என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சங்கடஹர விரதத்தைக் கடைப்பிடிப்பதால் வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும்.
    சங்கடஹர விரதத்தைக் கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் எனப் பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

    முக்கியமாக மனோகாரகன் எனும் சந்திரனின் அருளும் சேர்ந்து கிடைக்கும். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சந்திர பகவானின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

    குழந்தை இல்லாதவர்கள், நோய் உள்ளவர்கள், கல்யாண ஆகாதவர்கள், நல்ல வேலை கிடைக்க என அனைத்துவகை பிரார்த்தனைக்கும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    மகாலட்சுமிக்கு விரதம் இருக்கும் நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.
    ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரதத்திற்குரிய காலமாகும். ஆவணி வளர்பிறைப் பஞ்சமிக்கு ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று பெயர். அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் வழிபடுவது மகாலட்சுமி விரதம் ஆகும்.

    கார்த்திகை மாதப் பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர். அன்று அஷ்ட லட்சுமிகளுக்குப் பால் நிவேதனம் செய்து, வருபவர்களுக்கு வழங்கினால் தோஷங்கள் நீங்கும்.

    ஐப்பசி மாதப் பவுர்ணமியில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளிக்கு அடுத்த நாள்) மகாலட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம்.

    இந்நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.

    சுக்ரவார விரதம்- வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    நவராத்திரி லட்சுமி விரதம்- சாரதா நவராத்திரியில் 4, 5, 6&ம் நாட்களில் லட்சுமிவரும் நாளாகக் கருதி விரதம் செய்யலாம்.

    பைரவ லட்சுமி விரதம்- புளிப்புப் பண்டங்கள் சேர்க்காத படையல்களை வைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்து வரும் 8 வெள்ளிக்கிழமைகள் செய்து முடிக்க வேண்டும்.
    மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது
    மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும். இந்த நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவார்கள்.

    இவ்விரதத்தின்போது அவித்த உணவினை ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த விரதத்தைப் பெரும்பாலும் கன்னிப் பெண்கள்தான் கடைப்பிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்ளும்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.

    இவ்வழிபாட்டில் (புட்டு) படைக்கப் படுகிறது. இதனால் இவ்வழிபாடு ‘பிட்டு வழிபாடு’ என்று அழைக்கப்படுகிறது.
    தமிழ் மாதங்களில் சிறப்புமிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். இந்த சிறப்புமிக்க மார்கழி மாத விழாக்களையும், விரதங்களையும் தெரிந்துகொள்வோம்.
    தமிழ் மாதங்களில் சிறப்புமிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். `மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணரே கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாத விழாக்களையும், விரதங்களையும் தெரிந்துகொள்வோம்.

    * மார்கழி மாத பௌர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும்.  

    * திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார். இந்த நாளில் நிகழ்த்தப்படும் நடராஜர் அபிஷேகம் சிறப்பானது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    * பரசுராம ஜெயந்தி : தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    * மார்கழி மாத சிவராத்திரி : சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். மார்கழி மாத சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    * அனுமன் ஜெயந்தி : அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய அனுமன் ஜெயந்தி தினம் அன்று விரதம் இருந்து அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * மார்கழி அமாவாசை : விரதம் இருந்து முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

    * போகிப் பண்டிகை : மார்கழி மாதத்தின் கடைசி நாளாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத்திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள் இன்று.
    திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    ஆயர்பாடியில் உள்ள கோபியர்கள், மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி, மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதம் என்பதால், இந்த விரதம் ‘பாவை நோன்பு’ என்று வழங்கப்படலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே, அரங்கனை கணவனாக அடைந்தாள்.

    ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மை இடாமல், தலையில் மலர் சூடாமல் புற அழகில் நாட்டம் செலுத்தாமல், இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.

    எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

    திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும்.
    சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.
     
    கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.
     
    கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
     
    சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.
     
    சோம வார விரத மகிமைகள்:
     
    தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள்.
     
    தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.
     
    ‘இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.
     
    இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும்.
     
    இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதுமாகவே அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடித்து நலம் பெறலாம்.
    சனிக்கிழமைகளில் அனைத்து கடவுளுக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். ஆனால் இந்த நாளில் குறிப்பிட்ட கடவுளை நினைத்து விரதம் அனுஷ்டிக்கும் போது பல்வேறு நற்பலன்களை பெற முடியும்.
    சனிக்கிழமைகளில் அனைத்து கடவுளுக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். ஆனால் இந்த நாளில் குறிப்பிட்ட கடவுளை நினைத்து விரதம் அனுஷ்டிக்கும் போது பல்வேறு நற்பலன்களை பெற முடியும்.

    அந்த வகையில் பெருமாள், சனி பகவான், அனுமனுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்,.

    பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் விஷேசமானது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை காணலாம். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் பிறவிப்பயனை அடையலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்றும், சனி தசை மற்றும் சனி புக்தி காலத்திலும் விரதம் இருந்து, சனி பகவானுக்கு கருங்குவளை மலரால் அர்ச்சனை செய்து, எள் சாதத்தை நெய்வேத்தியம் செய்து, சனி காயத்ரி மந்திரத்தை 26 முறை ஜெபிப்பதோடு, காகத்திற்கு சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஏழைகளுக்கு தானம் செய்தால் சனிபகவானால் ஏற்படும் தொந்தரவுகள் படிப்படியாக குறையும்.

    அனுமனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பான பலனைத்தரும். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை  மாலை சாற்றி மனமுருக வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் பனிபோல் விலகி விடும்.
    கார்த்திகை மாத பவுர்ணமி நாளான இன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
    பவுர்ணமி, அமாவாசை திதிகள் இறை வழிபாடு முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. முழு நிலவு நாளில் ஆலயங்களில் அற்புத திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை பவுர்ணமி தொடங்கி பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல விஷேசங்கள் நடைபெறுகின்றன.

    கார்த்திகை மாத பவுர்ணமி நாளான இன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

    இன்றைய தினம் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்து விரதம் அனுஷ்டிக்கலாம். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.

    வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும்.
    திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள்.
    அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள். கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருடம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.

    தீபத்தில் இறைவனை காண்பது முன்னோர்கள் காலத்திலிருந்து தொன்றுதொட்டுவரும் நடைமுறையாகும். இவ்வுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் சூரியஒளியே தருகிறது என்பதை குறிக்கும் விதமாக தீபவழிபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பது மற்றொரு சாரரின் கருத்தாகும். ஒளியான தீபவெளிச்சமே அறியாமை என்னும் இருளிலிருந்து நம்மையெல்லாம் மீட்டு அறிவுரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் பலப்படுத்துகிறது. மேலும் எரியும் விளக்கை கவிழ்த்தாலும் அதிலிருந்து சுடர்விடுகின்ற தீபம் எப்பொழுதும் மேல்நோக்கியே இருக்கும்.

    அதுபோல வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும். இத்தகைய தீபத்தை அந்த ஏகநாயகன் நினைவாக ஏற்றி வழிபடும் ஏற்றம்தரும் திருநாளே கார்த்திகை தீபத்திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று, அக்னியாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத்திருநாளன்று விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .

    திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும்.
     
    சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மந்திற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
     
    மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகலுக்கு குறையக்கூடாது. விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்ட ஆகியவர்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
     
    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே! என்ற சுலோகத்தை சொல்வது மிகவும் விசேஷமான பலனை தரும்.

    திருக்கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.
    கார்த்திகை திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப் பாகும், தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.

    வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்ச் துருவல் கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
     
    கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றி வைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவர்.
    கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் பன்மடங்கு சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
    திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நினைத்து வழிபடும் விரதம் ‘சோமவார விரதம்.’ கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் பன்மடங்கு சிறப்புகளை உள்ளடக்கியது. என்றாலும் மற்ற மாதங்களிலும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    திங்கட்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, ஆலயத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு ஏழைகளுக்கு பச்சரிசியை தானமாக வழங்கலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
    அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இந்த அங்காளம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல், இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம்.

    லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவமற்ற சக்தி ஆகும். அங்காளம்மன் உருவ சக்தியே அங்காளம்மன்.

    அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.

    குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு விரதம் இருந்து தங்களின் வம்சாவழியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றறோருடன் ஆடி மாதம் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதணை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.

    இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.
    இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரமஹக்தி தோசம் பிடித்துவிட்டதாகவும், இந்த பிரமஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசிமாதம் விலக்கியதாகவும் நீங்கள் ஏற்கனவே படித்து இருப்பீர்கள்.

    சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரமஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள்,பீடைகள், சகடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள், சகடைகள் போன்றவற்றை ஆடி மாத வழிபாடு மூலம் அங்காளம்மன் விலக்கி நல்வாழ்வு தருகிறார்.

    பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு ஆடி மாதத்தில் வந்து காணிக்கை பிராத்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.
    வாழ்வில் சில ஒழுங்குகளை கடைபிடித்தால் லட்சுமி என்றும் நிலைத்திருப்பாள். சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.
    சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருளை பெறலாம். அவை எந்த விரதங்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

    சம்பத் கவுரி விரதம்
    மங்ள கவுரி விரதம்
    கஜ கவுரி விரதம்
    விருத்தகவுரி விரதம்
    லலிதா கவுரி விரதம்
    துளசி கவுரி விரதம்
    கேதார கவுரி விரதம்
    பதரிகவுரி விரதம்
    சவுபாக்ய கவுரி விரதம்
    லாவண்ய கவுரி விரதம்
    சம்பா கவுரி விரதம்
    வரலட்சுமி விரதம்

    மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு. மேலும் வாழ்வில் சில ஒழுங்குகளை கடைபிடித்தால் லட்சுமி என்றும் நிலைத்திருப்பாள்.
    ×