என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஜனன கால ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்கள் விரதம் இருந்து குருவின் ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர்சென்று முருகனையும் விரதம் இருந்து வழிபடலாம்.
    நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு.

    வியாழன் கிரகத்தில் இருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக் கதிர்கள், சூரிய ஒளியோடு கலப்பதால்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றுகிறது.

    ஜனன கால ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்களுக்கு, உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிகச் சிந்தனை, தெய்வ பக்தி, நல்ல புத்திரர், நல்ல அறிவு, கற்பு, மந்திர சாஸ்திரம், தெய்வ தரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மிக குருக்களின் நட்பு, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, செல்வாக்கு, பணம் ஆகிய நற்பலன்கள் தானாக வந்து விடும். அத்துடன் குழந்தைகளிடம் அதிக அன்பு உண்டாகும். புண்ணிய காரியங்கள் செய்வதில் நாட்டம் ஏற்படும்.

    தனுசு, மீன லக்னம் அல்லது தனுசு, மீன ராசியில் பிறந்தவர்களிடம் நட்பு பிறக்கும். குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் குரு ஓரையில் நடக்கும். குரு வழிபாடு செய்வதில் ஆர்வம் பெருகும். குரு வழிபாடு செய்யும் பக்தர்களுடன் நட்பாவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மஞ்சள் நிற ஆடைகளின் சேர்க்கையும், மஞ்சள் நிற ஆடைகள் அணிவதில் விருப்பமும் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உருவாகும். ஆசிரியர்களின் நட்பு கிடைக்கும். ஆலய திருப்பணியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

    ஜனன கால ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்களுக்கு, குழந்தைகளால் அவப்பெயர், ஆரோக்கியமின்மை, ஆன்மிக நாட்டக் குறைவு, பொருளாதார வளர்ச்சி குறைவு போன்றவை ஏற்படும். அதுபோன்ற குறைபாடு உள்ளவா்கள், விரதம் இருந்து குருவின் ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர்சென்று முருகனையும் விரதம் இருந்து வழிபடலாம். தவிர வசதி இல்லாதவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தரலாம். யானைக்கு கரும்பை உணவாக கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சித்தர்களின் ஜீவ சமாதி சென்று வழிபடலாம். வியாழன் அன்று கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.
    சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

    வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

    ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
    சிறந்த முறையில் கல்வி கற்றிருந்தாலும் தகுதியான வேலை கிடைக்காமல் வேதனைப்படுபவர்களுக்கான விரத பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
    படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் தற்போது உருவாகி வருகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும் நமது முன்னோர்களின் புண்ணிய பலனும் தெய்வ அருட்கடாட்சம் அவசியமாகிறது.

    அம்மன் அல்லது அம்பாள் விரத வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் விரதம் இருந்து அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.

    மேற்கண்ட முறையில் அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று, சிறப்பான வகையில் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் நீண்ட நெடுங்காலமாக தகுதியான வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்லவேளை அம்பாளின் அனுக்கிரகத்தால் கிடைக்கப் பெறுவார்கள்.
    வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
    லட்சுமி வழிபாடு முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல், வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும்.

    அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும் படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக விரதம் இருந்து பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

    லட்சுமிதேவிக்கு எந்த தினங்களில் விரதம் அனுஷ்டிக்கலாம்

    செல்வ மகளான ஸ்ரீ லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக இருக்கின்றன.

    இந்த தினங்களில் விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்க வழி வகை செய்கிறது.
    அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.
    கோள்களின் சுழற்சிபடி, ஜோதிட சாஸ்திரம் நாட்களையும் நேரங்களையும் நிர்ணயித்து அதன்படி செயல்களை செய்ய வழிகாட்டியுள்ளது. அவற்றில் திதிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் சில திதிகளை நன்மை தருவதாக ஏற்றுக்கொண்டு, சிலவற்றை சரியில்லை என ஒதுக்கியும் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திதியே அஷ்டமி.

    பிரதி மாதம் பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் திதியே அஷ்டமி. எட்டு என்பதையும் ராசியில்லாத எண்ணாகவே எக்காலத்திலும் வெறுத்து ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் வருத்தம் கொண்ட அஷ்டமி திதி, தனது அதிதேவதையான பெருமாளிடம் இதற்கான தீர்வு வேண்டி நின்றது.

