என் மலர்
முக்கிய விரதங்கள்
மறைந்த நம் பித்ருக்கள் அல்லது முன்னோர்களை வழிபடுவதற்கான தினம் ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்த ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணியளவில் துயிலெழுந்து குடும்பத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விடவேண்டும். பின்பு உணவு மற்றும் வேறு பானங்கள் ஏதும் அருந்தாமல் வீட்டின் பெண்கள் மறைந்த முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்களை தயாரிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து அரிசி மாவு கோலமிடவேண்டும். பின்பு ஒரு மர பீடத்தை வைத்து அதன் மீது ஒரு வெள்ளை துணியை விரித்து, நமது முன்னோர்களில் ஆண் மற்றும் பெண்ணை குறிக்கும் வகையில் ஒரு வேட்டியையும் ஒரு புடவையையும் வைக்க வேண்டும்.
அந்த பீடத்திற்கு இரு புறமும் குத்துவிளக்கில் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, பழங்கள் மற்றும் தயாரிக்க பட்ட உணவுகளை படையலாக வைத்து, முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கி பீடத்தில் வைக்கப்பட்ட துணிகளை நம் முன்னோர்களாக பாவித்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் முன்னோர்களை இம்முறையில் பூஜிக்க வேண்டும். இந்த பூஜையின் போது ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.
பூஜையை முடித்த பின்பு படையலில் சிறிதை எடுத்து நமது முன்னோர்களின் அம்சமாக கருதப்படும் காகங்களுக்கு உண்ண வைக்க வேண்டும். பின்பு நீங்கள் வணங்கும் இறைவனை குறித்த மந்திரங்கள், பாடல்களை பாடி. தியான நிலையில் இருக்க வேண்டும். மதியம் ஆன உடன் முன்னோர்களின் விருப்பமாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்டு உங்களின் விரதத்தை முடிக்க வேண்டும்.
இன்றைய தினத்தில் உணவு, ஆடை மற்றும் பிற எந்த வகையான தான தர்ம காரியங்களை செய்வது இறந்த முன்னோர்களது ஆசிகள் என்றென்றும் அக்குடும்பத்தின் சந்ததியினருக்கு பெற்று தரும். பரம்பரையில் ஏற்பட்டிருக்கும் தேவ மற்றும் பித்ரு சாபங்களை போக்கும். துர்மரணம் அடைந்து நற்கதி அடையாமல் இருக்கும் முன்னோர்களின் ஆன்மா சாந்தமடையும்.குடும்பம் மற்றும் தொழிலில் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். துயரங்கள் அனைத்தும் விலகும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம், நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும். எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம். ஆகவே, சனிப்பிரதோஷ நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சொல்லப்போனால், அப்படியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்! சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் கிடைக்கப் பெறலாம்!

ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதம் இருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக் கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.
கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. காரணம் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபடுவது வழக்கம். விளக்கு இருக்கும் இடமெல்லாம் ஒளியிருப்பதுபோல விளக்கு வைத்து ஜோதியை வழி படுவதன் மூலம் ஒளிமயமான எதிர்காலம் நமக்கு அமையும்.
சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதம் இருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக் கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட்டால் வெற்றிகள் குவியும், வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.
அப்படிப்பட்ட அற்புதமான மாதத்தில் வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட, வாய்ப்புகள் வீடு தேடி வர, கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதத்தில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் லட்சுமி தேவியையும் ஆதி பராசக்தியையும் முறையாக வழிபட்டால் குறைகள் தீரும், நம்பிக்கைகள்அனைத்தும் நடைபெறும்.
எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் பண மழையில் நனையலாம். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யலாம். அந்த லட்சுமியை நாம் வீட்டு பூஜையறையில் ஆடி வெள்ளியன்று சமய மாலை பாடி வழிபட்டால் இமயத்தில் இருந் தால் கூட சமயத்தில் வந்து கைகொடுத்து காப்பாற்றுவாள். லட்சுமி அருள் இருந்தால் பணவரவு திருப்தி தரும். லட்சியங்கள் நிறைவேறும்.
பொதுவாக லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது விளக்கு ஏற்றி வைத்து குங்குமம், சந்தனம், பூ சூட்டிய குடம் வைத்து தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்து இனிப்புப் பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
வழிபாட்டின் பொழுது அஷ்டலட்சுமி வருகைப்பதிகம், துதிப்பாடல்கள் பாடி தீபம் பார்த்து வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு அகலும். கல்யாணக் கனவு நிறைவேறும். எந்தக் கோரிக்கையை நினைத்து வழிபட்டாலும் அது விரைவில் நிறைவேறும்.
லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து விரதமிருந்து வழிபட ஏற்ற நாளும் ஆடி மாதம் தான். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் வீட்டை மெழுகிக் கோலமிட்டு, மாவிலைத் தோர ணம் கட்டி லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டுவாசலில் லட்சுமிக்குரிய கோலங் களான தாமரைக்கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக்கோலம் போன்றவற்றை வரைந்து ‘திருமகள் வருக’ என்று கோலமாவினால் கூட எழுதிவைக்கலாம். லட்சுமியின் அருளால் இனிய வாழ்வு அமையும்.
-‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

ஆடி மாதம் என்றாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறுவதை காண முடியும். ஆனால் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்கள்தான் நம் கண்முன் வந்து போகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறுவதை காண முடியும். ஆடி மாதத்திற்கு நிறைய சிறப்புகள் இருக்கின்றன. தெய்வீக அம்சம் பொருந்திய இந்த மாதம், அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒரு முறை சிவபெருமானை நோக்கி தவம் இருந்த பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்த ஈசன், ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் சிறப்பான விழாக்கள் நடை பெறும் என்பதான வரத்தை அருளினார்.
சிவபெருமானின் சக்தியை விட, ஆதிபராசக்தியின் சக்தி, இந்த மாதத்தில் பரிபூரணமாகத் திகழ்வதாக சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் சக்திக்குள், சிவபெருமான் ஐக்கியமாகி விடுவதாகவும் ஐதீகம். இந்த ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு உகந்த தினங்களாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புகொண்ட ஆடி மாதத்தில்தான், பூமாதேவியின் அம்சமாக தோன்றிய ஆண்டாள் நாச்சியாரின் அவதாரம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மழை தெய்வமாக கிராமங்களில் வழிபடப்படும் அம்மனுக்கு, ‘மாரியம்மன்’ என்று பெயர். ‘மாரி’ என்றால் ‘மழை’ என்று பொருள். அந்த மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கூழ் வார்த்து, அதை அம்மனுக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. நாடு செழிப்பாக இருக்க மழை பெய்வதற்காகவும், வெப்ப நோய்களில் இருந்து மக்கள் விடுபடவும் இந்த கூழ் வார்க்கும் நிகழ்வு அம்மன் கோவில்களில் ஆடி மாதங்களில் நிகழ்த்தப்படுகின்றன. அப்போது விரதம் இருக்கும் பெண்கள், வேப்பிலை ஆடை உடுத்தி கோவிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த நாளில் அம்மனுக்கும், அவளது வாகனமாக விளங்கும் சிம்மத்திற்கும் ‘மஞ்சப்பால் அபிஷேகம்’ செய்யப்படும். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு ‘மஞ்சப்பால்’ என்று பெயர். கன்னிப்பெண்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வதன் மூலம், அவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து அம்மனுக்கு மாவிளக்கேற்றி வழிபாடு செய்வதும், முக்கியமான ஒரு வழிபாடாக இருக்கிறது. பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து, காமாட்சி விளக்கு போல செய்து, எண்ணெய் ஊற்றி அம்மன் முன்பாக தீபம் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்கப்படுவதும் உண்டு. மாரி, காளி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனைத் தரும். மாவிளக்கேற்றி வழிபடுவதால், நோய்நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியருக்கு ஆடிச்சீர் கொடுத்து, புதுமாப்பிள்ளையையும், பெண்ணையும் தாய் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள். அதன்பின் மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைப்பர். பெண் தாய் வீட்டில் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால், கத்திரி வெயில் சுட்டெரிக்கும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் இந்தப் பழக்கம் நடைமுறைக்கு வந்ததாகவும் சொல்வார்கள்.
தாங்கள் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி இப்பிறவியில் இன்பம் பெற விரதம் இருந்து இந்த நவகிரக வழிபாட்டு தலங்களுக்கு சென்று மக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான சிறப்பு வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இப்பிறவில் ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனின் ஆணைப்படி நவகிரகங்கள் வழங்குவதாக இந்து மதத்தில் கருதப்படுகிறது.
தாங்கள் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி இப்பிறவியில் இன்பம் பெற விரதம் இருந்து இந்த நவகிரக வழிபாட்டு தலங்களுக்கு சென்று மக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நவக்கிரகக் கோவில்கள்:
சூரியன் - சூரியனார் கோவில், திருமங்கலக்குடி.
சந்திரன் - கைலாசநாதர் கோவில், திங்களுர்.
செவ்வாய் - வைத்தியநாத சுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.
