search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அமாவாசை விரதம்
    X
    அமாவாசை விரதம்

    இன்று ஆனி அமாவாசை விரதம்

    ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.
    சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

    வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

    ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
    Next Story
    ×