திருந்து வெளிப்பட சிவபெருமான் தன் காலால் எமனை உதைத்தார். அத்தலம் தான் திருக்கடவூர் எமன் பூசித்த தலம். அருளாளர்களின் பாடல் பெற்ற தலம். இத்தலத்தை தரிசித்தால் எமவாதம் நீங்கும்.
4) காஞ்சீபுரம்-:-
பார்வதி தேவியார் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் சிவபெருமானால் சாபம் பெற்றுத் தவம் முழுமை அடையாததால் திருஅண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார். இவ்வரலாற்றைக் காஞ்சிபுராணம் மிக விரிவாகக்கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரனைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளைப் பெறுவோமாக.

5) ஸ்ரீசைலம்:-
சிவ மகா புராணத்தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்தி தேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருஅண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தைப் திருப்பருப்பதம் என்றும் மல்லிகார் ஜூனம் என்றும் கூறுவர். இது 12 சோதிர்லிங்கத்தலங்களில் ஒன்று. சிவராத்திரியன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்றும் இன்பம் அடையலாம்.
6) ஓமாம்புலியயூர்:-
சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாக உபதேசித்த ஸ்தலம் ஓமாம்புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது.
7) திருக்கழுக்குன்றம்:-
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை ருத்திரகோடி என்பார்கள் கோடி ருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூசை செய்து அருள் பெற்றதால் இது ருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோயிலை சிவராத்திரியில் பூசை செய்தால் அவர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.
8) திருக்காளத்தி:-
மலைக்கோவிலில் ஒவ்வொரு சிவராத்திரியையும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோகர்ணம், தேவிகாபுரம் முதலிய சிவத்தலங்களில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்.
ஆடவல்லான் நடராஜரின் கால் சலங்கை ஒலி சப்தம் கேட்டு பார்வதி தேவியான காளி தேவி அவரருகே சென்றாள்.
‘சுவாமி’ என அழைத்தாள் காளி.
‘என்ன தேவி?’ என கேட்டார் நடராஜர்.
‘ஆடல் என்பது பெண்களுக்கே உள்ள கலை. நீர் ஆடி ஆடவல்லான் என்று பெயர் பெறுவது சரியல்ல. நீர் ஆடி எந்த பெண்ணையும் வெல்ல முடியாது’ என்றாள் தேவி.
‘அப்படியா?’ கேட்டார் நடராஜர்.
‘ஆமாம். முடிந்தால் என்னுடன் ஆடிப்பாரும்.’ -காளி சவால் விட்டாள்.
சிவபெருமான் சவாலை ஏற்றார். ஒருபுறம் காளி. மறுபுறம் நடராஜர். ஆட்டம் தொடங்கியது. சரஸ்வதி வீணையை மீட்ட, நாரதர் யாழை இசைக்க, மகாவிஷ்ணு மத்தளம் கொட்ட, நந்தியம் பெருமான் தாளமிட ஆட்டம் தொடங்கியது. சிவ தாண்டவத்தையும் காளி ஆட்டத்தையும் அனைவரும் கண்டு களித்தனர்.
குனிந்த புருவமும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும் உடையவராய் ஆனந்த நடனமாடிய நடராஜ பெருமானின் நடனம் கண்டு தேவர்கள், சித்தர்கள், முனி கணத்தவர்கள் என அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.
அப்போது பெருமானுடைய திருவடிச் சிலம்பிலிருந்து மரகதப்பச்சை ஒன்று தெறித்து, தென் மேற்குத் திசையில் போய் விழுந்தது.
அப்படி விழுந்த மரகதப்பச்சை லிங்க உருவமாக மாறி அமைந்ததை தேவர்கள் அசரீரி மூலம் அறிந்தனர்.
உடனே அவர்கள் அனைவரும் அந்த இடம் தேடி ஓடினர்.
லிங்க உருவினைக் கண்டு களித்தனர்.
மரகத மயமான அந்த லிங்க உருவத்தை தேவர்கள் தரிசிக்கும் போது அது பஞ்சவர்ணங்களோடு காட்சி அளிக்க பிரமாதி தேவர்கள் அந்த சிவலிங்கத்தை பஞ்சவர்ணேஸ்வரர் எனப் போற்றித் துதித்தனர்.
இத்தலமே இன்று மணிக்குடி என்று வழங்கப்படுகிறது.
இங்குள்ள பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி அருள்மிகு பிருகந்நாயகி.
ஆலய முகப்பை தாண்டி உள்ளே சென்றால் பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தில் இறைவியின் சன்னிதி உள்ளது. அதனையடுத்து உள்ளது அர்த்த மண்டபமும், கர்ப்பகிரகமும். கர்ப்பகிரகத்தில் இறைவன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவ கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கு பிரகாரத்தில் ஆஞ்ச நேயர், மகாவிஷ்ணு, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் தனிச்சன்னிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களின் திருமேனிகள் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன.
தில்லையில் நடராஜ பெருமானையும் கோவிந்தராஜ பெருமானையும் ஒருசேர தரிசித்து வணங்குவது போல் இந்த ஆலயத்திலும் பெருமானுடன் திருமாலையும் ஒருசேர வணங்கும் பேறு பக்தர்களுக்கு கிடைக்கிறது.
இத்தலத்தில் திருமாலால் தோற்றுவிக்கப்பட்ட ‘விஷ்ணு தீர்த்தம்’ ஆலயத்தின் எதிரே உள்ளது.
அப்பர் அடிகள் இறைவனின் வண்ண பேதங்களை தன்னுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
‘பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும், மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக் குன்றம்’ எனச் சேரமான் பெருமாளும் அருளிச் செய்துள்ளார்.
எனவே, சிவபெருமானுக்கு ஐந்து நிறங்கள் உண்டு என்பது தெளிவு.
