என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று தை மாத தேய்பிறை பிரதோஷம். ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் விசேஷமானது.
    இன்று தை மாத தேய்பிறை பிரதோஷம். ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

    ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம், பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார். அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
     
    ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம், சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
     
    பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள், காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல், மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும் ,மனமும் நலம் பெறும்.

    சிவப்பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
    விநாயகர் சஷ்டி விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
    இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர்.

    கடைசிநாள் முழு உபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாள் அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.
    எத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
    எத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத்தான் ‘அமாவாசை’ திதி என்கிறோம். அமாவாசை என்பது இருள்மயமான நாள். இதனை ‘நிறைந்த நாள்’ என்பார்கள். வாழ்வில் வளம் நிறைய அன்றைய தினம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.

    திதிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது, அமாவாசை திதி. மகத்துவம் நிறைந்த இந்த நாளை, ‘நீத்தார் நினைவு நாள்’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்த இனிய நாளில் நம் முன்னோர்கள் மற்றும் இறந்து போன தாய்-தந்தையரை நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். இதனால் பிதுர் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

    ‘கருடபுராணம்’, ‘விஷ்ணு புராணம்’ போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இறந்தவர்களை நினைத்து, ஒவ்வொரு அமாவாசையிலும் தவறாமல் வழிபடுவதால், அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். அதோடு நமது பாவ வினைகள் அகல்வதற்கான வழியும் பிறக்கும்.

    பொதுவாக அமாவாசை அன்று அதிகாலையில் புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் சென்று இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பாகும். இறந்த முன்னோர்களின் படங்களுக்கு பூ மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கியமான ஸ்தலங்களில் திதி கொடுப்பது மிகவும் சிறப்பாகும்.

    தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், திருவரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி போன்ற தலங்கள் முக்கியமானவை. இவை நீங்கலாக வடநாட்டில் காரி, கயா, பத்ரிநாத், அலகாபாத், திருவேணிசங்கமம் போன்றவைகளும் பிரசித்தி பெற்றவை.

    அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ‘பிதுர்காரகன்’ என்று கருதப்படும் சூரியனை வழிபட்டால் பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டில் காகம் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது. அமாவாசை விரதத்தை மேற்கொள்ளும் பொழுது முதலில் எல்லா உணவுகளையும் வைத்து காகத்தை அழைத்து அன்னமிட்டு அதன்பிறகு தான் விரதத்தை கைவிட வேண்டும். காகம் நம் முன்னோர் களின் வடிவில் வந்து உணவை எடுத்துச் செல்லும். வைத்த உடனேயே காகம் வந்து விட்டால் நமக்கு முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும்.

    பசுவிற்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்திக்கீரை கொடுத்து வந்தால், நாம் திதி கொடுக்க மறந்திருந்தால் கூட அதற்கான பலன் கிடைக்க வாய்ப்புண்டு. திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய அமாவாசை என்று கூறப்படும் புரட்டாசி மாதம் வருகிற அமாவாசையில் திதி கொடுக்கத் தொடங்கி, அதன்பிறகு தொடர்ந்து அமாவாசைகளில் திதி கொடுத்து வரலாம். முன்னோர்களைத் தான் நாம் முக்கியமாகக் கொண்டாட வேண்டும். அவர்கள்தான் நம் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.

    அமாவாசை அன்று புதிய முயற்சிகளை பலரும் மேற்கொள்கிறார்கள். ஆனால் ஜோதிட நூல்களில் அமாவாசை என்பது, ஆலய வழிபாட்டிற்கு உகந்தது. எனவே மற்ற முயற்சிகளை விட வழிபாட்டில்தான் ஆர்வம் செலுத்த வேண்டும். மேலும் இன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பலமடங்கு பலன் கிடைக்கும். கிராம தேவதைகள், காவல் தெய்வங்களை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமாவாசை அன்று நம்மால் இயன்ற அளவு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது நல்லது.

    நம் எண்ணங்கள் நிறைவேற முன்னோரை முறையாக வழிபடுவோம். முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வோம்.

