என் மலர்
கோவில்கள்
பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
வள்ளிக்கும், முருகனுக்கும் சம உயர சிலை அமைந்த அபூர்வ ஆலயம், முருகப்பெருமானின் திருவடிகள் அமைந்துள்ள அழகிய மலை, வள்ளியை மணம் முடிக்கும் முன் முருகன் இளைப்பாறிய மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில்.
வள்ளியை மணம் புரிய விரும்பிய முருகப்பெருமான், வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி, பாதம் பதித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளன.
ஆலயத்தின் பின்புறம் தென்திசையில் மிக உயரமான பசுமை மலை மனதுக்கு இதமளிக்கிறது. வடக்கே நோக்கினால் ஊர்களும், பசுமை வெளியும் மனதை கவர்கிறது.
வசூரை ஒட்டிய மலைக்கூட்டத்தில் சிறியமலை மீது முருகப்பெருமானின் ஆலயம் உள்ளது. மலை அடிவாரத்தில் செல்வ விநாயகர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் பெரிய அளவிலான திருக்குளம் இருக்கிறது. செல்வ விநாயகர் சன்னிதியில் இருந்து மலையேறும் படிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
222 படிகள் ஏறினால் மலை உச்சியை அடையலாம். பத்துப் படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகப்பெருமானின் திருவடிகள் காட்சி தருகின்றன. அதனையடுத்து முருகனின் பணிவிடைப் பெண்கள் என்றுகூறப்படும் கன்னிமார்கள் சன்னிதி படியேறும் போது இடதுபுறம் அமைந்துள்ளது. அதன் வலப்புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரம் காட்சி தருகின்றது.
மலை ஏறியதும், அழகிய முருகப்பெருமானின் ஆலயம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இவ்வாலயத்தின் மூலவர் பழைமையானவராக இருந்தாலும், அண்மை கால கட்டிட அமைப்பு அதனைப் புதுக்கோவிலாக மாற்றியுள்ளது.
ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தல மரமான நாவல்மரம் ஆகியவை உள்ளன. ஆலமரத்தின் அடியில் பாறையின் கீழே இன்றும் சுனைத் தீர்த்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இத்தலம் தீர்த்தகிரி என வழங்கப் படுகிறது.
மூலவர் வள்ளி-தெய்வானையோடு கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் முருகப்பெருமானும், வள்ளியம்மையும் சம அளவான உயரத்திலும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர்.
காதலித்து மணம் முடித்த முருகப்பெருமான், காதலியான வள்ளியை சம உயரத்தில் வைத்துப் பார்த்துள்ளது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. இதனாலோ என்னவோ இத்தலத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்கள், காதல் திருமணங்களே என்பதை அறியும் போது வியப்பளிக்கிறது.
இங்குள்ள மூலவர் முருகப்பெருமான், வேலைவாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என வேண்டிய வரத்தை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார்.
இவ்வாலயத்தை மலையடி வாரத்தில் உள்ள வசூர் நடராஜன் என்ற பெரியவர் புனரமைத்த தாகக் கூறப்படுகிறது. நிர்வாகத்தை மலையடிவார கிராமங்களான வசூர், அலமேலுமங்காபுரம், பெருமுறை ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் கவனித்து வருகின்றனர்.
இவ்வாலயத்தில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகைக்கு முதல்நாள், மறுநாள் என இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இது தவிர பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்ற விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
108 அடிய உயர முருகப்பெருமான்:
இவ்வாலயத்திற்கு 108 அடி உயர முருகன் சிலையை மலேசிய நாட்டு பத்துமலை முருகன் வடிவில் தீர்த்தகிரி மலை மீது அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. சிலை வடிவமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்துமலை முருகன் சிலையை செய்த சிற்பியே இந்த சிலையையும் வடிவமைக்க உள்ளாராம்.
அமைவிடம் :
இந்த ஆலயம் செல்வதற்கு சென்னை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அடுத்துள்ள சத்துவாச்சேரி அடுத்த வள்ளலார் பஸ் நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அதன் தென்புறம் உள்ள மலை மீது அமைந்த ஆலயமே தீர்த்தகிரி முருகன் கோவில். இது வேலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள வசூர் ஊரின் எல்லையின் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தலமாக திகழ்கிறது திருமூர்த்திமலை. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தல வரலாறு :
அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை. கயிலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குருமுனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கயிலாயக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் தென் கயிலாயம் என்ற சிறப்பும் திருமூர்த்தி மலை பெறுகிறது. மும்மூர்த்திகளும் தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். அவரது மனைவி அன்னை அனுசூயா தேவியின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.
ஒருமுறை அத்திரி மகரிஷி வெளியே சென்றபோது மும்மூர்த்திகளும் அனுசுயா அன்னையிடம் வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயா தேவியும் தனது கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மேல் தெளிக்க மூம்மூர்த்திகளும் குழந்தைகளாக மாறினர். பின்பு அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலமே இந்த திருமூர்த்திமலை.
அனுசூயா தேவியால் குழந்தையாக மாறிய மும்மூர்த்திகளும் இத்தலத்தின் எட்டுகால் மண்டபத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அருகிலுள்ள சஞ்சமலையிலிருந்து கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது அங்கு பட்டாரசி தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்றினார். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கியமாகிவிட்டனர். இத்தலத்தில் சப்த கன்னியர்களுக்கும் தனி சன்னிதி உள்ளன.
தல மகிமை :
குழந்தையில்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி, சப்த கன்னிகளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயர் ஆலயத்தின் முன்பு உள்ள ‘வரடிகல்’ என்ற கல்லின் மேல் அமர்ந்து அக்கல்லின் மீது தேங்காய் பழம் வைத்து அந்தக்கல்லை இது கைகளால் பிடித்து மனதார வழிபடவேண்டும். அப்படி செய்யும்பொழுது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டுவிட்டால் குழந்தை பேறு நிச்சயம் என்பது பலன் பெற்றவர்கள் சொல்கின்றனர்.
இங்குள்ள சிவபெருமானுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், அமணலிங்கேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. அத்திரி மகரிஷியின் மனைவி அனுசுயாதேவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவமாக மாற்றி உணவு அளித்த தலமானதால் இத்தல இறைவன் அமணலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக் கோவிலாகும்.
சந்தன வழிபாடு :
இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி வந்து மும்மூர்த்திகள் மேல் எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அந்த சந்தனம், மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் தாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு சிவபெருமான் ஞான குருவாக இருப்பதால் இங்கே தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பானதாகும். மலையின் மீது பஞ்சலிங்கம் உள்ளது. இது அத்திரி மகரிஷி தனது மனைவி அனுசுயா தேவியோடு வழிபட்ட லிங்கங்கள் ஆகும். இன்றும் அவர்கள் தினமும் பஞ்சலிங்கத்தை வழிபடுவதாகவும், இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் தங்கியதாகவும் கூறப்படுகிறது.
கருவறை :
பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர். நீரினால் சூழப்பட்டுள்ள அமணலிங்கத்தை சுற்றி வரும்பொழுது கன்னிமார்களை வணங்கி அருளை பெறலாம். விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் சன்னிதியும் உள்ளன. அமணலிங்கேஸ்வரர் கோவிலின் முன்பு உள்ள தீபகம்பத்தின் அடிப்பாகத்தில் அட்டதிக்குளை நோக்கியபடி பத்ரகாளி, வனதுர்க்கை, விசாலாட்சி, ஊர்த்தவ தாண்டவர், அகோரவீரபத்திரர், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் சிற்பங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறுமிளகையும், உப்பையும் திருமூர்த்திகள் மீது இட்டு வேண்டிக்கொண்டால் தங்களது குறைகள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் தோணி ஆறு. தலமரம் அரசமரம்.
மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜை நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்று பூஜைகளும், ஞாயிறுதோறும் 12.30 மணி வரை சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன. ஆவணி ஞாயிறு அன்று சிறப்பு விசேஷ பூஜையும் நடைபெறுகிறது.
மும்மூர்த்தி வடிவங்கள் :
கோவை மாவட்டம், உடுமலையிலிருந்து தெற்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பெருந் தொடர்களில் தென்திசை நோக்கி பரவியுள்ள ஆனை மலைகளில் ஒன்றாகத் திகழ்வதே இந்த திருமூர்த்தி மலை. இதன் அடிவாரத்திலிருந்து தென்மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் தோணி ஆறு என்ற பாலாற்றங்கரையில் தான் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அமணன் என்றால் குற்றமற்றவன் என்று பொருள். வடதிசை நோக்கி லிங்கவடிவில் எழுந்தருளியுள்ள பாறைதான் அமணலிங்கேஸ்வரர். இப்பாறையில் மும்மூர்த்திகளின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயம் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். உடுமலைப்பேட்டையில் இருந்தும், தாராபுரத்தில் இருந்தும் நிறைய பஸ் வசதி உள்ளன.

மன்மதன் கோவிலில் வழிபாடு செய்தால் நம்மேல் பிறர் கொண்டுள்ள பகை, வன்மம், குரோதம் யாவும் தீயிலிட்ட பஞ்சு போல் விலகிப் போகும் என பக்தர்கள் நம்புவது நிஜம்.
பசுஞ்சோலை சூழ, அமைதி பரிபாலணம் செய்யும் அழகிய கிராமம் மரத்துறை. இந்தக் கிராமத்தில்தான் எத்தனை கோவில்கள்? கிராமத்தைச் சுற்றி வலம் வரும்போது நமக்கே பிரமிப்பு ஏற்படுகிறது. இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன வெனில் அனைத்து கோவில்களையும் இந்த ஊர்மக்கள் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.
ஊரின் இதயப் பகுதியில் உள்ளது மன்மதன் ஆலயம். இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவனின் முன் நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். உள்ளே கருவறையில் மூலவரான மன்மதன் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.
மன்மதனின் கதை என்ன?
ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டு முடிந்துவிட்டது. ஆனால், மறுபடியும் அசுரர்கள் கொடுத்த தொல்லையை தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாது தவித்தனர்.
சிவபெருமானிடம் சென்று முறையிடுவது என்று முடிவு செய்தனர். சிவபெருமானை நாடி சென்றனர். சிவபெருமானோ தவத்தில் இருந்தார். தேவர்கள் வருகையை உணர்ந்த சிவ பெருமான் அவர்களிடம் ‘என்ன வேண்டும்?’ என வினவினார்.
அசுரர்களால் தாங்கள் படும் சிரமங்களையும் இன்னல்களையும் எடுத்துக்கூறினார்கள் தேவர்கள். அனைத்தையும் கேட்ட சிவபெருமான் ‘முருகன் வருவார் உங்களை காப்பாற்றுவார்’ என கூறி விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.
ஆண்டுகள் பல கடந்தன. அசுரர்களின் கொட்டம் அடங்கவில்லை. முருகனும் வரவில்லை. தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக்கணை வீசி சிவபெருமானின் தவத்தை கலைக்கும்படி கூறினர். மறுத்தான் மன்மதன்.
‘மறுத்தால் சாபம் விடுவோம்’ என மிரட்டினார்கள் தேவர்கள். வேறு வழியின்றி மன்மதன் சிவன் மீது மன்மத பாணத்தை ஏவி அவர் தவத்தைக் கலைத்தான். கோபமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனைப் பார்க்க, மன்மதன் எரிந்து போனான்.
சிவபெருமான் தன் ஞானக் கண்ணால் மன்மதனை அழித்த செயலையே ‘காம தகனம்’ என்கின்றனர்.
மாசி மாதத்து மகத்தன்று மன்மதன் ஆலயங்களில், இந்த ‘காம தகனம்’ விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆலயத்திலும் காமதகன விழா மிகப் சிறப்பாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இதை ஒரு கிராமத்து விழாவாகவே மக்கள் நினைத்து கொண்டாடுகின்றனர்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றது. இந்த ஆலயத்திற்கு 9.3.70-ம் ஆண்டிலும், அதன் பின் 16.9.96-ம் ஆண்டிலும் குடமுழுக்குத் திருவிழா நடந்துள்ளது.
இங்குள்ள மன்மதனை வணங்குவதால் நம்மேல் பிறர் கொண்டுள்ள பகை, வன்மம், குரோதம் யாவும் தீயிலிட்ட பஞ்சு போல் விலகிப் போகும் என பக்தர்கள் நம்புவது நிஜம்.
இத்தலம் செல்ல பந்தநல்லூர், சீர்காழி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, முதலிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நகரப் பேருந்துகளும் உள்ளன.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், தேவார திருத்தலங்களான திருநாரையூரில் இருந்து தெற்கில் 5 கிலோமீட்டர் தூரத்திலும், ஓமாம்புலியூரில் இருந்து கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமம். இந்த ஊரின் புராண காலத்து பெயர் கானாட்டுமுள்ளூர் என்பதாகும்.
இங்கு பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது. தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான இது, காவிரி வடகரை தலங்களில் 32–வது திருத்தலமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற ஒரு பதிகம் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கின்றது. பதஞ்சலி முனிவரால் வணங்கப்பெற்ற இவ்வாலய இறைவன் அவருக்கு முக்தியை அளித்ததால், அவர் பெயரிலேயே பதஞ்சலிக்கு அருளிய பரமனாக விளங்குகின்றார்.
தலவரலாறு :
தண்டகாரண்யத்து முனிவர்கள் மதுகாவனம் என்னும் பெயர்கொண்ட இத்தலத்திற்கு வந்து, நந்திதேவரின் ஆணைப்படி ஈசனை நினைத்து தவம் செய்து வந்தனர். இறைவன் அவர்களுக்கு அருள்செய்ய திருவுளங்கொண்டு ஒரு காலடிகூட வைக்க இடமின்றி ஊரெங்கும் லிங்க வடிவங்களை தோன்றச்செய்தார். முனிவர்கள் ஒவ்வொரு லிங்கத்தையும் வழிபட்டு வேண்டிய பேறு களைப் பெற்றனர். ஊரெங்கும் மண்(மிர்த்) இல்லாமல் லிங்க வடிவமாக இருந்தபடியால் ‘அஷ்டமிர்த்திகா ஷேத்திரம்’ என்ற பெயரும் இத்தலத்திற்கு ஏற்பட்டது.
கொள்ளிடக்கரையோரம் பயணித்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஊர் முழுவதும் மண்ணெல்லாம் லிங்க வடிவமாய் காட்சியளிப்பதைக் கண்டார். எனவே ஆற்றின் கரையோரத்திலேயே நின்று இவ்வூர் இறைவனை வணங்கி, பதிகம் பாடினார்.
‘விடையவரக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதை குடைந் தாட
குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வாரகுவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே’ என்பது அந்தப் பாடல்.
சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காணும் பொருட்டு, பரந்தாமனின் அருளால் பதஞ்சலி முனிவராக அவரித்தார் ஆதிசேஷன். பின்னர் பூலோகத்தில் வியாக்ரபாதர் என்ற முனிவருடன் இணைந்து சிதம்பரம் சென்றார். அங்கு அனுதினமும் இறைவனை வேண்டி, ஆனந்த தாண்டவத்தை காண்பித்தருளும்படி வேண்டினார். அவரது ஆழ்ந்த பக்தியைக் கண்ட சிவன், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ஆனந்த நடனத்தை ஆடியருளினார். பரவசம் தரும் அந்த நடனத்தை மீண்டும் மீண்டும் காணும் விருப்பத்தை பதஞ்சலி முனிவர் வெளியிட, ‘அவ்வப்போது பல தலங்களில் இருந்து யாம் அருளுவோம். அங்குவந்த பார்’ என்று கூறி மறைந்தார்.
இறைவன் அழைப்பை ஏற்று பதஞ்சலி முனிவர் பல ஆலயங் களுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரை தொழுநோய் ஆட்கொண்டது. இந்த நோயால் அவதிப்பட்டு வந்த பதஞ்சலி முனிவரிடம், நந்திதேவர் கானாட்டுமுள்ளூர் திருத்தலத்தின் பெருமையைக்கூறி, அங்குச் சென்று இறைவனை தரிசிக்குமாறு தெரிவித்தார். அதன்படி இந்தத் தலத்தற்கு வந்த பதஞ்சலி முனிவர் எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி, ஆனந்த நடன காட்சியை கண்டு அகமகிழ்ந்தார். அதன்பின்னர் இவ்வூரிலேயே தங்கி நோய் நீங்கப் பெற்று முக்தியும் அடைந்தார்.
பதஞ்சலி முனிவரால் நெடுங்காலம் வழிபடப்பட்ட லிங்கம், அவருடைய பெயரிலேயே பதஞ்சலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது. காணும் இடமெல்லாம் முட்களைப்போல சிவலிங்கங்கள் தெரிந்ததால், ‘காணாட்டுமுள்ளூர்’ என்றும் பெயர் பெற்றது. புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதரும் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார். எனவே இத்தலம் ‘காணாட்டாம்புலியூர்’ என்று மருவியுள்ளது. திருப்பாதிரிப்புலியூர்(கடலூர்), பெரும்பற்றபுலியூர்(சிதம்பரம்), ஓமாம்புலியூர், எருக்கத்தாம்புலியூர் (ராசேந்திரபட்டிணம்) என்னும் புலியூர் வரிசையில் இது ஐந்தாவது புலியூராக விளங்குகின்றது.
முற்கால சோழர்களில் ஒருவனான விக்கிரமசோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இறைவன் பதஞ்சலீஸ் வரர், இறைவி கோள்வளைக்கை அம்பிகை (ஒன்பது கோள்களையும் வளையல்களாக கைகளில் அணியப் பெற்றவள்), அன்னை அம்புஜாட்சி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உற்சவர் சோமாஸ்கந்தர்–கானார்குழலி. தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி ஆகும். தலவிருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.
சூரியபுஷ்கரணிக்கு எதிரில் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மூன்றுநிலை ராஜகோபுரத்தை ஒட்டியவாறு ஞானவிநாயகரின் சன்னிதி இருக்கிறது. கோவிலில் நுழைந்தவுடன் பதஞ்சலி முனிவரை தனி சன்னிதியில் தரிசிக்கலாம். பிரதட்சணமாக வலம் வந்து முன் மண்டபத்திலுள்ள நந்திதேவரையும், பலிபீடத்தையும் தரிசித்து இரண்டாவது வாசலில் நுழைந்தால், இரண்டாவது திருச்சுற்றை அடையலாம். உள் திருச்சுற்று நாற்புறமும் மண்டபத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர் முதலான பஞ்சமூர்த்திகளின் உற்சவ திருமேனிகள் மற்றும் நால்வர் சன்னிதிகள் உள்ளன. திருச்சுற்றின் மேற்கு பகுதியில் நிருத்த விநாயகர், வள்ளி–தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கஜலட்சுமி சன்னிதிகளும், தெற்கில் பள்ளியறையும் இருக்கிறது. கருவறையின் கோஷ்டத்தில் தென்பகுதியில் கோஷ்ட விநாயகர், மேதா தட்சிணாமூர்த்தி, மேற்கு பகுதியில் கருடாழ்வார் ஆஞ்சநேயர் ஆகிய பரிவாரமூர்த்திகளுடன் பெருமாள், வடக்குப்பகுதியில் பிரம்மா, துர்க்கை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிவாலயத்தில் விஷ்ணுவின் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை, வெகுசில சிவாலயங்களில் மட்டுமே காணமுடியும். குறிப்பாக முற்கால சோழர்கள் கட்டிய கோவில்களில் மட்டுமே இத்தகைய மரபு கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இங்குள்ள தட்சிணாமூர்த்தி கல்லால மரமின்றி காட்சிஅளிக்கின்றார்.
இரண்டாம் பிரகாரத்தை வலம்வந்து மகாமண்டபத்திற்குள் நுழைந்தால் நாகர், பைரவர், சூரியசந்திரர்கள், நடராஜர் ஆகியோரை தரிசித்த பின்னர், மூலவரான பதஞ்சலீஸ்வரரை தரிசிக்கலாம். காசிவிசுவநாதருக்கு இணையான சிவலிங்கத் திருவுருவமும், வாசலில் பதஞ்சலி முனிவர் நின்றகோலத்தில் வழிபாடு செய்யும் திருவுருவமும் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பிரகாரத்திலுள்ள மண்டபத்தில் அம்பிகை தென்முகம் நோக்கி, போகசக்தியாக அருள்பாலிக்கிறார். அம்பிகை சன்னிதியின் கோட்டத்தில் துர்க்கையும் முன்பகுதி மண்டபத்தில் பழனி ஆண்டவர், சனீஸ்வரர் இடம் பெற்றுள்ளனர்.
சூரிய புஷ்கரணி தீர்த்தம் :
இரண்டு ஏக்கர் முப்பத்தேழு சென்ட் பரப்பளவு கொண்ட சூரிய புஷ்கரணி தீர்த்தம், சூரியன் நீராடிய பெருமைக்குரியது. சூரியன் உதயமாகும் தருணத்தில், மந்தேசுரன் என்ற அரக்கன் சூரியனுக்கு அனுதினமும் தொல்லை அளித்து வந்தான். இதனால் அரக்கனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள, உதயமாகும் நேரத்தில் சிவனும் விஷ்ணுவும் தன் மண்டலத்தில் இருக்கச் செய்யுமாறு பிரம்மனிடம் சூரியன் வரம் கோரினான்.
பிரம்மனோ, ‘அப்படியொரு வரத்தை தன்னால் தர இயலாது. நீ மிருத்திகாவனம் சென்று பதஞ்சலீஸ்வரரை வணங்கி, நான்கு வேதத்தின் சொரூபமாக அவ்வாலயத்தின் எதிரில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்து ஈசனையும், விஷ்ணுவையும் நினைத்து தவம் செய். அப்படிச் செய்தால் நினைத்தது நிறைவேறும்’ என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்படி இங்குவந்த சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி தவம் செய்தான். அவனது தவவலிமையைக் கண்ட சிவனும் விஷ்ணுவும், தம்பதிசமேதராய் காட்சியளித்து சூரியன் வேண்டிய வரத்தை அருளினர்.
