என் மலர்
கோவில்கள்
திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

அழகிய சிறிய ஆலயம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். மூலவரின் எதிரே பீடமும், அருகே கருடாழ்வார் திருமேனியும் உள்ளன. மகாமண்டபத்தின் இடது புறம் பரமானந்த விநாயகரும், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரும் அருள் பாலிக்கின்றனர். வலதுபுறம் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் கோகுல கிருஷ்ணன் வலது திருப்பாதத்தை மடக்கியபடி பின்புறம் பசுமாட்டின் மேல் மென்மையாய் சாய்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன் கம்பீரமாக நிற்க, இருபுறமும் சத்தியபாமாவும் ருக்குமணியும் அழகு தேவதைகளாக காட்சியளிக்கின்றனர்.
அருகே உற்சவர் திருமேனி உள்ளது. கையில் வெண்ணெய் கிண்ணத்துடன் துணைவியருடன் காட்சி தரும் கிருஷ்ணன் அழகும் அவர் முகத்தில் ஒளிவிடும் புன்னகையும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.
சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.
கிருஷ்ண ஜெயந்தி அன்று இறைவன் இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி 9 நாட்களும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். தைமாதம் நடைபெறும் இராதா கல்யாணத்தின் போது ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று நடைபெறும் உரியடி உற்சவத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி மட்டுமின்றி அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த ஆலயம் திருவிழா போல களைகட்டி காட்சி தரும். மார்கழி 30 நாட்களும் திருப்பள்ளி எழுச்சி மிகச்சிறப்பாக நடைபெறுவதுடன் கார்த்திகை மாத திருக்கார்த்திகை அன்று சொக்கபணை திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு அன்று இறைவன் இறைவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அனுமன் ஜெயந்தி அன்று இங்குள்ள ஆஞ்சநேய பெருமானுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சூட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள பரமானந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று 1008 குளிர்ந்த நீர் அபிஷேகம் நடைபெறுவதுடன் விநாயகர் அன்று வீதியுலா வருவார்.
திருமணத்தடை நீங்க இங்கு வந்து மூலவரை வேண்டிக்கொள்பவர்கள் தடைபட்ட திருமணம் நடந்ததும் மீண்டும் இங்கு வந்து மூலவருக்கும் இறைவிக்கும் வேஷ்டி, பாவாடை எடுத்து வைத்து கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.
பிள்ளை பேறு வேண்டும் தம்பதியினர் தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவன் இறைவிக்கு வெண்ணை காப்பு சாத்தி, புத்தாடை அணிவித்து கற்கண்டு பிரசாதம் விநியோகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
குழந்தை பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களையும் மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் இந்த கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.
காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
திருச்சி திருவானைக்காவல் கடை வீதியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஆலயம். திருவானைக்காவல் கடை வீதியிலிருந்து நடந்தே செல்லலாம். திருச்சி சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நிறைய நகரப்பேருந்துகள் உள்ளன. திருவானைக்காவல் கடை வீதியென்று இறங்க வேண்டும்.

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
பகல் நேர வழிபாட்டுக்கு அனுமதிக்காமல், இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு பெண்களைக் கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
சிவபெருமான், பார்வதி தேவியிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்திருந்தார். பார்வதி தேவி வழிபாடு செய்ததால், அந்த சிவலிங்கங்கள் கூடுதல் சக்திகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் மான்தத்தா எனும் முனிவர், சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.
அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரிடம், பார்வதி வழிபட்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றைக் கொடுத்து, அந்தச் சிவலிங்கத்தை மனித உடல் தகனம் செய்யப்படாத நிலப்பகுதியில் நிறுவி வழிபடச் சொல்லி மறைந்தார்.
முனிவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, கடைசியாகத் தளிப்பிரம்பாவைத் தேர்வு செய்து, அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தார். முனிவர் மறைவுக்குப் பின்பு, அந்தச் சிவலிங்கம் பூமிக்குள் சென்று மறைந்தது.
அதனைத் தொடர்ந்து அம்முனிவரின் மகன் முச்சுகுந்தா, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவி வழிபட்ட லிங்கங்களில் இரண்டாவதை அவரிடம் கொடுத்து வழி படச் சொன்னார். அவரும் அந்தச் சிவலிங்கத்தை தளிப்பிரம்பாவில் நிறுவி வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்பு அந்தச் சிவலிங்கமும் மறைந்து போனது.
பல நூற்றாண்டுகள் கடந்தன. முசாகா பகுதியை ஆண்ட சடசோமன் எனும் மன்னன், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சிவபெருமானை வழிபட்டு, பார்வதி வழிபட்ட மூன்றாவது சிவலிங்கத்தைப் பெற்றான். அவன் பெற்ற சிவலிங்கத்தைத் தளிப்பிரம்பாவில் நிறுவிக் கோவிலமைத்து வழிபாடு செய்து வந்தான். அதுவே இந்த ஆலயம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.
பரசுராமர் பயணித்துக் கொண்டிருந்த பாதையில், சக்தி மிகுந்த கோவில் கருவறை ஒன்று பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டார். அந்தக் கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். அப்போது அங்கு வந்த நாரதர், மான்தத்தா முனிவர் குறித்தும் சிவபெருமான் வழங்கிய மூன்று சிவலிங்கங்கள் குறித்தும் தெரிவித்தார்.

அதைக் கேட்ட பரசுராமர், அந்தக் கோவிலைத் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு புதுப்பிக்கச் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் இருந்த சிவலிங்கத்திற்கு அகத்திய முனிவர் அபிஷேகம் செய்து நெய்விளக்கேற்றி வழிபட்டார் என்று பரசுராமருடன் தொடர்புடைய வரலாறு ஒன்றும் தெரிவிக்கிறது.
சோழர் கட்டிடக் கலையுடன் கேரள முறையையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் இருக்கும் இறைவன், முதலாம் ராஜராஜ சோழன் பெயரைத் தாங்கி ‘ராஜராஜேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஆலயம் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். இக்கோவிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவும், மலையாள ஆண்டு தொடக்க நாள் விழாவும் சிறப்பு விழாக்களாக இருக்கின்றன.
சிறப்புத் தகவல்கள் :
* இக்கோவில் கேரளாவிலுள்ள 108 முக்கியச் சிவத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
* இந்த ஆலயத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கு வில்வ இலை பயன்படுத்தப்படுவதில்லை. விஷ்ணுவுக்குரிய துளசி இலையே பயன்படுத்தப்படுகிறது.
* இக்கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு, இரவு 7.45 மணிக்கு மேல் பெண்கள் இறைவனை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் பெண்களுக்குப் பகலிலும் அனுமதியளிக்கப் படுகிறது.
* இக்கோவிலில் கொடிமரம் அமைக்கப்படவில்லை.
ராமர் வழிபட்ட தலம் :
ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்ட ராமர், இந்த வழியாக திரும்பிச் செல்லும் போது, இங்குள்ள இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. ராமன் வழிபட்டதாகக் கருதப்படும் இக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தினுள் பக்தர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு சிவபெருமானும், விஷ்ணும் சேர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
அமைவிடம் :
கேரளா மாநிலம், கண்ணூர் நகரில் இருந்து வடகிழக்கில் 23 கிலோமீட்டர் தொலைவிலும், காசர்கோடு நகரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது தளிப்பிரம்பா என்ற ஊர்.

