என் மலர்
கோவில்கள்
திருச்சி அருகே சோழமாதேவியில் உள்ளது கயிலாயமுடையார் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள் பல உள்ளன. இவற்றில் பல ஆலயங்கள், சைவ வழிபற்றிய நாயன்மார்களாலும், வைணவ வழியைப் பின்பற்றிய ஆழ்வார்களாலும் பாடப்பெற்றவை. மேலும் பல கோவில்கள் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளையும், கலை அழகுமிக்க சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் பன்பாட்டை, கலாசாரத்தை, கலைத் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.
அப்படிப்பட்ட ஆலயங்கில் ஒன்றுதான், திருச்சி அருகே உள்ள சோழமாதேவியில் இருக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்.
உய்யகொண்டான் ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டது. ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இத்தல இறைவனின் பெயர் ‘கயிலாயமுடையார்’ என்பதாகும். இறைவனின் இன்னொரு பெயர் ‘கைலாசத்து பரமேஸ்வரர்’ ஆகும். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.
காவிரியின் தென்கரை கோவில்களில் ஒன்றாக திகழும் இந்த ஆலயம், மன்னர்களின் ஆட்சி காலத்தில் ‘சோழமகாதேவிச் சதுர்வேதி மங்களம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை எதிரே பலி பீடமும், நந்தி மண்டபமும் இருக்க, ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வடக்கே சண்டிகேஸ்வரர், சூரியன், ஐயனார், முருகப்பெருமான் ஆகியோரின் திருமேனிகளும், தென் திசையில் சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
அன்னை கற்பகாம்பாள் வீற்றிருக்கும் சன்னிதி சிதிலமடைந்து காணப்படுவதால், தற்போது அன்னை அர்த்த மண்டபத்தில் இருந்து அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் இருக்க, அன்னையானவள் இன்முகத்துடன் காணப்படுகிறாள்.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் கயிலாய முடையார், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
கருவறை தேவகோட்டங்களில் முதலில் காணப் படுவது பிட்சாடனர். இது ஈசனின் யாசகம் கேட்கும் திருக்கோலமாகும். கபாலம் ஏந்தி புன்னகை தவழ காட்சித்தருகிறார் இந்த இறைவன். இவருக்கு எதிர் திசையில் ரிஷி பத்தினி ஒருத்தி கரண்டியை ஏந்தி அன்னம் பாலிக்க நிற்பதுபோல் காட்சி உள்ளது. அவளது காலடியின் கீழ் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிவபெருமான், தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கர்வத்தை அடக்கும் புராண நிகழ்ச்சியைக் கூறும் சிற்பமாக இது அமைந்துள்ளது.

கற்பகாம்பாள், கயிலாயமுடையார்
அடுத்து மகா கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை, பிரம்மா ஆகியோர் திரு உருவங்கள் நாம் தரிசிக்க காட்சி தருகின்றன. ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரம். இது வடக்கு பிரகாரத்தில் உள்ளது.
1000-ம் ஆண்டு களுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், கி.பி.985-1014 -ல் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன.
கோவில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், ‘உவச்சர்கள்’ என அழைக்கப்பட்டனர். சிவன் கோவிலிலும், பெருமாள் கோவிலிலும் உவச்சர்கள் ‘பஞ்ச மகா சப்தம்’ செய்ய நிலம் அளிக்கப்பட்டதாக ராஜராஜனது 26-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.
பஞ்ச மகா சப்தம் என்பது ஐந்து வகையான இசையைக் குறிக்கின்றன. தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் இசையை வெளிப் படுத்தி, அந்த இசைகளை ஒன்று சேர செய்வதற்கு பஞ்ச மகா சப்தம்’ என்று பெயர்.
கரடிகை ஒன்றும், மத்தளம் இரண்டும், சங்கு இரண்டும், காளம் நான்கும் ஆக மொத்தம் ஒன்பது இசைக் கருவிகள், நாள்தோறும் இந்த ஆலயத்தில் வாசிக்கப்பட்டதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, அந்த காலத்தில் இந்தக் கோவிலில் எவ்வளவு சிறப்பாக வழிபாடு நடந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாத தனுர் பூஜை இங்கு 30 நாட்களும் நடைபெறுகிறது.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்: திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழமாதேவி என்ற கிராமத்தில் உள்ளது இந்த கயிலாயமுடையார் ஆலயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் சென்று அங்கிருந்து சூரியூர் அல்லது துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் நகர பேருந்தில் பயணித்து சோழமாதேவி பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும்.
தல வரலாறு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதிகளை சேர்ந்த நாடார் சமுதாயத்தினர் வேலை தேடி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு வந்தனர். அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதியில் அம்மை, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதை அறிந்த நாடார் சமுதாய பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனின் கோபத்தை குறைக்கும் வகையில் அப்பகுதியில் கோவில் கட்ட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மிக சிறிய அளவிலான கோவிலை அவர்கள் கட்டினர். கோவில் அருகே ஒரு தெப்பக்்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை வேண்டி வழிபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து நிலக்கோட்டை மக்களுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கின. இது அம்மனின் அருளால் தான் சாத்தியமானது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் அடுத்து வந்த காலகட்டத்தில் அம்மனுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்களின் குறைகளை தீர்க்கும் அம்மன்
திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகளில் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறும்.
மேலும் இந்த கோவில் வளாகத்தில் முதல் கடவுளாக விநாயகரும், துர்க்கையம்மன், சுப்பிரமணியசுவாமி, தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள நந்தி பகவான் காதில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி்க்கடனை சொல்லி வழிபட்டு வருவது கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
கோவிலில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தீச்சட்டி ஊர்வலம்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையொட்டி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.
மாவிளக்கு எடுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி ஊர்வலம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நோய்களுக்கு மருந்தாகும் தீர்த்தம்
நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்றான அம்மைநோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்்கள் தங்களின் நோய்தீர அம்மனை மனதார வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மைநோய் குணமாகும் என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதே போல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கரும்பு தொட்டில் கட்டும் தம்பதிகள்
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் அருள மனம் உருகி நிலக்்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்ததும் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதை கரும்பில் தொட்டிலாக கட்டி அந்த தொட்டிலில் குழந்தையை வைத்து மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.
பூப்பல்லக்கில் வலம் வரும் அம்மன்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை பொறுத்தவரை எவ்வித சாதி, மத வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொள்வார்கள். குறிப்பாக பூப்பல்லக்்கு அன்று அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருந்து அம்மன் பூப்பல்லக்கில் வரும் ஆனந்த அருள்காட்சியை பக்தி பரவசத்துடன் பார்த்து மகிழ்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் கடந்த சில நாட்களாக திருவிழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகிறார்கள். இதனால் மற்ற கோவில்களில் நடக்கும் திருவிழாக்களை விட நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் சாதிமத பேதமின்றி அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர்.
நேர்த்திக்கடனாக வாழைப்பழம் சூறையிடுதல்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை நேரத்தில் பக்்தர்கள் வாழைப்பழங்களுடன் கூட்டம், கூட்டமாக வருவார்கள். பின்னர் அந்த வாழைப்பழங்களை மாரியம்மனுக்்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அவற்றை சூறையிடுவார்கள். வாழைப்பழங்களை சூறையிடுவதால் அம்மனின் அருள் கிடைப்பதுடன், மக்களை வாட்டி வதைக்கும் நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மற்ற கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் வாழைப்பழங்கள் அபிஷேகம் செய்வதற்கும், இதர பூஜைகளுக்கும் பயன்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் தான் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்படும் வாழைப்பழங்களை சூறையிடும் வழக்கம் உள்ளது. இவற்றை கோவில் முன்பு கூடியிருக்கும் சிறுவர்கள், பக்தர்கள் அம்மனின் பிரசாதமாக நினைத்து அந்த பழங்களை சாப்பிடுகிறார்கள்.

அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டுதாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
தலவரலாறு :
இவ்வாலயம் அருகேயுள்ள மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள், இந்த வீரமாகாளி அம்மன்.
சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.
அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. நான் இருக்க இன்னொரு வடிவம் தேவையா?. என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார்.
தன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரம்மாண்ட கற்சிலை கிடைத்தது. அந்தசிலை எண் கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது.
எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது.
அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, ‘உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால், அவரை தூக்கி வீசிவிடுவீர்களா? நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள்.
இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை அந்த அன்னையே ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.

ஆலய அமைப்பு :
ஆலயம் வடக்கு நோக்கிய வாசலைக் கொண்டு அமைந்துள்ளது. எளிய முன் முகப்பு மண்டபத்தின் வலதுபுறம், கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாசலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவாரபாலகியர்கள் காவல்புரிகின்றனர்.
கருவறையின் இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான தெய்வ சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. முதல் மரியாதை இவர்களுக்கே. இதைக் கடந்ததும், கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக அருள்காட்சி வழங்குகிறாள்.
வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். வலதுபுறம் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் கொண்டும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, வரதம் தாங்கியும் காட்சிதருகின்றாள். காளிக்குரிய கபாலம் அன்னையின் கரத்தில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.
வலதுகாலை மடக்கி, இடது காலை அசுரனின் தலையை அழுத்தியும், சூலத்தால் குத்தியும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் முகத்தில் சிறிய கோரைப்பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது அபூர்வக் கோலமாகும்.
இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக வீரமாகாளி திகழ்கிறாள்.
வரம் வேண்டுவோர் அம்மனை நேரில்வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவுசெய்து கொள்ள வேண்டும்.
இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகிறாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். குழந்தை வரம் நிறைவேறியவர்கள், அந்தக் குழந்தையைக் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் தரிசனம் செய்யலாம்.
அமைவிடம் :
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர்.
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல் கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொதுமக்களின் பங்களிப்போடு இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.
இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகிழ்ச்சியை அளிப்பதால் ‘மருதீசர்’ எனவும், பாவவினை என்னும் நோயை நீக்க மருந்தாகத் தோன்றியதால் ‘மருந்தீசர்’ என்றும், அர்ச்சுனன் வழிபட்டதால் ‘அர்ச்சுனேஸ்வரர்’ என்றும் பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு :
அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள 11 சிவமூர்த்த தலங்களில், கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியை கொண்டது. பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தியறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றதாம். இதையடுத்து அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும்.
சோழர் படைத்தளபதி நாகதோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்புரிந்ததாகவும், குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள்புரிந்ததாகவும். கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை, பஞ்சமிதிதி மற்றும் பவுர்ணமி திதியன்றும் திருமணத்தடை நீங்க இத்திருக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் ‘தென் திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.
கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில், திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாகவும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
திருக்கோவில் அமைப்பு :
அர்ச்சுனேஸ்வரர் கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சமசதுர வடிவிலான கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என 90 அடி நீளம் கொண்டது. அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் தெற்கு திசையில் இறைவனது வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி கோமதி அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. மேலும் இரு திருச்சுற்றுகள், இரு திருமுற்றங்கள், இரு திருவமுது மடங்கள், இரு வாசல்கள் என அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.
பொதுவாக சிவன் கோவிலில் இறைவனுக்கு இடது புறமாக அம்மன் சன்னிதி அமைவது மரபு. ஆனால் கடத்தூரில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்துக்கு வலது புறமாக 4 அடி உயரத்திருமேனி கொண்டு, தனி சன்னிதியில் கோமதி அம்மன் அருள்பாலிக்கிறார். எனவே காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியைப் போன்று கடத்தூர் கோமதியம்மனும் தனிச்சிறப்பு பெற்றவராய் திகழ்கின்றார்.
சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்புறம் 4½ அடி உயர பலிபீடமும், 3½ அடி நீளம் 3 அடி உயரம் கொண்ட நந்திதேவர் சிலையும் அமைந்துள்ளது. சுவாமி சன்னிதியின் தெற்கு தேவ கோட்டத்தில் வெள்ளை நிறம் பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. இந்த பளிங்கு திருமேனியானது காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.
பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக் கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள் உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.
இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை, காலசர்ப்ப தோஷம் மற்றும் சகல தோஷங்களுக்குமான பரிகாரத்தலமாக இத்திருக் கோவில் உள்ளது.
கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினசரி காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும். விஷேச தினங்களில் நடைதிறப்பு நேரம் மாறுபடும்.
சூரிய ஒளி விழும் அதிசயம்
ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து சுயம்புவாய் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சமாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும்.
மேலும் ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்கள் தவிர மற்ற காலங்களில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயத்தை காண முடிகிறது. இந்த அதிசய நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
1. ஸ்ரீகாளஹஸ்தி: இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை. மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது. மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.
2. ராமேஸ்வரம்: திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.
3. திருப்பாம்புரம்: அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.
4. நாகர்கோவில்: இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.
5. திருச்செங்கோடு: ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.
6. பேரையூர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது. கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன. மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.
7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி: புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம். ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.
8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்: சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.
9. காளிவழிபாடு: மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.
10. பஞ்சமிதிதி: நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார். பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.
11. ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

12. ஆதிசேஷன் : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடி வுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும். 2) கும்ப கோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.
13. கும்பகோணம் : - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை
அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.
14. சிவகங்கை : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.
15 காஞ்சிபுரம் : - ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.
16. ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம் - குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
17. விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.
18. திருப்பத்தூர் - திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் - தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.
19. சென்னை மைலாப்பூரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.
20. திருச்சி சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.
21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்: பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும். நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.
22. திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.
23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.

‘கரிக்ககம்’ என்ற இடத்தில் உருவானது தான், ‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சி காலத்தில், தாங்கள் ஆண்டப் பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தனர். முன்னதாக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், சேர நாட்டில் 108 சிவாலயங்களையும், 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். பரசுராமர் ஆலயங்களை அமைத்த பகுதியே ‘கேரளம்’ என்று அழைக்கப்பட்டது. பிற்கால சேரர்கள், சிவன் கோவில்களுடன், பராசக்தியை பகவதி அம்மனாக, சாமுண்டி தேவியாக பற்பல இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
இவ்வாறு ‘கரிக்ககம்’ என்ற இடத்தில் உருவானது தான், ‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள். இது பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான ஆலயம் ஆகும்.
தல வரலாறு :
வேதவிற்பன்னர் ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் அருளினார். யோகீஸ்வரனும் தன்னுடைய குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர் முன்பு அன்னையானவள், சிறுமி உருவத்தில் தோன்றினாள். அந்த சிறுமியை குருவும், சீடருமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து சிறுமியை குடியமர்த்தினர்.
உடனே அந்தச் சிறுமி, அம்பிகையாக காட்சியளித்து அங்கேயே குடிகொள்வதாகக் கூறி மறைந்தாள். இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே அருள் சுரக்கும் கரிக்ககத்து அம்மனாக விளங்குகிறாள். இந்த அம்மனை பராசக்தி என்றும், பகவதி என்றும், பரமேஸ்வரி என்றும் அங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர்.
ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு. சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக அம்மனை மக்கள் வழிபாடு செய்கின்றனர். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரமாகவே உள்ளனர். இந்தச் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை.
முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தின் கருவறை மூலஸ்தானத்தில், சாமுண்டிதேவியின் உருவம் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்பில் பீடத்தின் பிரதிஷ்டையாக இருந்தது. நாளடைவில் பக்தர்கள், தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய விக்கிரக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக செய்து பிரதிஷ்டை செய்தனர். அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
இந்த அம்மனுக்கு கடும் பாயசம் நைவேத்தியமாக படைக்கப் படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் ‘கறுப்புக் கயிறு’ ஜெபித்துக் கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.
இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்கார’ (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்த சொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.
இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, நாகர் வனம், அன்னபூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் வைக்கும் விழா நடக்கும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவின் இறுதி நாளில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
வழக்கைத் தீர்க்கும் அம்மன் :
ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும்படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, ‘இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்’ என்றான்.
‘யார் குற்றவாளி’ என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.
‘அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்கே இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!’ என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.
அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.
ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந் திருக்கும்.
அமைவிடம் :
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்க கம் சாமுண்டி தேவி ஆலயம்.

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசாமி கோவில் உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூர் ‘வடகரை மழபாடி’ என அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மழவர்கள் என்கிற பழங்குடியினர் வாழ்ந்தனர். சிறந்த போர்வீரர்களான மழவர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்றாயிற்று. இதுவே பின்னாளில் திருமழப்பாடி என்று ஆனதாக சொல்லப்படுகிறது.
மார்க்கண்டேய முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, மழு எனும் படையை தாங்கி ஆடல் செய்தருளிய தலம் இது என்பதால் ‘மழுபாடி’ என்ற பெயர் வந்ததாக புராண தகவல் ஒன்றும் சொல்கிறார்கள்.
இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.
மனித தலை மிருக உடலமைப்பைக் கொண்ட புருடாமிருகரிஷி வழிபட்ட தலம் இது என்று தல வரலாறு சொல்கிறது. நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.
ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.
இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை.
இந்த கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
தஞ்சை மாவட்டம் திருவையாற்றை அடுத்த அந்தணர்புரம் எனும் தலத்தில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் தனக்கு புத்திரப் பேறு இல்லாததை நினைத்து ஈசனை நோக்கி தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய ஐயாறப்பர், ‘சிலாதனே! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக் கொள்வாயாக. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்’ என அருளினார்.
அவ்வாறே யாகம் செய்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாதமுனிவர், அதனுள் ஓர் அதிசய மூர்த்தியையும் கண்டார். அந்த மூர்த்தி நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரன் அணிந்த முடியும் கொண்டு விளங்கியது.
அப்போது ஐயாறப்பர் அசரீரியாக ‘பெட்டியை மூடித்திற’ என அருள்வாக்கு கூறினார். அதன்படி சிலாதமுனிவர் பெட்டியை மூடி திறந்ததும், முந்தைய வடிவம் நீங்கி அதில் ஒரு அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேசன் என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்று அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

ஒரே கல்லில் ஆன சோமாஸ்கந்தர்
‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது மகனை இழக்க நேர்ந்து விடுமே’ என சிலாத முனிவரும், அவரது மனைவியும் வருந்தினர். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலை அடைந்து அயனரி தீர்த்தத்தில் நீராடி காலின் மேல் காலை ஊன்றி கடும் தவம் செய்தார். அப்போது காட்சி தந்த இறைவன், 16 பேறுகளையும் கொடுத்தருளினார். பின்னர் செப்பேசன், ஐயாறப்பர் மீது கொண்ட பற்றினால் பல்வேறு உபதேசங்களை கேட்டறிந்து சிவகணங்களுக்கு (பாதுகாவலர்) தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் பெற்றார். இவரே நந்தியம்பெருமான் ஆவார்.
சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.
இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது. இதில் ஐயாறப்பரும், அறம்வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
அமைவிடம்: திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையிலிருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
கோவிலுக்குள் தண்ணீர் ஊற்று
திருமழப்பாடி கோவிலில் சுந்தராம்பிகை, பாலாம்பிகை என 2 அம்மன் சன்னிதிகள் உள்ளன. இதில் பாலாம்பிகை சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. எந்த பக்கத்தில் இருந்து நாம் பார்த்தாலும், அந்த திருமேனி நம்மை பார்த்து புன்னகை செய்வது போன்று இருக்கும். தல விருட்சமான பனை மரத்தின் அருகே 4 நந்திகள் உள்ளன. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. கோவிலின் உள் தளம் கொள்ளிடம் ஆற்றின் கரைக்கு சமமாக உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும், மழைக் காலங்களிலும் கோவிலுக்குள் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும்.
நவக்கிரகங்கள் இல்லை
இந்தக் கோவிலில் சோமஸ்கந்தர் வடிவம், ஒரே கல்லினால் செதுக்கப்பட்டிருப்பது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. நவக்கிரகங்களின் சக்திகளை இறைவன் தனது ஆதிக்கத்தில் கொண்டிருப்பதால், இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னிதிகள் இல்லை. நவகோள்களின் காரணமாக பக்தர்களுக்கு ஏற்படும் சகல துன்பங்களையும் இறைவனே முன்னின்று தீர்த்து வரம் தருகிறார். பழமையான வெண்கல பாவை விளக்கு, மூலவர் சன்னிதியின் முன்பு உள்ளது. இதன் அருகேயுள்ள மூன்று குழிகளில் எள் தீபமிட்டு சாமியை மனம் உருகி வேண்டினால் சகல தோஷங்களையும் வைத்தியநாதசாமி அகற்றிவிடுவார் என்பதை ஐதீகம்.
மாசிமக பிரம்மோற்சவம்
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளையும் வழங்கியருளும் தலம் இந்த ஆலயம் ஆகும். பாவி ஒருவன் இங்கு வந்தால் அவன் கயிலைக்கு செல்லும் பேறு பெறுவான். இந்தக் கோவிலில் இருந்து அன்னதானம் செய்தல், தண்ணீர்பந்தல் வைத்தல் முதலான அறங்களை செய்தால் பெருவாழ்வு வாழ்வர் என கூறப்படுகிறது. தினமும் காலை 7 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு 4 கால பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் மாசி மகத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது சாமி 10 நாட்கள் பல வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிப்பார். இறுதி நாளில் தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

திருப்பேரூரில் நடைபெற்ற பல அற்புதங்கள், பேரூர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இன்று பார்க்கலாம்.
தெய்வானை திருமணம்
முன்னொரு காலத்தில் முருகக்கடவுளை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, இமயமலைச் சாரலில் கடும் தவம் இருந்தார்.
அங்கு வந்த நாரதர், ‘திருப்பேரூர் சென்று தவம் இரு. உனது விருப்பம் நிறைவேறும்’ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து திருப்பேரூர் வந்து முருகக்கடவுளை நினைத்து மனம் உருகி கடும் தவத்தில் ஆழ்ந்தார் தெய்வானை. அங்கு முருகப்பெருமான் தோன்றி, தெய்வானைக்கு காட்சி கொடுத்தார்.
இதைக் கண்ட சிவபெருமான், இந்திரனை அழைத்து முருகப்பெரு மானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்க்கும்படி கூறினார்.
மனம் மகிழ்ந்த இந்திரன், தனது மனைவி இந்திராணி மற்றும் தேவாதி தேவர்களுடன் திருப்பேரூர் புறப்பட்டான்.
பின்னர் வெள்ளை யானை மீது முருகக் கடவுளை எழுந்தருளச் செய்து, வீதி உலாவாக திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். சிவகணங்கள், முக்கோடி தேவர்கள், பிரம்மா, திருமால் ஆகியோர் தங்கள் தேவிகளுடன் எழுந்தருளினார்கள். உமா மகேஸ்வரர் முன்னிலையில் இந்திரன் பசும்பால் வார்க்க, அதை ஏற்றுக்கொண்ட முருகப்பெருமான் தனது சிரசு மீது தெளித்துக்கொண்டார்.
பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, திருமாங்கல்யத்தை தெய்வானையின் திருக்கழுத்தில் அணிவித்தார். அப்போது கூடி இருந்த அனைவரும் பூமாரி தூவி வாழ்த்தினர். தேவியுடன் முருகப்பெருமான் தனது தாய்-தந்தையின் திருவடியில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். சிவ-பார்வதி திருக்கல்யாணமும், முருகன் -தெய்வானை திருக் கல்யாணமும் திருப்பேரூரில் நடந்ததாக பேரூர் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
நோய் தீர்த்த தலம் :
மலை நாட்டில் சேரர் குலத்தில் குலசேரன் என்ற மன்னன் அரசாட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனது உடலில் தொழு நோய் பற்றி இருந்தது. அந்த நோய் நீங்க பல தேசத்து வைத்தியர்களை அழைத்துப் பார்த்தான். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் அரசாட்சியை மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு, சிவதல யாத்திரை மேற்கொண்டான். பல திருத்தலங்களை தரிசித்து விட்டு ராமபிரான் வழிபட்ட ராமேஸ்வரம் வந்து சேர்ந்தான்.
அங்கு சிவபெருமானிடம் மனம் உருகி வழிபட்ட போது, நாரத முனிவர் அருளிய திருப்பேரூரின் பெருமைகளை உணர்ந்து இங்கு வந்து சேர்ந்தான். காஞ்சிநதியில் புனித நீராடி சுவாமியையும், அம்மனையும் தரிசித்து தொழுநோய் நீங்கி, எழில் நிறைந்தவனாக மாறினான். தன் நோய் நீங்கியதை அறிந்த அரசன் அகமகிழ்ந்து பேரூர் பெருமானுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்து, தனது வாழ்வின் இறுதிநாளில் முக்தி நிலை பெற்றான்.
சிவநெறி மறந்ததால் விளைந்த துன்பம் :
சோழ நாட்டை திரிலோக சோழராசன் என்னும் அரசன் ஆட்சி புரிந்து வந்தான். மூவுலகிற்கும் நன்மை புரியும் வண்ணம் ஆட்சி செய்ததால், திரிலோக சோழராசன் என்னும் பெயர் பெற்றான். இவனது ஆட்சி காலத்தில் அனைவரும் திருநீறு அணிந்து சைவ வழிபாட்டில் தீவிரமாக இருந்தனர். ஒருமுறை நேபாள நாட்டில் இருந்து பிற மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் திருவிடைமருதூர் வந்திருந்தனர்.
கோவிலுக்கு வந்த அரசனை அவர்கள் சந்தித்தனர். அரசனும் அவர்களை மரியாதை நிமித்தமாக வணங்கினான். உடனே அவர்கள் அரசனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்து, அரசனை தனியே அழைத்து, ‘உமக்கு உபதேசிக்கவே யாம் வந்தோம்! கடவுளை யாரும் பார்க்கவில்லை. கண்ணால் காண்பதே மெய். காணாதது பொய். எனவே இந்த உலகில் உயிர்கள் படைக்கப்படுவது ஆண்-பெண் இருவரும் இணைவதே. இதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து அந்த அரசன் சிவநெறியை மறந்து, தீய சிந்தனைகளில் மனதை ஈடுபடுத்தினான். மன்னன் எப்படியோ, அந்த நாட்டு மக்களும் அவ்வழியே பின்பற்றத் தொடங்கினர். இதனால் நாட்டில் ஒழுக்கம் சீர்குலைந்து போனது.
இதை அறிந்த பிரம்மதேவர் மிகவும் வருந்தி, நாரதரை அழைத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நாரதர், தனது திருக் கமண்டலத்தில் இருந்து புனிதநீரை எடுத்து அரசன் மீது தெளித்தார். அவனது தீய எண்ணங்கள் அழிந்து தெளிவுபெற்றான். தீய உபதேசம் பெற்றவர்கள் அங்கிருந்து அகன்றார்கள்.
பின்னர் நாரதர், அரசனை அழைத்து உமது பாவங்கள் நீங்க பேரூர் பெருமானை வழிபடுவாயாக என்று கூறிச் சென்றார். அதை தொடர்ந்து திருப்பேரூர் வந்து காஞ்சி நதியில் நீராடி சுவாமியையும், அம்மனையும் வணங்கி திருப்பணிகள் செய்து தன் நாடு திரும்பி மீண்டும் சைவ மதத்தை தழைத்தோங்கச் செய்தான்.
கைகளை துண்டித்த சிற்பி :
அகிலத்தையும் ரட்சிக்கும் சிவ பெருமான் இந்த பேரூர் திருத்தலத்தில் ஆனந்த நடனமாடினார். இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தில் கனகசபையை திருமலை நாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கர் 1625-ம் ஆண்டு முதல் 1659-ம் ஆண்டு வரை பார்த்துப் பார்த்துக் கட்டினார்.
கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளை தாண்டினால் இருபக்கமும் 8 சிலைகள், கல் சங்கிலி, சுழல் தாமரை போன்ற அற்புதங்களையும், 2-வது பஞ்சாட்சர படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை உள்ளது.
அதற்கடுத்து உள்ள குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படுகிறது. இந்த சிற்பம் உடைந்ததற்கு ஒரு கதையே சொல்லப்படுகிறது.
இங்குள்ள கனகசபையில் மருதமலையில் இருந்து கொண்டு வந்த கற்களை வைத்து சிற்பங்களை செய்தவர் கம்பனாச்சாரி. 28 ஆண்டுகளாக தனது கற்பனை நயத்தை கல்லில் வடித்தார். கனகசபையில் 36 தத்துவங்களை எடுத்துரைக்கும் விதமாக 36 தூண்கள் உள்ளன.
சிற்பங்கள் அனைத்தும் செய்து முடித்த பின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மன்னரும், சிற்பி கம்பனாச்சாரியாரும், பொதுமக்களுடன் கோவிலுக்குள் வந்து சிலைகளை பார்வையிட்டனர். சிற்ப சாஸ்திர வல்லுநர்கள் சிலையின் வடிவமைப்பை பார்த்து புகழ்ந்தனர்.
கம்பனாச்சாரியார் தனது 28 ஆண்டு கால உழைப்பை மன்னரும், சிற்ப சாஸ்திர வல்லுநர்களும், பொதுமக்களும் புகழ்வதை பார்த்து தனக்குள் ஒரு கர்வம் கொண்டார். ஒருவனுக்குள் கர்வம் வரும்போெதல்லாம் அதை அடக்க இறைவன் ஏதாவது ஒரு விளையாட்டை நடத்துவார்.
சிற்பி கர்வம் கொண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞன், ‘சிற்பி செய்த ஒரு சிலையில் பிழை இருக்கிறது' என்றான்.
இதை கேட்டதும் சிற்பி கம்பனாச்சாரியார், ‘என்ன பிழை கண்டீர்கள்?' என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், ‘நடராஜர் சன்னிதியின் இடதுபுறம் உள்ள குதிரை வீரன் சிலைக்குள் தேரை இருக்கிறது' என்றான்.
‘அது எப்படிப்பா... தேரை இருக்கும் கல்லில் எப்படி சிற்பம் வடிக்க முடியும்?. நான் செய்த குறையை நீ நிரூபித்து காட்டு’ என்றார்.
உடனே அந்த இளைஞன் இடதுபுறம் உள்ள குதிரை சிலை முழுவதிலும் சந்தனத்தைப் பூசுங்கள்’ என்றான். அதன்படியே கம்பனாச்சாரியாரின் உதவியாளர்கள் அந்த சிலை முழுவதும் சந்தனத்தைப் பூசினார்கள். சிலையின் ஒரு இடத்தில் மட்டுமே ஈரமாக இருந்தது. அந்த இடத்தை உடைக்குமாறு இளைஞன் கூறினான். உடைக்கப்பட்ட பகுதிக்குள் இருந்து ஒரு தேரை வெளியே ஓடியது.
