என் மலர்
முக்கிய விரதங்கள்
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள், மாசி மாத ஏகாதசிக்கு 7 அல்லது 8 நாட்களுக்கு முன்பே தங்களது விரதத்தைத் தொடங்கி விடுகின்றனர்.
சிவபெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி முதன்மையானது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் கூட நம்மை விட்டு விலகும் என்பது ஐதீகம்.
“சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்” என்று உமாதேவி வேண்டிக்கொண்டதாகவும், சிவபெருமானும் “அப்படியே ஆகட்டும்” என்று அருள்புரிந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
நாடு முழுவதும் சிவராத்திரி அன்று பக்தர்கள் விரதம் இருந்து இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாம வழிபாடுகளில் பங்கேற்று சிவனை வழிபடுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் இந்த விழா வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களை மையமாகக் கொண்டு, இந்த மகாசிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் பலரும், இந்த பன்னிரு சிவாலயங்களையும் “கோவிந்தா.. கோபாலா” என்ற கோஷங்களை எழுப்பியவாறு, ஓட்டமாகச் சென்று தரிசிப்பது இந்த நிகழ்வின் சிறப்பம்சம். மாரத்தான் ஓட்டத்தைப் போன்று நடைபெறுவதால், இதன் பெயர் ‘சிவாலய ஓட்டம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே, குமரி மாவட்டத்தில் மட்டும்தான் இந்த சிவாலய ஓட்டம் என்ற புகழ்பெற்ற வழிபாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
12 சிவாலயங்கள்
மகாசிவராத்திரி அன்று முன்சிறை திருமலை தேவர் (சூலபாணி) கோவில், திக்குறிச்சி சிவன் கோவில், திற்பரப்பு சிவன் (வீரபத்திரர்) கோவில், திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் கோவில், பொன்மனை (திம்பிலேஸ்வரர்) சிவன் கோவில், பன்னிப்பாகம் (கிராதமூர்த்தி) சிவன் கோவில், பத்மநாபபுரம் சிவன் (நீலகண்டர்) கோவில், மேலாங்கோடு (பெரிய கால காலர்) சிவன் கோவில், திருவிடைக்கோடு (கொடம்பீஸ்வரமுடையார்) சிவன் கோவில், திருவிதாங்கோடு (பிரதிபாணி) சிவன் கோவில், திருப்பன்றிக்கோடு (பக்தவச்சலர்) சிவன் கோவில், நட்டாலம் (அர்த்த நாரீஸ்வரர்) சிவன் கோவில் ஆகிய 12 சிவன் கோவில்களையும் பக்தர்கள் ஓட்டமாக ஓடிச் சென்று தரிசனம் செய்வர்.
‘சாலிய ஓட்டம்’ என பாமர மக்களால் அழைக்கப்படும் சிவாலய ஓட்டத்தில் ஆண்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள். ஒரு சில பெண் பக்தர்களும் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குமரி மாவட்ட பக்தர்கள் மட்டும் அல்லாமல், கேரள மாநில பக்தர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள். ஓட்டமாக ஓட முடியாத பக்தர்கள் சைக்கிள், ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் சென்றும் 12 சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள்.
விரதம்
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள், மாசி மாத ஏகாதசிக்கு 7 அல்லது 8 நாட்களுக்கு முன்பே தங்களது விரதத்தைத் தொடங்கி விடுகின்றனர். விரத நாட்களில் பகல் நேரத்தில் இளநீர், நுங்கு ஆகியவற்றையும், இரவு நேரத்தில் துளசி இலையும் நீரும் பருகுகிறார்கள். கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை குருசாமி வழி நடத்துவதுபோல, இந்த சிவாலய ஓட்டத்தையும் ஒருவர் வழிநடத்துகிறார். ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் “கோவிந்தா.. கோபாலா,,” என்றும், “யாரைக் காண சாமியைக் காண, சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்” என்ற கோஷங்களை முழங்கியவாறும் செல்வார்கள்.