இதை நினைவுப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமி தீர்த்தக் கரையில் எழுந்தருள்வது இன்றளவும் நடைமுறையாக இருந்து வருகின்றது. சூரியபுஷ்கரணியை தவிர கிழக்கில் காமதீர்த்தம், தெற்கில் விஷ்ணு தீர்த்தம, மேற்கில் பார்வதி தீர்த்தம், இதற்கு மேற்கில் இந்திர தீர்த்தம், வடக்கில் விநாயகர் தன் துதிக்கையால் அமைத்த கணாதீப தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளன.
காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய சிறப்பு மிக்க திருத்தலம் இதுவாகும். இவ்வாலயத்திற்குச் செல்ல காட்டுமன்னார்கோவிலில் இருந்து நேரடி பேருந்து வசதியும், இதர வாகன வசதிகளும் உள்ளன. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து அருகாமையில் இந்த ஆலயம் உள்ளது.

வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் ஆழ்வார் திருநகரி. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
இங்கே கோவிந்த விமானம் என்கிற விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.
வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்து இறைவனை, பிரம்ம தேவர், நம்மாழ்வார், மதுரகவிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது. பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ‘ஆதி ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.
நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.
கோவில் அமைப்பு :
திருக்கோவில் ராஜகோபுரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் அமைந்துள்ளது. ஆதிநாதவல்லி, பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், தசாவதாரம், குருகூர் நாச்சியார், நம்மாழ்வார் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளத் தலமாகும். கட்டிட அமைப்பால் வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், நம்மாழ்வார் காலத்திலேயே திருக்கோவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் விரிவு படுத்தல் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து உள்ளது.
ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.
நவதிருப்பதிகளில் குரு தலம் :
இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.
உற்சவ காலங்களில் ஆழ்வார், திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும், சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக்காப்பு செய்யப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷ மாகும். மார்கழி திருவாதிரை அன்று ஆழ்வாருக்கும், ராமானுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும், வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
நவ கருட சேவை :
நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5–ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.
இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார்.
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.
ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).
அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார்.
மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.
அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார்.
சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.

தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம்.
தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.
கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.
பிராது கொடுக்கும் வழிபாடு :
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.

திருக்கழிப்பாலை கோவிலில் பால் வண்ணநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், லிங்கத்தின் ஆவுடையாரில் இருந்து வழியும் போது, அதனைப் பிடித்து அருந்தினால் நோய்கள் தீரும் என்கிறார்கள்.
தென்னாடுடைய சிவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களில் முதன்மையானதும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயப் பெருவெளியைக் குறிக்கும் ஆலயமாகவும், இறைவன் ஆனந்தத் தாண்டவமாடும் தலமாகவும் விளங்குகிறது தில்லை என்னும் சிதம்பரம் ஆலயம். இங்கிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது சிவபுரி என்னும் அழகிய சிற்றூர். அங்கே அருகருகே இரட்டைக் கோவில்கள் இருக்கின்றன.
ஐந்து நிலை ராஜகோபுரமும் எதிரே தெப்பக் குளத்துடன் திகழும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பண்ணிசை பெற்ற திருநெல்வாயில் எனும் சிவ ஸ்தலத்தில் கனகாம்பிகை சமேத உச்சிநாதர் வீற்றிருக்கிறார். அங்கிருந்து சுமார் 2 பர்லாங்கு தொலைவில் உள்ள இன்னொரு சிவாலயத்தில், சற்று வித்தியாசமான தோற்றத்துடன் விளங்கும் சிவலிங்கத்தையும் தரிசிக்கலாம்.
திருக்கழிப்பாலை என்று குறிப்பிடப்படும் இத்தலத்தில் மூன்று அடுக்கு ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதை கைதொழுது உள்ளே நுழைந்தால், நந்தியம் பெருமான் கால்களை மடித்தபடி அமர்ந்திருக்க, கருவறையில் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டவுடன் அழகிய சிவலிங்கம் காட்சி தந்தது. ஆவுடையார் கருமை நிறத்திலிருக்க, லிங்கத் திரு உருவம் வெண்மையாக மேற்புறம் மூடப்படாமல் ஒரு குவளையைப் போலத் தோற்றம் தந்தது. இது வேறு எங்கும் காண முடியாத தோற்றம் என்பதால் வியப்பளிப்பதாக இருந்தது.
வெண்ணிற லிங்கம் :
சிவலிங்கம் வெண்மை நிறமாக இருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘பால் வண்ணநாதர்’ என்று பெயர். இந்த சிவலிங்கத்திற்கு முக்கிய அபிஷேகமாக பாலாபிஷேகம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும் பால், லிங்கத்தின் ஆவுடையாரில் இருந்து வழியும் போது, அதனைப் பிடித்து அருந்தினால் நோய்கள் தீரும் என்கிறார்கள். இந்தப் பாலில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சிவலிங்கத்தின் வடிவ மாற்றத்திற்கான கதையொன்றும் சொல்லப்பட்டது.
சடகல் ராஜா என்பவர் குதிரை ஏறி இந்த ஊர் வில்வ வனம் வழியாகப் பயணம் செய்தான். அப்போது குதிரையின் குளம்படி பட்டு காட்டில் மரத்தடியில் மண்ணுக்குள் இருந்த சிவலிங்கம் தலையில் தழும்பை ஏற்படுத்தி விட்டது. இதை அறிந்ததும் அந்த மன்னன், சிவலிங்கத் திருமேனியை வெளியே எடுத்து, தனியாக பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்து வழிபட்டான்.
அதன் பிறகு கபில முனிவர், இந்த ஆலயத்தில் தங்கியிருந்து தினமும் பூஜை செய்து வந்தார். அவருக்கு இறைவனும், இறைவியும் காட்சி கொடுத்தனர். இதை உணர்த்துவதாக கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறத்தில் கலையழகு மின்ன வடிக்கப்பட்டுள்ளன. இறைவன் கிழக்கு நோக்கிய சன்னிதியில் தரிசனம் தர, அதே மகா மண்டபத்தில் தெற்கு பார்த்த சன்னிதியில் வேத நாயகியாக நின்ற திருக்கோலத்தில் அபயஹஸ்தம் காட்டி அன்னையும் அருள் பொழிகிறாள்.
இருவருக்கும் இடையில் சிவகாமி சமேத அம்பலக்கூத்தர், தென்திசை நோக்கி திருநடனம் புரியும் நடராஜ சபை விளங்குகிறது. திருச்சுற்றை வலம் வரும்போது தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்திப் பெருமாள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்ற மூர்த்திகளும் திருவருள் புரிகின்றன.
கன்னிமூலை கணபதியும் வடமேற்கில் வள்ளி-தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமியும் தனிக் கோவில்களிலும் அருகே புவனேஸ்வரி அம்மனும் காட்சி தருகிறார்கள்.
மேற்கு திசையில் பஞ்ச லிங்கங்களும், மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள். எல்லாச் சிவாலயங்களைப் போலவே கோமுகம் அருகே சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது.
ஈசானியப் பகுதியில் நவக்கிரகங்களும், அருகே காலபைரவரும் காட்சி தருகின்றனர். இந்த காலபைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், காசியில் இருக்கும் காலபைரவருக்கு நிகராக கருணை செய்பவர் என்றும் அங்குள்ள மக்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். அதனால் தான் இவ்வூரின் சுற்றுப்புற பகுதி மக்கள், தேய்பிறை அஷ்டமி திதியில் பெரும் திரளாக வந்து கால பைரவருக்கு அபிஷேகம் செய்து, வடைமாலையும், செம்மலர் மாலையும் சாத்தி வழிபட்டு எல்லா கஷ்டங்களும் விலக பிராத்திக்கிறார்கள்.