புதன் - சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு.
குரு - ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஆலங்குடி.
சுக்கிரன் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்.
சனி - தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு.
ராகு - நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்.
கேது - நாகநாதர் கோவில், கீழப்பெரும்பள்ளம்.
நவக்கிரக் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தும் முன்பு நவகிரகங்களுக்கு சாப விமோசனம் அளித்த திருமங்கலக்குடியில் உள்ள மங்களாம்பிகை உடன்உறை பிராணநாதர் திருக்கோவில் சென்று வழிபாடு செய்வது நல்லது.

வரும் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர், விரதம் இருந்து அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப்பேறு கண்டிப்பாக கிடைக்கும்.
ஆடி மாதத்தில் சூரியன், கடக ராசியில் சஞ்சரிப்பார். அந்த மாதத்தில் சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள் தான் ‘ஆடிப்பூரம்’ என்றழைக்கப்படுகிறது. அது 24.7.2020 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்று திருக்கோவில்கள் தோறும் உற்சவம் நடைபெறும். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர், இந்த நாளில் விரதம் இருந்து செய்யும் பரிகாரம் நல்ல பலனைத் தரும். இந்த ஆடி மாதத்தில் விரதம் இருந்து அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப்பேறு கண்டிப்பாக கிடைக்கும்.
இந்த பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறைத் தண்ணீரில் நனைய வைப்பர். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்துவிட்டு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரத்தன்று விரதமிருந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

கலியுகத்தில் சனிவார விரதம் மேற்கொண்டால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என அனைத்து நன்மையும் கிடைக்கும்.
சத்தியலோகத்தில் பிரம்மாவைத் தரிசிக்கச் சென்ற நாரதர், “கலியுகத்தில் விஷ்ணுவைப் பூஜிப்பது எப்படி?” என்று கேட்டார்.
அதற்கு பிரம்மா,“லட்சுமி பதியான திருமாலின் அருள் பெற பக்தியுடன் சனிவார விரதம் மேற்கொள்வது நல்லது. புரட்டாசியில் வரும் சனி இன்னும் விசேஷமானது. இதனால் சூரியனைக் கண்ட பனி போல துன்பம் நீங்கும். கலியுகத்தில் சனிவார விரதம் மேற்கொண்டால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என அனைத்து நன்மையும் கிடைக்கும்,” என விளக்கம் அளித்தார்.
நாரதர் மூலம் இதன் அருமையை உணர்ந்து தேவர்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு பலன் அடைந்தனர்.

ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும்.
ஆடி அமாவாசைக்கு முந்தைய தினம் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் மாங்கல்யத்துடன் வாழ்வார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அது என்ன கதை தெரியுமா? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன்.
பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது.
அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.
அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். அரற்றினாள். தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.
உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.
அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.
கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.
எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.

லட்சுமி விரத பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
1. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
2. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.
3. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
4. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிக்கலாம்.
5. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
6. வில்வமரத்தை வலம் செய்வது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம்.
7. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
8. வில்வ மரத்தின் சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப் படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.
9. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
10. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
11. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
12. லட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
13. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
14. லட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
15. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் லட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்றி வரலட்சமி விரதத்தை மேற்கொள்கின்றனர்.
16.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
17. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
18. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக் கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
19. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
20. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் லட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
21. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
22. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக லட்சுமி விரதம் கருதப்படுகிறது.
23.மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதி கம்.
24.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
25. லட்சுமி பூஜை செய்யும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
26. லட்சுமி வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
27. லட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன் படுத்தலாம்.
28. லட்சுமிவிரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் ஏழைகளை கடவுளாகவே பாவித்து நடந்து கொள்ள வேண்டும்.
29. லட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
30. லட்சுமி பூஜை செய்யும் தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயாசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பாபங்குச ஏகாதசி மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
ஓ தர்மபுத்திரா !! பாபங்குச ஏகாதசி அன்று அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபனை பக்தியோடு வழிபடுவோர், இவ்வுலகில் வேண்டுவனயாவும் பெற்று சுக, போகமாக வாழ்வதோடு மரணத்திற்குப் பின்னர் மோட்சப் பிராப்தியும் அடைவர் என்றார்.
மேலும் 100 அஸ்வமேத யாகம் மற்றும் 100 ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணியத்தில் 16ல் 1 பங்கிற்கு சமமானதாகும் என்றார். அளவிலா கடும் பாவங்கள் செய்திருந்தாலும் பாவங்களை அழித்து பக்தர்களை காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம் நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம்.
பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன் இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர் யமலோகத்தை காண மாட்டார் என்றார். மேலும் எனக்கு பிடித்த இந்த பாபங்குச ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவரும் யமலோகத்தை காணவே மாட்டார்கள் என்றார். அதே போல, சிவநிந்தனை செய்யும் வைணவர்களும், ஹரிநிந்தனை செய்யும் சைவர்களும் நிச்சயம் நரகத்தையே அடைவர் என்றுரைத்தார்.
பாபங்குச விரத புண்ணியத்திற்கு இணை வேறெதுவும் இந்த மூவுலகிலும் இல்லை என்றும், இவ்விரதத்தை நன்முறையில் விதிமுறைப்படி கடைபிடிப்பவர் யமலோகத்தை காணத் தேவையின்றி, விஷ்ணு தூதர்களால் இறைவன் ஸ்ரீஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றார். மேலும் அவர் கூறியதாவது, ஓ யுதிஷ்டிரா !! கங்கை, கயா, காசி போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வணங்குவதால் கிட்டும் பலனை விட மேலான பலனை அளிக்க வல்லது பாபங்குச ஏகாதசி விரதம் என்றார்.
மேலும், ஓ யுதிஷ்டிரா !! இவ்விரத நாளில், பகலில் உபவாசத்தோடு, இரவில் கண்விழித்து பகவத் நாம ஸ்மரணம், பாகவதம் படித்து விரதம் கடைபிடிப்பவர் வைகுந்தத்தை அடைவதோடு மட்டுமின்றி, அவரது தாய், தந்தை, மற்றும் மனைவி வழியின் 10 தலைமுறை முன்னோர்களும் மோட்சப் பிராப்தி அடைவர் என்று கூறி அருளினார்.
மேலும் பாபங்குச ஏகாதசி விரதத்தினை நன்முறையில் அனுஷ்டிப்பதால் மோட்சப் பிராப்தி பெறுவதோடு மட்டுமின்றி, முன்னோர்கள் அனைவரும் பூலோக பிறப்பிற்கு முந்தைய நிலையான வைகுந்த ரூபத்தினை அடைவர் என்றார். ஓ அரசர்களில் தலை சிறந்தவனே !! குழந்தை, இளைஞர், முதியவர் என்று யார் இந்த விரதத்தினை அனுஷ்டித்தாலும் அவர்கள் மறுபிறவி என்னும் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவதோடு, வைகுந்த பிராப்தியும் அடைவர் என்றார்.
மேலும் இந்த பாபங்குச ஏகாதசி நன்னாளில் தங்கம், எள், தானியம், பசு, விளைநிலம், குடை, குடிநீர், ஜோடி செருப்பு, இவற்றில் அவரவர் வசதிக்கேற்ப தானம் செய்பவர் யமதர்மனை காண மாட்டார்கள் என்றார். ஆனால் இப்புவியில் இத்தகு தானம் செய்யாமல் இருப்பவரது சுவாசமானது, கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது என்றார்.
மேலும் இப்பிறவியில் நீண்ட ஆயுள், உயர் குலத்தில் பிறப்பெடுத்தல், நோய் நொடியின்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை அடைந்தவர் தனது முற்பிறவிகளில் செய்த நற்காரியங்களால் அவற்றை பெற்றவராகிறார். ஆனால் இந்த பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் இவற்றை எல்லாம் விட உயர்வான இறைவன் ஸ்ரீஹரியின் இருப்பிடமான வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறியருளினார்.
பாபங்குச ஏகாதசி விரதத்தின் மகிமையை உணர்த்தும் பிரம்ம வைவர்த்த புராணத்தின் படலம் நிறைவுற்றது.
****ஓம் நமோ பகவதே வாசுதேவாய****

சிவாலயங்களில் புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளுக்குச் செய்யப்படும் சாகம்பரி வழிபாடு, "நிறைமணிக் காட்சி' என்ற பெயரில் நடத்தப்படுகின்றது.
பிரம்மாவை நோக்கித் தவமிருந்து அரிய வரங்களைப் பெற்ற துர்க்கமன் என்னும் அசுரன், உலகில் நடக்கும் அனைத்து புண்ணியங்கள், பூஜைகள் ஆகியவற்றின் பலன்கள் அனைத்தும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரமும் பெற்றான். அவன் வேதங்களையும் மந்திரங்களையும் கவர்ந்து சென்றதுடன் ஆணவம் அதிகமாகி அனைவருக்கும் பலகொடுமைகள் செய்து வந்தான்.
