search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருடன்
    X
    கருடன்

    சர்ப்ப தோஷம் நீங்க இன்று விரதம் இருந்து கருட வழிபாடு செய்யலாம்

    கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷங்களின் தாக்கம் குறையும்.
    25-7-2020 கருட பஞ்சமி

    காசிப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு, நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்தாள். ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ எனக் கேட்டாள். அதற்கு வினதை ‘வெள்ளை நிறம்’ என்று பதிலளித்தாள்.

    கத்ருவோ, ‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள். விவாதம் வளர்ந்தது.

    இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்று இருவரும் நிபந்தனை வகுத்துக் கொண்டனர்.

    கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கருப்பு நிறமாக மாற்ற தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்க்கோடகன் செய்ய, பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமையாக்கினாள். வினதை அடிமையானதால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் கூட அடிமையாயினர். தாயின் அடிமையை நீக்கச் சென்ற கருடனிடம், “தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால் உன் தாய் வினதைக்கு விடுதலை கிடைக்கும்” என்றாள்.

    கருடனும், ‘சரி’ என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர்களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன், தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார்.

    இதைப்பார்த்து இந்திரன் மகிழ்ச்சி அடைந் தான். கருடன், “என் தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதைக் கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு நீங்கள் மறுபடியும் இதைக் கொண்டு வந்து விடலாம்” என்று கூறி னார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தான்.

    கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதைக் கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்து தன் தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். கருடன் வேதமே வடிவானவர். ராமாயணத்தில் இந்திர சித்தன் எய்திய நாக பாசத்தால் ராமரும் லட்சுமணரும் திகைத்து நிற்கையில், கருடனின் காற்றுபட்டு ராம, லட்சுமணர்களை கட்டியிருந்த நாகாஸ்திரம் விலகியது.

    கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷங்களின் தாக்கம் குறையும்.

    விரதம் இருப்பது எப்படி?

    பெருமாளின் வாகனமான கருட பகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான், ஆடி மாதத்தில் வருகின்ற ‘கருட பஞ்சமி’ தினம். அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று கருட பகவான் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங் களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோவிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும் பலாம்.

    கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.

    கண் திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்பு போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடை யும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.
    Next Story
    ×