‘எங்கேனுமிருந்து அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்தென் னொடும் உடனாகி நின்றருள்
இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே’
இப்படி பத்து பதிகங்களில் உருகிப் பாடிய வன்தொண்டர் சுந்தரர், ‘தான் நினைத்தபோது வந்து நின்று வினை தீர்ப்பவன் கழிப்பாலை கடவுள்’ என்பதில் இருந்து இத்தல இறைவனின் பேரருள் விளங்கும்.
‘ஐயனே அழகே அனலேந்திய
கையனே கறைசேர் தருகண்டனே
மையுலாம் பொழில்சூழ் கழிப்பாலை எம்
ஐயனே விதியே அருள் எனுமே’
என்று திருநாவுக்கரசர் 4-ம் திருமுறை, திருக்குறுந்தொகை, திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம் என பத்துப் பத்தாக ஐந்து தொகுப்புகளில் ஐயனைப் புகழ்ந்துள்ளார் எனும் போது எம்பெருமானின் மாட்சி நம் கண்முன்னே காட்சியளிக்கிறது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரே பாடியுள்ள போது, அதே காலகட்டத்தில் உலாவந்த சம்பந்தர் மட்டும் சும்மாயிருப்பாரா? அவரும் இரண்டு பதிகங்களில் இருபத்தி இரண்டு பாக்களால் கழிப்பாலை கண்ணுதல் பெருமாளை அர்ச்சித்துள்ளார்.
கொள்ளிட நதியைத் தீர்த்தமாகக் கொண்டு, காவிரி வட கரைத் தலமாகத் திகழும் இவ்வாலயத்தை தேவார மூவரும் 8 பதிகங்களால் பரவியுள்ளனர் எனும்போது கழிப்பாலை நாயகனின் கருணை வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
சிதம்பரத்திலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ் வசதிகளும், ஆட்டோ வசதிகளும் உள்ளன. சிதம்பரத்தை தரிசித்து விட்டு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள திருவேட்களம் எனும் பாடல் பெற்ற தலத்தையும், அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் சிவபுரியில் உள்ள திருநெல்வாயில், திருக்கழிப்பாலை ஆகிய தலங்களையும் தரிசித்து சிவபுண்ணியத்தை சேர்க்கலாமே.

பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வேண்டி வழிபடும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு, வடக்கன்தரை திருப்புரைக்கால் பகவதியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

கணவன் கோவலனைக் கள்வன் என்று குற்றம் சாட்டி மரண தண்டனை அளித்த பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று நீதி கேட்டாள் கண்ணகி. அவளுக்கு பதிலளிக்க முடியாமல், தான் அமர்ந்திருந்த அரியணையில் இருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான் பாண்டியன். அரசனைத் தொடர்ந்து அரசியும் உயிரை விடுகிறாள். அதன் பிறகும் கண்ணகிக்குக் கோபம் குறையவில்லை, தனது கற்பின் வலிமையால் மதுரை மாநகரத்தையே நெருப்புக்கு இரையாக்குகிறாள். அந்தக் கோபத்துடனே அங்கிருந்து வெளியேறிச் சேரநாட்டை சென்றடைந்தாள்.
அவளுக்குத் துணையாகக் கன்னடத்துப் பகவதி, கண்ணுகொட்டுப் பகவதி மற்றும் புல்லுக்கோட்டை ஐயன் ஆகியோரும் செல்கின்றனர். சேர நாட்டின் ஓரிடத்தில், இந்தத் தெய்வங்களின் வரவை அறிந்த அப்பகுதி மக்கள் கண்ணகிக்கு நடப்பதிமன்னம் என்னும் இடத்திலும், கன்னடத்துப் பகவதி மற்றும் கண்ணுகொட்டுப் பகவதி ஆகியோருக்குப் பிராயரி என்னும் இடத்திலும் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.
பிற்காலத்தில் அன்னியப் படையெடுப்பில் அங்கிருந்த கோவில்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டன. கோவில்களில் இருந்த சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. அங்கு எஞ்சியிருந்த சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தை எடுத்துக் கொண்டு போய், வடக்கன்தரை என்ற இடத்திலிருந்த விஷ்ணு கோவில் அருகில் வைத்து வழிபட்டனர், பக்தர்கள்.
நாளடைவில் அந்தப் பீடத்திற்கும், அங்கிருந்த அத்திமரத்துக்கும் பகவதியின் அருள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற பகவதி அங்கு வந்து தங்கிக் கொண்டாள். வழிபடும் பக்தர்கள் வேண்டி யதையெல்லாம் வழங்கத் தொடங்கினாள். பிற்காலத்தில், அங்கிருந்த பீடத்தில் பகவதி யின் வடிவமாகக் கல் தூண் ஒன்று நிறுவப்பட்டுப் பெரிய கோவில் ஒன்று எழுப்பப்பட் டதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.
ஆலய அமைப்பு :
கோவிலில் கிழக்கு நோக்கிய நிலையில் கிருஷ் ணர் சன்னிதியும், மேற்கு நோக்கிய நிலையில் பகவதி யம்மன் சன்னிதியும் இருக்கி ன்றன. இக்கோவில் வளாகத் தில் அழகிய தீர்த்தக் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டி ருக்கிறது. கேரளாவில் அமைந்திருக்கும் ஒரே கண்ணகி கோவில் எனச் சொல்லப்படும் இந்த ஆலயத்தில், கணவனை இழந்த கண்ணகி, பகவதி தோற்றத்தில் இருப்பதால், முல்லைப்பூ, பத்தி, குங்குமம் போன்றவை பயன்படுத்தப் படுவதில்லை
ஆலயம் தினசரி காலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தோற்றப்பாடல், ரத்தப் புஷ்பாஞ்சலி, இரட்டி மதுரம் எனும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை தவிர, ஆண்டுதோறும் நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி போன்றவை சிறப்பு விழாக்களாக நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைத் திருவிழா எனும் சிறப்பு விழா ஒன்றும் நடத்தப் பெற்று வருகிறது.

பகவதி அம்மன்
ரத்தப் புஷ்பாஞ்சலி :
பெண் குழந்தை களுக்குச் சிறந்த கல்வி, எதிர் காலத்தில் சிறந்த கணவன் அமைந்திட வேண்டுமென்று இக்கோவிலில் பக்தர்கள், தெத்திப்பூவைச் சந்தனத்தில் நனைத்து ரத்தப் புஷ்பாஞ்சலி எனும் அலங்கார பூஜை செய்து வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டில் மகிழும் அம்மன், அந்தப் பெண் குழந்தைகளின் வாழ்க்கை சிறக்க வேண்டியதைச் செய்வார் என்கிற நம்பிக்கை இங்கு வழிபடும் பக்தர்களிடம் நிலவுகிறது.
வேலைத் திருவிழா :
இக்கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கொரு முறை மலையாள நாட்காட்டியின் படி கும்பம் (மாசி) மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கிப் பத்து நாட்கள் வரை ‘வேலைத் திருவிழா’ நடைபெறுகிறது. இந்நாட்களில் பக்தர்கள் அம்மன், பூத கணங்கள் போன்று வேடமணிந்து கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இதை அங்குள்ளவர்கள் `கும்மாட்டி' வழிபாடு என்கின்றனர்.