சிறப்பு வாய்ந்த ஈசன், வித்தியாசமான தோற்றத்தில் வீற்றிருக்கும் ஆலயம் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. இதில் கோடிகல்லின காடு பசப்பா கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.
ஆலயங்கள் என்றாலே அதிசயங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் வித்தியாசமான தோற்றத்திலும், வித்தியாசமான வழிபாட்டிலும் ஆச்சரியமூட்டும் ஆலயங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றைத் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.
பரிபூரண பரம்பொருளாம், சைவ சமயத்தின் யோகி சிவபெருமான் அமைந்திருக்கும் கோவில்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.
சைவத்தின் முழு முதற்கடவுளாக திகழும் சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், அருளுல், மறைத்தல் என்ற ஐந்து தொழில்களையும் செய்து வருகிறார். அதன் மூலம் உலக உயிர்களின் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை போக்கி வீடுபேறு அருள்கிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஈசன், வித்தியாசமான தோற்றத்தில் வீற்றிருக்கும் ஆலயம் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது.
500 ஆண்டு பழமை :
கர்நாடக மாநிலம் மண்டியா தாலுகாவில் கோடிகல்லின காடு பசப்பா என்ற பெயரிலும், மைசூரு தாலுகா வஜமங்களா கிராமத்தில் பசப்பா என்ற பெயரிலும் ஈசனுக்கு சிறப்புமிகு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
இதில் கோடிகல்லின காடு பசப்பா கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.
கோடிகல்லின காடு பசப்பா கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. இதற்கு புராண ரீதியான தலவரலாறு இருப்பதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் இக்கோவில் தோன்றியதாக ஒரு வரலாறு மக்களால் சொல்லப்படுகிறது. அதுபற்றி பார்க்கலாம்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த மக்கள், விவசாயத்தை தலையாய தொழிலாக செய்து வந்தனர். மேலும் கால்நடை களையும் வளர்த்து வந்தனர். அப்போது விவசாயம் செழிக்கவும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பவும் வேண்டி, காட்டுப்பகுதியில் லிங்க வடிவில் இருந்த கல்லை பசப்பாவாக (சிவன்) நினைத்து பூஜித்து வேண்டினர். அவர்கள் வேண்டிய படியே மழை பொழிந்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.
ஆனால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய பசப்பாவுக்கு காணிக்கை செலுத்த விவசாயி களிடம் ஒன்றும் இல்லை. வறுமையால் வாடிய அவர்கள், தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து 3 கற்களை எடுத்து வந்து பசப்பாவுக்கு காணிக்கையாக கொடுத்தனர். விவசாயிகள் கொடுத்த அந்த காணிக்கையை சிவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம்.
சக்தி வாய்ந்தவர் :
அதுமுதல் இக்கோவில் `காடு பசப்பா கோவில்' என்றும், கோடிகல்லு பகுதியில் அமைந்திருப்பதால் இந்த ஆலயம், ‘கோடிகல்லின காடு பசப்பா கோவில்’ என்றும் அழைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் சிவன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், பக்தர்கள் வேண்டிய காரியங்களை அவர் நடத்தி வைப்பார் என்றும் நம்பப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில் சிவனுக்கு திருவுருவம் கிடையாது. கோவிலுக்கு என்று பூசாரிகளோ, பூஜை முறைகளோ எதுவும் இல்லை. பக்தர்கள் நேரில் சென்று அங்கு கல் வடிவில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் வேண்டிவிட்டு செல்வார்கள். தாங்கள் நினைத்தபடி பூஜை செய்வார்கள். வேண்டுதல் வைக்க வரும் பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக சிவனுக்கு கற்களைத் தான் கொடுத்து வருகிறார்கள். அதுவும் அவர் களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கற்களைத் தான் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

திங்கட்கிழமை பூஜை :
இவ்வளவு பெரிய கல்லைத்தான் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது. பக்தர்கள் தங்களுடைய நிலங்களில் இருந்து 3 அல்லது 5 கற்களை எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தலாம். அதுவும் அந்த கற்களை தாங்களாகவே சுமந்து வந்துதான் செலுத்த வேண்டும். அது மிகச்சிறிய கற்களாக இருந்தாலும் சரி, பெரிய கற்களாக இருந்தாலும் சரி. எந்தக் கல்லாக இருந்தாலும் அதை சிவன் காணிக்கையாக ஏற்றுக் கொள்வார்.
இக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, தங்களால் முடிந்த சிறிய அல்லது பெரிய அளவிலான கற்களை கொண்டுவந்து சிவனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
குவியல், குவியலாக கற்கள் :
இக்கோவிலில் சிவனின் திருவுருவமாக கருதப்படும் லிங்க வடிவத்தை ஒத்த அந்த கல், வெட்டவெளியில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் கோபுரங்களோ, சன்னிதிகளோ கிடையாது. மேலும் இங்கு கோவில் கட்டினால், அது சிவனுக்கு எதிரானது என்று கிராம மக்கள் சொல்கிறார்கள். தற்போது சிவனின் திருவுருவமாக கருதப்படும் அந்தக் கல்லைச் சுற்றிலும் சிமெண்டு காரை போடப்பட்டு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றபடி மேற்கூரை எதுவும் அமைக்கப் படவில்லை. மேலும் இக்கோவிலில் இதுவரையில் திருவிழாக்களோ, தேரோட்டமோ நடந்தது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பக்தர்கள் மட்டும் வந்து வேண்டுவதும், பின்னர் தாங்கள் காணிக்கையாக கொண்டு வந்த கற்களை கோவிலைச் சுற்றி போட்டுவிட்டுச் செல்வதும் மட்டுமே வாடிக்கையானது. இதனால் கோவிலைச் சுற்றி குவியல், குவியலாக கற்கள் கிடக்கின்றன.
இந்த சிவனை ஒவ்வொரு திங்கட்கிழமையும் தரிசித்தால் திருமணத்தடை, குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளும் தீரும் என்றும், வேண்டிய காரியங்கள் நிறை வேறும் என்றும் நம்பப்படுகிறது.
அமைவிடம் :
இக்கோவில் மண்டியா தாலுகா கிரகண்டூர்- பேவினஹள்ளி சாலையில் அமைந்துள்ளது. மண்டியா டவுனில் இருந்து இக்கோவிலுக்கு என்று நேரடியாக பஸ்கள் கிடையாது. மண்டியாவில் இருந்து கிரகண்டூர் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து வாடகை கார், ஆட்டோ அல்லது மினி பஸ் மூலமாக இக்கோவிலுக்கு செல்லலாம்.