இந்த ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.
ஆனித்திருமஞ்சனம், சோமவாரம், பூசம் ஆகிய நாட்களில் இங்கு இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆடவல்லானின் மரகத பச்சையில் உருவான பஞ்சவர்ணேசுவரர் தன்னை நாடும் பக்தர்களின் வெற்றிக்கு துணை நிற்பார் என்பது நிச்சயம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

முன்னோர்களுக்கான சிறப்புப் பூஜை செய்யக்கூடிய தலமாக கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திருநாவாய் முகுந்தன் கோவில் அமைந்திருக்கிறது.
திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் பாடல் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், முன்னோர்களுக்கான சிறப்புப் பூஜை செய்யக்கூடிய தலமாகவும் கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திருநாவாய் முகுந்தன் கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
காடுகளின் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த ஒன்பது முனிவர்களுக்கு, அவர்கள் சென்ற வழியில் இருந்த ஒரு இடம் பிடித்துப் போனது. அந்த இடத்தில் அவர்கள் இறைவன் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில் எட்டு முனிவர்கள் ஒருவர் பின் ஒருவராக முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தமடைந்தார்.
அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், “இறைவனே, இங்கு என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்களுருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர் களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது” என்றார்.
இறைவன் அவருடைய வருத்தத்தைப் போக்க, அவருக்கு எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். முனிவர் மகிழ்ச்சியோடு அவர்களனைவரையும் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். அதற்கு அவர்கள், இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்று விட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருந்து கொண்டு இருக்கிறோம் என்றனர்.
அதைக்கேட்ட ஒன்பதாவது முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமலிருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.
இறைவன் ஒன்பதாவது முனிவரிடம், “முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து எப்போதும் போல் வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்” என்றார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த அம்முனிவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இறைவன் சொல்லியபடி பிறர் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வரச் சம்மதித்தார். இறைவனும் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே அங்கு கோவில் கொண்டார் என்று இத்தலம் அமைந்த வரலாறு சொல்லப்படுகிறது.
கஜேந்திரன் வழிபாடு :
பிற்காலத்தில் இங்குள்ள இறைவனுக்கு மகாலட்சுமியும், கஜேந்திரனும் இங்கிருக்கும் நதியின் ஓடையில் இருந்த தாமரை மலர்களைப் பறித்துப் படைத்து வழிபட்டு வந்தனர். ஓடையில் இருந்த மலர்களை இறைவியான மகாலட்சுமி முன்பே பறித்துச் சென்றதால், கஜேந்திரனின் வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் கிடைக்காமல் போனது. தனக்கு முன்பாக அங்கிருக்கும் மலர்களை யார் பறித்துச் செல்கின்றனர் என்பதை அவனால் கண்டறியவும் முடியவில்லை.
இந்நிலையில் ஒருநாள் கஜேந்திரனுக்கு ஒரு மலர் கூட கிடைக்கவில்லை. அதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் இறைவனிடம் தனக்கு முன்பாக இங்கிருக்கும் மலர்களை யாரோ பறித்துச் சென்று விடுகின்றனர் என்று சொல்லி வருத்தப்பட்டான்.
அவன் வருத்தத்தைக் கண்ட இறைவன், அவனிடம் இனி அந்த இடத்தில் யாரும் மலர்களைப் பறிக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லக் கஜேந்திரனும் மகிழ்ச்சியடைந்தான். இறைவனின் பக்தனுக்காக மகாலட்சுமியும் அங்கு மலர் பறிப்பதை விட்டுக் கொடுக்க வேண்டியதாகி விட்டது.
அதன் பிறகு, கஜேந்திரன் அதிகமான மலர்களைப் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பித்து மகிழ்ச்சியாக வழிபட்டு வந்தான். தன்னால் அங்கிருக்கும் மலர்களைப் பறித்து இறைவனை வழிபட முடியவில்லையே என வருத்தமடைந்த மகாலட்சுமி, அருகில் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து தவமியற்றத் தொடங்கினாள்.
அவளது வருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன், மகாலட்சுமியை அழைத்து என் பக்தன் எனக்குச் சமர்ப்பிக்கும் மலர்களை நீயும் என்னுடனிருந்து ஏற்றுக் கொள் என்று சொல்லித் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். கஜேந்திரன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் பின்னர் அவனுக்கு உயர்நிலையைத் தந்தார்.

நாவாய் முகுந்தன்
ஆலய அமைப்பு :
இக்கோவிலில் இருக்கும் இறைவன் நவ முகுந்தன் எனும் பெயரில் கிழக்கு திசை நோக்கியபடி காட்சியளிக்கிறார். இங்குள்ள இறைவி மலர்மங்கை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். கேரளாவில் மகாலட்சுமிக்கு இக்கோவிலில் மட்டுமே தனிச்சன்னிதி இருக்கிறது என்கின்றனர்.
பாரதப்புழை எனும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவில் வளாகத்தில் கணபதி, ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. ஆற்றின் மறு கரையில் சிவன், பிரம்மா ஆகியோருக்கும் கோவில்கள் இருக்கின்றன என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலில் தினசரி காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அனைத்து ஏகாதசி நாட்களிலும் இங்குள்ள இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதத்தில் வரும் ஏகாதசி நாளை நவமுகுந்த ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
இங்கு கிருஷ்ணர் பிறந்ததாகக் கருதப்படும் அஷ்டமி ரோகிணி நாளிலும், நவராத்திரித் திருவிழாக் காலங்களிலும், விஷ்ணுவுக்குரியதாகக் கருதப்படும் அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேஷம் (சித்திரை) மாதம் தொடக்கத்திலிருந்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா நாட்களில் கேரள மரபு வழியிலான நடனங்கள், சொற்பொழிவுகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.