பக்தர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு ஆடையை அணிந்தபடியும், கையில் பனை ஓலையால் ஆன சிறு விசிறியும், பணம் வைக்க சிறு துணிப்பையை இடுப்பில் கட்டியவாறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இவ்வாறு ஓட்டமாக ஓடிச்சென்று சிவாலயங்களை தரிசிப்பவர்கள், ஒவ்வொரு சிவன் கோவிலை அடுத்து இருக்கும் குளம் அல்லது ஆற்றில் குளிக்க வேண்டும் என்பதும் பழைய நடைமுறையாக இருக்கிறது. அதற்கு அடையாளமாக பெரும்பாலானோர் ஓட்டம் தொடங்கும் முதல் கோவிலான முன்சிறை திருமலை தேவர் கோவில் குளத்தில் மட்டும் குளித்துவிட்டு ஓடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். ஓட்டத்தின்போது தென்னங்கீற்றுகளை இணைத்து உருவாக்கப்பட்ட பந்தம் அல்லது டார்ச் லைட் ஆகியவற்றை கொண்டு செல்வார்கள்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, பானகரம், மோர், கஞ்சி போன்ற பானங்களை வழி நெடுகிலும் மக்கள் விநியோகம் செய்வார்கள். 12 கோவில்களில் கடைசி ஆலயமான, நட்டாலம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மட்டுமே சந்தனம் கொடுக்கிறார்கள். பிற கோவில்களில் திருநீறு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படும்.
நட்டாலத்தில் சங்கரநாராயணர் என்ற விஷ்ணு கோவிலும், அர்த்தநாரீஸ்வரர் என்ற சிவன் கோவிலுமாக இரண்டு கோவில்கள் உள்ளன. ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று’ என இறைவன் உணர்த்திய இடம் நட்டாலம் ஆகும். இந்த 12 கோவில்களையும் தரிசித்தபிறகு, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கமும் காலங்காலமாக இருந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து, மலை மீதுள்ள முருகனை வழிபடுவது நல்ல பலன் தரும்.
விண்வெளியில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம், செவ்வாய். அதோடு செவ்வாய்க்கு ‘பூமிக்காரகன்’ என்ற பெயரும் உண்டு. ஏனென்றால் பூமியைப் போன்றே ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாயில் இருப்பதாக நம்பப்படுகிறது. கிரகங்களில் மிகக் கடினமான பாறைகளால் ஆன கிரகம் செவ்வாய். அது உறுதியான, வலிமையான கிரகமாகும். மிக உஷ்ணமான கிரகமும் செவ்வாய்தான். மண்ணாசையை குறிப்பது செவ்வாய் கிரகம். மண்ணாசை உள்ளவன் பூமியை ஆக்கிரமிக்க நினைப்பான்.
செவ்வாய் ‘சகோதர காரகன்’ என அழைக்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றி, செவ்வாயின் நிலைகொண்டே கணிக்கப்படுகிறது. செவ்வாய் போர்க் குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது, எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக இருக்கும். பெண்களின் ருது நிகழ செவ்வாய் மிக முக்கிய காரண கர்த்தாவாக இருக்கிறார்.
சகோதரம், வீரம், வெட்டுக்காயம், தீக்காயம், விபத்தில் ரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளியேறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், மழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்க்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம்.
செவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். செவ்வாயின் பிற பெயர்கள் பூமிக்காரகன், சேய், அங்காரகன், குஜன் ஆகும்.
ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றவர்கள், தைரியம், நிர்வாகத் திறன், முரட்டுத்தனம், பிடிவாதம், கோபம், அதீத காம உணர்வு, போட்டி மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அத்துடன் அரசியல், மத்திய அரசுப்பணியாளர், சீருடைப் பணியாளர்கள், ராணுவம், விளையாட்டு வீரர், தற்காப்பு கலையில் ஆர்வம், கட்டுமஸ்தான உடல்வாகு உள்ளவராகவும் இருப்பர். செவ்வாய் பலம் பெற்றவர் களுக்கே, வீடு மற்றும் வாகன யோகம் சிறப்பாக அமையும்.
இந்த ஜாதகரின் சகோதரர்கள் நல்ல உயர்ந்த நிலையில், ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் நட்புறவு ஏற்படும். அதே வேளையில் ஜாதகர் பெண்ணாக இருந்தால், அவரது கணவர் உயர்ந்த நிலையில் இருப்பார்.
