என் மலர்
முக்கிய விரதங்கள்
தைப்பூசம் அன்று விரதம் இருந்து சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.
தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி திதியும் இணைந்த நாள் தைப்பூசம் ஆகும். அந்த நாள் 8-2-2020 (சனிக்கிழமை) வருகிறது. முருகன் வழிபாட்டிற்கு தைப்பூசம் உகந்த நாள் ஆகும். அன்றைய தினம் விரதம் இருந்து சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.
ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைவனை உணர்ந்து முக்தி அடையலாம் என்பதால், அன்றைய தினம் ஜீவ சமாதி அடைந்த மகான்களை ஜோதி வடிவில் வழிபடுவதும் சிறப்பு.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமானது வார விரதம். வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது;
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
முருகனுக்கு உகந்த விரத நாட்களில் கிருத்திகை விரதம் சிறப்பு மிக்கது. அதிலும் ஒரு வருடத்தில் வரும் மூன்று கார்த்திகை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை என இந்த மூன்றும் கார்த்திகையுமே கடவுளுக்கு உகந்த நாட்கள். கிருத்திகையில் விரதம் இருந்து சேவல் கொடியோனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
சூரியனின் பயணம்
ஆன்மிகத்தில் ஒரு ஆண்டினை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிக்கின்றனர். ஆடி முதல் மார்கழி வரை இருக்கும் 6 மாதங்கள் தட்சிணாயனம் என்றும் ,தை மாதம் முதல் ஆனி வரை இருக்கும் 6 மாதங்கள் உத்தராயனம் எனவும் பிரிக்கப்படுகிறது. உத்தர - அயனம் என்றால் வடக்குப்புற வழி என்று பொருள் . சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்று சொன்னாலும், தட்சிணாயன காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தராயன காலத்தில் சற்று வடக்குப்புறமாகவும் சூரியனின் பயணம் இருக்கும். மங்கலகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயண காலத்தில் பாரதப்போர் நிகழ்ந்தபோது அடிபட்டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர் நீத்தார்.
சிவனின் வாக்கு
உத்தராயன புண்ணிய காலம் தை மாதம் தொடங்குகிறது என்றால், இம்மாதத்தில் வரும் கிருத்திகை - வாழ்வு செழிக்க, எத்தனை பாக்கியம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும் . அதனால் தான், இக்காலம் துவங்குகிற தை மாதத்தைப் போற்றும் வகையில் முன்னோர்களால் சொல்லப்பட்ட வாசகம்... தை பிறந்தால் வழி பிறக்கும் -என்பதாகும். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் கூறுவர்.
தை சிறப்பு
தை மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே “ரத சப்தமி’ எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே “தை கிருத்திகை’ ஆகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது “தை’ மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்என்பது . எனவே தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்‘ எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது.
திருமணத்தடை
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். கிருத்திகை விரதத்திற்கு முதல் நாளான பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று விடியற்காலை பொழுதில் நீராடி,கந்த புராணம் மற்றும் முருகன் துதிகளை பாராயணம் செய்தல் வேண்டும். கிருத்திகை அன்று முழுதும் உண்ணாமல், உறங்காமல் நோன்பிருந்து, அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் மனமார முருகப் பெருமானை நினைந்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் இன்று நாம் இயந்திரத்தனமாய் சுழன்றுக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், அந்த அளவிற்கு விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கிருத்திகை தினத்திலாவது விரதமிருப்பது முருகப் பெருமானின் அருளைப் பெற உதவும்.
(தெளிவோம்)

சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத சப்தமி’ ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
1-2-2020 ரதசப்தமி
சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத சப்தமி’ ஆகும். இது ‘சூரிய ஜெயந்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ‘ரத சப்தமி’ என்கிறோம்.
‘சப்தம்’ என்றால் ‘ஏழு’ என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.
இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.
7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் ெகாண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு. கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத் துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதி களைச் சொல்லி வழிபட வேண்டும்.
கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.
இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒருநாள் பிரமோற்சவம்
திருப்பதியில் ரதசப்தமி தினத்தன்று, ஒருநாள் பிரமோற்சவம் நடை பெறும். அன்றைய தினம் திருமலை யில், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். இந்த ஒரு நாள் பிரமோற் சவத்தை ‘சிறிய பிரமோற்சவம்’ என்றும் அழைப்பார்கள். ரத சப்தமி அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் மலையப்ப சுவாமி வீதி உலா வருவார். பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார். அதோடு பிரேமாற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறும்.