சோமரசம்பேட்டையில் இளமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கிராமப்புறங்களில் அருள்பாலிக்கும் காவல் தெய்வங்கள் ஏராளம். இந்த தெய்வங்களின் பல ஆலயங்கள், கிராமங்களின் எல்லையில் தான் இருக்கும்.
சோமரசம்பேட்டையில் அருள்பாலிக்கும் இளமாயி அம்மன் ஆலயமும் இப்படித்தான் அமைந்துள்ளது.
ஆலய அமைப்பு :
மிகவும் பழமையான இந்த ஆலயம் அழகான திருச்சுற்று சுவற்றுடன் அமைந்துள்ளது. ஆலயத்தின் முகப்பு கீழ் திசை நோக்கி இருக்கிறது.
உள்ளே நுழைந்ததும் விசாலமான நடைபாதை. பறந்து விரிந்து கிடக்கும் வெட்ட வெளியில் நடக்கும் போது இடதுபுறம் மதுரை வீரன் மற்றும் பட்டவனின் தனி சன்னிதிகளை தரிசிக்கலாம்.
வலது புறம் அழகான காளை ஒன்றின் சிலை உள்ளது. அடுத்து தன்னை வெட்டை கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. அடுத்து பலிபீடம். பலிபீடத்தின் எதிரே அன்னை இளமாயி அம்மனின் சன்னிதி உள்ளது.
இளமாயி அம்மன் :
ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவார பாலகிகளின் அழகு சிலைகள் இருபுறமும் அலங்கரிக்க, உள்ேள கருவறையில் அன்னை இளமாயி அம்மன் அமர்ந்த கோலத்தில் புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறாள்.
அன்னை அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் இரு கரங்களில் சூலத்தை ஏந்தியும், இரு கரங்களில் அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறாள்.
இந்த அன்னை பல குடும்பங்களின் குல தெய்வமாகவும் விளங்குகிறாள். எனவே குலமக்கள் ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து பொங்கல் இட்டு படைத்து மனம் மகிழ்வோடு இல்லம் திரும்பும் காட்சி அடிக்கடி காணக்கூடியது.
அன்னைக்கு காப்பு கட்டி மாசி மாதம் 15 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்த அன்னைக்கு உற்சவர் திருமேனி இல்லை. எனவே திருச்சி உறையூரில் உள்ள குழுமாயி அம்மனுக்கு ஓலையில் உருவம் செய்து தேரில் பவனி வர செய்வதுபோல் இங்கும் அன்னையை ஓலையில் உருவம் வடித்து தேரில் பவனி வர செய்கின்றனர்.
3 நாட்கள் அன்னை தேரில் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் வருவாள். அதுசமயம் ஊரே விழாக்கோலம் கொண்டிருக்கும்.
12.12.2010 இல் இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றதால் ஆலயம் புதுப்பொழிவுடன் விளங்குகிறது.
கோவில் காளை :
இந்த ஆலயத்திற்காக நேர்ந்துவிட்ட காளை ஒன்று இங்கேயே பல ஆண்டுகள் தங்கி ஆலயத்தை காவல் காத்ததாம். ஆலயத்தின் உள்ளே புல்வெளியில் படுத்தும், ஆலயத்தின் வெளியே திருச்சுற்று சுவர் அருகேயும் ஓய்வு எடுக்குமாம். ஆலயம் வரும் பெரியவர்களும் குழந்தைகளும் தரும் பழங்களை விரும்பி சாப்பிடும்.
முரட்டு காளையாக இருந்தாலும் இந்த காளை யாரையும் முட்டியது இல்லை. துரத்தியதும் இல்லை. சிறுவர் சிறுமியர்களுக்கு இந்த காளையின் மீது அலாதி பாசம் உண்டு.
பழக்கமானவர்களை காணும்போது அம்மா என வாய் நிறைய அழைக்கும். கேட்பவர்கள் மனம் நெகிழ்ந்து அந்த காளையின் அருகே வந்து முதுகை தடவி கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த காளை ஆலயத்தில் இருக்கும் துணிவில் வெளியூர் சென்று இரவு வீடு திரும்பும் ஊர் மக்கள் தைரியமாக ஆலயத்தை கடந்து செல்வார்கள்.
திடீர் என நோய்வாய்ப்பட்ட அந்த காளை ஒரு நாள் இறந்து விட்டது. ஊர் மக்கள் தங்கள் வீட்டில் உறவினர் தவறியது போல் கண்ணீர் விட்டனர்.
ஆலய முகப்பின் வலதுபுறம் அந்த காளைக்கு சிலை வைத்து நன்றியோடு இப்போதும் வழிபடுகின்றனர் ஊர் மக்கள்.
அன்னை இளமாயி அம்மனிடம் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகள் யாவும் உடனுக்குடன் பலிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
குழந்தை வரம் கேட்டும், தேர்வில் தேர்ச்சி பெறவும், தொழில் நல்ல முறையில் நடக்கவும், விரைந்து திருமணமாகவும் வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்களை அன்னை தவறாது நிறைவேற்றி வைக்கிறாள்.
தங்கள் வேண்டுதல் பலித்ததும் ஆலயம் வரும் பக்தர்கள் அன்னைக்கு பொங்கல் வைத்து படைத்து அபிஷேகம் செய்து தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் அங்கு நிலவும் அமைதியான சூழல் மனதை கொள்ளை கொள்வதுடன் நம் மனதில் நிம்மதி பிறப்பதும் நிஜம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமரசம்பேட்டையில் உள்ளது இந்த இளமாயி அம்மன் ஆலயம். இங்கு செல்ல நிறைய நகரப்பேருந்துகள் உள்ளன. ஆட்டோ வசதியும் உண்டு.

சிவபெருமான் பூவுலகில் வீரசெயல் புரிந்த 8 தலங்கள் “அட்டவீரட்டானம்” என்று போற்றப்படுகிறது. இதில், சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது.

இந்த கோவிலில் இறைவன்: வீரட்டானேசுவரர், இறைவி: பெரிய நாயகி.
புண்ணியங்களை குவித்து முக்தியை தரும் அரிய கோவிலாக திரு வதிகை வீரட்டானே சுவரர் கோவில் விளங்கு கிறது. இந்த கோவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது.
சிறப்பு :
கோவிலை பற்றி சம்மந்தர், நாவுக்கரசர், அருணகிரி நாதர், மனவாசம்டைந்தார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர். எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சிவபெருமான், திருவதிகையில் முப்புரம் எரித்ததை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்தன. திருவதிகை திருத்ததலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப்போகிறது.
இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோவில், காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த கோவில் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
கோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.
இங்குதான் முன்பு ஒரு சமயம் சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சூலை நோய் வரப்பெற்று சைவ மதத்துக்கு திரும்பிய போது தமக்கையார் திலவகதி அம்மையாரின் திருக்கரங்களால் அப்பர் பெருமானுக்கு திருநீறு பூசி கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றதால் திருநீற்றின் பெருமை உலகிற்கு உணர்த்திய தலமாகவும், திருநாவுக்கரசருக்கு வாழ்வில் திருப்பம் தந்த தலமாகவும் திருவதிகை திகழ்கிறது.
திருநீறு அணியும் முறை :
மேலும் பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு கீழே சிந்தாமல், சிதறாமல் இருக்க அப்படியே அண்ணார்ந்து நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம்.
திருவதிகை சிவத்தலத்தில் திருநீறு நெற்றியில் பூசும் போது தெரியாமல் கூட தலை நிமிர்ந்து அண்ணாந்து பூசமாட்டார்கள். பூசக்கூடாது. தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் திருநீறு பூசிக் கொள்வதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம். இங்கு தலை குனிந்து வந்தால் தலைநிமிர்ந்து வாழலாம். தலைகுனிந்து ஆணவம் கொள்ளாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பம் தரும் தலமாக இது திகழ்கிறது.
தீர்த்த சிறப்பு :
திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை வாரணாசி ஆறு என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. இங்கு அக்னி மூலையில் அமைந்த சர்க்கரை தீர்த்தம், கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சூலை தீர்த்தம் ஆகியவை பலருக்கு திருப்பங்களை தந்துள்ளது.
வராகி :
கோவில் திருப்பணியின் போது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வராகி அம்மன் சிலை கோவிலின் முகப்பிலே அமைத்து வழிபடுகின்றனர். இந்த வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளையும், வழக்கில் வெற்றிகளையும் கொடுத்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி திருப்பம் தரும். தாய்க்கு தாயாக வராகி அம்மன் திகழ்கிறார்.
உள்ளே தலவிருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சரக்கொன்றையை சுற்றி வந்து சரக்கொன்றை நாதரை வணங்கினால் நோய் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆரோக்கியம் பெருகும். செப்பு திருமேனியாக அமைந்துள்ள ஸ்தல நாயகர் வில்லேந்திய சிவபெருமான் திரிபுர சம்ஹார மூர்த்தி மூலவர் 16 பட்டைகளுடன் விளங்கும் லிங்க திருமேனியாக காட்சி தருகிறார். வீரட்டா னேசுவரர் உமா தேவியாருடன் உருவ திருமேனியாகவும் அருள்பாலித்து பக்தர்களுக்கு திருப்பம் தருகிறார். திருவதிகையில் ஒரு தடவை வந்து காலடி வைத்தாலே உன்ன தமான மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.