முருகன் வழிபாட்டிலும், சிவப்பு நிற ஆடைகள் அணிவதிலும் ஆர்வம் ஏற்படும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் செவ்வாய் ஓரையில் நடக்கும். மேஷ, விருச்சிக லக்னம் அல்லது மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் நட்பு உண்டாகும். செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் நட்பு ஏற்படும். அறுவை சிகிச்சை மருத்துவருடன் தொடர்பு கிடைக்கும். மாமிச உணவு வகை மீது அதிக நாட்டம் உண்டாகும். கலகம் செய்வதில் விருப்பம் உண்டாகும். மலைப் பிரதேசங்களுக்கு சென்று வர வாய்ப்புக் கிடைக்கும்.
ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்களுக்கு, சகோதரர்கள் தாழ்ந்த நிலையில் சலன புத்தி உடையவராக இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தால் கணவருக்கு முன்னேற்றக் குறைவு ஏற்படும். வீடு, வாகன யோகம் குறையும். அரசு பணி, அரசு ஆதரவில் தடை தாமதம் ஏற்படும்.
அப்படி இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து, மலை மீதுள்ள முருகனை வழிபடுவது நல்ல பலன் தரும். செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் தசைக் காலங்களில் சிரமம் மிகுதியாக இருந்தால் ரத்த தானம் செய்ய வேண்டும். பூமி மற்றும் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, சிவப்பு நிற பசுவை தானம் வழங்க வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபட்டு வரலாம்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். இதையொட்டி சிவன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில் உள்பட 12 கோவில்களுக்கு பக்தர்கள் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு சிவராத்திரி வருகிற 21-ந் தேதி வருகிறது. இதையொட்டி சிவாலய ஓட்டம் 20-ந் தேதி புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது.
இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நேற்று முதல் விரதம் மேற்கொள்கிறார்கள். இதையொட்டி நேற்று காலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து வருகிற விரத நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உண்பார்கள்.
19-ந் தேதி தீயில் வேக வைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மாறாக நொங்கு, இளநீர், பழம் போன்றவற்றை மட்டுமே உண்பார்கள். பின்னர், 20-ந் தேதி முன்சிறை, திருமலை மகா தேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி, 21-ந் தேதி நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் ஓட்டத்தை முடித்து கொள்வார்கள். அங்கு விடிய விடிய கண்விழித்து அமர்ந்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சூரிய பகவானை வழிபடும் விரதமானது ரதசப்தமி ஆகும். இது தை மாதத்தில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகின்றது. ரதசப்தமி அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணிப்பதை தொடங்குகின்றன. இந்த நாளில் சூரிய உதயத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும்.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதம் சூரிய உதயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம் இவற்றை சூரியனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இந்த தினத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பண்டங்களை பசுவிற்கு தானமாகக் கொடுப்பது நல்லது.
வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரியனுக்கு நைவேத்தியம் படைப்பது இன்னும் சிறந்தது. ரதசப்தமி அன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடிய தனமானது பல மடங்கு புண்ணியத்தை நமக்கு தேடித்தரும். இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் துன்பப்படாமல் வாழ்வதற்கு தேவையான அருளை வழங்க வேண்டுமென்று நாம் அனைவரும் அந்த சூரிய பகவானை பிராத்திப்போம்.

வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஔவையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக்கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கின்றார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள்தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும். இந்த விழிப்பு விரதத்தை ‘மங்கலம் தரும் மகா சிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும், ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும், ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ எனறும் மக்களால் வர்ணிகப்படுகிறது.
சிவன் பெயரை உச்சரித்து உச்சரித்து சிறப்புகளை பெற்ற, அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் சிவராத்திரி. வாழ்வில் இருளை அகற்றி ஒளியை மேற்கொள்ள நாம் விழித்திருந்து, விரதமிருந்து சிவனை வழிபட்டால் ‘அசுவமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும்.
மகாவிஷ்ணு இந்த விரதம் இருந்துதான் சக்கராயுதத்தையும், மகாலட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். பிரம்மதேவன், சரஸ்வதியைப் பெற்றதும் இந்த நாளில்தான். கல்வி விருத்தி பெறுவதற்கும், காரிய வெற்றி கூடவும் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது.