சிற்ப சாஸ்திரம் படித்த தனக்கு தெரியாத இந்த குறை ஒரு இளைஞனால் கண்டறியப்பட்டு விட்டதே என்று கம்பனாச்சாரியார் மன்னரின் பாதுகாப்புக்கு வந்திருந்த வீரனின் வாளை பறித்து மேலே வீசினார். பின்னர் தனது இரு கைகளையும் நீட்டினார். மேலிருந்து வந்த வாள் அவரது இரு கைகளையும் துண்டித்தது.
இதை பார்த்து மன்னரும் கூடியிருந்தவர்களும் பதறிப்போனார்கள். மன்னர், ‘சிறிய குறைக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளித்துக் கொண்டீரே’ என்றார்.
அதற்கு சிற்பி, ‘மாமன்னரே! சிற்ப சாஸ்திரம் படித்த என்னாலேயே கல்லுக்குள் தேரை இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. அந்த இளைஞன் அதைக் கண்டுபிடித்து விட்டான். ஆகையால் அந்த இளைஞனை வைத்தே உடைந்த சிலையை போன்ற வேறு ஒரு சிலையை செய்து நடராஜர் சன்னிதி இடதுபுறம் வைத்து விடுங்கள். நான் செய்த இந்த பிழையை மன்னித்து விடுங்கள்’ என்றார்.
அதற்கு மன்னர், கம்பனாச்சாரியாரே! உங்களது சிற்ப திறமை சரித்திரம் வாய்ந்தது. நாளைய வருங்கால சந்ததிகள் உமது பெயரைச் சொல்லும். உடைந்த சிற்பம் அப்படியே இருக்கட்டும். அப்போது தான் சிற்பி கம்பனாச்சாரியார் தனது சிறு தவறுக்காக தன்னுடைய கைகளை துண்டித்துக் கொண்டார் என்பது தெரிய வரும்’ என்றார்.
அதே வேளையில் தான் அவசரப்பட்டு சொன்ன ஒரு விஷயத்தால், சிற்பியின் கை போனதை நினைத்து அந்த இளைஞன் வருந்தினான். சிற்பியிடமும் மன்னிப்பு கோரினான். அவன் யார் என்று விசாரித்ததில், 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிற்பியின் மகன் தான் அந்த இளைஞன் என்பது தெரியவந்தது. தன்னுடைய சிற்பக் கலையைக் காப்பாற்ற தன் மகன் இருக்கிறான் என்ற பெருமிதம் கொண்டார், அந்த மாபெரும் சிற்பி.
இன்றும்.. நடராஜர் சன்னிதியின் இடதுபுறம் உள்ள சிலை உடைப்பட்டு இருப்பதை கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பார்க்கலாம்.

லட்சுமியின் முழுமையான அருளுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கச் செய்யும் திருத்தலமாக கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா திருவாழ்மார்பன் கோவில் அமைந்திருக்கிறது.
மகாலட்சுமி வாழும் திருமாலின் திருமார்பு தரிசனத்தால், லட்சுமியின் முழுமையான அருளுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கச் செய்யும் திருத்தலமாக கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா திருவாழ்மார்பன் கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
சங்கரமங்கலம் என்ற கிராமத்தில் வசித்த சங்கரமங்கலத்தம்மையார் என்ற பெண்மணி ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அங்கிருக்கும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபடுவார். மறுநாளான துவதாசி நாளில் அவர், அந்தக் கோவிலில் இருக்கும் துறவிகள் அனைவருக்கும் அன்னதானம் செய்து மகிழ்ச்சி அடைவார்.
அவர் கோவிலுக்குச் சென்று வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், அந்த அம்மையாரைக் கோவிலுக்குச் செல்லவிடாமல் தடுத்ததுடன், மறைவாக இருந்து கொண்டு, அவருக்குப் பல்வேறு துன்பங்களையும் கொடுத்து வந்தான். அதனால் வருத்தமடைந்த அந்த அம்மையார், தான் கோவிலுக்கு வந்து செல்லும் போது, கண்களுக்குத் தெரியாத அசுரன் ஒருவன் தனக்குக் கொடுக்கும் துன்பத்தைச் சொல்லி அதிலிருந்து தன்னைக் காக்கும்படி வேண்டி வந்தார்.
ஒரு நாள், அவர் அந்தக் காட்டு வழியே கோவிலுக்கு வந்து கொண்டிருந்த போது, திருமணமாகாத இளைஞன் ஒருவன், அசுரன் ஒருவனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியாகிப் போனது. அங்கு அசுரனையும் காணவில்லை, அவனுடன் போரிட்ட இளைஞனையும் காணவில்லை.
அதன் பிறகுக் கோவிலுக்குச் சென்ற அம்மையார், கோவிலில் இருந்த இறைவனைப் பார்த்த போது, தான் வரும் வழியில் அசுரனுடன் போரிட்டுக் கொண்டிருந்த திருமணமாகாத இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். தனக்குத் துன்பமளித்துக் கொண்டிருந்த அசுரனைத் தான் வழிபட்டு வந்த இறைவனே வந்து அழித்திருக்கிறார் என்பதை நினைத்து மகிழ்ந்தார். அன்றிலிருந்து அந்தக் கோவிலில் இறைவன், திருமணமாகாத இளைஞராகவேக் காட்சியளிக்கிறார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
இக்கோவிலில் இருக்கும் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் எட்டு அடி உயரத்தில் திருவல்லபனாக இருக்கிறார். இங்கு மேற்கு நோக்கிய நிலையில் சுதர்சனமூர்த்தியாகவும் இறைவன் காட்சி தருகிறார். இங்குள்ள இறைவன் திருவாழ்மார்பன், கோலப்பிரான் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இறைவி செல்வத் திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் பிற கோவில்களைப் போன்று கருடன் இறைவனுக்கு எதிரில் இல்லாமல் 50 அடி உயரத்தில் இருக்கும் கல்தூண் ஒன்றில் பறக்கும் நிலையில் இருக்கிறார். இறைவனை வேண்டியவுடன், இக்கோவிலின் கல்தூணில் ஐம்பது அடி உயரத்தில் இருக்கும் கருடன், பக்தர்களின் வேண்டுகோளைச் செயல்படுத்த இறைவனை உடனடியாக ஏற்றிச் செல்லத் தயார் நிலையில் இருப்பதாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
திருவாழ்மார்பன் :
அன்றைய காலத்தில், கேரளாவில் திருமணமாகாத இளைஞர்கள் மேலாடை அணிவதில்லை என்பதால், இக்கோவிலில் திருமணமாகாத இளம் தோற்றத்தில் இருக்கும் இறைவனும் கிழக்கு நோக்கி நின்ற நிலையில், மேலாடையின்றி மார்பு தெரியும் நிலையிலேயேக் காட்சியளிக்கிறார். இறைவியான லட்சுமி இறைவனின் மார்பில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதாகக் கருதப்படுவதால், மார்பு தெரியக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இத்தலத்து இறைவன் ‘திருவாழ்மார்பன்’ என்று அழைக்கப்படுகிறார்.
பொதுவாக விஷ்ணு கோவில்களில் இறைவனின் திருவடி தரிசனம் சிறப்புக்குரியதாக இருக்கும். இங்கு இறைவனின் மார்பு தரிசனம் சிறப்புக்குரியதாக அமைந்திருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் இறைவனின் மார்பு தரிசனம் கண்டவர்களுக்கு இறைவி லட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைப்பதுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்கின்றனர்.
வழிபாடு :
இக்கோவிலில் தினசரி அதிகாலை 4 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் விஷ்ணுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதம் பூசம் நட்சத்திர பத்து நாட்களுக்கு முன்பாகக் கொடியேற்றத்துடன் தொடங்கி, பூசம் நட்சத்திர நாளில் ஆறாட்டு விழாவுடன் நிறைவடையும் பத்து நாட்கள் திருவிழா இக்கோவிலின் சிறப்புத் திருவிழாவாக இருக்கிறது.