பெயர்க்காரணம் :
விஷ்ணுவை வேண்டி ஒன்பது முனிவர்கள் வழிபட்ட இடம் என்பதால், ‘நவயோகி’ என்றும், பின்னர் திருநவயோகி என்றும் அழைக்கப்பட்டுப் பின்னர் பேச்சு வழக்கில் திருநாவாய் என்று மாறியிருக்கிறது என்று இந்த ஊருக்கான பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.
ஆலயச் சிறப்புகள் :
* இத்தலம் மகாலட்சுமியும், கஜேந்திரனும் வழிபட்ட சிறப்புத் தலமாகும்.
* இக்கோவில் திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற 108 வைணவத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
* இந்த ஆலயமானது, பித்ரு பூஜை செய்வதற்கான சிறப்புமிக்க தலமாகும்.
முன்னோர் பூஜைக்கான தலம் :
துவாரபரயுகத்தில் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து திருநவயோகி தலத்திற்கு வந்து, தம் முன்னோருக்குப் (பித்ரு) பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் முன்னோர் களுக்கான பூஜை செய்தால் அளவிட முடியாத நற்பலன்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இக்கோவிலின் தலவிருட்சம் அடியில் முன்னோர்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். கோவிலருகில் முன்னோர் பூஜை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அமைவிடம் :
கேரளா மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குத் திரூர் நகரிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கான பேருந்து வசதிகள் இருக்கின்றன.

திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்தமர் திருக்கோவில். ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும்.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்தமர் திருக்கோவில். ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.
தல வரலாறு:
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை.
அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.
அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரும் பெற்றாள். பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
தல பெருமை :
புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனப் புகழ் பெற்றது. பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
ஏழு குருபகவான்
1. பிரம்மகுரு
2. விஷ்ணுகுரு
3. சிவகுரு
4. சக்திகுரு
5. சுப்ரமணியகுரு
6. தேவகுரு பிரஹஸ்பதி
7. அசுரகுரு சுக்ராச்சார்யார்
ஆகிய ஏழு குருபகவான்கள் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னிதியில் பிரம்மா அருளும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பிரம்மாவின் இடதுபுறம் தனி சன்னிதியில் ஞான சரஸ்வதி அருள்பாலிக்கும் தலமாகவும் அமைந்திருக்கிறது.
தல சிறப்பு :
மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னிதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் இந்தியாவில் இது ஒன்றே.

பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ‘ராஜேந்திரபட்டினம் குமாரசுவாமி திருத்தலம்’.
சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமைக் குழந்தையாக அவதரித்த முருகப்பெருமான், வழிபட்டுப் பேசும்பேறு பெற்ற தலம், புலிக்கால் முனிவர் வழிபட்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ‘ராஜேந்திரபட்டினம் திருத்தலம்’.
புராண வரலாறு :
சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமைக் குழந்தையாக அவதரித்த முருகப்பெருமான், இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேசும்பேறு கிடைத்ததாகத் தலபுராணம் கூறுகின்றது. இதன் காரணமாக, இத்தலத்தின் இறைவனுக்குக் ‘குமாரசுவாமி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இதேபோல, இத்தலம் வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வழிபட்ட தலமாக அமைந்துள்ளது. தென்புலியூர் எனும் சிதம்பரம் அருகே பெரும்பற்றப்புலியூர், கடலூர் அருகே வடபுலியூர் எனும் திருப்பாதிரிப்புலியூர், ஓமாப்புலியூர், காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள பெரும்புலியூர் ஆகிய தலங்களும் புலிக்கால் முனிவர் வழிபட்ட தலங்களாகும்.
இத்தலம் திருஞானசம்பந்தர் காலத்தில் பாடல் பெற்றதால், அவரின் காலமான ஏழாம் நூற்றாண்டில் இது சிறப்புடன் விளங்கியதை அறிய முடிகிறது. பெருமைமிக்க, இத்தலத்தின் இறைவன் மீது கொண்ட விருப்பத்தால், தேவர்களும், முனிவர்களும் பறவைகளாக வழிபட்டு வந்தபோது, வேடர்களின் வேட்டையில் தங்களைக் காத்துக்கொள்ள, வெள்ளெருக்கஞ்செடிகளாகி, இறைவனை வணங்கியதாகவும் தலபுராணம் கூறுகிறது. அதனால் இத்தலம் ‘எருக்கத்தம்புலியூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இதேபோல், ராஜராஜசோழனுக்கு மகப்பேறு வரம் பெற்றதால் பிறந்த ராஜேந்திர சோழன் பெயரால் இத்தலம் ‘ராஜேந்திரப்பட்டினம்’ என வழங்கப்படுகிறது. மேலும் பல்லவர், சோழர், பாண்டியர் காலத் திருப்பணி செய்யப்பட்டதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
தொன்மைச் சிறப்பு :
கி.பி. 1940-41-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுகள் இத்தலத்தின் தொன்மை சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆலயத்தின் மண்டபத்தில் அமைந்துள்ள தமிழ், சமஸ்கிருத மொழிக் கல்வெட்டு பல்லவர் காலத்தைக் குறிப்பிடுகிறது.
இதேபோல, குமரேசுவரர் சன்னிதியில் கிடைத்த கல்வெட்டு, ஜடாவர்ம முதலாம் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1265) கல்வெட்டு மூலம் கோதண்டராமர் சன்னிதி உருவாக்கப்பட்டு ஆவணிப் பூசத்தன்று விழா எடுத்ததையும் குறிப்பிடுகிறது. மற்றொரு கல்வெட்டு ஆரூர் திருவாகீஸ்வரமுடையாருக்கு 130 பொன் காசுகளை நெம்மேலி உடையான் என்பவர் கொடையளித்த விவரத்தைக் குறிப்பிடுகிறது. இதன்மூலம் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் இவ்வாலயம் போற்றப்பட்டதை அறிய முடிகிறது.
