என் மலர்
முக்கிய விரதங்கள்
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்..
அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.
மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரவும்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்திவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.
இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, அவர்களும் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் ருண விமோசனம் என்று கூறக்கூடிய கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார்.
சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் ருண விமோசனம் என்று கூறக்கூடிய கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். நரசிம்மர் அவதாரம் எடுத்த காலம் மாலைப்பொழுது என்பதால் மாலை வேளையில் நரசிம்மரை வழிபாடு செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.
சுவாதி நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.
மேலும் துலா ராசியில் சூரியன் சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்று தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. ஆகவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாகலாம்.

வைகாசி வளர்பிறை சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளை பெற நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.
பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
இந்தப் வைகாசி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பணியிடங்களில் தொழில் வியாபாரங்களில் இருந்து வரை நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி அடைந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாமல் காலதாமதமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் ஏழ்மை நிலை அறவே நீங்கும்.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. இந்த நேரத்தில் விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வந்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
ராகு கால துர்க்கை பூஜையில் முதலிடம் பெறுவது, எலுமிச்சைப் பழ விளக்கு ஆகும். விளக்கேற்றும்போது சில மந்திரத்தை உச்சரிப்பது நன்மைகளை வழங்கும். அதாவது, பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் விளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றுகையில், ‘சாமுண்டாய விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றிய பிறகு கோவிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ‘ஐம்’ என்ற சொல் சரஸ்வதியையும், ‘க்ரீம்’ என்ற சொல் லட்சுமியையும், ‘க்லீம்’ என்ற சொல் காளியையும் குறிக்கும். ‘சாமுண்டாய விச்சே’ என்ற ‘சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே’ என பொருள்.
தீராத நோய்கள் தீர விரதம் இருந்து ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு விரதம் இருந்து வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு இரண்டு எலுமிச்சைப் பழ விளக்கு போட்டு, அம்மனை நோக்கி தீபம் இருக்குமாறு ஏற்ற வேண்டும்.
ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடங்கள் ஆகும். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. இதில் மிகவும் விசேஷமாகக் கருதப்படுவது, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் விரத வழிபாடு ஆகும். இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா.'

வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எப்படிப்பட்ட கர்மவினைகளையும் தீர்க்கும் அனைத்து உலகங்களுக்கான நாயகனாக இருக்கிறார் விநாயகப் பெருமான். அவரை சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்து வழிபட்டால் நாம் பெறாத நன்மைகளே இல்லை எனக் கூறலாம். அந்த வகையில் சிறப்பான வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி எனவும், அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினங்களும் விநாயகர் பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் முருக வழிபாட்டிற்குரிய மாதமாக இருக்கும் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
வைகாசி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி உடல் நல குறைபாடுகள் நீங்க விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த திதி ஆகும். இத்தினத்தில் மேற்கூறிய முறையில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது நீங்கும். வீட்டில் நிம்மதியற்ற நிலை மாறி அமைதி, மகிழ்ச்சி ஏற்படும். பிறரோடு ஏற்பட்ட பகைமைகள் நீங்கி சமரசம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிபெறும்.

ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்க நவசக்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.
ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால், விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவம் உள்ளோர்களின் கருத்து.
சிலர் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உண்பார்கள். இதே போல், நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருந்து ஜெபிப்பவர்களும் உள்ளார்கள். இவையணைத்தும் அவரவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாரு மாறுபடும். ஒருவர் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் இருந்தால், மற்றவர்களும் அப்படி இருக்கவேணடும எனறு எண்ணுவது தவறு. இறைநிலை மட்டும் மனதில் கொண்டாலே போதும்.
அந்த வகையில, இந்துக்கள் நவகிரக விரதம், நவராத்திரி விரதம், வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படுகிறது. இவைகளில் எந்த விரதத்தை கடைபிடித்தாலும், நம் எண்ணத்தில் உறுதியாக இருந்து நவகிரகஙகள் மற்றும் இறைநிலை பரப்பிரம்மத்தை மனதில் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே, நாம் நினைத்த காரியம் கைகூடும்

திருமண வரம் வேண்டி தவிப்பவர்கள் விரதம் இருந்து 9 வாரம் நரசிம்மரை வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
செவ்வாய் தோஷம்தான் இப்போது நிறைய பேரை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை செவ்வாய் தோஷம் ஏற்படுத்துவதாக நிறையப் பேர் கருதுகிறார்கள். அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை செய்து இருப்பார்கள்.
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் தோஷத்தை எளிதாக கடக்கலாம். 9 வாரம் விரதம் இருந்து நரசிம்மருக்கு யார் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ நிச்சயமாக அவர்கள் குறை தீரும். குறிப்பாக திருமண வரம் வேண்டி தவிப்பவர்கள் விரதம் இருந்து 9 வாரம் நரசிம்மரை வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