தோற்றப்பாடல் :
இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும், மேஷம் (சித்திரை) மாதம் புனர்பூசம் நட்சத்திர நாளிலும் நடக்கும் திருவிழாவில், கண்ணகி வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘தோற்றப்பாடல்’ பாடப்படுகிறது. 41 நாட்கள் விரதமிருந்து வரும் நல்ல குரல் வளமுடைய பக்தர்களால் பாடப்படும் இப்பாடலில், பகவதியின் கதையும் சொல்லப்படுகிறது. இப்பாடல்களைக் கேட்டால் பாவங்களும், பிணிகளும் நீங்கி நலமும் வளமும் கிடைக்குமாம்.
இரட்டி மதுரம் :
பாயசத்தில் வழக்கமாகச் சேர்க்கும் இனிப்பை விட, அதிகமான இனிப்பு சேர்த்துச் செய்யப்படும் பாயசம் ‘இரட்டி மதுரம்’ என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலில் தாங்கள் பிறந்த நட்சத்திர நாளில், இரட்டி மதுரத்தைப் படைத்து அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு, அம்மன் அவர்கள் எதிர்பார்க்காத பெரும் வளத்தை வாரி வழங்குவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மேலும் இந்த ஆலயத்தில் காட்டுப் பாயசம், பால் பாயசம், பகவதி சேவைப் பாயசம் போன்ற பாயச வகைகளும் இரவு நேரத்தில் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் அதிக அளவில் இருக்கின்றன.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ளது சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெளிகண்ட நாதர் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
பஞ்சபூத தலங்கள் ஐந்து. அதேபோல் ஐந்து நாதர்கள் திருச்சிராப்பள்ளி நகரின் தெய்வங்களாக விளங்குவது நிறைய பேருக்குத் தெரியாது.
ஆம். திருச்சி நகரின் கிழக்கில் கயிலாச நாதர் ஆலயம், வடக்கில் பூலோக நாதர் ஆலயம், மேற்கில் நாகநாதர் ஆலயம் மற்றும் காசி விசுவநாதர் ஆலயம், தெற்கில் வெளிகண்ட நாதர் ஆலயம் என ஐந்து ஆலயங்கள் நகரை அலங்கரிக்கின்றன.
இதில் பாலக்கரை பகுதியில் உள்ளது வெளிகண்ட நாதர் ஆலயம்.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு திசை நோக்கி இருந்தாலும், நுழைவு வாசல் தெற்குப் பக்கம் அமைந்துள்ளது. உய்யக் கொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தின் பழமை, நம் மனதில் நம்மையும் அறியாமல் ஒரு அற்புத பக்தியையும் பரவசத்தையும் ஊற்றெடுக்க வைப்பது நிஜம்.
ஆலய முகப்பில் மகாமண்டபமும், அதன் நடுவே நந்தியம் பெருமாளும், பலி பீடமும், கொடி மேடையும் உள்ளன. மகா மண்டபத்தின் இடது புறம் கருடாழ்வார் திருமேனியும், சமயக் குரவர்கள் நால்வர்களின் திருமேனிகள் கொலுவிருக்கும் மண்டபமும் உள்ளன.
இறைவன் - இறைவி :
மகாமண்டபத்தில் வலது புறம் அன்னை சுந்தரவல்லியின் சன்னிதி உள்ளது. இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக் கிறாள்.
மகாமண்டபத்தை அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்புரிகின்றனர்.
அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெளிகண்ட நாதர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அன்னையை அடுத்து சீனிவாசபெருமாள், தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி மண்டபத்தில் சேவை சாதிக்கிறார்.
திருச்சுற்று தெய்வங்கள் :
அடுத்துள்ள வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் தேவக்கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. குருப் பெயர்ச்சி நாட்களில் தட்சிணா மூர்த்திக்கு நடக்கும் சிறப்பு ஆராதனைகளைக் காண பக்தர்கள் கூட்டமாக வருகின்றனர்.
தேவக்கோட்டத்தின் வடதிசையில் பிரம்மாவின் திருமேனியும், துர்க்கையின் திருமேனியும் உள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு கன்னியர் எலுமிச்சைப் பழ விளக்கேற்றி நல்ல கணவனைப் பெற வேண்டு வதும் அவர்கள் பிரார்த்தனை பலிப்பதும் உண்மையே என்கின்றனர் பக்தர்கள்.
திருச்சுற்றின் மேற்கு திசையில் முத்துக்கருப்பன், விநாயகர், சுப்ரமணியர், வள்ளி- தெய்வானை சன்னிதிகள் உள்ளன. வடக்கில் சண்டிகேசுவரர் மற்றும் பைரவர் சன்னிதிகள் உள்ளன.
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு ஆரா தனையும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் தங்களைப் பீடித்துள்ள பில்லி, சூனியம் விலகும் என்றும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள். கிழக்கில் சூரியன், சனீஸ்வரன் நாகர் திரு மேனிகள் உள்ளன.
திருவிழாக்கள் :
பிரதோஷம், மாதப் பவுர்ணமிகள், சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனின் கருணைப் பார்வையைப் பெற்று பலன் பெறுகின்றனர்.
இங்கு உற்சவர் திருமேனி இல்லை. எனவே வீதியுலா கிடையாது. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருமணத் தடை நீங்கவும் தங்களது மகன் அல்லது மகளுக்கு விரைந்து திருமணம் நடந்தேறவும் இங்கு இறைவன் - இறைவிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கின்றனர். அவர்கள் வேண் டுதல் நிறைவேறுவதுடன் அவர்கள் வீட்டு திருமணம் மங்கலகரமாக விரைந்து நடந்தேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் தலம் இது. இப்படிப்பட்ட அமைப்புடன் காணக்கூடிய சிவாலயங்கள் தமிழ்நாட்டில் அபூர்வமே!
செய்வினை கோளாறு இருப்பதாக நினைப்பவர்கள் இங்கு வந்து இறைவன், இறைவியிடம் மனமுருக வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்கள் மீண்டும் ஆலயம் வந்து இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து தங்கள் நன்றியை கண்கள் கலங்க நிறைவேற்றி மகிழும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும்.
அமைவிடம் :
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பாலக்கரையில் உள்ளது இந்த வெளிகண்ட நாதர் ஆலயம்.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலை போல பெண்கள் மட்டுமே பொங்கலிடும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் இங்கு உள்ளது.
இக்கோவில் உலகம் முழுவதும் அறிந்த கோவில் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு காரணம் இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழா ஆகும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு பொங்காலை இடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இக்கோவில் இடம் பிடித்துள்ளது.
இப்படி சாதனை படைத்த இக்கோவிலின் வரலாறும் புராதன சிறப்பு கொண்டது. குறிப்பாக இக்கோவிலுக்கும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கும் தொடர்பு உள்ளது.
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியே கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி என்றும் புராணம் கூறுகிறது.
மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்று கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன் நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோவில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இக்கோவிலின் தலப்புராணமாக கூறப்படுகிறது.
இது போல உலகையாழும் பராசக்தியின் பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்து கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருவர் திடீரென பக்தர் முன்பு தோன்றினார். அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் பக்தர் தன்னை மறந்து நின்றார். அவரிடம் சிறுமி என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விட முடியுமா? என்று கேட்டார். சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார்.
மனம் நொந்த பக்தர், வீட்டிற்கு சென்று கண்மூடி தூங்கினார். அப்போது மீண்டும் அந்த சிறுமி, பக்தரின் கனவில் தோன்றி, கிள்ளியாற்று கரையில் தென்னை மரங்களுக்கிடையே 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியபடி மறைந்து போனார்.அதன் பிறகு தான் பக்தருக்கு சிறுமி வடிவில் வந்தது சாட்சாத் பகவதி என்று தெரிந்தது.