தனது தாய் வழிபாடு செய்வதற்காக, ஆதிசங்கரர் உருவாக்கிய கோவில் ஒன்று கேரள மாநிலம் காலடியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
தனது தாய் வழிபாடு செய்வதற்காக, ஆதிசங்கரர் உருவாக்கிய கோவில் ஒன்று கேரள மாநிலம் காலடியில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அட்சய திருதியை நாளில் நடைபெறும் கனகதாரா யாகத்தில் கலந்து கொண்டால், அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்கின்றனர்.
தல வரலாறு :
மூன்று வயதிலேயே தந்தையை இழந்த சங்கரர், தாய் ஆரியாம்பாள் அன்பிலேயே வளர்ந்து வந்தார். தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அவரது தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய போது, திரு மணம் செய்ய மறுத்துத் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். ஆனால், அவரது தாய் அதற்கு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள், ஆதிசங்கரர் தன் தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரது காலை கவ்வி இழுத்தது. மகனின் நிலையைக் கண்ட தாய், கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தும் சங்கரரை காப்பாற்ற முடியவில்லை.
உடனே சங்கரர் தன் தாயிடம், ‘அம்மா! என்னைத் துறவு செல்லத் தாங்கள் அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும். இல்லையேல் இது என்னை விழுங்கி விடும்’ என்றார். அதைக் கேட்டுப் பயந்து போன அவரது தாய், தன் மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்துத் துறவு செல்ல அனுமதித்தார். என்ன ஆச்சரியம்.. முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. அதன் பிறகு துறவு மேற்கொண்ட சங்கரர், தாயின் மேல் கொண்ட அன்பால், அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்.
சங்கரரின் தாய், சிறிது தொலைவிலிருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து, அங்கிருக்கும் கண்ணனை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வயதான காரணத்தால் அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை ஒரு முறை சங்கரரிடம் சொல்லி வருந்தினார்.
அதைக் கேட்ட சங்கரர், கண்ணனை நினைத்து வணங்கினார். அப்போது, ‘குழந்தையே! நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்குப் பெரியாறு தேடி வரும்’ என்று அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட சங்கரரும் தனது காலடியை எடுத்து வைக்க, பெரியாறு சங்கரரின் தாயிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதுவரை ‘சசலம்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமம், அதன் பிறகு ‘காலடி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெரியாற்றிலிருந்து பிரிந்து வந்த அந்த ஆறு ‘பூர்ணா ஆறு’ என்று அழைக்கப்படுகிறது.
சங்கரர் தாயின் விருப்பத்திற்கேற்ப அவர் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் கண்ணன் சிலையையும் நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோவில் தற்போது ‘திருக்காலடியப்பன் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு :
ஆலயத்தின் கருவறையில் திருக்காலடியப்பன் (கண்ணன்), வலது கையில் வெண்ணெய் வைத்தபடி, இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். மேலிருக்கும் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் உள்ளது. கருவறைக்கு வலது புறம் சிவன், பார்வதி, கணபதி, கிருஷ்ணர் ஆகியோருக்கான சன்னிதிகளும், வழிபாட்டு மண்டபத்தில் பரசுராமர், ஆதிசங்கரர் ஆகியோரது சன்னிதிகளும் இருக்கின்றன. சுற்றுப்பகுதியில் ஐயப்பனுக்குச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் எதிரில் ஆரியாம்பாள் சமாதியும் இருக்கிறது. கண்ணன் கோவில்களில் கண்ணனின் அருகில் சிவன், பார்வதி சன்னிதிகள் இருப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர் பக்தர்கள்.
ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் ஆதிசங்கரர் சிலை, தட்சிணாமூர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வியாழக்கிழமை வழிபாடு சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், திருவோணம், நவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற நாட்களிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதேபோல் ஆண்டுதோறும் அட்சய திருதியை, கண்ணன் சிலை நிறுவப்பட்ட நாள் ஆகிய தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்விழாவின் போது கலசாபிஷேகம், நவதானிய பூஜை போன்றவை நடத்தப்பெற்று வருகின்றன.

வழிபாட்டுப் பலன்கள் :
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலின் வழிபாட்டு மண்டபத்தில் இருந்து, கண்ணனை வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தைப்பேறு உண்டாகும்.
இக்கோவில் இறைவனான சின்னக் கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், கடன்கள் அனைத்தும் நீங்கி, அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.
கிரகப் பாதிப்புகளில் இருந்து விடுபடவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு பெற்றிடவும், வணிகம் வளர்ச்சியடையவும், கல்வி மேன்மையடையவும் இக்கோவிலில் நடைபெறும் நவதானிய பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சயதிருதியை நாளில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அஞ்சனா கல் :
காலடியில் உள்ள கண்ணன் சிலையானது, இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருக்கும் ‘அஞ்சனா’ எனும் கல்லால் 3½ அடி உயரத்தில் உருவாக்கப்பட்டது. அஞ்சனா கல்லில் செய்த சிலைக்கு அதிக சக்தி இருக்கும் என்கின்றனர். குருவாயூரில் இருக்கும் கண்ணன் சிலையும் அஞ்சனா கல்லில் உருவாக்கப்பட்டதுதான் என்கின்றனர். விஷ்ணு கோவில்களில் இந்த இரு சிலைகள்தான் அஞ்சனா கல்லில் செய்யப்பட்டவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனகதாரா வேள்வி :
ஆதிசங்கரர் ஒரு வீட்டில் பிச்சை கேட்கச் சென்ற போது, அங்கிருந்த ஏழைப் பெண்மணி அவருடைய வீட்டில் பிச்சையிட உணவு எதுவுமில்லாத நிலையில், அவருக்குக் காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைப் பிச்சையிட்டார். ஆதிசங்கரர் அந்த ஏழைப் பெண்மணியின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டிக் கனகதாரா சுலோகத்தைப் பாடி வணங்கினார். அப்போது அந்த வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி மழை போல் பொழிந்தது. அவரது வறுமை நீங்கிச் செல்வச் செழிப்பு மிகுந்தது.
ஆதிசங்கரர் உருவாக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சயதிருதியை நாளில் கனகதாரா வேள்வி நடத்தப்படுகிறது. இந்த வேள்வியில் சங்கரர் 32-ம் வயதில் முக்தியடைந்ததை நினைவு கொள்ளும் வகையில், 32 வேள்வி நடத்துபவர்கள், தங்கம் மற்றும் வெள்ளியிலான நெல்லிக்கனிகளை வைத்துக் கனகதாரா சுலோகத்தை 1008 முறை படித்து வழிபாடு செய்கின்றனர். அதன் பின்னர் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்குத் தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் வழங்கப்படுகின்றன. இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்குரிய பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அமைவிடம் :
கேரளாவில் எர்ணாகுளம் நகரில் இருந்து திருச்சூர் செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அங்கமாலி சென்று, அங்கிருந்து தெற்கு நோக்கி 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம். இக்கோவிலுக்கு எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. அங்கமாலியில் இருந்து நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.

காவிரிக்கரையில் அமைந்துள்ள புனிதத் தலங்கள் பலவற்றுள் ‘நரசிம்ம மூர்த்தி’ யோகநிலையில் வீற்றிருக்கும் நரசிங்கன்பேட்டை திருத்தலமும் ஒன்று.

