என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

    ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

    மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

    சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது. வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் "அபரா', "நிர்ஜலா' ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். ஆடி மாதத்து "யோகினி', "சயன' ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், பலருக்கு அன்னதானம் செய்த பலனைப் பெறுவர்.

    ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான "காமிகை'யிலும் தேய்பிறை ஏகாதசியான "புத்திரதா'விலும் விரதமிருப்போருக்கு நன்மக்கட்பேறு கிட்டும். புரட்டாசி மாத ஏகாதசிகள் "அஜா', "பரிவர்த்தினி' எனப்படுகின்றன. ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா', தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', "பிரமோதினி'. மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை மாத ஏகாதசிகள் "சுபலா', "புத்ரதா' எனப்படுகின்றன. மாசி மாத வளர்பிறை ஏகாதசியான "ஜெயா'வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர்.

    ஏகாதசி விரதம் மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம்.
    செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
    பூமியில் இருக்கும் அனைத்தின் மீதும் நவகிரகங்களின் தாக்கம் இருக்கின்றன என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். நமது முன்னோர்கள் காலத்தை நமக்கு காட்டும் நாள், வருடம் போன்றவற்றில் 7 நாட்கள் கொண்ட ஒரு வாரம் காலத்திற்கு ராகு கேது கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு வார தினங்களுக்கு பெயர் வைத்தனர். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடன் செவ்வாய் கிழமை உண்டாயிற்று. இந்த செவ்வாய் கிழமை அன்று மேற்கொள்ள படும் செவ்வாய் கிழமை விரதம் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துகள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் மேற்கண்ட அனைத்து விஷயங்களில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி நன்மைகளை பெற செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

    செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துகள் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும்.
    எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்ட பிறகு தொடங்குவதே நம்முடைய வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு தொடங்கும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கை. கணங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்கிறோம். அந்தக் கணபதிக்கு உகந்த திதி ‘சதுர்த்தி’ திதியாகும். மாதந்தோறும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியை மட்டுமே ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டும், அவல், பொரி, கடலை படைத்தும் விநாயகரை வணங்கி வந்தால் கவலைகள் தீரும். உங்களுடைய கனவுகள் நனவாகும்.

    அனைத்து பொருட்களிலும் எழுந்தருளி அருள்பவர், விநாயகப் பெருமான். மஞ்சள், பசு சாணம், சந்தனம் என்று எதை வேண்டுமானாலும் பிள்ளையாராக பிடித்து வைத்து வழிபடலாம். விக்கிரகம் வைத்துதான் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் விநாயகருக்குக் கிடையாது. ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம், வீட்டில் இருந்தபடியேயும் வழிபாட்டை தொடரலாம். தும்பிக்கை வைத்திருக்கும் விநாயகரை, நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும். துன்பங்கள் தூரமாக விலகி ஓடும்.

    ‘சதுரம்’ என்றால் ‘நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பு’ ஆகும். அதே போல் நம்முடைய வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். மேலும் அவருக்குப் பிடித்த அருகம்புல், வன்னி இலை, எருக்கம்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ போன்றவற்றையும் வைத்து வழிபட வேண்டும்.

    விநாயகருக்கு முன்பாக நின்று, தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டு வணங்குவது பக்தர்களின் வழக்கம். கஜமுகாசூரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி, தினந்தோறும் தனக்கு முன்பாக 108 தோப்புக்கரணம் போட வைத்தான். அந்த அசுரனை விநாயகப்பெருமான் அழித்தார். இதையடுத்து அசுரனுக்கு பயத்தால் போட்ட தோப்புக்கரணத்தை, விநாயகரின் முன்பாக பக்தியோடு தேவர்கள் அனைவரும் செலுத்தினர். இதுவே விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணமாகும்.

    திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு உகந்த நாட்களாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள் கொடுப்பவர், ஆனைமுகப் பெருமான். இத்தகைய சிறப்புமிக்க விநாயகப் பெருமானை, ஆவணி சதுர்த்தியில் பூவணிந்து வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
    சிரவண மாத கிருஷ்ண பட்ச துவிதியை திதி கிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் என புராணங்கள் கூறுகின்றது. அதனை அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. இது ஒரு வித்தியாசமான விரதம்.

    இதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும், தம்பதிகளிடையே அன்யோன்யமும் குடும்பத்தார் இடையே சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு எப்படி தயாராவது போலவே தயாராக வேண்டும் .  அவசியம் அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது.

    மாலை பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு மஹாலஷ்மி இணைந்த  விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப்  பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தனியாகச் செய்வதைவிட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம்.  ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும்.

    அப்போது தாலாட்டுப்பாட வேண்டும்.
    “மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
    பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக்குறளனே தாலேலோ!
    வையம் அளந்தானே தாலேலோ!”

    என்று பாடி, பள்ளி அறையைச் சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும்.  மறுநாள் காலை எழுந்து, முறையாகப்  புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும். இந்த விரதத்தை எல்லோரும் கடைப் பிடிக்கலாம். நன்றாக தூக்கம் வருபவர்களும் கூட.
    கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
    பெருமாளின் வாகனமாக கருடபகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி தினம். அந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.

    கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.

    கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

    புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
    ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.

    பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர். கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின. அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன் நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

    ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப் பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அதுவே நாகசதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி.

    தங்கள் விருப்பம் போல் நாகசதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.

    விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.
    அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
    அம்பாளை வழிபடுவதற்கான சிறப்புமிக்க தினங்களில் ஒன்று, ஆடிப்பூரம். இந்த நல்ல நாளில், அம்மன் கோவில்கள் அனைத்திலும் அம்பாளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்படும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் அன்று பக்தர்கள், குறிப்பாக பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள்.

    பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    * திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் விழா நடத்தப்படும். அதில் 4-ம் நாளில் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு நடத்துவார்கள்.

    * திருவாரூர் - கமலாம்பாள், நாகப்பட்டினம் - நீலாயதாட்சி, திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை ஆகிய சிறப்புமிக்க அம்மன்கள் அருளாட்சி புரியும் திருக்கோவில்களிலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    * சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.

    * ஆடிப்பூரம் அன்று, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    * திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும், திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இங்குள்ள அம்மனின் மூர்த்தமானது, அஷ்ட கந்தகம் என்ற எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அம்மன் தன்னுடைய மார்பில் ஸ்ரீசக்கரத்தை பதக்கமாக அணிந்திருக்கிறாள். இந்த அம்மனுக்கு, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகியவையே அபிஷேகம் நடைபெறும் நாட்களாகும்.

    * ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் இந்நாளில், ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. மேலும் இந்த நாளில், தாலிக்கு புதிய மஞ்சள் கயிறு கோர்ப்பது நன்மை அளிக்கும்.

    * ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில்விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
    செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிமாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாட்களாகும்.

    திருமண தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க, ஆடி கடைசி செவ்வாய் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கல கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைக்கூடும்.

    ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மறக்காமல் அம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

    ராகு கால வேளையில் அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். மேலும் துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.

    ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில் அம்மனை தரிசனம் செய்வதால் தடைப்பட்ட மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.

    பெண்கள் ஆடி கடைசி செவ்வாய்கிழமையில் விரதம் இருநது அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகிறார்கள்.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால் பிற நாட்களில் செய்வதை விட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பது நல்லது.
    பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.
    தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகை அழிக்க வல்ல அந்த விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அது அவரது கழுத்திலேயே நின்றுபோனது. விஷத்தின் தாக்கத்தால் மயங்கி, பின்னர் விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்த நடனம் ஆடி, அருளினார். அதுவே ‘பிரதோஷம்’ எனப்படுகிறது. இதற்கு ‘தோஷம் இல்லாத நேரம்’ என்று பொருள் கொள்ளலாம். பிரதோஷ நாள்

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷம் வரும்.

    பிரதோஷ நேரம்

    சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும், சூரியன் மறைவுக்குப் பின் மூன்றே முக்கால் நாழிகையும் கொண்டது, பிரதோஷ நேரம். சுமார் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.

    சிவனை வணங்கும் முறை

    வழக்கமாக இடமிருந்து வலமாகச் சுற்றி வந்துதான் இறைவனை வணங்குவோம். ஆனால் பிரதோஷ வேளையில், வலமும், இடமும் மாறி மாறி வந்து ஈசனை வணங்க வேண்டும். இதற்கு ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ என்று பெயர். வில்வ இலையால் தொடுக்கப்பட்ட மாலையை ஈசனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    பிரதோஷ பூஜை

    இந்த கால வேளையில், நந்திக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படும். பின்னர் நந்தி வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதே பிரதோஷ பூஜையாகும். அப்படி வலம் வரும் நேரத்தில் வேதங்களை பாராயணம் செய்தும், நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை வணங்குவார்கள்.

    சனிப் பிரதோஷம்

    விஷம் அருந்தி தெளிந்த பின் ஈசன் ஆடிய நடனம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமை. எனவே சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு பெறுகிறது.

    நந்தியை வணங்கும் முறை

    சிவப்பு அரிசி, நெய் விளக்கு, அருகம்புல் மாலை ஆகியவற்றை நந்திக்கு படைக்க வேண்டும். பின்னர் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, ஒரு பிடி அருகம்புல்லை வைத்து வணங்க வேண்டும். இதனால் சனியால் ஏற்படும் இன்னல் விலகும்.

    மகா பிரதோஷம்

    சித்திரை மாதம் வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷ நாள், ‘மகா பிரதோஷம்’ எனப்படுகிறது.

    பிரதோஷ வகை

    சனிப்பிரதோஷம், சோமவார பிரதோஷம் தவிர்த்து, 20 வகையான பிரதோஷங்கள் உள்ளன.

    பிரதோஷ விரதம்

    இந்த விரதம் மேற்கொள்பவர்கள், பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, பிரதோஷ வேளையில் சிவாலய தரிசனத்தை முடித்த பிறகு உணவருந்த வேண்டும். தொடர்ந்து பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.
    இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் ஆடி அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அடி அமாவாசை அன்று விரதம் இருந்து நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம்.

    ஆடி அமாவாசை அன்று ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

    முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    ஆடி அமாவாசை  விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்
    பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை அறுத்து, வீடுபேறு அளிக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய ஒரு அற்புத தினம் தான் பிரதோஷம். ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

    ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்து நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். .

    ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
    நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
    வருடத்தில் 365 நாட்களுமே நந்தியை விரதம் இருந்து வழிபட்டு வருவதில் தவறில்லை. ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால் விரதம் இருந்து பிரதோஷ நாளில் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விரதம் இருந்து வழிபட்டால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

    திங்கட்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும்.

    செவ்வாய்க்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் உணவுப் பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் பெருகும்.

    புதன்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் கல்வியில் விருத்தி உண்டாகும்.

    வியாழக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் படிப்பில் இருந்த தடை அகலும். புத்திரப்பேறு உருவாகும்.

    வெள்ளிக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் செல்வ விருத்தியும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

    சனிக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
    ×