என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
    ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது என சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான், தேவி! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

    முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி” என்ற சிறப்புப் பெயருண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்தி பெற்று மோட்ச கதியை பெறுவார் என்றார்.

    ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

    திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது. ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

    பீமன் ஒரு ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓரு ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

    பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
    ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று அதாவது நாளை (ஞாயிற்றுக் கிழமை) பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும். ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை சேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு விட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    பக்தியை வெளிப்படுத்துவதற்கும், புண்ணியத்தை அடைவதற்கும் உகந்ததொரு விரதம் என்றால், ‘வைகுண்ட ஏகாதசி விரதம்’ என்றே கூறலாம்.

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும். மறுதினம் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். பகல் மற்றும் இரவு முழுவதும் விரதம் இருப்பதுடன் தூங்காமல் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.

    ஏகாதசிக்கு மறுதினம் துவாதசியன்று அதிகாலையில் சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சமைத்து படையலிட்டு பின்னர் “கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!!!” என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். சிலர் 21 வகையான காய்கறிகளை சமைத்து படையலிட்டு, பின்னர் உண்பது வழக்கம்.

    மிக முக்கியமாக உணவு சாப்பிடும் முன் அதை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட வேண்டும். அன்று உணவு அருந்துவதை ‘பாரணை’ என்று கூறுவர். உணவு முடித்தபின்னர் அன்று பகலிலும் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
    உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.
    ஆசைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள். அது இறைவனுக்கு உகந்த நாளாக இருப்பது உத்தமம் என்று கூறி அந்த விரதத்தை நாம் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்கள். இதனால் இறையருளுக்கும் பாத்திரமாக முடிகின்றது. ஆரோக்கியத்திற்கும் வித்திடுகிறது. உடலுக்கு பலத்தையும் கொடுக்கின்றது.

    அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவைகள் புத்துணர்ச்சியும், பலமும் பெறுகின்றன. அதனால் உடல் ஆரோக்கியம் உருவாகின்றது. உடல் வியாதிகளை வெளியேற்றுகின்றது. விரதம் முடிந்து உண்ணும் பொழுது குடல் உறிஞ்சிகளால், அவை எளிதாக ஜீரணிக்கப்பட்டு செரிமானம் பூரணமாக நடைபெறுகிறது. இறைவனுக்காக விரதம் இருக்கும் நாட்களில், பசியைப் பற்றிச் சிந்திக்காமல் பரந்தாமனைப் பற்றியே சிந்திப்பது நல்லது.
    நமது முன்னோர்கள் குல தெய்வம், குடும்ப தெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனை தெய்வம், ஸ்தல தெய்வம் என்ற ஆறுவிதமான விரத வழிபாட்டில் கிடைத்தற்கரிய பல நற்பலன்களை அடைத்திருக்கிறார்கள்.
    ஒவ்வொரு மனிதனுக்கும் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நவக்கிரக தோஷம் என்று எண்ணற்ற தோஷங்கள் இருக்கின்றன. இந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவதற்கு விரத வழிபாடு மிக அவசியம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, நாள் தோறும் இறைவனை வணங்காததும் அவ்வளவு பெரிய பாவம்.

    கடவுளை நான்கு நிலைகளில் வழிபடலாம். அதில் முதலாவது ‘அன்பாக வழிபடுவது.’ கடவுளை உறவாக பாவித்து வரம் கேட்பது. அதாவது பெற்ற தாயாக, தந்தையாக பாவித்து தன் விருப்பம் அல்லது எண்ணம் பலிதமாக செய்யும் வேண்டுதல்கள் இந்த வழிபாட்டு முறையில் அடங்கும்.

    அடுத்தது ‘ஆகம முறையில் வழிபடுதல்.’ மந்திரங்கள் ஜெபிப்பது, மலர்கள் சமர்ப்பித்து ஆகம முறைப்படி செய்வது.