ஜெ.மாணிக்கம்

சகல செல்வங்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த தை வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடியுங்கள். தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால், நாம் பண மழையில் நனையலாம்.
வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அவள் அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும், தை வெள்ளிக்கிழமைகளுக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த இரண்டு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வரலாம்.
வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீரும். போராட்டநிலை மாறி, வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் செல்வநிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். எனவேதான் அள்ளித் தரும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமையை, உத்தராயன காலமாகிய தைமாதத்தில், தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
இதுதவிர, தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால், நாம் பண மழையில் நனையலாம். ‘ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா?’ என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அருளோடு வரும் பொருள்தான் என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை, நாம் ‘லட்சுமி’ என்றும், ‘திருமகள்’ என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால், நாம் எண்ணியபடியே வாழ்க்கையை நடத்த இயலும். ஆகவே வரம் கொடுக்கும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து, விரதமிருந்து வழிபட ஏற்றநாள் தை வெள்ளிக்கிழமை ஆகும்.
லட்சுமியை நாம் வழிபட்டால் நமது லட்சியக் கனவுகள் நனவாகும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். லட்சுமி கடைக்கண் பார்க்க தைமாத வெள்ளிக்கிழமைகளில் சமய மாலை படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது. தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அதிகாலையில் வீட்டை மெழுகி, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிதேவிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்களும் ‘நாம் சுமங்கலியாக இருக்க வேண்டும்’ என்றுதான் விரும்புகிறார்கள். தவிர, ‘கணவனுக்கு ஆயுள் நீடிக்க வேண்டும், குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்க வேண்டும், பிள்ளைகளின் வாழ்க்கை பெருமைப்படத்தக்கதாக அமைய வேண்டும்’ என்பது போன்ற விருப்பங்களும் அவர்களுக்கு இருக்கும்.
வீட்டுவாசலில் தாமரைக் கோலம் இட்டு, ‘திருமகளே வருக! செல்வ வளம் தருக!’ என்று கோலமாவினால் கூட எழுதலாம். வீட்டு பூஜையறையில் விநாயகர் மற்றும் வரலட்சுமியின் படத்தை பலகையின் மேல் வைத்து, அதன்அருகில் பஞ்சமுக விளக்கேற்றி வழிபட வேண்டும். அருகில் நெல்பரப்பி, அதன் மேல் ஒருதட்டில் அரிசியைப் பரப்பி வைக்கவேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை தேங்காய் போன்றவற்றைச் சேர்த்து, லட்சுமி படத்தின் முன்னால் வைக்கவேண்டும். கும்பத்திற்கு சந்தனம், குங்குமப் பொட்டுவைப்பது அவசியம். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் ஆகிய நைவேத்தியத்தோடு, லட்சுமி கவசம் மற்றும் வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பலரும் போற்றும் வாழ்க்கை அமையும்.
“அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும்
துன்பமெல்லாம்
உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும்
உண்மையன்றோ!
இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்”
என்று சமயமாலை லட்சுமியின் முன்னால் பாடுங்கள். உங்கள் கலக்கங்கள் அகலும். கவலைகள் தீரும். பக்கபலமாக பல்வகைச் செல்வங்களையும் லட்சுமிதேவி வழங்குவாள். அத்துடன் மனதில் தெளிவோடு தை வெள்ளிக் கிழமை அன்று அம்பிகையைப் பூஜித்தால் இன்பங்கள் யாவும் இல்லம் வந்துசேரும்.
சகல செல்வங்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த தை வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடியுங்கள்.
அலமு ஸ்ரீனிவாஸ்

வசந்த பஞ்சமி அன்றுதான் சரஸ்வதி அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், வடமாநிலங்களில் அன்றைய தினம் விரதம் இருந்து சரஸ்வதி வழிபாட்டை செய்கிறார்கள்.
தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது நவராத்திரியை ஒட்டி, புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். வட நாட்டில் நவராத்திரியை, துர்க்கை வழிபாடாக நடத்துவார்கள். ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியை ‘வசந்த பஞ்சமி’ என்று வர்ணிப்பார்கள். இந்த நாளை வட நாட்டில் சரஸ்வதி வழிபாட்டிற்குரிய தினமாக கடைப்பிடிக்கின்றனர். தமிழ்நாட்டில் வசந்த பஞ்சமி தினமானது, காமன் பண்டிகையாக பழங்காலங்களில் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.