அந்த பக்தரின் முயற்சியால் கட்டப்பட்ட கோவிலேஇன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற கதைகள் பல கூறப்பட்டாலும், இக்கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தது ஆதிசங்கரர் ஆவார். இக்கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் மகிஷாசுர மர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதி சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இது போல கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்று சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் ஆகியவற்றை ஏந்தி, அரக்கியை அடக்கி அவள்மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். கருவறையில் 2 அம்மன் சிலைகள் உள்ளன. மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறையை ஸ்ரீகோவில் என்று அழைக்கிறார்கள். கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் பகவதி அம்மனை வழிபடும் பெண்களுக்கு அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதி இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது, எதிரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட வாய்ப்பு, வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட வழி பிறப்பது, திருமண தடை நீங்கவும் வழி பிறக்கும்.
இதற்காக இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள். தினமும் வந்தாலும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று நடைபெறும் பொங்காலை விழாவில் பங்கேற்று பொங்கலிட்டால் வேண்டிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
கோவிலின் முன்பு பொங்கல் வைக்கும் போது, கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மனான கண்ணகியும், ஒரு பெண்ணாக கோவி லின் முன்பு வந்து, பெண்களோடு பெண்களாக பொங்கலிடுவார் என்பது இக்கோவிலுக்கு வரும் பெண் களின் நம்பிக்கை.
கண்ணகியோடு சேர்ந்து பொங்கலிடும் போது, கண்ணகியான பகவதி அம்மன் பெண் பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்பதும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதற்காக ஒவ்வொரு பொங் காலை விழாவிலும் பெண்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இவ்வாறு கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.
1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இது போல 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந்தேதி நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இது இக்கோவிலின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.
ஆற்றுக்கால் கோவிலில் குடிகொண்ட பகவதியின் மேல் பக்தர்கள் கொண்ட நம்பிக்கையே இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும். இந்த ஆண்டும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய் அந்தஸ்து: ஆற்றுக்கால் பகவதி அம்மனை இந்த ஊரின் தாயாக மக்கள் கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விஷேசமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான் வழங்கப்படுகிறது.
நடை திறப்பு: இந்த கோவிலின் நடை அதிகாலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.
போன் நம்பர்: 0471- 2456456, 2463130, 2455600

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற பெருமைமிக்க தலம்.
தர்மங்கள் தலை சாய்ந்து அதர்ம சக்திகள் தலை விரித்தாடும் போது நல்லவர்களை காக்க தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுத்தார். அவர் எடுத்த தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று.
தனது பக்தன் பிரகலாதனுக்கு அவன் தந்தை இரணியனால் இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளை சகிக்க முடியாமல் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை சம்ஹாரம் செய்தார். அதன்பிறகும் பரந்தாமனின் கோபாவேசம் அடங்கவில்லை. மிகவும் உக்ரமாக இருந்தார். இதைக்கண்டு பயந்துப்போன லட்சுமி திருமாலை விட்டு பிரிந்து இயற்கை எழில் சூழ்ந்த திருப்பதி சாரத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்தமடைந்த பகவான் லட்சுமியை தேடி அவள் இருப்பிடத்திற்கு வந்தார். லட்சுமி ஆனந்தமடைந்து பகவானின் திருமார்பில் நித்யவாசம் செய்ததாகவும், அதனால் பகவானுக்கு ‘திருவாழ்மார்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் ஊருக்கு திருப்பதிசாரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஐதீகம்.
மேலும் வைணவர்கள் தெய்வமாக போற்றும் நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கை பிறந்த தலமாகும். சிறு வயது முதலே உடைய நங்கை விஷ்ணுமிது மிகுந்த பக்தி கொண்டு இருந்தாள். வயது வந்தவுடன் அவரை குருகூரைச் சேர்ந்த காரி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். நீண்ட நாட்கள் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அவர்கள் மனம் வருந்தி தனக்குப் புத்திரப்பேறு அருளுமாறு நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து ஆழ்வார் திருநகரி தலத்தில் ஆதிநாதனை வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து 41 நாட்கள் திருவாழ்மார்பனை எண்ணி தவமிருந்தனர்.அவர்கள் பிரார்த்தனைக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெருமாளின் திருவருளால் திருஉடைய நங்கை கர்ப்பமுற்றாள். ஒரு வைகாசி விசாகத்தன்று அவருக்கு நம்மாழ்வார் மகனாக அவதரித்தார். அவரது பெற்றோர் மனமகிழ்ந்து பெருமாளின் கருணையைப் போற்றி புகழ்ந்தனர்.
ஆனால் பிறந்தது முதல் எந்த இயக்கமும் இல்லாமல் பெற்றோருக்குப் பெருந்தவிப்பைத் தந்தார். குழந்தை நம்மாழ்வாரை தூக்கிக் கொண்டு அவரது பெற்றோர் குருகூரில் உள்ள ஆதிநாதன் சன்னிதியில் விட்டனர். அந்தக் குழந்தை மெல்ல நகர்ந்து, நகர்ந்து அருகில் இருந்த ஒரு புளிய மரப்பொந்தினுள் சென்று அமர்ந்து கொண்டது. இப்படி அவர் பதினாறு ஆண்டுகள் வாசம் செய்தார். மதுரகவியாழ்வார் இக்கோவிலுக்கு வந்தார். நம்மாழ்வார் மிகப்பெரிய மகான் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
மதுரகவியாழ்வார் எந்தப்பெருமாளையும் பாடாமல் தன் குருநாதரைப்பற்றி மட்டுமே பாடல்கள் இயற்றியுள்ளார். பல்வேறு திவ்ய தேசங்களில் கோவில் கொண்டிருந்த பெருமாள்கள் எல்லோரும் நம்மாழ்வாரிடம் வந்து தன்னைப் பற்றி பாடல் இயற்றுமாறு கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், திருவண் பரிசாரம் என்ற தன் தாயாரின் பிறந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் திருவாழ்மார்பன் இவர் மீது ஏதோ வருத்தம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் யாராவது அந்தப் பெருமாளிடம் என்னைப் பற்றிச் சொல்ல மாட்டீ ர்களா என்று ஏக்கமாகக் கேட்கிறார்.அதன் பிரதிபலிப்பாக எழுந்த பாடல்.
வருவார் செல்வார் பரிவாரத் திருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லா செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே
நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் திருப்பதிசாரம். கருவறையில் திருவாழ்மார்பன், நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரதாரியாக, அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிகிறார். இத் தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். திருவாகிய லட்சுமி தனது பதியாகிய திருமாலை இவ்விடத்தில் சார்ந்ததால் இவ்வூர் ‘திருப்பதிசாரம்' என அழைக்கப்படுகிறது.
இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோவில் இல்லை. இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம். விமானம்: இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது பிரதான வளைவைக் கடந்து கோவிலுக்குள் சென்றதும் நேரே தோன்றும் கருவறை விமானத்தை பிராகாரச் சுற்றாக தரிசிக்கலாம்.