நரசிம்ம அவதாரம் என்றாலே உக்கிரமானது என்று சிலர் நினைக்கின்றனர். உலகில் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்ட நாராயணனால் எடுக்கப்பட்ட அவதாரங்களில் ஒன்று இது. இரண் யகசிபுவின் வதம் இதனையே குறிக்கிறது. நாராயணன் தனது பக்தர்களை கைவிடமாட்டார் என்பதையும் இது காட்டுகிறது. நாளை என்பதே நரசிம்மனிடத்தில் கிடையாது என்பதற்கேற்ப, தன்னை சரணடைந்தவர்களை உடனடியாக காக்கும் உருவமே நரசிம்ம உருவம்.
இரண்யகசிபு வதத்திற்குப் பிறகு கோபம் தணிய பகவான் அமர்ந்த தலங்களுள் நரசிங்கன் பேட்டை என்ற இத்தலம் முக்கியமானதாகும். இங்கு பகவான் யோக நிலையில் அருள் பாலிக்கிறார். யோக நிலை நரசிம்மர் மற்ற நரசிம்ம மூர்த்தங்களை விட சக்தி வாய்ந்தவர் என்பது ஐதீகம். மறைமுகமான எதிர்ப்புகளான ஏவல், சூன்யம் முதலியவற்றை நொடியில் நசித்து விடுவார் இவர்.
விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார். சங்கு, சக்கரம் இரு கைகளில் ஏந்தி, இரண்டு கைகளை யோக முத்திரையில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் மகா சாந்தமாக சேவை சாதிக்கும் இவரது அருள் அற்புதமானது.

இரண்யகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்க நரசிம்மர் பூஜித்த சிவலிங்கம் இக்கோவிலுக்கு அருகில் ‘சுயம்புநாத சுவாமி’யாக கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் வரப்பிரசாதியாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம். அடுத்து உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக காட்சி தருகின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட புராதனமான இக்கோவில் விஜயநகர பேரரசால் சீரமைக்கப்பட்டது.
யோக நரசிம்மருக்கு ஏற்றப்படும் நெய் தீபம், மோசமான உடல்நலக் கோளாறு உள்ளவரையும் உடனடியாக காப்பாற்றும். வெல்லபானகம் இவருக்கு பிடித்த விசேஷமான நைவேத்தியமாகும்! பிரதோஷம், சுவாதி நட்சத்திரம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் சனிக்கிழமைகள் இவருக்கு உகந்த நாட்கள் ஆகும்.
இவரது சன்னிதிக்கு எதிரே கருடனும், பிராகாரத்தில் ஆஞ்சநேயரும் தனிச் சன்னிதிகளில் சேவை சாதிக்கின்றனர். இந்த ஆஞ்சநேயருக்கு மட்டை தேங்காயை, பக்தர்கள் மலையாக குவித்திருக்கிறார்கள். பக்தர்கள் கொண்டு வரும் தேங்காயில் ஒரு நம்பரை பொறித்து, அந்த நம்பரை சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு, தேங்காயை பக்தர்களிடம் தந்து விடுகிறார்கள். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஐந்து மாதத்திற்குள் அந்த தேங்காயை எடுத்து வந்து பிராத்தனையை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
கும்பகோணம் - மயிலாடுதுறை செல்லும் வழியில் ஆடுதுறைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.
தேவகன்னியர், காமதேனு, ஐராவதம், இந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நான்கு திசைகளிலும் இறைவனைத் தரிசிக்கும் வசதி அமைந்த ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். தேவ கன்னியாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் அனைத்தும் சேர்ந்து பெண்+ஆ+கடம்= பெண்ணாடகம் ஆனது. இதுவே மருவி பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது.
தேவேந்திரன் தன் சிவ பூஜைக்கு மண்ணுலகில் இருந்து பூக்களைக் கொண்டுவர தேவகன்னியரைப் பணித்தான். அவர்கள் நடுநாட்டில் அமைந்துள்ள பெண்ணாடகத்து சிவாலய நந்தவனத்தில் இருந்த பூக்களின் அழகால் கவரப்பட்டனர். அந்த மலர்களைப் பறித்த அத்தல இறைவனுக்கு பூஜை செய்தனர். தேவ கன்னியர்கள் வராததால், இந்திரன் காமதேனுவை அனுப்பினான். அதுவும் இத்தலத்தில் மயங்கி, இறைவன் மீது பால் சொரிந்தது.
தொடர்ந்து வெள்ளை யானையை இந்திரன் அனுப்பி வைத்தான். அது இத்தலம் வந்து தன் பசிக்குத் தேவையான கரும்பும், வாழையும் உண்டு, அங்குள்ள இறைவனை கண்டு மகிழ்ந்து தன்னிலை மறந்தது. இறைவனுக்கு தானே மண்டபமாக நின்றி நிழல் தந்தது. பூக்களைப் பறிக்கச் சென்ற ஒருவரும் திரும்பாததால், இந்திரனே பூலோகம் வந்தான். அவனும் இத்தல இறைவனால் ஈர்க்கப்பட்டு, வழிபாடு செய்து பின் தேவலோகம் திரும்பினான்.
தல வரலாறு :
ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர் களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் ‘பிரளயகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
ஆலய அமைப்பு :
இவ்வாலயம் கிழக்கு நோக்கி எளிய நுழைவு வாசலைக் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்ததும், குடைவரை விநாயகர் அமந்துள்ளார். இதன்பின் கிழக்கு நோக்கிய அபூர்வ நந்தி, ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இடதுபுறம் அன்னை அழகிய காதலி சன்னிதி தனிக் கோவிலாக விளங்குகிறது.
ராஜகோபுரத்தைக் கடந்ததும், சுவாமியை நோக்கியபடி கலிக்கம்பர், மெய்கண்டார் சன்னிதிகள் உள்ளன. அருகே நடராஜர் சன்னிதியும் காணப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடம், கொடிமரம், கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்திதேவர் காட்சிதர, பிரளயகாலேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இவர் எண்பட்டை வடிவில் சதுர வடிவ ஆவுடையாரில், பிரம்மாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிட்சாடனர், சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருமேனி காணப்படுகிறது. இது தவிர, தனி துர்க்கையம்மன் சன்னிதியும் கூடுதலாக அமைந்துள்ளது.
ஆலய பிரகாரத்தில் கோடி விநாயகர், நால்வர், சந்தனக் குரவர்களான மெய்கண்டார், மறைஞானசம்பந்தர் மற்றும் கலிக்கம்பர், சேக்கிழார், தண்டபாணி ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. உற்சவமூர்த்தி மண்டபம், சப்தகன்னியர், நாகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், நடராஜர் சபைக்குப் பின்புறம், பைரவர் மற்றும் சூரியபகவான் சன்னிதிகளும் உள்ளன.

பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி
கட்டுமலைக்கோவில் :
சுவாமியின் கருவறை ஒட்டி 30 மீட்டர் உயரத்தில் சவுந்தரேஸ்வரர் வாழும் மலைக்கோவில், ஏறவும், இறங்கவும் படிக்கட்டுகள் கொண்டு அமைந்துள்ளது. இதனை ‘கட்டுமலைக் கோவில்’ என்று அழைக்கின்றனர்.
இவ்வாலயம், சவுந்திரவல்லி என்ற அடியாரால் எழுப்பப்பட்ட ஆலயம் என்றும், அவரின் விருப்பத்திற்காகக் காட்சி தரும் விதமாக உயரத்தில் இருந்து இறைவன் அருளினார் என்றும் கூறப்படுகின்றது.
அழகிய காதலி :
சண்டிகேஸ்வரர் சன்னிதியின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் எளிய நுழைவு வாசல் மூலம் அழகிய காதலி அம்மன் ஆலயத்தை அடையலாம். பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் இதனைக் கடந்ததும் துவாரபாலகிகள் இருவர் காட்சி தர, கருவறையின் உள்ளே எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். ஆமோதனம்பாள், கடந்தை நாயகி என்ற வேறு பெயர்களும் அன்னைக்கு உள்ளன.
ஆலயத்தின் தல மரம் தலமரம் செண்பக மரமாகும். தலத் தீர்த்தம் தெற்கே ஓடும் வெள்ளாறு ஆகும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
கலிக்கம்பர் :
அறுபத்துமூவரில் ஒருவரான கலிக்கம்பர் அவதரித்த தலம் இது. வணிகர் குலத்தில் தோன்றிய இவர், தன் இல்லம் நாடி வருபவர் சிவனடியார்களுக்கு பாதபூஜை, அன்னம் பாலிப்பு செய்து வழிபடுவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு வந்த சிவனடியார்களில், தன் வீட்டில் பணி புரிந்தவரும் இருந்ததால், அவரின் பாதத்திற்கு நீர்வார்க்கத் தயங்கினார், கலிக்கம்பர் மனைவி. சிவனடியார் என்பதையே சிந்தையில் கொண்ட கலிக்கம்பர், இதனால் கோபம் கொண்டு மனைவியின் கையைத் துண்டித்தார். கலிகம்பரின் தீவிர பக்தியை மெச்சிய ஈசன், அவரது மனைவிக்கு இழந்த கையை மீண்டும் வழங்கி இருவருக்கும் கயிலைப்பேறு தந்தருளினார். இவர் வாழ்ந்த இடத்தில் தனிக்கோவில் ஒன்று ஆலயத்தின் அருகே கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.
சந்தானக்குரவர்கள்
சந்தானக் குரவர்கள் நால்வரில் இருவர் சிதம்பரத்திலும், மற்ற இருவர் பெண்ணடாகத்திலும் தோன்றியவர்களாவர். மெய்கண்ட நாயனார், மறைஞான சம்பந்தர் இருவரும் இத்தலத்தில் அவதரித்த அருளாளர்கள். மெய்கண்டாருக்கான திருவாவடுதுறை ஆதின ஆலயம், அச்சுத களப்பாளர் மேடு என்ற அவதார இடத்திலும், மறைஞானசம்பந்தர் மடம் பெண்ணாடகத்தில் உள்ள காமராஜர் தெருவிலும் அமைந்துள்ளன.
அப்பரின் தோளில் இலச்சினை :
தனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய இவர், ‘சமணருடன் வாழ்ந்த இவ்வுடலோடு நான் எப்படி உயிர் வாழ்வேன். இவ்வுடலை நான் ஏற்கும் பொருட்டு என் தோள்களில் உமது இலச்சினையை பொறித்தருள வேண்டும்’ என்று இத்தல இறைவனிடம் வேண்டி நின்றார். அதற்கு இசைந்த இறைவன், இவரின் தோள்களில் சூலம், இடபம் ஆகிய குறிகளைப் பொறித்தார் என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது.
அமைவிடம் :
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் பெண்ணாடம் அமைந்துள்ளது. விருத்தாசலம்- திருச்சி நெடுஞ்சாலையில் மேற்கே 17 கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.

பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முள்ளங்குடி ஒரு சின்னஞ்சிறு கிராமம்.
பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊர் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் இங்குதான் உள்ளது.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் கோதண்டராமர் தனது மடியில் சீதாப்பிராட்டியை அமர்த்திக் கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன், இறைவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறுகின்றன.
பிள்ளைப் பேறு வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர் இங்குள்ள ஆஞ்சேநயரை பிரார்த்தனை செய்ய அவர்கள் பிரார்த்தனை பலிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி புளி சாதம், எள்ளு சாதம், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்து தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றி கொள்கின்றனர்.
இங்குள்ள ராமபிரானை பிரார்த்தனை செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுவதாக சொல்கின்றனர் பக்தர்கள்.
இத்தலத்தின் புராணம் என்ன ?
திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு சக்கரமின்றி, சீதை, லட்சுமணர் இல்லாமல் தனிமையாக சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
ராமபிரானை இங்கு தரிசித்த கருடாழ்வாரின் மனம் சங்கடபட்டது. சங்கு சக்கரமில்லாமல் சீதாப்பிராட்டி இல்லாமல் ராமரை தரிசனம் செய்ததில் அவர் மன நிறைவு கொள்ளவில்லை. ராமபிரானை தனித்து பார்த்த தன் கண்களால் அவரை சீதாப்பிராட்டியுடன் இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தனது ஆவலை கயிலாச நாதரிடம் தெரிவித்தார் கருடாழ்வார்.
கயிலாசநாதர் அவரை முள்ளங்குடிக்குச் சென்று தியானம் செய்யும்படி பணித்தார். அதன்படி முள்ளங்குடி வந்த கருடாழ்வார் ராமபிரானை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அவர் தியானம் செய்வதைக் கண்டு மனம் இறங்கிய ராமபிரான் சங்கு சக்கரத்துடன் சீதாபிராட்டியை மடியில் வைத்துக் கொண்டு தரிசனம் தந்தார்.
கருடாழ்வார் மெய்மறந்து ராமபிரானை தரிசித்தார். ‘புள்’ளாகிய கருடனுக்கு அவர் விரும்பிய அமர்ந்த கோலத்தில் தன் மடிமீது சீதா தேவியை அணைத்துக் கொண்டு ராமபிரான் காட்சி தந்ததால் இந்த ஊர் புள்ளங்குடி என்ற பெயர் பெற்றது. அதற்கு பிறகு முள்ளங்குடி என்று அழைக்கப்படலாயிற்று.
இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் தலையில் கிரீடம் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி தியான நிலையில் காட்சி தருகிறார். கருடன் இந்த தலத்தில் தியானத்தில் இருந்த போது அனுமனும் தியானம் செய்து ராமபிரானின் தாம்பத்ய கோல தரிசனம் பெற்றார்.
இந்த தலத்தில் ராமபிரான், சீதா தேவியை தன் மடி மீது அமர்த்திய கோலத்தில் அபூர்வமாக சேவை சாதிப்பதால் குடும்ப ஒற்றுமை, இல்லற மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு ஆகியவைகளை அருளும் தலமாக இத்தலம் விளங்குவது உண்மையே!
சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி.

