என் மலர்
முக்கிய விரதங்கள்
சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.
சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.
பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும்.
எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம்.

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்
குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். திருமணம் தடைப்படுபவர்கள் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமண தடை நீங்கும்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

மிக சிறப்பான தினமான ஆடிப் பௌர்ணமி தினமான இன்று அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.
ஆடி மாத பௌர்ணமி தினமான இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல், விரதம் இருந்து வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.
பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும். மேலும் அடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லதாக இருக்கின்றது.
மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும்.
வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இந்த ஆடி பௌர்ணமி தினத்தில் வேதம் அறிந்த பிராமணர்களுக்கு புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்த தொகையை தட்சிணையாக தானம் தருவது உங்களின் அத்தனை விதமான தோஷங்களை போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

ஆடிப்பெருக்கு அன்று மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு விரதமிருந்து இறைவனை வழிபடுவார்கள். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.
நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி 18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.
காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும்.
கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.
காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள்.
சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். ஆனால் கொரேனா ஊரடங்கு காரணமாக நீர்நிலைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வீட்டிலேயே பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.
மகத நாட்டில் வாழ்ந்த சாருமதி என்ற பெண், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்களாக கருதாமல், இறைவனைப்போல கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது அந்த செய்கை, மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்ததால், அன்னையானவள் சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார்.
மேலும் சாருமதிக்கு வரலட்சுமி நோன்பின் வழிமுறைகளை கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கூறினாள். மேலும் “என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்” என்றும் அருளினாள், மகாலட்சுமி. அதன்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள் பலரும், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருந் தனர். நாளடைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விர தம் இருக்கத் தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.
விரதம் இருக்கும் முறை
வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.
விரத பூஜைக்கு தேவை யான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப்பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.
அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.
இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்திற்கு சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சொல்லலாம்.
‘மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’ என்று மனம் உருக வணங்க வேண் டும். பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.
ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏகாந்த தினமாகவே இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.
'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.
ஏகாதசி விரதம் மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம்.

விரதம் இருந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிவப்பு நிற அரளிப்பூ அணிவித்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல மக்களையும், 16 செல்வங்களையும் பெறலாம்.
* ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.
* கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக, சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயம் குறிப்பிடுகிறது.
* ஜாதகத்தில் 19 வருடம் சனி திசை நடப்பில் இருந்தால், அந்த ஜாதகத்துக்குரியவர் சனிக்கிழமையில் பைரவர் விரதம் இருந்து வழிபாட்டை செய்து வர வேண்டும்.
* செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து, எமகண்டம் நேரத்தில் பைரவருக்கு தயிர், தேங்காய், தேன் படைத்து, வில்வ, வன்னி இலை, செவ்வரளி மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும், சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை, கொள்ளுப்பொடி கலந்த அன்னம், விளாம்பழம் அல்லது வில்வப்பழம் படைத்து ஒரு பூசணியில் மிளகு தீபமும், ஒரு தேங்காயில் மிளகு தீபமும் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் கேது தசையின் பாதிப்புகள் நீங்கி நல்லது நடக்கும்.
* பிரதோஷம் அல்லது மாதசிவராத்திரி அன்று சிவலிங்கம் அல்லது விநாயகருக்கு மூன்று நெய்தீபம் ஏற்றி பைரவருக்கு தயிர் அன்னம், வடைமாலை செலுத்தி ஐந்து பழங்களில் மிளகு தீபம் ஏற்றி பஞ்சதீபமாக வழிபட்டால் வாழ்க்கையிலும், வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.
* வலம்புரி சங்கில் ஐந்து வித எண்ணெய், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து தாமரை தண்டு திரியையும் சிவப்பு துணியையும் சேர்த்து திரியாக திரித்து 48 நாட்கள் பைரவருக்கு வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செவ்வாய், சனிக்கிழமையில் செய்து வந்தால் வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்.
* வீட்டில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கணபதி, லட்சுமி, நவக்கிரக, மிருத் துஞ்சனம், தன்வந்திரி யாகங்களை செய்து கடைசியில் மஹா ருத்ர பைரவர் யாகம் செய்வது நல்லது.
* விரதம் இருந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிவப்பு நிற அரளிப்பூ அணிவித்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல மக்களையும், 16 செல்வங்களையும் பெறலாம்.
* அஷ்டமி, ஆயில்யம், சுவாதி, பரணி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். செய்தொழிலில் லாபம் வரும்.

மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது. மனிதர்களை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு, உலகத்தை காக்கும் அன்னை தோன்றிய நாளே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுவதுண்டு. எனவே, இந்நாளில் அன்னை உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு. ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.
ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை, ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும்.
மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆடிப்பூரத்தின் சிறப்பு :
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷங்களின் தாக்கம் குறையும்.
25-7-2020 கருட பஞ்சமி
காசிப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு, நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்தாள். ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ எனக் கேட்டாள். அதற்கு வினதை ‘வெள்ளை நிறம்’ என்று பதிலளித்தாள்.
கத்ருவோ, ‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள். விவாதம் வளர்ந்தது.
இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்று இருவரும் நிபந்தனை வகுத்துக் கொண்டனர்.
கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கருப்பு நிறமாக மாற்ற தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்க்கோடகன் செய்ய, பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமையாக்கினாள். வினதை அடிமையானதால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் கூட அடிமையாயினர். தாயின் அடிமையை நீக்கச் சென்ற கருடனிடம், “தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால் உன் தாய் வினதைக்கு விடுதலை கிடைக்கும்” என்றாள்.
கருடனும், ‘சரி’ என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர்களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன், தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார்.
இதைப்பார்த்து இந்திரன் மகிழ்ச்சி அடைந் தான். கருடன், “என் தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதைக் கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு நீங்கள் மறுபடியும் இதைக் கொண்டு வந்து விடலாம்” என்று கூறி னார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தான்.
கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதைக் கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்து தன் தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். கருடன் வேதமே வடிவானவர். ராமாயணத்தில் இந்திர சித்தன் எய்திய நாக பாசத்தால் ராமரும் லட்சுமணரும் திகைத்து நிற்கையில், கருடனின் காற்றுபட்டு ராம, லட்சுமணர்களை கட்டியிருந்த நாகாஸ்திரம் விலகியது.
கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷங்களின் தாக்கம் குறையும்.
விரதம் இருப்பது எப்படி?
பெருமாளின் வாகனமான கருட பகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான், ஆடி மாதத்தில் வருகின்ற ‘கருட பஞ்சமி’ தினம். அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று கருட பகவான் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங் களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோவிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும் பலாம்.
கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.
கண் திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்பு போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடை யும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

நாகதோஷத்தில் இருந்து மீள்வதற்கு விரதம் இருந்து நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.
24-7-2020 நாக சதுர்த்தி
நவக்கிரகங்களில் கேதுவும், ராகுவும் பாம்பு கிரகங்களாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கிரகங்களாலும் ஏற்படும் நாகதோஷத்தால் மக்கள் பல அவதிக்குள்ளாவதாகவும் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமை உள்ளிட்ட பல இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். நாகதோஷத்தில் இருந்து மீள்வதற்கு விரதம் இருந்து நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.
காசியப முனிவரின் மனைவிகளில் இருவரான வினதைக்கும், கத்ருவுக்கும் போட்டி ஒன்று ஏற்பட்டது. இந்திரனிடம் உள்ள குதிரையின் நிறம் வெண்மையா.. கருப்பா.. என்பதாக அவர்களின் வாதம் இருந்தது. யார் சொல்வது சரியோ.. அவர்களுக்கு மற்றவர் அடிமையாக வேண்டும் என்பது அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம்.
போட்டியில் வெற்றிபெறுவதற்காக, கத்ரு தனது பிள்ளைகளான நாகர்களிடம் குதிரையின் வால்பகுதியில் போய் ஒட்டிக்கொள்ளும்படி கூறினாள். ஆனால் அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவள், “நீங்கள் அனைவரும் ஜனமேஜயன் நடத்தும் வேள்வியில் விழுந்து அழிந்துபோவீர்கள்” என்று சாபம் கொடுத்தாள். அந்த சாபம் விரைவிலேயே பலிக்கும் படியான ஒரு சம்பவம் நடைபெற்றது.
பாம்புகளின் தலைவனாக விளங்கிய தட்சகன் என்ற கொடிய நாகத்தால் தீண்டப்பட்டு, பரீட்ஷித் என்ற மன்னன் இறந்தான். அவரது மகன் ஜனமேஜயன், தன்னுடைய தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பின் இனத்தையே அழிக்க உறுதி எடுத்தான். அதற்காக வேள்வி ஒன்றை நடத்தினான். அவனது அந்த தீயில் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் வந்து விழுந்து இறந்துகொண்டிருந்தன. இன்னும் சில நாகங்களே எஞ்சியிருந்தன.
இந்த நிலையில் அஸ்தீகர் என்ற முனிவர், ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ‘நாக சதுர்த்தி’ தினம் என்று சொல்லப்படுகிறது. எனவே நாக விரதம், ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
நாக சதுர்த்தி விரத வழிபாட்டை செய்தால், ராகு-கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலனைத் தரும். கருட பஞ்சமிக்கு முன்தினத்தில் இந்த நாக சதுர்த்தி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். மேலும் அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகிய நாகங்களின் பெயர்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்.
கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார்.
பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார்.
ஆனால் தனது பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.
தனது ஆசிரமத்துக்கு வந்த அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கௌத முனிவர் கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார்.
முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாட்களும் கடும் விரதம் இருந்து சிவனைப் பூஜித்தாள். பார்வதி தேவியின் கடும் தவத்தால் மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்தார். இறைவனைக் கண்ட பார்வதி தேவி, ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள். ‘தந்தேன்’ என்றார் ஈஸ்வரன்.
“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத்தை அளித்தார். சிவனின் உடலில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
அப்போது, அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார் பரமேஸ்வரன்.

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆடி தபசு
ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.
ஆடிப்பூரம்
அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆடி கிருத்திகை
கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி..
‘ஆடி செவ்வாய் தேடிக்குளி’ என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், ‘அவ்வையார் விரதம்’ கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.
ஆடி பெருக்கு
ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்