வசந்த பஞ்சமி அன்றுதான் சரஸ்வதி அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், வடமாநிலங்களில் அன்றைய தினம் விரதம் இருந்து சரஸ்வதி வழிபாட்டை செய்கிறார்கள்.
ஆதிகாலத்தில் இந்த உலகத்தையும், அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தார் பிரம்மா. அதன்பிறகும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தன்னுடைய படைப்புகளில் ஏதோ ஒரு குறை இருப்பதாக அவரது மனம் நெருடியது. இந்த நிலையில் அவர் தன் கமண்டலத்தை கையில் எடுத்த போது, அதில் இருந்து சில துளி தண்ணீர் சிந்தியது. அந்த துளிகளில் இருந்து ஒரு பெண் சக்தி வெளிப் பட்டது.
அந்த சக்தியின் கையில் சுவடிகளும், வீணையும், ஸ்படிக மாலையும் இருந்தது. நீரில் இருந்து வெளிப்பட்ட அந்த சக்தியானவள், தன் கையில் இருந்த வீணையை மீட்டினாள். அதில் இருந்து தெய்வீகமான இசை வெளிப்பட்டது. அந்த இசையின் காரணமாக, பிரம்மனின் படைப்புகள் அனைத்தும் ஓசை நயம் பெற்றன. ஆறுகள் சலசலக்கத் தொடங்கின. கடல் பெருத்த சத்தத்துடன் அலைகளை வெளிப்படுத்தியது. காற்று பெரும் இரைச் சலுடன் வீசியது. மனிதர்கள் அனைவரும் மொழியறிவு பெற்றனர்.
இதையடுத்து பிரம்மதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அந்த பெண் சக்தியே ‘சரஸ்வதி’ ஆவாள். அவள் தோன்றிய தினமே ‘வசந்த பஞ்சமி’ என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியை தொடங்குகிறாா்கள். அப்போது குழந்தைகளின் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்ப கருவிகள் என்று பலவிதமான பொருட்களை வைப்பாா்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில் ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பேனாவை எடுத்தால், அறிவில் சிறந்து விளங்குவார்கள் என்றும், இசைக் கருவிகளை தொட்டால் இசைத் துறையில் பெரும் புகழ் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்றைய தினம் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபாடு செய்வார்கள். அன்றைய தினம் அனைத்துமே மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும். சரஸ்வதிக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர்மாலை அணிவிப்பார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையார் கூட, மஞ்சளில் பிடித்து வைக்கும் மஞ்சள் பிள்ளையார்தான்.
மேலும் சரஸ்வதிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும், லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற நைவேத்தியங்களாகவே இருக்கும். பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்படி மஞ்சள் வண்ணம் பூசப்படுவதாக சொல்கிறார்கள். இல்லங்களில் கூட அனைவரும் மஞ்சள் நிற ஆடைகளையே அணிவார்கள். குஜராத் மாநிலங்களில், இளைஞர்கள் பல வண்ண பட்டங்களை காற்றில் பறக்கவிடுவார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா - சரஸ்வதி கோவில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவில், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவில் ஆகிய தலங்களில் வசந்த பஞ்சமி திருநாள் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

மாவிளக்கு வழிபாடு என்பது இன்றளவும், விரதம் இருந்து அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டி செய்யும் முக்கிய பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
மாவிளக்கு வழிபாடு என்பது இன்றளவும், அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டி செய்யும் முக்கிய பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நோய்கள் தீர மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நேர்த்திக் கடன் செய்வார்கள். ஆறு, குளம் உள்ள பகுதிகளில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.
இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே ‘மாவிளக்கு’ ஆகும். காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத் துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது. அரிசி (அன்னம்) - பிரம்ம ஸ்வரூபமாகும். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது இந்த அன்னம்தான். வெல்லம் என்பது மதுரம். அதாவது இனிமை. அம்பிகை மதுரமானவள். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.
அக்னி பகவான், நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். நெய்யை விட்டுதான் ஹோமங்கள் வளர்க்கிறோம். ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார். அக்னி பகவானின் சக்தி, நெய்யில் அடங்கிஉள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை, நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.
நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கும் ஆண்டுக்கு ஒரு முறையாவது மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு. கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
மாவிளக்கு செய்வது எப்படி?