கதகளி நேர்ச்சை :
இக்கோவிலில் குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் கேரளாவின் புகழ்பெற்ற கதகளி நடன நிகழ்ச்சியை நேர்ச்சையாக நடத்துகின்றனர். தினசரி நடைபெறும் இந்த நேர்ச்சைக்காகக் கோவிலில் கதகளி நடனக் கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நடனக்குழுவினைக் ‘கலாசேத்திரா’ என்று அழைக்கின்றனர்.
அமைவிடம் :
கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா நகரிலிருந்து அம்பலப்புழா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குத் திருவல்லா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய சிறப்புகள் :
* பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக இருக்கும் இத்தலத்தைப் பற்றி நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இங்குள்ள இறைவன் திருமணமாகாத இளம் தோற்றத்தில் உள்ள தலம் என்பதால், இக்கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபட அனுமதியில்லை. இருப்பினும், கேரள நாட்காட்டியின்படி, தனுர் (மார்கழி) மாதம் திருவாதிரை நாளிலும், மேடம் (சித்திரை) விசு நாளிலும் இறைவனின் மார்பு தரிசனம் சிறப்புக்குரியதாகக் கருதப்படுவதால், இவ்விரு நாட்களில் மட்டும் பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
* இக்கோவிலில் சங்கரமங்கலத்தம்மையார் வழிபட்டுத் திருமணமாகாதத் துறவிகளுக்கு தானம் செய்த போது, இக்கோவில் இறைவன் திருமணமாகாத இளைஞர் உருவில் வரிசையில் நின்று, தனக்களித்த உணவை ஏற்ற பின்பு, அந்தப் பெண்மணி விரதம் முடித்துச் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு, மாங்காயைக் கேட்டாராம். அவள் அதைப் பாக்கு மரத்தின் இலையில் வைத்து இறைவனுக்கு அளித்தாராம். அன்றிலிருந்து இத்தலத்தில் தினமும் பாக்கு மர இலையில் சாதமும் உப்பு, மாங்காயும் இறைவனுக்குப் படைக்கப்பட்டு வருகிறது.
* இத்தலத்தில் தனுர் (மார்கழி) திருவாதிரை நாளன்று நடைபெறும் விழாவைக் காணச் சிவபெருமான் இங்கு வந்து சென்றாராம். அன்றிலிருந்து இக்கோவிலில் திருநீறு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே இக்கோவிலில் கேரளாவுக்கே உரிய சந்தனத்துடன் விபூதியும் சேர்த்துத் தரப்படுகிறது.
* இக்கோவிலுக்குக் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் என்று இரு தீர்த்தங்கள் இருக்கின்றன.

சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும், அந்த ஊரிலேயே சில சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் ஒரு செவிவழி வரலாறு உள்ளது.
காவிரியின் வடபால் கடற்கரை பக்கம் உள்ள சிவாலயங்களை, சுந்தரரும் அவரது சீடர்களும் தரிசித்தபடி வந்து கொண்டிருந்தனர். பூம்புகாரை தரிசித்து விட்டு, திருமுல்லை வாயிலை நோக்கி அவர்கள் நடைபயணம் செய்து கொண்டிருந்தனர்.
வழியெல்லாம் காட்டுப்பகுதி. கரடு முரடான பாதை. அவர்கள் வடகால் என்ற ஊருக்கு வந்த போது நல்ல பசி. ஆனால் உண்பதற்குத்தான் உணவு எதுவும் கையில் இல்லை. அருகில் வீடுகளும் ஏதும் இல்லை.
சுந்தரரும் அவரது சீடர்களும் மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.
“இறைவா! உன்னை தரிசிக்க வந்த எனக்கும், என் சீடர்களுக்கும் ஏன் இந்த சோதனை?” என்று புலம்பி விட்டு மயக்கமானார் சுந்தரர்.
சற்று நேரத்தில் யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்த சுந்தரர், எதிரே ஒரு முதியவர் கையில் கட்டுச் சோற்று மூட்டையுடன் இருப்பதைக் கண்டார்.
“வாருங்கள் உணவருந்தலாம்” என்ற அந்த முதியவர், அனைவரையும் அமரவைத்து உணவை பரிமாறினார்.
அனைவரும் உண்டு மகிழ்ந்த போது “எங்கள் பசியை போக்கிய உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வது?” என்று சுந்தரர் கேட்க, பதிலுக்கு நகைத்த அவர் உடன் மறைந்து போனார்.
திகைத்தார் சுந்தரர். அப்போது அங்கு ஒரு அசரீரீ ஒலித்தது.
“சுந்தரரே! என் தந்தையின் நினைவாக பத்து சிவாலயங்களை கட்டுங்கள்” என்று அந்த அசரீரி கூற, சுந்தரருக்கும் அவரது சீடர்களுக்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி.
பேசியது விநாயகப் பெருமான் என்பதை புரிந்து கொண்ட சுந்தரர், அவர் கூறியபடியே செய்தார். ஆம்.. தன்னிடம் இருந்த பொருட்களைக் கொண்டு 10 சிவாலயங்களைக் கட்டி எழுப்பினார்.
ஆனால் பிற்காலத்தில் வந்த ஆட்சி மாற்றங்களால், அந்த சிவாலயங்கள் சிதைந்து போயின.
சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும், அந்த ஊரிலேயே சில சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் ஒரு செவிவழி வரலாறு உள்ளது.
அப்படி புதையுண்டு போன ஒரு சிவலிங்கம் தான் ஒரு வயதான பெண்மணியின் பார்வையில் பட்டு, ஆலயமாக உருவானது. அது என்ன கதை?
இடமணல் ஒரு சிறு கிராமம்.
அந்த கிராமத்தில் உள்ள தன் உறவினர்களை பார்க்க, வயதான தம்பதியர் இருவர் அந்த கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நடந்து வந்த களைப்பு தீர சாலையோரம் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தனர். நிழலின் குளுமை இருவருக்கும் சுகமாக இருந்தது. சற்றே கண்ணயர்ந்தனர் இருவரும். கண் விழித்து தங்கள் பயணத்தைத் தொடர முயன்ற போது, அந்தப் பெண்மணியின் பார்வை மரத்தடியை உற்றுப் பார்த்தது.
அங்கே, கறுப்பு வண்ணத்தில் மணலில் ஏதோ தெரிய, அந்த பெண்மனி தன் கணவரிடம் அதைச் சுட்டிக் காட்டினார். அவரும் பார்த்தார். இருவரும் அதன் அருகே சென்று மணலை சற்றே கரங்களால் தோண்டிப் பார்த்த போது, அது ஒரு சிவலிங்கத்தின் முன் பகுதி என்பதை அறிந்தனர்.
உடனே ஊருக்குள் சென்று, மக்களிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்தனர். ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட சிலர், ஓடி வந்து அந்த மணல் மேட்டை தோண்டிய போது அனைவருக்கும் சொல்லொண்ணா வியப்பு. அங்கே, பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி கிடைத்தது. அனைவரும் மெய்சிலித்துப் போய் நின்றனர்.
அனைவரும் கூடி அதே இடத்தில் சில நாட்களில் ஒரு சிவாலயம் அமைத்தனர். அப்படி கண்டெடுத்த சிவலிங்கம் தான் இடமணல் என்ற அந்த ஊரில், தற்போது இறையருளை அள்ளி வழங்கி வருகிறது.
இத்தல இறைவன் பெயர் ஓதனேஸ்வரர். இறைவி பெயர் அன்னபூரணி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் காணப்படும் நந்தி, பலிபீடத்தை அடுத்து சிறிய மகாமண்டபம் உள்ளது. அதன் வலது புறம் அன்னை அன்னபூரணி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
மண்டபத்தின் வலது புறம் முருகனும் இடது புறம் விநாயகரும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.