விரத நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
* ‘சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள்.
* உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள்.
* உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.
* உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து, அங்கே பசுவின் குளம்படிபட்ட மண் இருந்தால் அதை எடுத்து உடலில் பூசிக் கொள்ளலாம். இதுவும் உடல் சுத்தி பலனைக் கொடுக்கும். இதற்கு ‘வாயவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.
* விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்து, வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை ‘திவ்ய ஸ்நானம்’ என்பர்.
இதில் எது சாத்தியமோ, அதை விரத நாட்களில் குளிக்க முடியாத நிலை ஏற்படும் போது, கடைப்பிடிக்கலாம்.

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
விசேஷங்கள் நிறைந்த வைகாசி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான வைகாசி மாதத்தில் வருகின்ற இந்த வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று இறுதியில் சிவனில் கலக்கின்ற பாக்கியமும் பெறுகிறார்கள்.
வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.
பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகன் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கோவிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சித்ரான்னங்களை அன்னதானம் வழங்குவது சிறப்பானதாகும். இம்முறையில் வைகாசி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு பிறருடன் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீங்கும். உடல்நல குறைபாடுகள் அறவே நீங்கும். வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படுகின்ற நிலை உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ ஏற்படாது. குடும்பத்தில் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.

சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.
மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும். சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.
ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.
9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.
சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும்.
இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஸ்ரீநரசிம்மனை விரதம் இருந்து பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய பேரருளாளன்.
ஸ்ரீநரசிம்மனுடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவனாகவும் சேவை சாதிப்பதால், அவனைப் பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.
தனக்கு அபசாரம் செய்தவர்களை அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவனால் முடியாது.
ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவனுக்கு. ஆதலால்தான் ‘‘பக்தவத்ஸலன்’’ என்ற திருநாமம் கொண்டவன் அவன், அதாவது, தன் பக்தர்களுக்குக் குழந்தை போன்றவன் என்பது பொருள்.
நம்மிடம் அளவற்ற கருணை கொண்ட ஸ்ரீ நரசிம்மனிடம் பயம் ஏன்? திருமலையின் எழுந்தருளியுள்ள வேங்கடத்து இன் அமுதனின் ஆராதனை மணியின் அம்சமாக அவதரித்தவரும், மகாபுருஷருமான ஸ்ரீஸ்வாமி வேதாந்த தேசிகரும், ஸ்ரீநரசிம்மன் தனது பக்தர்களிடம் வைத்துள்ள கருணையைப் பற்றி, மனம் உருகிப் போற்றியிருக்கிறார்.
ஸ்ரீநரசிம்மனை விரதம் இருந்து பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவன் எளிதானவன். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய பேரருளாளன்.
ஆதலால், ஸ்ரீலட்சுமி நரசிம்மனைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாகப் பலனும் காண முடியும்.
தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மனின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் அமுது செய்விக்க (நைவேத்தியம்) வேண்டும்.
48 நாள்களாவது விரதம் இருந்து பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவன் நரசிங்கமாக அவதரித்து மாலை நேரத்தில்தான்.
ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மன் மட்டுமன்றி, தெய்வத்தின் எந்த உருவையும், கிரமதோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், புலால் உணவைத் தவிர்ப்பதும், நீராடி, நியமத்துடனும், தூய்மையாக உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்விதம், வழிபட்டு வந்தால், கொடிய, நீண்டகாலத் துன்பமும் நீங்கும்.

நரசிம்மருக்கு சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகலாம். மேலும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
நரசிம்மரை வழிபட்டால் சிவன் - பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
நரசிம்ம மூர்த்தியை தியானிப்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நரசிம்ம மூர்த்தியை உபாசனா தெய்வமாகக் கொள்பவர் அஷ்டதிக்குகளிலும் புகழ்பெற்று விளங்குவர்.
ஸ்ரீவைஷ்ணவ ஜோதிட சம்பிரதாயத்தில் ஞானகாரகன் கேதுவுக்கு அதிதேவதையே நரசிம்மர்தான். பில்லி, சூன்யம், ஏவல், ஆபிசாரம் போன்ற மனிதர்களின் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும் நேர்முகமான எதிரிகளால் வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் நிவர்த்தி செய்வதும் நரசிம்மர்தான்.
சுவாதி நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.
மேலும் துலா ராசியில் சூரியன் சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்று தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. ஆகவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகலாம்.