ஷடாரண்ய தலங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் ஓடும் பாலாற்றின் வடபுறம் மற்றும் தென்புறக் கரைகளிலேயே அமைந்துள்ளன.
‘சிவம்’ என்றால் மங்கலம் என்ற பொருள் உண்டு. அத்தகைய சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் மங்கலங்கள் உண்டாகும்.
சிவபெருமானுக்கு உரிய விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று சிவனை வழிபடுவது தனிச் சிறப்பு தரும்.
அந்த வகையில் சிவராத்திரி அன்று வழிபடக் கூடிய ஆலயங்களில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன.
இந்த ஷடாரண்ய ஷேத்திரங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் ஓடும் பாலாற்றின் வடபுறம் மற்றும் தென்புறக் கரைகளிலேயே அமைந்துள்ளன.
பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.
இந்த ஷடாரண்ய ஷேத்திரங் களை மகா சிவராத்திரி அன்று ஒரே நாளில் வழிபட்டால் இமயமலைக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என் கிறார்கள்.
ஷடாரண்ய தல வரலாறு
ஆதியில் அன்னை பார்வதி தேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சீ புரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணமுடிக்க காஞ்சீபுரத்தில் எழுந்தருளினார்.
இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சீபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் ேதடினர்.
அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுயம்பு லிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன.
‘ஷட்’ என்றால் ஆறு, ‘ஆராண்யம்’ என்றால் காடு என்று பொருள். ஆறு காடுகள் என்பது தான் ஆற்காடு என்று மருவியதாக ஒரு கூற்று உள்ளது. ஆறு முனிவர்கள் வழிபட்ட தலமே ஷடாரண்ய ஷேத்திரம் எனவும், சப்த ரிஷிகள் 7 பேர் வழிபட்ட தலமே ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்றும் இருவேறு கருத்துகள் பக்தர்களிடம் நிலவுகின்றன.
வேப்பூர்
ஆற்காட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், வேலூர் -ஆற்காடு நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென்புற கரையில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட தலமாகும். இங்கு இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பாலகுஜாம்பிகை.
ஒரு காலத்தில் வேப்ப மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்தப் பகுதி வேப்பூர் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட இடமாதலால், இங்கு வசிஷ்ட முனிவரின் சிலையும் உள்ளது. அம்மையப்பர் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.
மேல்விஷாரம்
வேலூர் - ஆற்காடு நெடுஞ் சாலையில் உள்ளது மேல்விஷாரம். இங்கு பாலாற்றின் தென் கரையில் இருக்கிறது வடிவுடையம்பிகை சமேத வால்மீகீஸ்வரர் கோவில். அந்த காலத்தில் இந்தப் பகுதியில் எட்டி மரம் நிறைந்து காணப்பட்டது. அதனால் இந்த பகுதி விஷ விருட்ச வனம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மறுவி விஷாரம் எனப் பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.
வால்மீகி முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், இங்குள்ள இறைவன் வால்மீகீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
புதுப்பாடி
ஆற்காட்டில் இருந்து கிழக்கு புறத்தில் 6 கி.மீ. தொலைவில் ஆற்காடு- செய்யாறு சாலையில் உள்ளது புதுப்பாடி. பாலாற்றின் தென்கரையில் உள்ள இந்த கிராமம் பழங்காலத்தில் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. எனவே சுதவனம் என்று அழைக்கப்பட்டதாக தெரிகிறது. பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்டதால், இங்குள்ள ஆலயம் பரத்வாஜீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அன்னையின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. கோவிலில் பரத்வாஜ முனிவர் பிம்பம் உள்ளது.
காரை
ராணிப்பேட்டை நகரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரை. இங்கு கவுதம முனிவர் லிங்கம் அமைத்து வழிபட்ட ஸ்தலம் உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் இறைவன் கிருபாம்பிகை சமேத கவுதம ஈஸ்வரராய் காட்சி அளிக்கிறார். கோவில் வளாகத்தில் கவுதம முனிவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
குடிமல்லூர்
வாலாஜாவில் இருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையில், சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடிமல்லூர். இங்கு அத்திரி மகரிஷி தவம் செய்து பூஜித்த அத்திரியீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் உள்ள இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும். இந்த கோவிலில் அத்திரி முனிவரின் சன்னிதியும் உள்ளது.
வன்னிவேடு
வாலாஜாவில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது வன்னிவேடு. இந்த கிராமம் பாலாற்றின் வடகரையில் உள்ளது. இது முன் காலத்தில் வன்னி மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. அகத்திய மகரிஷி இங்கு லிங்கத்தை நிர்மானித்து வழிபட்டதால், இது அகத்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள கோவிலில் புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கம், மணலில் தோன்றிய சுயம்பு லிங்கம் என்பது தனிச் சிறப்பாகும். கோவிலில் அகத்திய மகரிஷியின் சிலை உள்ளது.
அவரக்கரை
ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள அவரக்கரையில், காச்யப முனிவர் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் உள்ளது. இங்கு காச்யபேஸ்வரர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி என்பதாகும்.
பழமையான சிவலிங்கம்
இந்தக் கோவில்களுடன் பக்தர்கள் தற்போது காரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள நவ்லாக் பண்ணை பகுதிக்குள் உள்ள பழமையான சிவலிங்கம் ஒன்றையும் வழிபட்டு வருகிறார்கள். இது விசுவாமித்திர முனிவர் வழிபட்ட லிங்கம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்த சிவாலயம் பராமரிப்பின்றி நாளடைவில் மறைந்து போனதால், ஆலய சிவலிங்கத்தை மட்டும் மீட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த இறைவனின் திருநாமம் விசுவாமித்திர ஈஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் அபிராமி.

மகாலட்சுமி ஈசனை வழிபட்ட தலம் நத்தம் பரமேஸ்வர மங்கலம். அத்தல ஈசன் செண்பகரேஸ்வரர் என போற்றப்படுகிறார். இறைவியின் பெயர் சவுந்தர நாயகி.
ஒரு காலத்தில் அசுரர்களும், தேவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இரண்டு பக்கமும் நிறைய இழப்புகள். பிரளயம் வந்து பூமியைச் சூழ்ந்தது. சாகாவரம் தரக் கூடிய அமிர்தமும் பிரளயத்தில் அழிந்தது. தேவர்கள் பிரம்மாவிடம் சென்று, பாற்கடலைக் கடைந்து அந்த அமிர்தத்தை எடுத்துத் தரும்படி முறையிட்டனர்.
இத்தனை பெரிய பிரம்மாண்டமான பாற்கடலை எப்படிக் கடைவது?. தேவர்களோ எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். எனவே இந்திரன் ‘அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்; அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு கொடுத்து விடலாம்’ என்றான். அசுரர்கள் ஒப்புக் கொண்டனர். அமிர்தம் எடுப்பதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள், அசுரர்களால், பாற்கடல் கடையப்பட்டது.
இருபக்கமும் கடுமையாக இழுத்ததால் மந்தார மலை சரிய ஆரம்பித்தது. அப்போது திருமால், சிவபெருமானை வணங்கி ஆமையின் உருக்கொண்டு அந்த மலையின் அடியில் சென்று தாங்கிப் பிடித்தார். தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்ட போது, கடலுக்குள் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அது தேவர்கள், அசுரர்கள் அனைவரையும் அழித்து விடும் சக்தி கொண்டதாக இருந்தது.
ஆகையால் பிரம்மாவும், விஷ்ணுவும் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை நாடினர். சிவபெருமான் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த விஷத்தை சுந்தரர் மூலம் கொண்டு வரச் செய்து அருந்தினார். அந்த விஷத்தால் சிவனுக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்று பதறிய பார்வதி தேவி, ஈசனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் ஈசனின் தொண்டையோடு நின்று போனது. இதனாலேயே சிவபெருமானுக்கு ‘நீலகண்டன்' என்று சிறப்பு பெயர் வந்தது.
அதேசமயம் மலையின் கீழ் பகுதி சரியாமல் ஆமை வடிவில் தாங்கி இருந்த மகாவிஷ்ணுவின் உடல் முழுவதும் நீலமாகிப் போனது. உடலில் விஷ முடிச்சுகள் தோன்றின. இதைக்கண்டு பயந்துபோன லட்சுமி, திருக்கயிலாயம் சென்று கயிலாசநாதனிடம் முறையிட்டாள்.
சிவபெருமானோ, ‘லட்சுமிதேவியே! நீ பூலோகத்தில் பாலாற்றின் தென்கரையில் உள்ள செண்பகவனம் சென்று, அங்கு உறையும் சிவலிங்கத்தை குறித்து தவம் இயற்று. அப்போது யாம் பார்வதி பரமேஸ்வரனாய் காட்சி தந்து உந்தன் குறைகளைவோம்' என்று அருளினார். அதன் படி லட்சுமிதேவி பூலோகத்தில், பாலாற்றின் தென்கரையில் உள்ள செண்பக வனத்துக்கு வந்து அங்கே செண்பக மரத்தின் அடியில் சுயம்புவாய் எழுந்தருளி இருந்த சிவலிங்கத்தை, நறுமண மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள்.
மகாலட்சுமி ஈசனை வழிபட்ட அந்தத் தலம் நத்தம் பரமேஸ்வர மங்கலம். அத்தல ஈசன் செண்பகரேஸ்வரர் என போற்றப்படுகிறார். இறைவியின் பெயர் சவுந்தர நாயகி. இந்த அம்பாள் தன்னுடைய கரங்களில் பாசம், அங்குசம் இல்லாமல், மகாலட்சுமியைப் போல தாமரையும் நீலோற்பலமும் ஏந்தி அருள் கிறார் என்பது தனிச் சிறப்பு.
மகாலட்சுமி தன்னைப்போலவே கரங்களில் தாமரையும் நீலோற்பலமும் ஏந்தி அருளும் சவுந்தரநாயகி அம்மனை கண்டு ஆனந்திக்க, ஈசன் திருமாலின் உடலில் உள்ள விஷ முடிச்சுகளை அகற்றுகிறார். திருமாலின் உடலில் உள்ள விஷ முடிச்சுக்களை சிவபெருமான் இத்தலத்தில் அகற்றிய திருநாள், ஒரு சிவராத்திரி தினமாகும். எனவே சிவராத்திரி விழா இத்தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தலத்தில் மகா சிவராத்திரி, மாதாந்திர சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்களில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுவதோடு, கருவறை தீபத்தில் நல்எண்ணெய் சேர்த்து வேண்டிக் ெகாண்டால், துன்பங்கள் யாவும் அடியோடு விலகும். விஷக்கடியினால் பாதிப்பு உள்ளவர்களும் இத்தலத்தில் முறைப்படி வழிபட்டால் நலம் அடையலாம்.
சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை செண்பகப்பூ, கொன்றை பூ, வில்வம் இவற்றால் வழிபட்டால் வறுமை, தரித்திரம், உடல் உபாதைகள் அகன்று வாழ்வில் நலம், வளம் வந்தடையும். மகாலட்சுமி இத்தலத்தில் ஈசனை தரிசிக்கும் போது, இத்தல அம்பிகை சவுந்தர நாயகியை கண்டு ஆனந்தித்ததால், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின்பே செண்பகரேஸ்வரருக்கு பூைஜ செய்யப்படுகிறது.
இறைவனின் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணா மூர்த்தி, பிரம்மா, துர்க்கை, ஹரிஹரன் திருவுருவம் உள்ளது. ஆலயத்தில் முருகர், வீரபத்திரர், பைரவர், சூரியன், சனி பகவான் ஆகியோர் தனி சன்னிதிகளில் அருள்கின்றனர்.
சென்னை -புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வரும் மகாபலிபுரத்தில் இருந்து தென் மேற்கில் 14 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. பாலாற்று பாலத்தைக் கடந்தவுடன் காத்தான் கடை என்னும் ஊர் வரும். அங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் நத்தம் பரமேஸ்வரமங்கலம் கோவில் இருக்கிறது.