ஒரு கிலோ அரிசி என்றால் அதனை தண்ணீர் விட்டு களைந்து, ஒரு துணியில் பரப்பி காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது, கொஞ்சம் பரபரவென இருக்கும்படி அரைத்து எடுத்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் போட வேண்டும்.
வெல்லத்தை துருவி அல்லது தூளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம். ஒற்றை படை எண்ணிக்கையில்தான் மாவிளக்கு போடுவார்கள். ஓரளவு பெரிய உருண்டையாகதான் உருட்டுவார்கள். அந்த உருண்டையின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து அழுத்தினால், சிறிய குழிபோல் அச்சுப் பதியும். அந்த குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் கொண்டு பொட்டு வைத்து, குழியில் நெய் ஊற்றி, திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் மாவிளக்கு ஏற்றும்போது, பூஜை அறையில் கோலம் போட்டு, அதன் மீது வாழை இலை விரித்து, அதில் மாவிளக்கை வைக்க வேண்டும். நாம் ஏற்றும் மாவிளக்கானது குறைந்தது 2 மணி நேரமாவது எரிய வேண்டும். அந்த நேரத்தில் நாம் விளக்கின் முன்பாக அமர்ந்து சுலோகங்களோ, இறைவனின் பாடல்களோ, புராணங்களோ படிக்கலாம்.
மாவிளக்கு எரிந்து முடிந்து, வழிபாட்டை முடித்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நைவேத்தியம் படைக்க வேண்டும். தேங்காய் நீரை மாவில் விட்டு கலந்து பிசைந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமி பிரச்சினை உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி, முருகப்பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமி பிரச்சினை உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களாக மூன்று விரதங்கள் பிரதானமாக சொல்லப்பட்டுள்ளன. அவை: வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம்.
வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி தொடர்பு கொண்ட முருகப்பெருமானை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானது.
செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் நீராடி, அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்தசஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற, முருகனுக்குரிய பாடல்களை பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும். இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு, திருமணத் தடைகளை விலக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் வழங்கும்.

ஒருவரது வீட்டில் பெண்களால் ஏற்பட்ட சாபத்தை விலக்க இந்த விரதம் மிகவும் அவசியமானது ஆகும். இந்த விரதம் தோன்றிய கதையை அறிந்து கொள்ளலாம்.
மன மகிழ்வுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், தன தானியம் பெற்று பெரு வாழ்வு வாழும் பாக்கியத்தை ரிஷி பஞ்சமி விரதம் தருவதாக ஆன்மிக சான்றோர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமானது என்னவென்றால், ஒருவரது வீட்டில் பெண்களால் ஏற்பட்ட சாபத்தை விலக்க இந்த விரதம் மிகவும் அவசியமானது ஆகும்.
பாண்டவர்களில் ஒருவரான தருமர், கிருஷ்ணரிடம் சென்று ஒரு உபாயம் கேட்டார். அதாவது “கிருஷ்ணா! எங்கள் குடும்பத்திற்கு பெண்களால் சாபம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்த சாபம் விலக என்ன பரிகாரம், விரதம் இருக்க வேண்டும்” என்று கேட்டார். (பாண்டவர்கள் ஐந்து பேருக்கு, திரவுபதி ஒருத்தி மட்டுமே மனைவியாக அமைந்தது கூட, ஒரு பெண்ணின் சாபத்தின் விளைவால்தான்).
அதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “உங்களின் குடும்பத்திற்கு, பெண்ணின் சாபம் இருப்பதாக நீங்கள் கருதினால், அது விலகுவதற்காக ஒரே தீர்வு ரிஷி பஞ்சமி விரதம் மேற்கொள்வதுதான்” என்றார். மேலும் இதுதொடர்பான ஒரு கதையையும் அவர் தருமருக்கு எடுத்துரைத்தார்.
அந்தக் கதையை இங்கே காணலாம். பாரத தேசத்தில் விதர்பா ராஜ்ஜியம் இருந்தது. அதை ஆட்சி செய்த மன்னன் நல்ல குணங்களுடனும், மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் தனது அரசாட்சியை நடத்தி வந்தான். அந்த ராஜ்ஜியத்தில் அனைத்து நற்குணங்களும் கொண்ட சுமித்தரா என்ற வேதியன் வாழ்ந்து வந்தான். அவனைப் போலவே அவனது மனைவி ஜெயஸ்ரீயும் அனைத்து நற்குணங்களும் பொருந்தியவளாக இருந்தாள்.