கருவறையில் இறைவன் ஓதனேஸ்வரர், லிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்று இங்கு இவைனின் திருமேனி மிகப் பெரிய அளவில் காணப்படுவதை காணும்போது, நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்தில் உற்சவர் திருமேனி இல்லை. எனவே ஆலயத்தில் வீதி உலா கிடையாது. இந்தக் கோவில் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் திறந்திருக்கும்.
காணமல் போய் மீண்டும் மீண்டு வந்து அருள்பாலிக்கும் இந்த இறைவன், தனது பக்தர்களின் காணாமல் போன பொருட்களையும், இழந்த சொத்துக்களையும் மீட்டு தரும் அருள் குணம் கொண்டவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் சீர்காழியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, இடமணல் என்ற கிராமம்.

குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் அமாவாசை நாட்களில் மயிலாடுதுறை திருவாலங்காடு திருத்தலம் வந்து புத்திரகாமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் பற்பல நற்பேறுகளை வேண்டும் அபிராமிபட்டர் ‘கலையாத கல்வியும்.. குறையாத வயதும்.. ஓர் கபடு வாராத நட்பும்.. கன்றாத வளமையும்.. குன்றாத இளமையும்.. கழுபிணியில்லாத உடலும்.. சலியாத மனமும்.. அன்பகலாத மனைவியும்.. தவறாத சந்தானமும்' வேண்டும் என்கிறார். தான் கேட்டதில் எது தவறினாலும் பரவாயில்லை, ஆனால் சந்தான பாக்கியம் என்படும் குழந்தைப் பேறு தவறாமல் கிடைக்க வேண்டும் என்கிறார் அவர்.
திருமணத்துக்குப் பிறகு மூன்று மாதத்தில் இருந்தே கணவனிடமும், மனைவியிடமும் ஊரார், உறவினர்கள் கேட்கும் கேள்வி ‘விசேஷம் ஏதாவது உண்டா?' என்பது தான். இங்கு விசேஷம் என்றால் புத்திர பாக்கியம். சிலருக்கு உடனே கிட்டும். பலருக்கும் தற்போதைய உணவு பழக்க முறையாலும், கர்ம வினைகளாலும், சாபங்கள், தோஷங்களினாலும் புத்திரபாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.
ஆண்களில் பலருக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும்பாலும் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றது. அதுபோல மாதவிலக்கில் தடைகள், கருமுட்டை உருவாவதிலுள்ள தடைகள், குழாயில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்சினைகள் பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களாக இருக்கின்றது.
அதே வேளையில் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது ஆலய தல புராணம் ஒன்று. ஆம்! அந்த ஆலயமே ‘திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்.
திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டத் திருக்கோவில் இது. மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலம் தாண்டி 2 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு உள்ளது. திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள ஈசனின் ஊர்த்தவ நாட்டியம் நடந்த, காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலம்களிலும் ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பது தான். அதே போல் அன்னையின் திருநாமமும் வண்டார் குழலம்மை என்பதே.
நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ்வர தீர்த்தம் ஆகும். இங்கு நீராடி, இத்தல ஈசனையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்துதான் அதிதி என்பவர், தேவர்களைப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இந்திரன் இத்தல தீர்த்தத்தில் நீராடி, தன் மகன் ஜெயந்தனை பெற்றானாம்.
பரதன் என்னும் அந்தண சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தைப்பாக்கியம் இல்லாமல் வருந்தினான். இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை உடனுறை சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு தவம் மேற்கொண்டான்.
தவத்திற்கு இரங்கிய ஈசன் அசரீரியாக, ‘பரதா! அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிசேகம், அர்ச்சனை செய்து, கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட்டு வா. கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிட்டும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் அத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபட மலடியும் குழந்தை பெறுவாள்' என்று அருளினார்.
பரதனும் அவன் மனைவியும் பங்குனி அமாவாசை நாளில் திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டனர். அதன் பயனாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது என்கிறது தல வரலாறு.
இத்தலத்தில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. பழைய அம்மன் சிலை சேதமானதால், புதிய சிலை செய்யப்பட்டது. புதிய சிலையை பிரதிஷ்டை செய்ததும், பழைய சிலையை அகற்ற முயன்றனர். அப்போது ஒலித்த அசரீரி ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது பின்னமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து வழிபடத் தொடங்கினர்.
இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் அம்பாள் சன்னிதியின் கருவறை தீபத்தில் தூய பசு நெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். இத்தலத்தில் பழைய அம்மனும் உயிரோட்டமானவள். எனவே மூலவர் வண்டார்குழலி அம்மனுக்கு செய்யும் அனைத்து உபசாரங்களையும், பழைய அம்பாளுக்கும் செய்து வரவேண்டும்.
பழைய வண்டார்குழலி அம்மன் அருகில் தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இவருக்கு புனர்பூசம், பஞ்சமி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னதி இருக்கிறது.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தனி சன்னிதியில் மேற்கு நோக்கிய வண்ணம் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தல மூலவர் வடாரண்யேஸ்வரரும், மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது இத்தலம் மிகச் சிறந்த பரிகார திருத்தலம் என்பதைக் காட்டுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் அமாவாசை நாட்களில் இங்கு வந்து புத்திரகாமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
ஆனாலும், புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள் பங்குனி மாத அமாவாசை நன்னாள் தான். அன்றையதினம் இங்கு வந்து இத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை மூன்றுமுறை வலம் வந்து புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம். அன்றைய தினம் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பரம்பொருளாகிய இறைவன், உலகத்தில் உள்ள உயிர்களையெல்லாம் படைத்தான். அவ்வுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும் வகையில், தன்னுடைய அருவ நிலையில் இருந்து இறங்கி, இந்த மண்ணுலகில் ஆங்காங்கே கோவில்களில் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி, தன் அடியாளர்களுக்கு அருள்புரிகிறான். அந்த வகையில் இறைவனை வணங்குவதற்கு நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக போற்றி வந்த அருள் நிறைந்த இடங்களே ஆலயங்கள் ஆகும்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்ற மாணிக்கவாசகரின் வரிகளுக்கு ஏற்ப, தென்னாடாகிய தமிழகத்தில் சிவபெருமான் உறையும் திருக்கோவில்கள் பல உள்ளன. சைவ சமய குரவர்கள், இறைவன் எழுந்தருளிய இடங்களுக்கு நேரடியாக சென்று இறைவனை வணங்கி, போற்றிப் பாடிய திருத்தலங்கள் ‘தேவாரத் தலம்’ என்று அழைக்கப்படுகின்றன. அதே போல் தேவாரம் பாடியத் திருத்தலங்களில் இருந்தபடியே, அருகில் உள்ள ஆலயங்களில் வீற்றிருக்கும் இறைவனையும் போற்றிப் பாடியிருக்கிறார்கள். அப்படி தேவாரத் தலத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள இறைவனை நினைத்து பாடப்பெற்ற இடங்கள், ‘தேவார வைப்புத் தலம்’ என்று அழைக்கப்படுகின்றன.
உலக உயிர்களையெல்லாம் காக்கும் பொருட்டு, இறைவன் எழுந்தருளிய இடங்களிலெல்லாம் கோவில்கள் கட்டப்பட்டு, அங்கு புராணங்கள், இறை மூர்த்தங்கள், இறைவன் திருவிளையாடல்கள் என்று அனைத்திற்கும் உயிர் கொடுக்கப்பட்டு, பக்தி மார்க்கமும் இறை நம்பிக்கையும் வளர்க்கப்பட்டன. அந்த வகையில் அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், பிற்கால சோழர் கலைக்கு சான்றாகவும், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டும் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
முதலாம் ராஜாதி ராஜனின் (1018-1044) ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில், சுமார் 973 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் புதிய கற்கால கருவிகள், முதுமக்கள் தாழி என்று வரலாற்று சான்றுகள் கிடைக்கப் பெற்றிருப்பதால், இவ்வூர் புராணக் காலத்திலிருந்து குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது.