    மூன்றாவது ‘பயன் கருதி பூஜித்தல்.’ அதாவது முடி காணிக்கை, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இறைவனிடம் கேட்கும் வழிபாடு.

    இறுதியாக ‘பயன் கருதாமல் பூஜித்தல்.’ எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், ஆன்மநெறியில் செய்யும் இந்த வழிபாடு, ‘ஞான வழிபாடு’ ஆகும்.

    இந்த நான்கில் எதைத் தேர்ந்தெடுத்து வழிபட்டாலும், கருணைக் கடலான கடவுள் அருள்பாலிப்பார்.

    ஆனால் வாழும் காலத்தில், எந்த தெய்வத்தை விரதம் இருந்து வழிபாட்டால் வாழ்க்கை பயணம் இனிமையாக அமையும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நமது முன்னோர்கள் குல தெய்வம், குடும்ப தெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனை தெய்வம், ஸ்தல தெய்வம் என்ற ஆறுவிதமான விரத வழிபாட்டில் கிடைத்தற்கரிய பல நற்பலன்களை அடைத்திருக்கிறார்கள்.

    குல தெய்வ வழிபாடு


    இது எல்லா தெய்வங்களுக்கும் முதன்மையான வழிபாடு. நம் முன்னோர்கள் வம்சாவளியாக வணங்கிய தெய்வம் இது. குல தெய்வ அனுக்கிரகம் இல்லாத எந்த செயலும் வெற்றி அடையாது. குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே இருக்கும். ஆனால் அளவற்ற சக்தியுடையது. ஒரு ஜாதகத்தின் 5-ம் பாவகம் மற்றும் ஐந்தாம் அதிபதியை கொண்டு, குல தெய்வம் பற்றி அறிய முடியும். குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்பவர்களை, எந்த கிரகமும் ஒன்று செய்ய முடியாது.

    குடும்ப தெய்வ வழிபாடு


    இதனை முன்னோர் வழிபாடு என்றும் சொல்வார்கள். ஜாதகத்தில் 9-ம் இடம் எனும் பாக்கிய ஸ்தானமே, முன்னோர்களைப் பற்றி கூறும் இடம். தனது குலத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபடுவது. தந்தை மற்றும் தந்தை வழியில் உள்ள அனைவரும் நம் முன்னோர்களே ஆவர். நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் முன்னோர்கள் அளித்ததே. அதைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம். இவர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம், படையலிட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனால் கர்மவினை நீங்கும்.

    காவல் தெய்வம்

    ஊரை காக்கும் தெய்வம். இதை ‘எல்லை தெய்வ வழிபாடு’ என்றும் கூறலாம். ஊர் மக்களை சகல துன்பத்தில் இருந்தும் காப்பவர் இவர். இந்த தெய்வத்தை பாரம்பரிய குல வழக்க முறைப்படி வழிபட வேண்டும். முக்கியமான பணிக்காக ஊரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், காவல் தெய்வ உத்தரவு இன்றி வெளியேறக் கூடாது. பணி முடிந்து திரும்பும் வரை காவல் தெய்வம் நம் இல்ல வாசலில் காவல் நிற்கும். பயணத்தை சுபமாக இனிமையாக மாற்றித் தரும்.

    இஷ்ட தெய்வம்


    ஒவ்வொருவருக்கும் ஒரு தனி விருப்ப தெய்வ வழிபாட்டில் ஆர்வம் இருக்கும். இந்த விருப்ப தெய்வம் சிவன், பெருமாள், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் என நபருக்கு நபர் மாறுபடும். இஷ்ட தெய்வத்தை நமக்கு பிடித்த முறையில் வணங்கலாம்.

    உபாசனை தெய்வம்


    ஒருவரின் ஜனன ஜாதகத்தின் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் அதிதேவதையை வழிபடுவதே ‘உபாசனை தெய்வ வழிபாடு’ ஆகும். ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம். ஒரு மனிதனின் வாழ்நாள், அவன் பெற்ற பாக்கிய பலத்தின் நன்மை தீமைக்கு ஏற்பவே இருக்கும். அந்த ஸ்தானத்திற்கு வலிமை தர அதன் அதிதேவதைக்கு சக்தி உண்டு. முறையான உபாசனை தெய்வ வழிபாடு எத்தகைய ஆபத்திலும் மனிதனை வீழச் செய்யாது.