மிகவும் கட்டுப்பாடும், ஆன்மிக நெறியும் மிக்க அந்த குடும்பத்தில் அவர்களையும் அறியாமலேயே தீட்டு பட்டு விட்டது. அது அவர்கள் அறியும் முன்பாகவே அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட்டார்கள். மறு பிறவியில் கணவன் மாடாகவும், மனைவி நாயாகவும் பிறந்தனர். அவர்களின் கர்மவினை காரணமாக, அவர்கள் இருவரும் அவர்களின் மகன் வீட்டிலேயே வளரும் நிலை உருவானது. மாடாக இருந்த சுமித்தராவுக்கும், நாயாக இருந்த ஜெயஸ்ரீக்கும் அது தங்களின் மகனின் இல்லம் என்பது தெரியும். ஆனால் அவர்களின் மகனுக்கு அது ஒரு மாடு, நாய் என்ற வகையிலேயே அறிந்திருந்தனர்.
ஒரு நாள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செலுத்தும் தினம். அன்று அவர்கள் வீட்டில் சமைத்து வைத்த பாயசத்தை பாம்பு ஒன்று சாப்பிட முயன்றது. ஆனால் பாயசம் மிகவும் சூடாக இருந்தது. அதனால் சூடு தாக்கியதில் பாம்பு, பாயசத்திற்குள் தன்னுடைய விஷத்தை உமிழ்ந்து விட்டது. இதைத் தற்செயலாகப் பார்த்து விட்ட அந்த வீட்டின் நாயாக இருந்த ஜெயஸ்ரீ, ‘தன்னுடைய மகனுக்கு பாம்பின் விஷம் தாக்கி, அவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே’ என்று நினைத்தாள்.
எனவே ஓடோடிச் சென்ற நாய், பாயசம் இருந்த பாத்திரத்தை தரையில் கவிழ்த்து விட்டது. இதைப் பார்த்த வீட்டு சமையல்காரப் பெண்மணி, அந்த நாயை முது கெலும்பு முறியும் அளவுக்கு அடித்துத் துரத்தினாள். பின்னர் மீண்டும் வேறு பாயசம் செய்து வைத்தாள். அடிபட்ட நாய் வலி தாங்காமல் அழுது கொண்டே, மாடாக இருந்த தன்னுடைய கணவரிடம் சென்று தன்னுடைய நிலையை எடுத்துக்கூறியது. அவளை மாடு உருவில் இருந்த கணவன் தேற்றினான்.
இந்த நிலையில் அனைத்து சாஸ்திரங்களையும் நன்கு படித்திருந்த சுமித்தராவின் மகன், தன் வீட்டில் இருக்கும் விலங்குகள் இரண்டும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். அவருக்கு விலங்குகளின் பாஷை புரியும். அவர், தன்னுடைய தாய் தந்தையரே இந்த ஜென்மத்தின் நாய், மாடாக பிறந்து இருப்பதை அந்த விலங்குகள் பேசியதை வைத்துப் புரிந்து கொண்டார். “எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம். எந்த தாய், தந்தையின் மரணத்திற்காக இன்று சிரார்த்தம் செய்கிறோமோ, அந்த நாளில் அவர்களின் மனதை வருத்தப்பட வைத்து விட்டோமே” என்று கலங்கினான்.
பின்னர் அந்த இரு விலங்குகளையும் உள்ளே அழைத்து வந்து, நன்கு குளிப்பாட்டி அவற்றை வணங்கினான். பிறகு அவற்றை அழைத்துக் கொண்டு ஒரு முனிவரிடம் சென்று, அதற்கு பரிகாரம் கேட்டான். அவரும் ரிஷி பஞ்சமி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி, அதை செய்தால் அவனுடைய பெற்றோர் களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறினார். அவனும் அதை செய்து தன் பெற்றோர்களுக்கு மோட்சத்தை அடைய வழி செய்தார்.
இந்தக் கதையை தருமரிடம் கூறிய கிருஷ்ணர், எந்த ஒருவன் ரிஷி பஞ்சமி விரதத்தை சரியாகக் கடைப்பிடித்துச் செய்கிறானோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களால் ஏற்பட்ட சாபம் விலகும் என்று கூறி அவருக்கு வழி காட்டினார்.
பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கிக் கொள்ள, விதர்பாவை ஆண்டு வந்த சிதாஷ்வ எனும் மன்னன் பிரம்மாவிடம் ஒரு விரதத்தை தமக்கு அருளுமாறு வேண்டிக் கேட்டான். அதற்கு பிரம்மன், இந்தக் கதையைக் கூறியதாகவும் சொல்லப் படுகிறது. பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கும் விரதம், ரிஷி பஞ்சமி விரதம் என்பது வடநாடுகளில் ஐதீகமாக இருக்கிறது.

ரத சப்தமி அன்று விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வதால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை.
சூரியன் தனது ரதத்தை தெற்கில் இருந்து வடக்கு திசையை நோக்கி திருப்புவதால் இந்த நாள் ‘ரதசப்தமி’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாள் 1-2-2020 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து நீர் நிலைகளுக்கு சென்று கிழக்கு நோக்கி நின்று, ஏழு எருக்கு இலைகள், அட்சதை, அருகம்புல், மஞ்சள் பொடி ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு நீராடினால், நவக்கிரக தோஷம் அகலும். இன்றைய தினம் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வதால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை.
ரத சப்தமி பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரதத்தில் பெருமாள் வலம் வருவார். ரதத்தில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசித்தால் நம் வாழ்க்கை வளம் பெறும்.

வாசகர்களே... இன்று (வெள்ளிக்கிழமை) தை அமாவாசை தினமாகும். இன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொருவரும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!
நம்மை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.எத்தனை பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும்? தெரியவில்லை யென்றால் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்கள் இறந்த தேதிக்கு உண்டான திதியை தெரிந்து கொள்ளுங்கள்.
மறைந்த முன்னோர்களின் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். உங்கள் தாயாரின் தகப்பனார் மற்றும் - தாயார், உங்கள் தகப்பனாரின் தகப்பனார் மற்றும் - தாயார் உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி இப்படி நமது தாய்வழி, தந்தை வழி மறைந்த முன்னோர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
தர்ப்பணத்தை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜைய றையில், ஹாலில் எங்கு வேண்டு மானாலும் செய்யலாம். மனம் சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தர்ப்பணம் செய்வது பற்றி தங்களுக்கு முறைகள் தெரிந்திருந்தால் தாங்களே செய்து கொள்ளலாம்.
முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.
முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு. பின் தாய் வழியில் உள்ளவர்களுக்கு, செய்தல் வேண்டும். தை அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். அன்று தீர்த்தங்களில் எள்ளை விட வேண்டும். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்ய வேண்டும்.
காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக் கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.
அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே மறைந்த முன்னோர்களுக்கு நாளை அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். மறந்து விடாதீர்கள்....
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.
மறைந்த முன்னோர்களின் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். உங்கள் தாயாரின் தகப்பனார் மற்றும் - தாயார், உங்கள் தகப்பனாரின் தகப்பனார் மற்றும் - தாயார் உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி இப்படி நமது தாய்வழி, தந்தை வழி மறைந்த முன்னோர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
தர்ப்பணத்தை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜைய றையில், ஹாலில் எங்கு வேண்டு மானாலும் செய்யலாம். மனம் சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தர்ப்பணம் செய்வது பற்றி தங்களுக்கு முறைகள் தெரிந்திருந்தால் தாங்களே செய்து கொள்ளலாம்.
முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.
முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு. பின் தாய் வழியில் உள்ளவர்களுக்கு, செய்தல் வேண்டும். தை அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். அன்று தீர்த்தங்களில் எள்ளை விட வேண்டும். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்ய வேண்டும்.
காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக் கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.
கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.
சிவபெருமானை மகா சிவராத்திரி அன்று மட்டும் இல்லாமல் மாதம் தோறும் வரும் சிவராத்திரி நாள்களிலும் வழிபடுவதால் அளவற்ற நன்மைகளை நாம் பெறலாம்.
சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும். அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.
அதில் மாதம் தோறும் வரும் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும். சிவபெருமானை மகா சிவராத்திரி அன்று மட்டும் இல்லாமல் மாதம் தோறும் வரும் சிவராத்திரி நாள்களிலும் வழிபடுவதால் அளவற்ற நன்மைகளை நாம் பெறலாம்.
அன்றையதினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும். முக்தி கிடைக்கும்.
சிவராத்திரியில் யோக சிவ ராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவ ராத்திரி, மாத சிவ ராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு. மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும். அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.