இலக்கியங்கள் :
திருஞானசம்பந்தர் இயற்றிய ‘தேவாரம்’, அருணகிரிநாதர் இயற்றிய ‘திருப்புகழ்’, வடலூர் ராமலிங்கம் சுவாமிகள் இயற்றிய ‘திரு வருட்பா’ ஆகியவை பாடல் பெற்ற தலமாக இது விளங்குகின்றது. இத்தலத்து இறைவனை வழிபடுவோருக்கு வினைகள் அணுகாது என்பது திருஞான சம்பந்தரின் உறுதிமொழியாக உள்ளது.
ஆலய அமைப்பு :
மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து முகமாய் ஐந்து கலசங்களைத் தாங்கி நம்மை வரவேற்கிறது. அருகே பிரமாண்ட வடிவில் திருக் குளம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறத்தில் எளிய வடிவிலான விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு அருகே பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன.
வெளிச்சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சன்னிதி, நால்வர் சன்னிதி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், மனைவி சூளாமணி ஆகியோர் சன்னிதிகள் அமைந்துள்ளன. மகாகணபதி, விசுவநாதர், விசாலாட்சி, முருகப்பெருமான், லட்சுமி ஆகிய சன்னிதிகளை அடுத்து கோட்ட மூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, அவருக்கு மேற்புறம், சிறிய கோவில் அமைப்பு காணப்படுகிறது. அதில் சட்டைநாதர் காட்சி தருகின்றார். அவரைத் தரிசிக்க படிக்கட்டு வசதியும் உள்ளது. துர்க்கை அதன் அருகே சண்டேசுவரர் வடிவம் அமைந்துள்ளது.
துவாரபாலகர்களைக் கடந்த பின் நடுநாயகமான இறைவன் நீலகண்டேசுவரர் லிங்க வடிவில் கிழக்கு முகமாய் அருள்காட்சி வழங்குகிறார். இவர் சுவேதார்க்கவனேசுவரர், குமாரசுவாமி என்றும் வழங்கப் படுகிறார். இவரே இத்தலத்தின் திருவிளையாடல்கள் அனைத்திற்கும் காரணமானவராக விளங்குகிறார். சுவாமியின் சற்று வலதுபுறம் அன்னை நீலமலர்க்கண்ணி சன்னிதி முகமாய் அமைந்துள்ளது. அபயவரத முத்திரையுடன் அன்னை தரிசனம் தருகிறார். அன்னை அபீத குஜாம்பாள், நீலோற்பலாம்பாள் என்றும் வழங்கப்படுகிறார்.
பரிகாரத்தலம் :
மகப்பேறு வரம் மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு பரிகாரத் தலமாக இது போற்றப்படுகிறது. அதேபோல், வெண்குட்டம் நோய் பாதித்தவர்களுக்கும் நோய் நீக்கும் தலமாக விளங்குகின்றது.
தலமரம், தீர்த்தம் :
வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்ட திருக்கோவில் இது. இத்தலத்தின் தீர்த்தம், நீலோற்பல தீர்த்தம் ஆகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
அமைவிடம் :
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில், விருத்தாச்சலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ராஜேந்திரபட்டினத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீமுஷ்ணம் என்ற திவ்யதேசம் அருகே, தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.

சென்னை, அண்ணாநகர் அடுத்து திருமங்கலம் கலெக்டர் நகர் பாதையில் அடுத்துள்ளது முகப்பேர் மங்கள் ஏரி அருகே மரகதவல்லி சமேத மார்க்கண்டேசுவரர் ஆலயம் உள்ளது.
பரிபூரண பரம்பொருளாம் பெருங்கருணைத் தடங்கடலாகிய சிவபெருமான், ஆன்மாக்கள் மீது கொண்டுள்ள எல்லை இல்லாப் பெருங்கருணையாலே, காணாத அருவினுக்கும் உருவினுக்கும் நிகழ்குறியாம், சிவலிங்கத் திருவுருக்கொண்டு எழுந்தருளி இருக்கின்ற தலங்கள் பலவற்றுள் முகப்பேரும் ஒன்று.
மகப்பேறீஸ்வரர் கோவில்
சென்னை, அண்ணாநகர் அடுத்து திருமங்கலம் கலெக்டர் நகர் பாதையில் அடுத்துள்ளது முகப்பேர் பகுதி. இங்கு மங்கள் ஏரி அருகே மரகதவல்லி சமேத மார்க்கண்டேசுவரர் ஆலயம் உள்ளது. மகப்பேறீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் இந்தத் திருத்தலம் கல் திருப்பணி ரீதியாக 1,200 ஆண்டுகள் தொன்மையானது. எனினும் தல புராண ரீதியாக, பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன் மகாலட்சுமி, சப்த ரிஷிகள் ஆகியோர் ஈசனைப் பூஜித்த தலமிது.
காஞ்சி மண்டலத்தை ஆட்சிபுரிந்த சம்புவராயர் வம்ச குறுநில மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் பல திருக்கோவில்களை நிறுவியும், பணி செய்தும் சமயத்தொண்டு புரிந்துவந்தனர். அவ்வரசர்களுள் வென்று மண்கொண்டான், ராஜநாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் களின் வம்சத்தில் வந்த சம்புவராயன் என்ற அரசன் சிறந்த சிவபக்தன்.