    எஸ்.அலமு ஸ்ரீனிவாஸ்
    செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பிள்ளையார் நோன்பு, சங்கடஹர சதுர்த்தி, வெள்ளி பிள்ளையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம் என கணபதி வழிபாட்டில் பலவகை. அவற்றில் கடைசியாக கூறப்பட்ட இரண்டு விரதங்களும் முழுக்க முழுக்க பெண்களாலேயே அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. இவ்வழிபாடு தோன்றிய வரலாற்றை சற்று கவனிப்போம்.

    ஒரு ஏழைக்குடியானவனுக்கு ஏழு மகன்கள், ஒரு பெண். மனைவி இறந்து விட்டாள். தந்தையும் பிள்ளைகளும் அன்றன்று கூலி வேலை செய்து நெல் வாங்கி வருவார்கள். அந்த நெல்லை குத்திப் பொங்கி யாவரும் புசிப்பர். ஆனால், வாங்கி வரும் கூலி நெல் அவ்வளவும் பதராகவும், உமியாகவுமே இருக்கும். அந்தப் பெண்ணோ, பொறுமையை இழக்காமல், அதையும் பக்குவமாக்கி அவர்களுக்கு அளித்துவிட்டு, வடித்த கஞ்சியைதான் உண்டு காலம் கழித்து வந்தாள்.

    ஒருநாள் கடும்பசியோடு ஔவை பாட்டி, இந்த வீட்டுக்கு வந்தாள். ஆடவர்கள் வேலைக்குப் போயிருந்தனர். ஔவை வெளியில் நின்றுகொண்டே, அம்மா! பசிக்கிறது. அன்னம் போடு" என்று உரக்கக் கூறினாள். அப்பெண் அரையாடையோடு இருந்ததால், வெளிவந்து பதில் சொல்ல வெட்கித்தாள். அதே சமயம், ‘ஔவையாச்சே, எப்படி இல்லை என்று கூறுவது’ என்று தத்தளித்து, தேம்பித் தேம்பி அழுதாள். ஔவையின் மனம் இளகியது. ஏன் அழுகிறா?" என்றாள் ஔவை. அப்பெண் தன் நிலைமையை விளக்கலானாள்.

    பாட்டி என் ஏழு அண்ணன்மார்களும், தகப்பனாரும், கொண்டு வரும் நெல் மொத்தமும் குத்த குத்த உமியும், பதருமாகப் போய்விடுகிறது. ஆதனால், அரை வயிற்றுக்குக்கூட போதவில்லை. இந்நிலையில் எப்படி உனக்கு அன்னமிடுவது?" என்று அழுதாள்.

    இதைக்கேட்ட ஔவை மனம் இளகியது. அப்படியா... சரி. இந்தா! நான் பிச்சை எடுத்த அரிசி கொஞ்சம் உள்ளது. ஒரு தேங்காயும் அதோடு தருகிறேன். என்னை நினைத்துகொண்டு, செவ்வாய் பிள்ளையார் விரதம் ஏற்றுக்கொள். அப்புறம் பாரேன், உன் அதிர்ஷ்டத்தை" என்றவள், பூஜை முறையை விவரமாக அப்பெண்ணுக்குக் கூறி விடைபெற்றாள்.

    அடுத்த செவ்வாய்கிழமை. அண்ணன்களும், தகப்பனும் உறங்கியபின்பு, நீராடி நோன்பைத் தொடங்கினாள் அந்தப் பெண். ஆனால், அடுப்பு பற்ற வைக்க வீட்டில் நெருப்பு இல்லை. என்ன செய்வது? எங்கேயாவது வெளிச்சம் தெரிந்தால், அங்கு சென்று நெருப்பு எடுத்து வரலாம் என்று ஊருக்கு வெளியே போனாள். ஓரிடத்தில் புன்னை மரமும், புளிய மரமும் இணைந்து உயர்ந்து வளர்ந்திருந்தன. அதில் ஏறி புன்னை மரக்கிளையில் ஒருகாலும், புளியமரக் கிளையில் ஒரு காலும் வைத்து தொலைதூரம் நோக்கினாள்.

    தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டாள். அந்த இடத்துக்கு ஓடினாள். அது சுடுகாடு. அங்கே பிணம் எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும், அவள் அஞ்சவில்லை. நெருப்பை எடுக்க, சிதை அருகில் சென்றாள். பிணத்தை எரித்துக்கொண்டிருந்த வெட்டியான் கம்பை ஓங்கிக்கொண்டு அவள் அருகே வந்தான்.
    ஏய், நீ யார்? மனிதப் பிறவியா அல்லது பேய் பிசாசா? சொல்" என்று அதட்டினான். அவள் தன் நிலையைச் சொல்லி நெருப்பு கேட்டாள்.
    அப்படியா? நானும் உனக்கு அரிசியும், தேங்காயும் கொடுக்கிறேன். அதையும் எடுத்துப் போய், என் சார்பாகவும் பிரார்த்தனை செய்" என்று கூறி, வெட்டியான் தணலை வாரி ஓர் வறட்டியில் வைத்துக்கொடுத்தான். அதை வாங்கிய அப்பெண், வீட்டுக்கு திரும்பி வரும் போது, வழியில் இருந்த புன்னை மரத்திலிருந்தும் புளிய மரத்திலிருந்தும் தழைகளை பறித்து கொண்டு, தன் வீடு அடைந்தாள்.

    நோன்பை பயபக்தியுடன் தொடங்கினாள். ‘வெட்டியான் இல்லாவிட்டால் நெருப்பு கிடைத்திருக்குமா? அந்நேரத்தில் பிணம் எரியவில்லை என்றாலும் நெருப்பு கிடைத்திருக்காதே’ என்று அவள் மனம் எண்ணியது. எனவே, அவர்கள் நினைவாக வெட்டியானைப் போலவும், பிணத்தைப் போலவும் இரு உருவங்களை மாவினால் செய்து, அவற்றையும் கொழுக்கட்டையோடு வைத்து வேகவைத்தாள். ஔவை கூறியபடியே கணபதி பூஜை செய்து முடித்தாள்.

    இப்பூஜையின் பலன் சில நாட்களுக்குள்ளேயே உயர்வை அளித்தது. அவர்கள் நிலையும் உயர்ந்தது. குடும்பத்தில் பணம் கொழித்தது. எல்லோரும் எண்ணிப் பார்க்கக்கூடிய அளவுக்கு வாழ்க்கை மிக உயர்ந்தது. குடும்பம் இவ்வாறு தேறவே, அண்ணன்மார்கள் அனைவருக்கும் விரைவில் மணம் முடித்துவைத்தாள். அண்ணன்கள் அவளுக்கு ஏற்ற வரனைத் தேடினர். காலம் கூடிற்று. அப்பெண்ணை செல்வந்தர் ஒருவர் மணந்து கொண்டார்.
    புகுந்த வீட்டுக்கு போகும் முன், அப்பெண் தனது அண்ணிகளை அழைத்து, மிக ரகசியமாக, செவ்வாய் பிள்ளையாரை வழிபடும் முறையையும், அதனால் தானடைந்த பலனையும் விளக்கினாள்.

    நாட்கள் நகர்ந்தன. ஆனால், அண்ணிமார்கள் உள்ளத்தில் செல்வச் செருக்கு எழுந்தது. இதனால் கடவுள் மீது அன்பு குறைந்தது. செய்யக்கூடாத குற்றங்களை எல்லாம் அவர்கள் செய்தார்கள். அதன் விளைவு? ஊர் ஊராகப்போய் அலைந்து பிழைக்க வேண்டிய நிலை வந்தது. இந்தச் சமயத்தில் தங்கை, தமையன் வீட்டுக்கு வந்தாள். வீட்டின் நிலை கண்டு அதிர்ந்தாள். இதற்கான அடிப்படை காரணத்தையும் அறிந்தாள். எனவே, அண்ணிகளுக்கு அறிவூட்டத் தொடங்கினாள். விரைவில் அண்ணிகள் அனைவரும் பயபக்தியுடன், செவ்வாய் பிள்ளையார் பூஜையை சிறப்பாகவும் உள்ளன்போடும் நடத்தினார்கள். இதனால் விரைவிலேயே அவர்களிடம் மீண்டும் செல்வம் பெருகிற்று; வாழ்க்கை வளமடைந்தது.
    தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.
    தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், விரதம் இருந்து குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து, அதில் அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ‘லலிதா சகஸ்ர நாமம்’ பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

    ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்று வலிமை குறைந்தவர்கள், பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டோர், தை வெள்ளிக்கிழமையில் சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும். சுக்ர தோஷம் நீங்கும்.

    அதேபோல் ஜனன கால ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், கேது இருந்து மாங்கல்ய பாக்கியம் குறைந்தவர்கள், தை வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து, உணவு பரிமாறி, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச்சிறப்பு.
    இன்று பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. விரதம் இருந்து கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
    கோவில்கள் தோறும் காலை வேளையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பால் தரும் பசுக்களை, நாம் ‘கோ மாதா’ என்று அழைக்கிறோம். அதுமட்டுமல்ல அதுதரக் கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை, நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது.

    எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மை களைப் பெறலாம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.

    அதனால்தான் காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

    உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும், பால் தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் மாட்டுப்பொங்கல். இன்று நம் வீட்டில் உள்ள கால்நடைகளை சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பொங்கல் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு போன்றவை இந்த நாளில்தான் நடத்தப்படும். ‘

    மஞ்சு விரட்டு’ என்ற பெயருடைய ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிடைக்கும்.
    கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய விரத வழிபாடு உள்ளது. மோகினி வித்யா விரத பூஜை என்ற வழிபாடு தான் அது.
    பல வீடுகளில் கணவன் மனைவி இவர்களுக்கிடையே சதாகாலமும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இதனால் நம் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இடையேயும் ஒற்றுமை இருக்காது. ஒரு வீட்டில் கணவன் மனைவியின் உறவு சுமூகமாக இருந்தால் தான் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தினால் நிம்மதியாக வாழ முடியும். கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய விரத வழிபாடு உள்ளது. மோகினி வித்யா விரத பூஜை என்ற வழிபாடு தான் அது. இந்த பூஜையை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    ஓம் மோகினி தேவி வஜ்ரேஸ்வரி காம் மாலினி
    மம பிரியந்தம் ஆகர்சய ஆகர்சய சுவாகா

    விரதம் இருந்து பூஜை தொடங்கும் நாள் அன்று முதலில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கிழக்குப் பக்கம் பார்த்தபடி அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வெற்றிலையில் சிறிதளவு குங்குமத்தை வைத்து தண்ணீரை தொட்டு மோதிர விரலால், குழைக்கும் போது, மேலே கொடுக்கப்பட்டுள்ள மோகினி வித்யா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அந்த குங்குமத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விரத பூஜையை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடித்துவிட வேண்டும். இதனால் கணவன் மனைவி ஒற்றுமையுடன் சேர்ந்து நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
    நீண்ட நெடிய கலாசாரப் பெருமையைக்கொண்ட நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மனிதனின் வாழ்வை மேம்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் உருவாக்கப்பட்டதே. அந்த வகையில் மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா.

    பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகிறது. அந்த புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரை பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக்கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள்.

    இப்படி திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்.

    ஆனால் சாமி கும்பிடுவது வெட்டவெளியில் இருத்தலே நல்லது. பால்கனியிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்த பொங்கலை சூரியனுக்கு படைத்து மகிழலாம்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனை செய்யலாம். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காமல் போனாலும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள்.
    விநாயகரை மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

    இன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    விநாயகருக்கு இன்று விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
    பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த விரத வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
    பெண்கள் பலரும், விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த விரத வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து மாலை 3 மணி முதல் 4.30 மணி வரையான ராகு காலத்தில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு, அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கைக் கொண்டு, நம்முடைய விளக்கை ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஒளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்.

    நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு அன்று விரதம் இருந்து மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையான ராகு கால வேளையில், மேற்குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும்.

    நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டான வேண்டுதல்களுக்கு, வெள்ளிக்கிழமை கிழமை விரதம் இருந்து காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரையான ராகு கால வேளையில், எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்ற வேண்டும்.

    இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே அன்னையை 3 சுற்றுகள் வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

    துர்க்கை பாடல்களை, பாராயணம் செய்தபடியே இருக்க வேண்டும். 21-வது நிமிடம், கோவிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில் யாருக்கும் பிச்சையிடக்கூடாது. கஷ்ட நிவர்த்தி பூஜை என்பதால், நவக்கிரகத்தை வலம்வர வேண்டிய அவசியம் இல்லை.

    வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும் வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்கக்கூடாது. இதுவே முறைப்படி செய்யும் விரத வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வந்தால், வேண்டியது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.

    நமது பிரச்சினை தீர, வேண்டுதலுக்காக, ஆலயம் செல்லும்போதும், வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.

    பொ.பாலாஜிகணேஷ்
    இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசன தினமாகும். விரதம் இருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும், நடராஜ பெருமானையும் வழிபட வேண்டிய தினமாகும்.
    இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசன தினமாகும். சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும், நடராஜ பெருமானையும் வழிபட வேண்டிய தினமாகும்.
    மார்கழி மாதத்து பவுர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் ‘திருவாதிரை’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர்.

    ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். இந்நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம்.

    சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில்பொற்சபை உள்ள இடம் சிதம்பரம் ஆகும். இதற்கு தில்லை என்றொரு பெயரும் உண்டு. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், நடராஜர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தான் தாருகா வனத்து ரிஷிகளின் செருக்கை அடக்க சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார்.
    ருத்ர தாண்டவம் ஆடும் அளவிற்கு சிவபெருமானுக்கும், தாருகா வனத்து ரிஷிகளுக்கும் என்ன பிரச்சினை?

    தாருகாவனம் என்ற வனத்தில் மிகவும் தவ வலிமை கொண்ட முனிவர்கள் இருந்தார்கள். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கற்றுணர்ந்த அவர்கள் அதன்படியே தங்களுடைய காரியங்களைச் செய்து வந்த போதிலும் எல்லாவற்றிற்கும் காரணமான ஈசுவரன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவே இல்லாது, ஈசுவரத் தியானமில்லாமல் இருந்தனர்.

    எனவே அவர்களுக்கு ஈசுவரத் தியானத்தை உண்டாக்கும்பொருட்டு, சிவபெருமான், திருமாலை நினைத்தார். நினைத்த மாத்திரத்தில் தன் முன் தோன்றிய திருமாலுடன் சேர்ந்து முனிவர்களை நல் வழிப்படுத்த விரும்பினார். சிவபெருமான், திருமாலை தாருகாவனத்தில் உள்ள முனிவர்களை மயக்கும் அளவிற்கு அழகிய பெண் வேடம் பூண்டு செல்லுமாறு கூறியதோடு, தானும் பிட்சாடன (பிச்சை எடுப்பவர்) வேடம் பூண்டு, நந்தி தேவரோடு தாருகா வனம் வந்தார். நந்தி தேவரை ஓரிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, சிவபெருமான் முனிவர்களின் குடில்களுக்கு அருகில் சென்று பிச்சை கேட்பவரைப் போல, அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார்.