மனதை கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியை கொண்டாடத் தேவையில்லை. பக்தியுடன் அனுஷ்டிக்க வேண்டும். மகா சிவராத்திரி.
மனதை கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியை கொண்டாடத் தேவையில்லை. பக்தியுடன் அனுஷ்டிக்க வேண்டும். மகா சிவராத்திரி. இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். கண்விழிக்க வேண்டும். உபவாசத்துடன், கண்விழித்து, ஈசனை நினைந்து உருகி வழிபடவேண்டும்.
சிவராத்திரி நாளில் விடிய விடிய நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங்காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது. கோவிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம என வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம் பெருமானையும் வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் சோமஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறு பத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். ஏழை எளிய வர்களுக்கு தானம் செய்து விட்டு சாப்பிட வேண்டும்.

திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும்.
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை விரதம் இருந்து செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.. திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்து ஞாயிறுதோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.
திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.
திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதே போல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டு பாவாடை சாற்றலாம்.

அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும்.
துர்க்கா பூஜையை உரிய முறையில் விரதம் இருந்து மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.
தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.
அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக வெட்டி சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.
அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.
துர்க்கைக்கு எலுமிச்சம் பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.
ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம். திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள். தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள். மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள்.
உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.
பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். தீபாரதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும்.
பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்

தைப்பூச நாள் அன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணத்தில் சொல்கிறது
தைப்பூச நாள் அன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணத்தில் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல உண்ணலாம்.
அலகு காவடி எடுப்போர் 48 நாட்கள் விரதம் இருக்கின்றனர். தினமும் குளித்து விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்கின்றனர். இவர்கள் இறப்பு, தீட்டு வீடுகளுக்கு செல்வதில்லை.

‘வேலை வணங்குவதே வேலை’ என்று மனதில்கொள்ள வேண்டியநாள், தைப்பூசம் ஆகும். அப்படிச் செய்தால், பழத்துக்காகப் போராடிய முருகப்பெருமான், நமது நலத்திற்காக கண்டிப்பாக அருள்புரிவார்.
மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான் தை மாதம். இந்த மாதத்தில்தான் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசம், தை மாதம் 25-ந் தேதி (8.2.2020) சனிக்கிழமை வருகிறது. அந்தநாளில் நாம் ஒவ்வொருவரும் படைவீடுகளில் உள்ள முருகனையோ, பக்கத்து ஆலயத்தில் உள்ள முருகனையோ கண்டிப்பாக வழிபட வேண்டும். இந்தத் தைப்பூச வழிபாடுதான் நம்முடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடாகும். இந்தநாளைக் கொண்டாடுவதற்கு பழநியை நோக்கி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.
ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதியில் அசுரர்களுடன் போரிட்டு முருகப் பெருமான் வெற்றி பெற்றார். போருக்குச் செல்லும் முன்பாக முருகப்பெருமானுக்கு, பராசக்தி ஞானவேல் கொடுத்த தினம், பூசம் நட்சத்திரம் ஆகும். முருகனின் வெற்றிக்காக அம்பாள், வேல் வழங்கிய நாள் பூச நட்சத்திரம் என்பதால், அந்த நாளில் இறைவனை வழிபட்டால் நம் முடைய ஆவல்கள் பூர்த்தியாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவர். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
ஆசையில்லாத மனிதன் இல்லை. நம்முடைய ஆசைகள் நியாயமான ஆசைகளாக, அளவான ஆசையாக இருக்க வேண்டும். சிலர் சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவர். இன்னும் சிலர், நிறையப் படித்து பெயருக்குப் பின்னால் ஏராளமான பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புவர். வேறு சிலரோ ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும் என்று விரும்புவர். சிலர் திரைப்படத்துறையில் அடியெடுத்து நிலையான புகழ் பெற நினைப்பார்கள். வெளிநாடு வரை நமது புகழ் பரவ வேண்டும் என்றும் சிலர் நினைப்பதுண்டு.