அவன் திருமணமாகி நீண்டகாலம் புத்திரபாக்கியம் இன்மையால் வருந்தினான். ஒருநாள் இரவில் அரசன் கனவில் தோன்றிய சிவபெருமான் ஷீர நதிக் கரையில் சிவ-விஷ்ணு ஆலயம் நிர்மாணித்து வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்று கூறி மறைந்தார். அதன்படி ஈசன் குறிப்பிட்ட ஷீர நதி என்றழைக்கப்பட்ட பாலாற்றின் கரையில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு ராஜகோபுரங்களுடன் பிரமாண்டமான சிவ-விஷ்ணு ஆலயத்தை எழுப்பினான்.
நித்ய பூஜைகளுக்கும் இதர கைங்கர்யங்களுக்கும் ஏராளமான நிலங்கள் எழுதி வைத்தான். அம்மையையும் அப்பனையும் மன முருகி வேண்டினான். மறுவருடமே ஈசனின் கருணையால் புத்திர பாக்கியம் பெற்றான் சம்புவராயன். தமக்கு வாரிசு யோகம் அளித்த ஈசன் எழுந்தருளியிருக்கும் ஷேத்திரத்திற்கு மகப்பேறு, சந்தானமங்கலம் ஆகிய பெயர்களை இட்டு மகிழ்ந்தான். குழந்தைக்கு மல்லிநாதன் என்று பெயர் சூட்டினான். மல்லிநாதனும் தந்தையைப்போல சிவபக்தியில் திளைத்தான். தம் தந்தைக்கு அருளிய மார்க்கண்டேசுவரர் கோவிலுக்கு விரிவாக்கப்பணிகள் செய்து ஆனந்தம் கொண்டான். காலப்போக்கில் மகப்பேறு என்ற பெயர் மருவி முகப்பேர் என்றானது.
அன்னியர் படையெடுப்பாலும் வேறுபல காரணங்களாலும் இவ்வாலயம் பராமரிப்பு குன்றி, மண்டபங்களும் பிரகார வீதிகளும் முழுவதும் வீழ்ந்து அழிந்துவிட்டன. இந்நிலையில் 1992-ம் ஆண்டு, வெறும் மூன்றுவீடுகள் மட்டுமே இருந்த இப்பகுதியில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியுள்ளனர். அப்போது பூமிக்கடியிலிருந்த புற்றின்மீது பால்ஊற்றிக் கரைத்துப் பார்த்தபோது சிவலிங்கம், அம்பாள் உள்பட பல விக்ரகங்கள் சேதமடையாமல் கிடைத்துள்ளன. அவற்றைக்கொண்டு அதே இடத்தில் புதிதாகக் கோவில் எழுப்பப்பட்டது. பூமிக்கடியில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, லிங்கம் அருகில் ஸ்தம்பம்போல ஒளி தோன்றி சிறிதுநேரம் நிலைத்திருந்ததாம். அதன் புகைப்படம் இன்றும் கோவிலில் உள்ளது.
பாணலிங்கம் :
இந்த சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியான-சாளக்கிராமத்திலான பாணலிங்கம் ஆகும். இயற்கையிலேயே இறையம்சம் பொருந்தியதாக உள்ள பல பொருட்களுள் பாணலிங்கமும் ஒன்று. ஆயிரம் கல் சிவலிங்கத்துக்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம் என்றும் புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளன.
காசியப மகரிஷியின் பேரன் பிரகலாதன். அவனுடைய பேரன் பாணாசுரன். ராவணனைவிட சிறந்த சிவபக்தன் பாணாசுரன். தாண்டவத்தின்போது 1000 கரங்களால் மிருதங்கம் வாசித்து ஈசனைக் கவர்ந்தான். சிரஞ்சீவித் தன்மை பெற்றவன். அனைத்து உலகையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து ஆளும் வல்லமையைப்பெற விரும்பினான் பாணாசுரன்.

இந்த அரிய வரத்தைப் பெறுவதற்காக, யமுனை நதிக்கரையில் ஈசனை எண்ணித்தவம் புரிந்தான். அப்போது சிவபெருமானிடம், பூஜிக்க 14 கோடி லிங்கங்கள் வேண்டிப் பெற்றான். அவையே சாளக்கிராமங்கள். ஒருநாள் வழிபட்ட லிங்கங்களை நதியில் இட்டுவிட்டு மறுநாள் வேறு லிங்கங்களை வைத்து வணங்கி வந்தான். ஆற்றில் இட்ட இந்த லிங்கங்கள் சிறிதுகூட சேதமின்றி தகதகவென ஜொலித்தன. தாம் வழிபட்ட இந்த லிங்கங்களை, பாணாசுரன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட வழிபாட்டுத்தலங்களில் ஸ்தாபித்தும் வழிபட்டான். மந்திரங்கள் கொண்டு சிவபூஜை செய்ததால் இந்த லிங்கங்கள் எக்காலத்திலும் சிவ சாநித்தியம் கொண்டிருப்பதாக ஐதீகம். பாணாசுரன் வழிபட்ட சின்ன உளுந்து முதல் ஒரு முழம் வரையுள்ள இந்த சிவலிங்கத் திரு மேனிகளே ‘்பாணலிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய ஆற்றல்மிக்க பாணலிங்கம் முகப்பேரிலும் கிடைக்கப் பெற்றுள்ளது.
சந்தான கவுரி :
இத்தல அன்னை ‘மரகதவல்லி’, ‘சந்தான கவுரி’ ஆகிய திருநாமங்களால் அழைக்கப்பெறுகிறாள். உரிய பருவம் வந்தும் திருமணமாகாமல், தடைபட்டுக்கொண்டிருந்தால் ஐந்து திங்கட்கிழமை இங்கு வந்து, ஐந்து தீபங்கள் வீதம் அம்பாள் சன்னிதியில் ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. திருமணமாகி நீண்டகாலம் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர்கள் உணவருந்தாமல் இங்குவந்து, அம்பாளுக்கு 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம்பழங்களை மாலையாகக் கோர்த்து அணிவித்து வழிபட வேண்டும். கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று தொடங்கி இவ்வாறு ஐந்து வாரம் வழிபடுவோருக்கு, புத்திர தோஷம் நீங்கி மகப்பேறு வாய்க்கும் என்கிறார்கள்.. அம்பாள் வரதஹஸ்த நாயகியாக வீற்றிருப்பதால், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றிவிடுகிறாள் என்பது ஐதீகம்.