    அது மட்டுமல்ல இடப்பெயர்ச்சி, குலம் மாறிய திருமணம் போன்ற காரணத்தால் குல தெய்வ வழிபாடு தடைபட்டவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஆகியோர் உபாசனை தெய்வ வழிபாட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றியே கிடையாது. ஒன்பதாம் அதிபதியின் அதிதேவதையான உபாசனை தெய்வத்தின் ஆசி, ஒரு மனிதனை மிகச் சிறந்த சாதனையாளராக மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    ஸ்தல தெய்வம்

    நாம் குடியிருக்கும் ஊரை ஆட்சி செய்வது ஸ்தல தெய்வம். ஒவ்வொரு ஊரையும் ஒரு குறிபிட்ட தெய்வம் ஆட்சி செய்யும். பெரும்பாலும் இது அந்த ஊரின் சிவன், பெருமாள் கோவிலாகவே இருக்கும். ஊரின் ஸ்தல தெய்வம், ஸ்தல விருட்சம் ஆகியவற்றை அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழிபட வேண்டும். ஸ்தல தெய்வத்தின் ஆசி இல்லாமல், அந்த ஊரில் குடியிருக்க முடியாது. ஸ்தல தெய்வத்திற்கு நமது ஆன்மாவை சுத்தப்படுத்தும் சக்தி உண்டு. பலர் ஊர் ஊராக பல்வேறு புகழ்பெற்ற ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவார்கள். ஆனால் சொந்த ஊரிலோ அல்லது குடியிருக்கும் ஊரிலோ உள்ள ஸ்தல தெய்வத்தை வழிபடுவது இல்லை. ஸ்தல தெய்வ அருள் இருந்தால் மட்டுமே, குடியிருக்கும் ஊரால் பயன் பெற முடியும்.

    ஒரு சிலருக்கு வழிபாடு மேற்கொண்ட உடனேயே பலன் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு அந்த பலன் தாமதமாகும். இதற்கு அவரவர் ஜாதக அமைப்பும், பூர்வ புண்ணிய பலனுமே காரணம். அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், தொடர்ந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நற்பலனைப் பெறலாம்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    ஏகாதசியன்று அதிகாலையில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டு, விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.
    மார்கழி மாதம் வருகின்ற வளர்பிறை ஏகாதசிக்கு, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அன்றைய தினம் சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலைத் திறந்து வைப்பார்கள். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். திருவரங்கம் அரங்க நாதர் ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்கவாசலில் நுழையக் காத்திருப்பார்கள். அன்று முழு நாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து சாப்பிட்டால், நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள்தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எனவே அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, ஏகாதசியன்று அதிகாலையில் விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் 21-ந் தேதி (6.1.2020) திங்கட்கிழமை வருகிறது. மறுநாள் துவாதசியன்று காலையில் பச்சரிசி சாதம் வைத்து, அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்த கருணைக்கிழங்கு குழம்பு வைத்து, சூரிய உதயத்திற்கு முன்பே விஷ்ணுவை வழிபட்டு உணவு அருந்துவது நல்லது. மதியம் பலகாரம் சாப்பிடுவதும் நன்மை தரும்.
    விரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.
    ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கிறது. விரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். நாம் வழிபடுகின்ற விதத்தில் அவர்கள் நமக்கு வரத்தை வழங்குகிறார்கள். அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.