    பெருமாளும் அதன் குறைதீர்க்க அந்தத் திதியில் தனது கிருஷ்ண அவதாரத்தை எடுத்தார். அன்றைய தினம் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. சைவத்திலும் அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.
    முருகப்பெருமானின் முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும்.
    தினந்தோறும் முருகப் பெருமானை தினமும் வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு விரத வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

    முருகப்பெருமானின் முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

    சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

    வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.
    திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.
    “சோமன்” என்றால் சம்ஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.

    இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

    ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம். திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.
    மாரியம்மனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.
    பொதுவாக அம்மன் என்றாலே அதீத சக்தி வாய்ந்த உக்கிர தெய்வங்கள் என்பதால் அந்த தெய்வங்களை விரதம் இருந்து வீட்டில் வழிபடுவதை விட அம்மன் கோயில்களில் சென்று அம்மனை வழிபடுவது சிறந்ததாகும். அப்படி வழிபடும் போது அம்மன் தெய்வங்களுக்கு மிகவும் பிரியமான கேழ்வரகு கூழ் நைவேத்தியம் செய்து வழிபடலாம் அல்லது பொங்கல் வைத்தும் வழிபடலாம். அம்மன் தெய்வங்களைப் வழிபடுவதற்குரிய சிறந்த காலமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் விரதம் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று மாரியம்மனை வழிபடுவது சாலச் சிறந்ததாகும்.

    மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட விரும்புவார்கள் வாரத்தில் வருகின்ற செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் காலை அல்லது மாலை நேரத்தில் வருகின்ற சுப முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இது இயலாதவர்கள் மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் அம்மனை வழிபடலாம். அம்மன் தெய்வங்களுக்குரிய ஆடி மாதத்தில் வருகின்ற ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும். மற்ற காலங்களில் மாரியம்மனுக்கு கூழ் படைத்து அல்லது பொங்கல் வைத்து வழிபட முடியாதவர்களும் ஆடி மாதத்தில் மட்டுமாவது மேற்கூறிய வழிபாட்டை செய்வது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.

    மாரியம்மன் வழிபாடு பலன்கள்: சக்தி வாய்ந்த காக்கும் தெய்வமாக மாரியம்மன் தேவி இருக்கிறார். பொதுவாக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அம்மை நோய்கள் மற்றும் இதர உடல்நல பாதிப்புகள் நீங்கவே மாரியம்மனை வழிபடுகின்றனர். எனினும் மாரியம்மனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சக வியாபாரிகளின் கடும் போட்டி மற்றும் மறைமுக சதிச் செயல்களால் வியாபாரம், பண நஷ்டம் போன்றவை நீங்கி லாபங்களை பெருக்குகிறது.

    ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.
    விநாயகப் பெருமானுக்குரிய ஒரு சிறப்பான தினமாக ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் வருகிறது. இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஆனி மாதத்தில் ஆனி பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
    புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
    புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

    பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து, அப்படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது பச்சை நிற துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.

    புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.

    நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
    ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் விரதம் இருந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.
    ஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும். அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.
     
    12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.
     
    நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.
     
    தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.
     
    சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.
     
    தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.
     
    தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.
     
    அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.
     
    சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை விரதம் இருந்து வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.
     
    அதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் விரதம் இருந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.
    ‘வட் பூர்ணிமா’ விரத கொண்டாட்டத்தையொட்டி கணவரின் ஆயுளுக்காக ஆலமரத்தில்நூலை சுற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
    வட மாநிலங்களில் பெண்களால் ‘வட் பூர்ணிமா’ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் விரதம் இருந்து இறைவனை வழிபடுகின்றனர்.

    சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை தனது பதிபக்தியால் எமனிடம் இருந்து காப்பாற்றினாள் என புராணம் கூறுகிறது. அதை நினைவுப்படுத்தும் வகையில் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மராட்டியத்தில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    நேற்று மராட்டியத்தில் ‘வட் பூர்ணிமா’ எனப்படும் திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

    பின்னர் தங்கள் கணவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு கொண்டனர்.

    மும்பையில் தாராவி, காட்கோபர், தாதர், அந்தேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ‘வட் பூர்ணிமா’ திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை திருமணமான பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 
    ×