இந்த ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள் தான். நமது ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையறிந்து, அதன் பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற இயலும்.
அந்த அடிப்படையில் தான் மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும், வைகாசி விசாகமும், தைப்பூசமும், ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டியும், கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகையும், பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் தை மாதம், சூரிய பலத்தோடு இருக்கும் மாதம். தேவர்களின் விழிப்புணர்ச்சி காலம். இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், கந்தப்பெருமானை கைகூப்பி வழிபட்டால் வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும். சந்ததிகள் தழைக்கும். தனவரவும் திருப்தி தரும். பூசத்தன்று வேலவன் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் குவியும்.
சிவனுக்கு ஓங்காரத்தின் பொருளை உரைக்கப் பேசும் முகம் ஒன்று, அடியவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்காக அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணந்துகொள்ள வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று. இப்படி ஆறு முகங்களைப் பெற்ற அழ கனைப் போற்றிக் கொண்டாட உகந்தநாள், தைப் பூச நன்னாளாகும். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் நம் ஆசைகள் நிறைவேறும்.
திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் பகை மாறும். மனம் தெளிவு பெறும். பழனி சென்று வழிபட்டு வந்தால் செல்வநிலை உயரும். சுவாமிமலை சென்று வழிபட்டு வந்தால் ஞானம் கைகூடும். திருத்தணி சென்று வழிபட்டு வந்தால் கோபம் தணியும். பழமுதிர்சோலை சென்று வழிபட்டு வந்தால் நமது நிலை உயரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தி யாகும்.
ஆறுபடை வீடுகளுக்கும் செல்ல முடியாதவர்கள், அந்த படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து உள்ளம் உருகி வழிபட்டாலோ, உள்ளூரில் உள்ள முருகப்பெருமானை சேவித்து வந்தாலோ நல்ல வாழ்க்கை அமையும். நம்பிக்கைகள் நடைபெறும். தைப்பூசம் அன்றுதான் அருட்பிரகாச வள்ளலார் அருள் வழங்கும் வடலூரில் ஜோதி வழிபாடு கொண்டாடப்படுகின்றது. பொதுவாக இந்த பூசவழிபாடு என்பது ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக்கூடிய வழிபாடாக அமைகிறது.
‘வேலை வணங்குவதே வேலை’ என்று மனதில்கொள்ள வேண்டியநாள், தைப்பூசம் ஆகும். அப்படிச் செய்தால், பழத்துக்காகப் போராடிய முருகப்பெருமான், நமது நலத்திற்காக கண்டிப்பாக அருள்புரிவார்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து, தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
8-2-2020 தைப்பூசத் திருநாள்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது, தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாக திகழ்வது ‘பூசம்’ நட்சத்திரம். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாளையே, ‘தைப்பூச’மாக நாம் கொண்டாடுகிறோம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நீண்டநாட்களாக போர் நடைபெற்றது. பல ஆண்டுகளாக போர் நடைபெற்றும், தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் அசுரர்களை அழிக்க வேண்டி, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று வேண்டினர்.
கருணைக்கடலான எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று, தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே ‘கந்தன்.’ சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகள், 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் ஓர் உருவமாக மாறியது. அப்படி அவதரித்தவரே முருகப்பெருமான். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும், பழனி மலையில் தைப்பூசத்திருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே, முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வைத்து வதம் செய்து தேவர்களுக்கு மன நிம்மதியை வழங்கினார். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து, தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப்பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர், பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோயால் அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
தைப்பூசம் வரும் நாள், பெரும்பாலும் பவுர்ணமியாகவே இருக்கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடங்குதல் போன்றவற்றை செய்து வைப்பார்கள். இது தவிர முருகனின் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட, முருகப்பெருமானின் அனைத்து கோவில்களிலும், சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
பொ.பாலாஜிகணேஷ்

தை மாத பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் பறந்தோடும்.
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதமாகும். பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் ஈசனின் பூரண அருள் கிடைக்கும். பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.
பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தை மாத வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால், வாழ்வில் தடைகளையெல்லாம் தகர்ந்துவிடும்.
பிரதோஷம் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.