    ஆஞ்சநேயருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வெற்றிலை மாலை சூட்டினால் கவலைகள் அகன்று, வெற்றிகள் வீடு தேடி வரும். ஆனந்த வாழ்வு தரும் அனுமனை அவரது ஜனன நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
    நல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.
    பிறந்த வீட்டில் எப்படி சந்தோசமாக வாழ்கிறார்களோ அதே சந்தோசத்தை தருகிற அளவுக்கு புகுந்த வீடும், கணவரும் அமைய வேண்டும் என்பது இன்றைய காலப் பெண்களின் பெருங்கனவாக இருக்கிறது. நல்ல குணமுள்ள கணவர்கள் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.

    எல்லா செல்வங்களும் நிறைந்து நாடும் நாட்டு மக்களும் தன்னிறைவோடு இருக்க மார்கழி மாத விரதம் கடைபிடிக்கப்பட்டாலும் ஆயர் குலப் பெண்கள் தங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை சிறப்பானதாக அமைய கண்ணனின் துதி பாடி நோன்பு இருந்தனர். மார்கழி மாதத்தில் இந்த விரதத்தை ஆயர்குலப் பெண்கள் மேற்கொண்டதால் மார்கழி விரதம் என்ற பெயர் இதற்கு வந்து விட்டது.

    எம்பெருமான் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை, சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, இதோடு திருப்பள்ளியெழுச்சி உள்ளடக்கிய பாடல்களை மார்கழி மாதத்தில் பெண்கள் மனமுருகிப் பாடி இறைவனைத் துதிக்கிறார்கள். திருப்பாவையில் 30 பாடல்களும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டும் சேர்த்து 30 பாடல்களும் இருக்கின்றன. மார்கழி மாதத்தில் விரதமிருக்கும் போது செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

    பூஜையறையில் ஆண்டாள், பெருமாள் படங்களை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி முதல் நாளில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளே என்ற பாடலோடு தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும். ஒவ்வொரு துதிப் பாடல்களையும் மூன்று முறை பாடப்படவேண்டும். 
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
    பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள்.

    கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலைநேரத்தில் ஒசோன் வாயு கீழே வெளிப்படுகிறது.

    அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. ஓசோன் நம்மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

    திருமணம் தடைபடுபவர்கள் மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். 
    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.
    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம்.

    அதனால்தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

    பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
    அனுமன் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது. நாளை அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.
    ராமாயணத்தில் இணையற்ற இடத்தை பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால், ’சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

    திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகா விஷ்ணு எடுத்த அவதாரம் தான் ராம அவதாரம். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான், அனுமனாக அவதாரம் செய்தார். ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ராமர். இந்த பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. இதில், ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும், பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தனர். ராமர், லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாகுவதை பார்த்து அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருந்தனர்.

    அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ராமர் - லட்சுமணனை வணங்கி, ‘‘பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.

    “எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனை பிடித்து பாருங்கள்” என்றார் ராமர்.

    உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, “ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

    “சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க, நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபந்தன பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்.”

    “ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம்?.”

    “என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளன. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால், அது பெரும் தண்டனைக்குரியதாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து, தங்கள் கடமையைச் செய்யுங்கள்”

    அப்படிச் சொல்லிவிட்டு, அனுமன் தலை வணங்கி நின்றார். அவரின் தலை மீது ஏறி அமர்ந்துகொண்டார் சனீஸ்வரன். அதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனு மனுக்கு பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூட சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவரது தலையில் இருந்து கீழே குதித்தார்.

    “சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

    அதற்கு சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளை சுமந்து, சேது பந்தனப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்” என்றார் சனீஸ்வரன்.

    ‘‘இல்லை.. இல்லை.. இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் அனுமன்.

    அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், “அனுமனே! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்பு கிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

    “ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை, உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார்.

    எனவே ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.

    நாடி ஜோதிடர் பாஸ்கர்
    மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.
    சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

    மாதந்தோறும் வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

    ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

    இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும்.  நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

    இனி மார்கழி மாத பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம்.

    இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

    பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம்.

    முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

    நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

    மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.
    ×