வழிகாட்டும் ஈசன் :
மார்க்கண்டேய முனிவர் வழிபட்டுள்ளதால் இத்தல நாயகன் மார்க்கண்டேசுவரர் என அழைக்கப்பெறுகிறார். இங்கு ஈசனை வழிபடுவோர் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக, நல்ல நிலைக்கு வர அருள் பாலிப்பதால் மார்க்கண்டேசுவரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது என்பது இக்கோவிலுக்கு வந்து வணங்கிச்சென்ற பக்தர்களின் நம்பிக்கை. சித்தேஸ்வரர், சிதானந்தர் ஆகிய திருநாமங்களும் இந்த இறைவனுக்கு உண்டு.
மார்க்கண்டேசுவரரை வழிபடுவோருக்கு எமபயம் நீங்கும், நோய் விலகும், உடல்பலம் பெறும், ஆயுள்பலம் அதிகரிக்கும், புண்ணியம் அதிகரிக்கும், மன அமைதி கிட்டும், தொழில் விருத்தியடையும், பதவி உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும். பிரார்த்தனை செய்து அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டும் வரம் தருகிறார் என்கிறார்கள்.
பவுர்ணமி தோறும் மாலை ஆறு மணிக்கு, 11 வகை சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. குபேர சம்பத்து வேண்டியும் வழிபடலாம். அண்மையில் பூமிக்கடியிலிருந்து கிடைக்கப்பெற்ற சதுரவடிவ ஆவுடையார் பீடத்தில், வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இங்குள்ள வீணா தட்சிணாமூர்த்தியை வழிபடும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். சுமார் மூன்றடி உயரத்தில் சித்திர குப்தர் விக்ரகமும் இங்குள்ளது. கேதுவுக்கு பிரீதியாக கொள் தீபம் ஏற்றி சித்திர குப்தரை வழிபடலாம். தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் வழியில், கலெக்டர் நகருக்கு அடுத்துள்ள கோல்டன் பிளாட் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மங்கள் ஏரிப்பூங்கா அருகே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ளது நிமிஷாம்பாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
நிமிஷாம்பா கோவில் ஸ்ரீரங்கபட்டினம் அருகில் உள்ள ஒரு கோவில். பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் உள்ளது ஸ்ரீரங்கபட்டினம். இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சங்கமம் (திரிவேணி சங்கம் என்ற இடம் உள்ளது) 3 நதிகள் சேரும் இடம். இது காவேரி, கபினி மற்றும் ஹேமாவதி நதிகள் சேரும் இடத்தில் ஆற்றோரம் இந்த கோவில் உள்ளது. சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது.
ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனையை தாண்டி சென்றால் சங்கமம் சென்றடையலாம். நதிக்கரை ஓரம் இந்த கோவில் அமைந்திருக்கிறது. பார்வதியின் இன்னொரு பெயர் தான் நிமிஷாம்பாள். நிமிஷாம்பாளை வேண்டி கொண்டால் ஒரு நிமிட நேரத்தில் வேண்டுல்தலை நிறைவேற்றி தருவாள் என்பது நம்பிக்கை.
இந்த கோவிலில் வரிசையாக மூன்று சன்னதிகள் உள்ளது. சிவ பெருமான், நிமிஷாம்பாள், மற்றும் லக்ஷ்மி நாராயணர் சன்னதி. இங்கு ஈஸ்வரன் சன்னதிக்கு எதிரே நந்தி சற்று விலகி இருப்பதை காணலாம். அம்பாள் சன்னதிக்கு முன் ஸ்ரீசக்ரம் உள்ளது. இந்த ஸ்ரீ சகரத்திற்கு கும்கும அர்ச்சனை செய்யபடுகிறது.
இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு கோவில் பிரசாதம் பலி பீடத்தில் வைத்து விட்டு பூசாரி கோவில் மணியை ஒலிக்க செய்வார். மணி ஒலித்த உடன் காக்கைகள் வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக வந்து பலி பீடத்தில் வைத்துள்ள அன்னத்தை உண்பதை காணலாம். மற்ற இடங்களில் காண்பது போல காக்கைகள் இங்கு கூட்டமாகவோ மொத்தமாகவோ வந்து பலி அன்னத்தை உண்பதில்லை. பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணங்கள் இங்கு வந்து வேண்டிய பின் உடனே நடக்கிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரிலும் ஒரு பெரிய நிமிஷாம்பாள் கோவில் உள்ளது. இது தவிர காட்டன்பெட் அருகேயும் ஒரு நிமிஷாம்பாள் கோவில் உள்ளது.

கும்பகோணத்திற்கு அருகே மணலூரில் உறையும் ஏழுலோகநாயகி, திருமாந்துறைக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறாள். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
கும்பகோணம் அருகே மணலூரிலுள்ள அந்த தாமரைக்குளம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இரவு நேரங்களிலும், மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறிய பெண்ணொருத்தி காலில் கொலுசு கட்டிக்கொண்டு ஓடுவதுபோன்று ஓசை நீரில் கேட்டபடி இருந்தது. முதலில் இது வெறும் பிரமை என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், தொடர்ந்து அந்த ஓசை எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டவுடன், குளத்தில் சக்தி வீற்றிருப்பதையும், அவள் வெளிப்பட விரும்பு வதையும் விஷயம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
உடனே சக்தியைத் தேடி ஊரார் குளத்திற்குள் இறங்கினர். நீருக்குள் மெல்லிய வெளிச்சம் பூசியது போன்ற ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பி கை சிலை வடிவில் புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள். தலையில் மெல்லிய ரத்தக் கசிவை பார்த்த பக்தர்கள் மிரண்டனர். சிலையை கரை சேர்த்தனர்.