இடப்புறம் மூலவர், பின்புறம் சாந்த யோக நரசிம்மர், வலப்புறம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அந்த விமானத்தில் காட்சி தருகிறார்கள். திருவாழ்மார்பன் பெருமாள் கருவறைக்கு வலது பக்கம் ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் தனிச் சன்னிதியில் கொலு விருக்கிறார்கள். இவர்களுடன் விபீஷ்ணர், அனுமன், குலசேகர ஆழ்வார், அகத்தியரையும் சேர்த்து தரிசிக்கலாம். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் உள்ளார். கருவறைச் சுற்றில் கன்னிமூல விநாயகர் தரிசனமளிக்கிறார். கோவிலுக்கு வெளியே வந்தால் எதிரே சோமதீர்த்தம். அதற்கு இடப்புறம் ஒரு அரசமரம், அதனடியில் கட்டப்பட்ட மேடையில் விநாயகர் மற்றும் நாகர்கள் அமைந்திருக்கிறார்கள். சோமதீர்த்தக் கட்டத்திற்குள் சூரியநாராயணன் தனியே சிறு சன்னிதியில் நின்றிருக்கிறார்.
பக்கத்தில் சுதைச் சிற்பமாக அக்னிமாடன். கோவில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் வடக்கே உடைய நங்கையார் அவதரித்தப் பகுதியைக் காணலாம். நம்மாழ்வாரின் தாயாரின் இந்த ‘வீடு’, இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது. சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரை தான் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் கருட சேவை விசேஷமாக நடக்கிறது.

மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.
மோகினி அவதாரம் எடுத்த திருமால், தன்னுருவம் பெற வழிபட்ட தலம், அனுமனும், சிங்கியும் இசை எழுப்ப சிவபெருமான் ஆடி மகிழ்ந்த அற்புத ஆலயம், வீணை தாங்கிய அனுமன் வீற்றிருக்கும் திருக்கோவில், இசைத்துறையில் புகழ்பெற உதவும் திருத்தலம், மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.
தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அமிர்தத்தை தேவர் களுக்கும், அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக திருமால், மோகினி வடிவம் எடுத்தார். பின்னர் தன்னுடைய மெய்யான திருமால் வடிவத்தைப் பெறுவதற்காக அவர் வழிபட்ட தலம் இது என்பதால் ‘மெய்ப்பேடு’ என்று பெயர் பெற்றது. மெய்- உண்மை, பேடு- பெண். இந்த மெய்ப்பேடு என்பதே காலப்போக்கில் மருவி ‘மப்பேடு’ என்றானதாக கூறப்படுகிறது.
தொன்மைச் சிறப்பு :
விசுவநாத நாயக்கர் ஆட்சியில் அமைச்சராகப் புகழ் பெற்று விளங்கியவர் அரியநாத முதலியார். இவர் திருமலை நாயக்கரிடம் அலுவலராக இருந்த காளத்தியப்ப முதலியார் மகன் ஆவார். இவர் பிறந்த ஊர் மெய்ப்பேடு எனும் மப்பேடு ஆகும். இவரே விசுவநாத நாயக்கர் காலம் முதல் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலம் வரை முக்கிய ஆலோசகராக விளங்கியவர். இந்த ஆலயத்தின் ஐந்துநிலை ராஜகோபுரம், மதிற்சுவர், கல் மண்டபம், வசந்த மண்டபம் முதலானவற்றை அரியநாத முதலியாரே கட்டியதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், இப்பகுதி முதலியார் சமூகத்தினர் பாண்டிய நாட்டிற்குக் குடியேற்றப்பட்டனர். சோழவந்தான், திருநெல்வேலி, முதலிய பகுதியில் இவர்கள் குடியேறினர். இன்றும் இவர்கள் தொண்டை மண்டல முதலியார் என வழங்கப்படுகின்றனர்.
முந்தைய காலத்து தொண்டை நாடு 24 கோட்டங்களையும், 79 நாடுகளையும் கொண்டு விளங்கியதை, ‘தொண்டை மண்டல சதகம்’ குறிப்பிடுகிறது. செங்காடு கோட்டத்தில் செங்காடு நாட்டில் அமைந்த ஊராக மப்பேடு விளங்கியது.

இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது, ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில், கி.பி. 1947-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகாலசோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு, விளக்கெரிக்க கொடையளித்த விவரத்தையும், இவ்வாலயம் கி.பி. 967-ல் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது.
சிங்கீஸ்வரர் :
திருவாலங்காட்டில் சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது மிருதங்கம் வாசித்த ‘சிங்கி’ என்பவர் சிவபெரு மானின் நடனத்தைக் காணாமல், இசைப்பதிலேயே கவனமாக இருந்தார். எம்பெருமானார் நடனத்தைக் காணமுடியவில்லையே என்று எண்ணி வருந்தியபோது, அன்றிரவு அவர் கனவில் தோன்றிய இறைவன், ‘மெய்ப்பேடு திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் மீண்டும் எனது காட்சியைக் காணலாம்’ என்றார். அதன்படி, மெய்ப்பேடு சென்ற சிங்கிக்கு, சிவபெருமான் நடனமாடி காட்சிதந்தார். இதனால் இத்தலத்து இறைவன், ‘சிங்கி + ஈஸ்வரன் = சிங்கீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
சுவாமியின் சன்னிதிக்கு வலதுபுறம் அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. நறுமணம் மிகுந்த மலருக்கு உரியவள் என்ற பொருளில் ‘ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அன்னை காட்சி தருகின்றாள். இவளே பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றாள். சதுரமான கருவறையில் நின்றகோலத்தில் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருளாசி வழங்குகிறாள், இந்த அன்னை.
கருவறை முன் உள்ள அர்த்தமண்டபம் இரு வரிசையில் நான்கு தூண்கள், முன் மண்டபம் பன்னிரண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றது. இத்துடன் விஜயநகர கால பூ வேலைப்பாடுகள், இறை உருவங்கள், விலங்குகள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு :
தென்கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், ஏழு கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்களைக் கொண்டு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. ஆலயமானது கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்துள்ளது.
மகா மண்டபத்தின் முன்பாக செவ்வக வடிவ முன்மண்டபம் அமைந்துள்ளது. தென்புற நுழைவு வாசலில் நடராஜர் சபை இருக்கிறது. அர்த்த மண்டபபுறச் சுவரில் தெற்கே விநாயகர், வடக்கே துர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, அதன் அருகே சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். ஆலயச் சுற்றில் இடம்புரி விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஆதிகேசவப் பெருமாள், விரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், காலபைரவர், சூரியன் ஆகியோர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தல தீர்த்தமாக வெண் தாமரைக் குளமும் உள்ளன. இந்தக் கோவிலில் சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங் களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், ஆவணி சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆலயத்தில் உள்ள நந்தி மண்டபத்தின் முன்பாக, நவ வியாகரணக் கல் என்னும் சிறிய கருங்கல் ஒன்று காணப்படுகிறது. தீராத மூட்டு வலி உள்ளவர்கள், மருத்துவம் பார்ப்பதோடு நில்லாமல், இந்தக் கல்லின் மீது நம்பிக்கையோடு ஏறி நின்று நந்தியையும், இறைவனையும் மனமுருகி வேண்டிக் கொண்டால், வலியின் தாக்கம் படிப்படியாக குறையும் என்கிறார்கள். இந்த வழிபாட்டை பிரதோஷம் மற்றும் கார்த்திகை சோம வாரங்களில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள், பலன் பெற்ற பக்தர்கள்.
வீணை ஆஞ்சநேயர் :
சிவபெருமான் திருநடனம் புரிந்த இந்த ஆலயத்தில், ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயர், விரபாலீஸ்வரர் சன்னிதியின் எதிரில் நின்று வீணையை இசைத்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், இத்தலம் மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மப்பேடு திருத்தலம். பூந்தமல்லியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், காஞ்சீபுரத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும் புதூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலம் இருக் கிறது.
மூட்டு வலி நீக்கும் கல்