என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பரிவர்த்தன ஏகாதசி அன்று லட்சுமி பூஜையையும் மக்கள் செய்கிறார்கள், ஏனெனில் இது லட்சுமி தேவியைப் பிரியப்படுத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதப்படுகிறது.
    விஷ்ணுவின் வாமன அவதாரம் பரிவர்த்தன ஏகாதசி நாளில் வணங்கப்படுகிறது. இந்த நாளில் தூங்கும் போது ஸ்ரீ விஷ்ணு வளைவு போல, எனவே இது பரிவர்த்தன ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது பத்ம ஏகாதசி என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

    இந்த நாளில் விஷ்ணுவின் வாமன அவதாரத்தை வணங்கும் மனிதர்கள் வாஜ்பாய் யாகத்திற்கு சமமான பழங்களை அறுவடை செய்கிறார்கள், மேலும் அவர்களின் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இந்த நாளில் லட்சுமி பூஜையையும் மக்கள் செய்கிறார்கள், ஏனெனில் இது லட்சுமி தேவியைப் பிரியப்படுத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதப்படுகிறது.

    பரிவர்த்தன ஏகாதசி விரத் பூஜா விதி

    பரிவர்த்தன ஏகாதசி வ்ரதமும் பூஜையும் பிரம்மா, விஷ்ணு மற்றும் மூன்று உலகங்களையும் வணங்குவதற்கு சமம். இந்த உண்ணாவிரதத்தின் பூஜா விடி பின்வருமாறு:

    * இந்த ஏகாதஷிக்கான மனித உண்ணாவிரதம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தசாமியில் ஒரு நாள் முன்னதாகவே உட்கொள்ளக்கூடாது. இரவில், அவர்கள் தூங்கும் போது விஷ்ணுவின் பெயரை பரிந்துரைக்க வேண்டும்.

    * ஏகாதசி நாளில், அதிகாலையில் எழுந்து கடவுளின் பெயரை இணைக்கவும். நோன்புக்காக குளிக்கும் சபதம் எடுத்த பிறகு. பின்னர், விஷ்ணுவின் வெண்கலத்தின் முன் ஒரு நெய் விளக்கை ஏற்றி வைக்கவும்.

    * விஷ்ணுவை வழிபடுவதற்கு துளசி இலைகள், பருவகால பழங்கள் மற்றும் எள் விதைகளைப் பயன்படுத்துங்கள். இந்த நாளில் ஒருவர் உணவை உட்கொள்ளக்கூடாது, ஆனால் கடவுளை வணங்கிய பின்னர் மாலையில் பழங்களைப் பெறலாம்.

    * நோன்பு நாளில் மற்றவர்களை விமர்சிப்பதையும், இடுவதையும் தவிர்க்கவும். அது தவிர, காப்பர் பாத்திரங்கள், தயிர் மற்றும் அரிசி ஆகியவற்றை தானம் செய்யுங்கள்.

    * அடுத்த நாள் த்வாதாஷியில், சூரிய உதயத்திற்குப் பிறகு உண்ணாவிரதத்தைத் திறந்து, ஏழை நபர்கள் அல்லது பிராமணருக்கு உணவு மற்றும் நன்கொடை வழங்குங்கள்.
    ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப்பெருக்கு.
    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.

    மேலும்  ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதி இல்லை. நதிக்கரை, ஆற்றங்கரைகளில் இன்று மக்கள் வழிபடவும், புனித நீராடவும் அனுமதி இல்லை  என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று எல்லோரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுவோம்.

    ஆடிப்பெருக்கு நாளில் விரதம் இருந்து கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.
    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர்.
    இன்று கிருத்திகை நட்சத்திரம். பொதுவாக, கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பார்கள். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது.

    கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் முருகன் மிகவும் மகிழ்வான். குறிப்பாக, ஆறுமுகனாக இன்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

    மேலும் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். பொதுவாகவே, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.

    வழக்கமாக இந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை அத்தகைய கொண்டாட்டங்கள் இன்றி அவரவர் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடாக மாறியிருக்கிறது. இந்த நாளில் விரதம் இருந்து வீட்டில் முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.

    எனவே, இந்த நாள் முழுவதும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தை ஓதுவோம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் வகுப்பு, வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்வோம். இந்த நாளில் முருகப்பெருமானுக்கு அவல் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். இதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் குறைந்து அமைதியும் அன்பும் பெருகும் என்பது ஐதிகம்.
    ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு தினமும் இறைவழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் விஷேஷ பலன்களை பக்தர்களுக்கு தரவல்ல ஒரு அற்புத தினமாக இருக்கிறது.

    ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி  பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி வியாழக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

    மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும். பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.
    அம்பிகையை ‘சக்தி’ என்று சொல்கின்றோம். எந்தக் காரியத்தை செய்யும் பொழுதும், ‘சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியோர்கள் சொல்வது வழக்கம்.
    கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒருமாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. ஆடி மாத வெள்ளிக்கிழைகளில் தான் ஆலயங்களில் விளக்கு பூஜை நடத்துவார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்யும் மாதம் ஆடி மாதம்தான். வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும். வேதனைகள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப்படையில் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன்கள் கைமேல் கிடைக்கும்.