திடீரென ஓர் அசரீரி ஒலித்தது: ‘என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங் கள். உரல் உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களை காப்பேன்’ஊர் மக்களுக்கு அதென்ன உரல், உலக்கை சத்தம் கேட்காத இடம் என்று புரியவில்லை. அந்த குளத்தில் பூத்த நாயகியை ஏந்திக் கொண்டு கூட்டமாக சென்றனர்.
கிராமத்தை தாண்டினர். அப்போதும் எங்கேயோ ஓரிடத்தில் உரலின், உலக்கையின் சப்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. கிராமத்தின் எல்லையை தாண்டும்போது காடு போன்ற ஓரிடத்தில் அந்த சப்தம் கேட்கவில்லை. அங்கே சிலையை இறக்கினர். மின்னல் போன்ற ஒளி அம்மையின் முகத்தில் தோன்றி மறைந்தது. மக்கள் மனம் நிறைந்தனர். அங்கேயே சிறு கோயில் கட்டினர். இன்றும் சூரியனார் கோயிலுக்கும், திருமாந்துறை எனும் பாடல் பெற்ற தலத்திற்கும் வடக்கு பகுதியில் காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள்.

இந்த அன்னையின் திருவுருவம் மிகவும் ஆச்சரியமானது. பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி ஆகும்.பார்ப்பதற்கு இந்தக் கோயில் சிறியதுதான். ஆனால், அருள் செய்வதிலும், கீர்த்தியிலும் மிக உயர்ந்தது. இந்த ஆலயத்திற்கு மக்கள் சென்று வரவே அஞ்சிய காலங்கள் உண்டு. ஆனால், இப்போது அன்னை சாந்தமூர்த்தியாக எல்லோரையும் அழைத்து அருள்பாலிக்கிறாள். இயற்கை எழில் சூழ்ந்த வனப் பகுதியில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறாள்.
விநாயகர், வீரபத்திரருடன் அம்பிகை வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். நல்ல உயரமான சிலையாக கம்பீரக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கிறாள். கேசத்தில் நெருப்பு ஜ்வாலை பறப்பது போன்ற அமைப்பும், சற்று தலையை சாய்த்து பார்க்கும் கருணைக் கோலமும் நம் நெஞ்சை நெகிழவைக்கிறது. தனித்து வனத்தில் அமர்ந்திருப்பதால் இவள் வனதுர்க்கையும் கூட.
கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சூரியனார் கோயிலுக்கு செல்பவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் பிரசன்ன நாயகி சமேத திருக்களாஞ் செடியுடையார் கோவில் உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் பிரசன்னநாயகி சமேத திருக்களாஞ் செடியுடையார் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தை பிரம்மபுரீஸ்வரர் கோவில் என்றும் அழைப்பார்கள்.
‘களா’ என்பது புதர் வகைச் செடி. சிலர் இதைக் ‘கிளா’ என்றும் கூறுவர். தோற்றத்தில் காரைச்செடியை ஒத்திருக்கும் இச்செடி, மலைப்பிரதேசங்களில் 5 முதல் 6 அடி உயரத்திற்கு தன்னிச்சையாக வளரக்கூடியவை. வசிஷ்ட முனிவர், களா செடியின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், இத்தல இறைவன் ‘திருக்களாஞ் செடியுடையார்’ என்று பெயர் பெற்றார்.
கவுடதேசத்து மன்னன் ஐந்தாம் மனுவின் மூத்த குமாரன் சிங்கவர்மன். இவன் தோல் நோயால் அவதிப்பட்டான். அதனால் தன்னுடைய அரச பதவியை, தனது சகோதரர் களான வேதவர்மன், சுதமதி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு இறை தரிசனம் செய்ய புறப்பட்டான். தில்லை நடராஜரை வணங்க வேண்டும் என்று நினைத்த சிங்கவர்மன், தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு மூலநாதரை வணங்கும் போது, வியாக்ரபாத முனிவரைக் கண்டான். அவரைப் பணிந்து பஞ்சாட்சர மந்திர உபதேசம் பெற்றான். பிறகு முனிவர் பணித்தபடி சிவகங்கையில் நீராட அவனது உடல் நோய் நீங்கியது. அவனது உடன் பொன்னிறமாக மின்னியது. இதனால் அவனுக்கு இரண்யவர்மன் என்ற பெயர் வந்தது.
இரணியவர்மன் குணம் பெற்றதும், அவன் தில்லை திருச் ஷேத்திரத்தில் தங்கி இருப்பதும் தூதுவர்கள் மூலம் மனுவிற்கு தெரியவந்தது. இதற்கிடையில் அரச பதவிக்காக மனுவின் மற்ற இரு மகன்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இதைக் கண்டு வெறுப்படைந்த அவர், தன்னுடைய மூத்த மகனை அழைத்து வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள செய்யும்படி குல குருவான வசிஷ்டரிடம் சொல்லிவிட்டு உயிர் நீத்தார்.
இதையடுத்து இரண்யவர்மனை அழைத்து வருவதற்காக, தில்லை வனம் புறப்பட்டார் வசிஷ்டர். தில்லையின் வட எல்லைக்குள் நுழைந்தவர், ஒரு சிவலிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இந்த நிலையில் இரண்யவர்மனை அழைத்துச் செல்வதற்காக, வசிஷ்ட முனிவர் வந்திருப்பதை அறிந்த வியாக்ரபாதர், இரண்ய வர்மனை முன் சென்று வசிஷ்டரை சந்திக்கும்படி கூறினார்.