செட்டித்திருக்கோணம் என்று அழைக்கப்படும் இவ்வூர், பிற்கால சோழர் காலத்தில் திருக்குன்றம் என அழைக்கப்பட்டு, விஜய நகர தெலுங்கு மன்னர்களின் ஆட்சி காலத்தில் திருக்கோணம் என வழங்கப்பட்டுள்ளது. வணிக நகரமான இப்பகுதி செட்டியார்கள் வாழ்ந்த பகுதியாதலால் இவ்வூர் ‘செட்டித்திருக்கோணம்’ என பெயர் பெற்றது.
தல வரலாறு :
இங்குள்ள கல்வெட்டுகள் இத்தல இறைவனை ‘இரண சிங்க ஈஸ்வரமுடைய மகா தேவர், இரணடூசுபறன்’ என்றும், அம்பாளை அறம் வளர்த்தவள் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் இப் பகுதி மக்களாலும், வழி வழியே வந்த கோவில் குருக்களாலும் இத்தல இறைவன் ‘இரண்யேஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறார். மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரர் குல தலைவன் இரணியனை வதம் செய்தார். அந்த பாவம் நீங்குவதற்காக இத்தல இறைவனை வணங்கினார் என்று கூறப்படுகிறது.

வைகுண்ட காவலர்களான ஜய, விஜயர்கள் இருவரும், சனகாதிய முனிவர் அளித்த சாபத்தின் விளைவாக இரணியாட்சன், இரணியன் என்ற அசுரர்களாக அவதரித்தனர். இரணியாட்சன் பூமியை பாயாக சுருட்டி பாதாள உலகில் பதுங்கினான். மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து அவனை வதைத்தார். அதனால் கோபமுற்ற அவனது சகோதரன் இரணியன், மகா விஷ்ணுவை எதிரியாகக் கருதினான். கடுமையான தவம் இருந்த இரணியன், சிவபெருமானிடம் இருந்து ‘தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ, இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக்கூடாது’ என்ற அரிய வரத்தைப் பெற்றான்.
தான் பெற்ற வரத்தின் காரணமாக, தன்னை எதிர்ப்பவர் எவரும் இல்லை என்று ஆணவம் கொண்டான். அதன் காரணமாக தன்னையே கடவுள் என்றும், அனைவரும் தன்னைத் தான் வணங்க வேண்டும் என்றும் சொல்லி அனைவரையும் கொடுமைப்படுத்தினான். இந்த நேரத்தில் இரணியனுக்கு, பிரகலாதன் என்ற மகன் பிறந்தான். தன் மகனையும் விஷ்ணுவுக்கு எதிரியாகவே வளர்க்க நினைத்தான் இரணியன். ஆனால் விதி வேறு கணக்குப் போட்டது. மகாவிஷ்ணுவின் திருவருளால், பிரகலாதன் உள்ளத்தில் அரி பக்தி தோன்றியது. வைகுண்ட வாசனே அனைத்து உலகிற்கும் ரட்சகன் என்று நம்பினான்.
தினந்தோறும் ‘ஓம் நமோ நாராயணா’ என்று கூறி, திருமாலை வழிபட்டு வந்தான். அதனை விரும்பாத இரணியன், ‘நானே கடவுள்.. என்னையே வணங்க வேண்டும்’ என்று மகனிடம் வற்புறுத்தினான். பிரகலாதனோ, ‘திருமாலே தன் தெய்வம்’ என்றான்.
எவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காத பிரகலாதனை, மகன் என்றும் பாராமல் அழித்திட முடிவு செய்தான். ஆனால் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் அவனை ஸ்ரீமன் நாராயணன் காத்தருளினார்.
ஒரு கட்டத்தில் பிரகலாதனிடம் ‘உன் நாராயணன் எங்கிருக்கிறான்?’ என்று இரணியன் கேட்க, ‘அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்’ என்றான் பிரகலாதன். உடனே இரணியன் ஒரு தூணை சுட்டிக்காட்டி.. ‘இந்தத் தூணில் இருக்கிறானா?’ என்றபடியே அந்தத் தூணைப் பிளந்தான்.
அப்போது தூணில் இருந்து நரசிம்ம உருவத்துடன் திருமால் வெளிப்பட்டார். இரணியனை தன் மடி மீது வைத்து, அந்திம நேரத்தில் வீட்டின் வாசல்படியில் நின்று தன்னுடைய கூரிய நகங்களைக் கொண்டு வதம் செய்தார். அதன்பிறகும் நரசிம்மரின் சினம் அடங்கவில்லை. இதனைக் கண்ட தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் இதுபற்றிக் கூறினர். அவர் சரபப் பட்சியாக உருவெடுத்து, சிறகுகளால் நரசிம்மரை அடித்து களைப்படையச் செய்தார். தனது அலகினால் அவரை ரணம் செய்து, தோலை உரித்து தன் உடம்பில் போர்த்திக்கொண்டார்.
இதையடுத்து சினம் தணிந்த மகாவிஷ்ணு, தன்னை மன்னித்தருளும்படி இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் முன் தோன்றிய ஈசன், இரணியனை கொன்ற ஜென்ம பகை பாவத்தை போக்கி, திருமாலுக்கு அருள்புரிந்தார். மகா விஷ்ணு ரணம் அடைந்த நரசிம்மராக (சிங்க), ஈஸ்வரனை வழிபட்டதால் இத்தல இறைவன் ‘ரணசிங்க ஈஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயம் ஜென்ம பகை மற்றும் பாவம் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்கு இறைவனுக்கு 32 விளக்குகள் ஏற்றி வழிபட்டால் தங்களது ஜென்ம பாவம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோவிலில் அறம் வளர்த்தவள் எனப்படும் அம்பாள், தையல்நாயகி, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், ஜேஷ்டா தேவி, பிரம்மன், ஐயனார் போன்ற சிற்பங்கள் கலையழகோடு தரிசிக்கும் பக்தர்களை பரவசப் படுத்துகிறது. இரண சிங்க ஈஸ்வரருக்கு நாள்தோறும் இருகால பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
வியாபார நஷ்டம் தீர்க்கும் தலம் :
இந்த ஆலயம் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இவ்வூர் மதுராந்தகபுரம் என்ற பெயரோடு பெரிய வணிக நகரமாக திகழ்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த எண்ணெய் வியாபாரம் செய்யும் செட்டியார் ஒருவர், தன்னுடைய வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, குடும்ப பாரம் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். சிறந்த சிவ பக்தரான அவரது கனவில் தோன்றிய இத்தல இறைவன், ‘மகா சிவராத்திரி அன்று என்னை பூஜித்து அருள் பெருவாயாக!’ என்று கூறி மறைந்தார். மறுநாள் சிவராத்திரி என்பதால் அந்த வியாபாரி, இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தார். இதையடுத்து அவரது வியாபாரம் பெருகி, நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் பெரும் பொருள் சேர்த்தார் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
எனவே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், பொருள் சேர்க்க நினைப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று, இங்குள்ள அடியார் தீர்த்தத்தில் நீராடி தல இறைவனை பூஜிப்பதால் வியாபார நஷ்டம் தீர்ந்து வியாபாரம் இரட்டிப்பாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பணி :
இத்திருக்கோவிலில் அரியலூர் பாளையக்காரர் விசய ஒப்பிலாத மழவராயர் (கிபி 1809) ஆட்சி காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சுமார் 208 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த ஆலயத்தில் திருப்பணிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணியில் ஆன்மிக அன்பர்கள் பங்கேற்று இத்தல இறைவனின் அருளைப் பெறலாம்.