முனிவர்களும், தவசிகளும் குகை போன்ற மறைவிடங்களில் ஒதுங்கி வாழ்ந்தனர். மழை பொய்த்தது. பயிர்கள் கருகின. தண்ணீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது, எங்கும் வறட்சியும் பஞ்சமும் தலை விரித்து ஆடின. தேவர்களும் முனிவர்களும் தேவியை வழிபட்டனர். அப்போது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒன்றானார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்ய எண்ணம் கொண்டார்கள். அதனால் சாகம்பரி என்னும் உருவை எடுத்தார்கள்.
சாகம்பரி தேவி, தன் தேகத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகிய ஊண் இல்லாத வஸ்துக்களை உருவாக்கி முனிவர்களுக்கும் யோகிகளுக்கும், தவசிகளுக்கும், மக்களுக்கும் வழங்கினாள். பின்னர் துர்க்கமனை அழிக்கமுடிவெடுத்த சாகம்பரி தேவி, யாகமும் பூஜையும் செய்தால் அதன் பலன் அவனைச் சென்றடையும் என்பதால், தன்னைச் சுற்றி நெருப்பு வளையம் ஒன்றினை உருவாக்கினாள்.
அதன் நடுவில் அமர்ந்து தன் உடலில் இருந்து புதிய சக்தி சேனையை உருவாக்கினாள். 64ஆயிரம் தேவர்கள், வீரர்கள் உருவாயினர். தன்னுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு 9 நாட்கள் துர்க்கமனை எதிர்த்து போரிட்டு அழித்தாள். உலக மக்களின் வேண்டுகோளை ஏற்று முப்பெரும் தேவியரும் ஒன்றாகி துர்க்கமனை அழித்ததால் துர்க்கை; உலகம் முழுவதும் காத்து ரட்சிக்க ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் சதாக்ஷி (ஆயிரம் கண்ணுடையாள்); பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி எனவும் அன்னை துதிக்கப்படுகிறாள்.
சாகம்பரியின் பலவகை வழிபாட்டு முறை: சாகம்பரி தேவியை மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தராஞ்சல், உத்தரகண்ட், உத்திரபிரேதசம், மேற்கு வங்காளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொண்டாடுவதுடன் தேவிக்கு தனிக் கோயில்களும் உள்ளன. அதுபோன்று தமிழ் நாட்டில், தான்ய லட்சுமி, அன்னலட்சுமி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுகின்றனர்.
சிவாலயங்களில் புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளுக்குச் செய்யப்படும் இந்த சாகம்பரி வழிபாடு, "நிறைமணிக் காட்சி' என்ற பெயரில் நடத்தப்படுகின்றது. பார்வதியின் வடிவமான அன்னை அங்காளபரமேஸ்வரி சிவனின் கபாலத்தில் அன்னமிடும்போது அன்னபூரணியாகிறாள். அன்னபூரணியாகி அவள் உலகுக்கெல்லாம் அன்னம் அளிக்கின்றாள். உலகிற்கு அன்னமிடுபவர்களுக்கு அவள் கொடுத்த பொருட்களை முதன் முதலாக அவளுக்கே படைத்தல் என்பது மரபு.
புரட்டாசி மாதம் புதன் கிரகத்திற்கு உரிய மாதம். இம்மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஞாயிறன்றும் மேல்மலையனூரிலிருந்து வந்து குடிகொண்டு இருக்கும் ஈரோடு, சத்தியமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அதன்படி இவ்வாண்டு ஈரோடு மாவட்டம், கொமாரபாளையம், சத்தியமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி தேவிக்கு 21.09.2014 ஆம் தேதி, பஞ்சம் பட்டினி வறுமை ஒழியவும் பூரணத்துவம் எய்தவும் வேண்டி பவானி நதிக்கரையில் அம்பாளுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. மேலும் மூலவருக்கு அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு திருப்பாவாடை என்னும் அன்னம் நிவேதனம் செய்யப்படும்.
புரட்டாசி ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து ஸ்ரீ சாகம்பரி தேவியை மகிழ்வித்து வழிபடுவதால் நாட்டில் இயற்கை சமநிலை பெறும். சாகம்பரி தேவியின் பரிபூரண கடாட்சம் நிலைத்து நிற்கும். அன்னையின் அருள்பெற, ஆராட்டு, அபிஷேகம், திருப்பாவாடை மகா யாகத்தில் கலந்துகொண்டு பயன் பெறுவோம்.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி விரத வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை விரதம் இருந்து வழிபடலாம்.
இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள் விரதம் இருந்து... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும்.
அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம்.
இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், விரதம் இருந்து வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.