இரண்யவர்மனும் வசிஷ்டர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு வசிஷ்ட முனிவரைச் சந்தித்தவன், தன் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு துயருற்றான். சிறிது நேரத்தில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் அங்கு வந்தனர். வசிஷ்டர் அவர்கள் இருவரையும் வரவேற்று, திருகளாஞ் செடியின் கீழ் வீற்றிருந்த பெருமானை தரிசிக்கச் செய்தார். பின்னர் இரண்யவர்மனை அழைத்துக் கொண்டு வசிஷ்டர் கவுடதேசம் சென்றார். அவருக்குப் பின், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்களாஞ் செடியுடையாருக்கு, வியாக்ரபாதர் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார்.
வசிஷ்டரால் ஸ்தாபனம் செய்யப்பட்டு, வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட அந்த சிவலிங்கத்தை வழிபடும் ஆவல் திருமாலுக்கு ஏற்பட்டது. அவர் தன்னுடைய ஆவலை திருமகளான லட்சுமிதேவியிடம் கூறினார். திருமகள் தானும் வருவதாக கூற, இருவருமாக பூலோகம் வந்து திருகளாஞ் செடியுடையாரை வழிபட்டனர்.

திருக்களாஞ் செடியுடையார், பிரசன்ன நாயகி
மேற்கண்ட வரலாறானது, கோவிலின் கருவறை தென் சுற்றில், தட்சிணாமூர்த்தி சன்னிதிக்கு அருகே அழகான சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
பிரம்ம ஞானம் பெறுவதற்காகவே வசிஷ்டர், இத்தல இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது இந்த ஆலயம். நந்திதேவரின் மீது உமையம்மையுடன் ஈசன் அமர்ந்து அருள் பாலிக்கும் சிற்பம் தாங்கிய பிரதான வாசலைக் கடந்து உள்ளே செல்ல வேண்டும். அப்படி உள்நுழையும் போது இடது புறம் அரச மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கமும், வலது புறம் ஆலய கிணறும் இருப்பதைக் காணலாம். வாசலுக்கு நேர் எதிரில் திருகளாஞ் செடியுடையார் கருவறை, கருவறை அர்த்த மண்டபம், முன்மண்டபங்களுடன் அழகிய சிற்பங்கள் நிறைந்த கருங்கல் கற்றளி உள்ளது. சன்னிதி சுற்றில் எண்ணற்ற கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
துவார பாலகர்கள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சிதம்பர புராண காட்சிகள் என காணும் சிற்பங்கள் யாவும் மிகுந்த கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு, காண்போரை கவர்ந்திழுக் கின்றது. குறிப்பாக கொற்றவையின் உருவம் அனைவரையும் கவருகின்றது. சன்னிதியின் உள்ளே திருக்களாஞ் செடியுடையார் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் பெருமானுக்கு இடதுபுறத்தில் கிழக்கு நோக்கியபடி அம்பாளின் சன்னிதி உள்ளது. அங்கு பாதுகாப்பு கருதி கொண்டு வந்து வைக்கப்பட்ட பிரம்மதேவர் வடதிசை நோக்கியவாறும், யோக குரு தென் திசை பார்த்தபடியும் அருள்பாலிக்கின்றனர். முற்காலத்தில் பல சிவாலயங்களில் அம்பாள் சன்னிதி ஏற்படுத்தப்படாமல் இருந்துள்ளது. அம்பாள் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டதும், பின்னர் அம்பாளுக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டதும் காலப்போக்கில் நிகழ்ந்தவைகள் என்று கூறுகிறார்கள். அதுபோல இவ்வாலயத்திலும் பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரச் சுற்றில் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், தென்முகம் நோக்கிய பிரசன்னநாயகி மற்றும் மடப்பள்ளி போன்றவை உள்ளன. மடப்பள்ளிக்கு அருகில் வடக்கு நோக்கிய சிங்கார வள்ளி சன்னிதி காணப்படுகின்றது.
இங்குள்ள சிங்கார வள்ளி என்பவர், இத்தல பெருமானை வழிபட வந்த பக்தை ஆவார். அவர் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு இவ்வாலயத்தின் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் என்கிறார்கள் தல புராணம் அறிந்தவர்கள். ஆலயத்தின் வெளியில் மறைஞானசம்பந்தரின் அதிஷ்டானமும், அதனருகே அவர் வாழ்ந்த சிதலமடைந்த வீடும் காணக்கிடைக்கிறது. கோவிலின் வடகிழக்கு திசையில் ஆலய தீர்த்தமான பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது. இது இந்த ஆலயத்துக்கு மட்டுமின்றி, தில்லை ஆடவல்லான் ஆலயத்தின் பத்து தீர்த்தங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு வருடம் பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாள் (தெலுங்கு வருடபிறப்பு), சிதம்பரம் நடராஜபெருமான் இந்தத் தீர்த்தத்திற்கு வந்து தீர்த்தவாரி கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழுடன் தெலுங்கு மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருந்த பல்லவ மன்னர்கள், புத்தாண்டு தினத்தன்று நடராஜரை தரிசிப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த ஆலயம் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் தினசரி ஒருகால பூஜை மட்டும் நடைபெறுகிறது. வசிஷ்டர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, திருமால், திருமகள், மறைஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்ட இக்கோவில் இறைவனைப் பற்றி அதிவீரராம பாண்டியர் பாடியுள்ளார்.
நடராஜர் அரசாட்சி புரியும் சிதம்பரத்திற்கு வடமேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்காரத் தோப்பு திருத்தலம். இந்த ஆலயத்திற்குச் செல்ல சிதம்பரத்தின் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.