    அவரின் அழகில் மயங்கிய முனிபத்தினிகள் (முனிவர்களின் மனைவிகள்) அவரின் மேல் மோகம் கொண்டு அவரை அடைய விரும்பி அவர் பின்னா
    லேயே சுற்றி வந்தனர். மறுபுறம் பெண் வேடமிட்டு வந்த திருமால் காம விகாரத்துடன் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் சுற்றி திரிந்தார்.
    அங்கிருந்த இளம் முனிவர்கள் பெண்ணின் அழகில் மயங்கி, தவத்தை கைவிட்டு அவளின் காமரூபத்தை கண்டவர்களாய், அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.
    இதைக்கண்ட வயது முதிர்ந்த முனிவர்களும், தங்களின் தவ நிலையிலிருந்து விலகாத மற்ற முனிவர்களும் கோபம் கொண்டு, தங்களுடைய இளம் முனிவர்களையும், பெண்களையும் காம விகாரத்தில் ஈடுபடச் செய்த இருவரையும் அழிக்க நினைத்தனர். அதற்காக அக்னியில் எதிரியை அழிப்பதற்காக அதர்வண வேதத்தில் சொல்லியிருக்கின்ற ஹோமத்தை வளர்த்தனர்.

    ஹோமத்திலிருந்து முதலில் புலி பாய்ந்து வந்தது. அதை சிவபெருமான், தம்முடைய நகங்களால் இரண்டாகப் பிளந்து, அதன் தோலை ஆடையாக்கிக் கொண்டார். பின்னர் ஹோமத்திலிருந்து வந்த பாம்புகளை முனிவர்கள் ஏவ, அவை சிவபெருமானுக்கு அணிகலன்களாகின.

    இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் முன்னினும் தீவிரமாக யாகத்தைச் செய்து அபஸ்மாரம் என்ற பெரிய பூதத்தை ஏவினார்கள். அதை தன் வலக்காலுக்கு அடியில் போட்டு அதன் மீது சிவபெருமான் ஏறி நின்றார். எதுவுமே பலிக்காத நிலையில் யாகம் வளர்த்த அக்னியை ஏவ, அதை தன் இடக்கையில் ஏந்தினார்.
    தங்களுடைய அக்னியை இழந்த முனிவர்கள், கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர். அவைகளைச் சிலம்புகளாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார்.
    தங்களால் நெடுங்காலமாக செய்து வரப்பட்ட தவம், அக்னி, வேத மந்திரங்கள் முதலிய எதனாலும் சிவபெருமானை வெல்ல முடியாது போகவே தாங்கள் தோற்றுவிட்டதாக மட்டுமே முனிவர்கள் நினைத்தனர். எனவே அவர்களின் அறிவு கண்களைத் திறப்பதற்காக தன் சடைகள் எட்டுத்திக்கும் விரிந்தாட, அண்டங்கள் எல்லாம் குலுங்க, தாண்டவம் ஆடினார்.

    அதைக்கண்ட முனிவர்கள், பிட்சாடன் வேடமேற்று வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறிந்து தங்களின் தவற்றைபொறுத்தருள வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான், தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அவர்களுக்கு அருள் புரிந்தார்.

    மார்கழி மாதம் குளிர் அதிகமாக இருக்கும். எங்கும், எதிலும் குளிர்ச்சி தான். அதனால் அம்மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் வரும் நாளில் ருத்ரதாண்டவம் ஆடியவரை அபிஷேகங்களால் மேலும் குளிர்விக்கின்றோம். அபிஷேகத்தின்போது களி செய்து படைத்து வணங்குகிறோம். சிவனுக்குப் பிடித்தமானபொருள் என்பதால் மட்டும் களி செய்து படைப்பதில்லை. அகம்பாவம் கொண்டு, அறிவிழந்து நடப்போரை சிவபெருமான் தன் காலடியில் போட்டு மிதித்துள்ள அசுரனை போல மிதித்து களியாக்கி விடுவார் என்பதே அதன் தத்துவமாகும்.

    ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆணவம் அழிந்து அன்பு உண்டாகும். இறைவனிடம் கொள்ளும் பக்தி முக்தி அளிக்கும்.
    ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.
    ‘முரன்’ என்றொரு அசுரன் இருந்தான். அவனது அட்டகாசத்தை ஒடுக்குவதற்காக திருமால் போரிட்டார். பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை. பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.
    அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொள்வதற்காக, தன் உடைவாளை உருவினான். அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னிப்பெண்ணாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று அருளினார்.

    இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    ஏகாதசி அன்று செய்யக்கூடாதவை

    ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்யக்கூடாது.
    ×