ஆன்மிகப் பணியோடு சமூகப் பணிக்கு உதவிடும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருத்தலம் ஆகும்.
சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஆலயம், நகரத்தாரால் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோவில், ஆன்மிகப் பணியோடு சமூகப் பணிக்கு உதவிடும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருத்தலம் ஆகும்.
ஆலய வரலாறு :
1820-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு குடியேறிய சில நகரத்தார் சமூகத்தினர், 1859-ம் ஆண்டு அங்கு முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். தொடக்க காலத்தில் இன்றைய ரிவர் வேலி சாலையும், கிளமென்சியு அவென்யூ என்ற இடமும் சந்திக்கும் பகுதியில் குளக்கரையின் அரச மரத்தடியில் வேல் ஒன்றை நிறுவி வழிபாடு செய்து வந்தனர். பின்னரே தனி ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் முருகனின் சன்னிதி மட்டுமே இந்த ஆலயத்தில் இருந்திருக்கிறது. 1878-ம் ஆண்டு, ஜம்பு விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், இடும்பன், தட்சிணா மூர்த்தி, பைரவர், விஷ்ணு துர்க்கை, நவ துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைக்கப்பட்டன.
அதற்கு அடுத்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்த ஆலயத்தின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அதன்படி 75 அடி உயர ராஜ கோபுரம், அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், திருமண மண்டபம், பணியாளர் விடுதி, கோவில் அலுவலகம் போன்றவை அமைக்கப்பட்டன.
ஆலய அமைப்பு :
சிங்கப்பூர் நகரின் டேங்க் சாலையில், பிரம்மாண்டமான பரப்பளவில் இந்த முருகப்பெருமான் ஆலயம் அமைந்திருக்கிறது. ஐந்து நிலை கொண்ட 75 அடி உயர ராஜகோபுரம் நம்மை கம்பீரத் தோற்றத்துடன் வரவேற் கிறது. ஐந்து கலசங்களைத் தாங்கி நிற்கும் அந்த கோபுரம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததும் மகா மண்டபம் தென்படுகிறது. நேர் எதிரில் இந்த ஆலயத்தின் மூலவரான முருகப்பெருமான், ‘தண்டாயுதபாணி’ என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருவறை உள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றித் தரும் வள்ளலாக இந்த ஆலய இறைவன் திகழ்கிறார். இங்கு வந்து வழிபடுபவர்களின் சிக்கல்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் கருவறையில் வலதுபுறம் ஜம்பு விநாயகர், இடதுபுறம் இடும்பன், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் சன்னிதிகள் அமைந்துள்ளன. அலுவலகத்தின் எதிரில் நவக்கிரக சன்னிதியும், அதன் அருகே ஆலய அலுவலகமும் இருக்கிறது. ஆலயத் திருச்சுற்றில் விழா மண்டபம் உள்ளது.

தண்டாயுதபாணி
விழாக்கள் :
தமிழகத்து விழாக்களையொட்டியே இவ்வாலய விழாக்களும் அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு லட்சார்ச்சனை, நவராத்திரி விழா, கந்தசஷ்டி, கார்த்திகை தீபத் திருவிழா, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, ராமாயணம் பாராயணம், பிரதோஷம், மாத கார்த்திகை என விழாக்கள் பலவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுதவிர, திருமுறைகள் முற்றோதல், சைவ சமய சொற்பொழிவுகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.
இந்த ஆலயத்தின் பிரதான விழாவாக, தைப்பூசம் திகழ்கிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் தீய சக்திகளை வெற்றி கொண்டதன் ஐதீகத்தில், தை மாதப் பவுர்ணமியில் வரும் பூச நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் முதல்நாள் வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக புறப்படும் முருகப்பெருமான், கியொங் செய்க் சாலையில் உள்ள ‘லயன் சித்தி விநாயகர்’ ஆலயம் சென்று, அங்குள்ள விநாயகரிடம் ஆசி பெற்று வேலினைப் பெற்றுக்கொண்டு, காவடிகள் சூழ ஊர்வலமாக மீண்டும் ஆலயம் திரும்புவார்.
தைப்பூச நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள தண்டாயுதபாணி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அலகு குத்தியும், அலகு குத்திய காவடி, ரதக்காவடி என பல்வேறு விதமான காவடிகளும் எடுத்து வருகின்றனர். பெண்கள், பால்குடங்களைத் தலையில் சுமந்தபடி ஆலயம் வந்து, வேலுக்கு அபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
வெள்ளி ரத உற்சவம் :
தொடக்க காலத்தில் இரண்டு காளைகள் பூட்டிய ரதமாக வலம் வந்த வெள்ளிரதம், இன்று நவீன யுகத்திற்கு ஏற்றாற்போல் மோட்டார் வாகனம் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் ராபில்ஸ் பிளேஸ், மார்க்கம் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியே ரதம் நகர்வலம் வருகின்றது.
அமைவிடம் :
சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் கிளமென்சியு அவென்யூ பகுதியில், டேங்க் ரோடு எனும் தேங்க் சாலையில், எண் 15-ல், தண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ளது.