    பெண் தெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாக ஆடி மாதம் அமைகின்றது. ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் அகலும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் அமைகின்றது.

    ஆடி வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமியை வரவேற்க வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமிக்குரிய தாமரைக் கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் ஆகியவற்றில் ஒன்றை வரைய வேண்டும். அதன் கீழே ‘திருமகளே வருக’ என்று கோலமாவில் எழுதி வைக்கலாம். அதிகாலையில் வீதிக் கதவைத் திறக்கும் பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயரையும் உச்சரித்து “வருக.. வருக..” என்று சொல்ல வேண்டும். இல்லத்து பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி நடுநாயகமாக விநாயகர் படம் வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது.

    அம்பிகையை ‘சக்தி’ என்று சொல்கின்றோம். எந்தக் காரியத்தை செய்யும் பொழுதும், ‘சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியோர்கள் சொல்வது வழக்கம். ஒரு மனிதன் செயல்பட காரணமாக இருப்பது, அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள் கொடுக்கும் சக்தியான அம்பிகையும் தான். அந்த சக்தியை சாந்த வடிவில் ‘காமாட்சி’ என்றும், ‘மீனாட்சி’ என்றும், ‘விசாலாட்சி’ என்றும், ‘உண்ணாமலை’ என்றும், ‘அகிலாண்டேஸ்வரி’ என்றும், ‘புவனேஸ்வரி’ என்றும், ‘திரிபுரசுந்திரி, காந்திமதி, பெரியநாயகி, தையல்நாயகி’ என்றும் எண்ணற்ற பெயர்களைச் சூட்டி வழிபாடு செய்கின்றோம். ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு, மாரியம்மன், காளியம்மன், பொன்னழகி, கனக துர்க்கை, பராசக்தி, திரிசூலி என்றெல்லாம் பெயர் சூட்டி இருக்கின்றார்கள்.

    பால்கேட்டு அழுத பிள்ளைக்கு சீர்காழி படித்துறையில் பால் கொடுத்தவள், நாக்கில் ‘ஓம்’ என்று எழுதி காளமேகத்தை பாட்டரசன் ஆக்கியவள், வேல் கேட்ட முருகப்பெருமானுக்கு சக்திவேல் கொடுத்து சூரனை சம்ஹாரம் செய்ய வைத்தவள். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அம்பிகையை முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற நாள் ஆடி வெள்ளிக்கிழமை ஆகும். குடும்பப் பிரச்சினை அகலவும், திருமண யோகம் கைகூடவும், அனைத்து நன்மைகளும் அடுக்கடுக்காக வந்து சேரவும், ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் அம்பிகையை வழிபடுவோம். இன்பங்களை வரவழைத்துக் கொள்வோம்.

    ‘ஜோதிடக் கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.
    வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

    ஆண்டுதோறும் கோடைகால பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது. வட நாட்டு பெண்கள் விரதம் இருந்து ஆலமரப்பூக்களை சாப்பிடுவார்கள்.ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பவுர்ணமி அன்று பெண்கள் வழிபாடு நடத்தும் சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும்.

    பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.
    வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.
    பன்னிரண்டு மாதங்களுக்கும், 12 நவராத்திரிகள் இருப்பதாக ‘சாக்த சாஸ்திரங்கள்’ குறிப்பிடுகின்றன. ஆனால் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் நவராத்திரிகள், புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ‘சாரதா நவராத்திரி’, பங்குனி மாதத்தில் வட மாநிலங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவைதான். இதுதவிர தை மாத அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் வழிபடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் அம்பாளை, வராகியாக நினைத்து வழிபடப்படும் ‘வராக நவராத்திரி’ ஆகியவையும் வழிபாட்டில் உள்ளன.

    வராக நவராத்திரியை ‘ஆஷாட நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள். வராகி அம்மன் என்றாலே ராகு கால வழிபாடும், பஞ்சமி வழிபாடும், பின்னிரவு வழிபாடும் பெரும் சிறப்புக்குரியவை. வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.

    தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வெகு விமரிசையாக வழிபாடுகள் நடைபெறும். இதில் பங்கேற்பவா்களுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கைவரப்பெறும். வராகி அம்மன் ஆலயம் அருகில் இல்லை என்றாலோ, வீடுகளில் வராகி அம்மன் வடிவம் இல்லை என்றாலோ, அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள அம்பாள் சன்னிதிகளில் வழிபாடு செய்தாலே போதுமானது. ஏனெனில் அம்பாளின் வடிவாகத்தான் வராகியைப் பார்க்கிறோம்.

    வராகி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், வராகி அம்மனுக்கு தேனில் ஊற வைத்த மாதுளை முத்துக்களை நைவேத்தியமாக படைப்பார்கள். மேலும் அந்த அன்னைக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை நிற வஸ்திரம் அணிவிப்பதும் சிறந்தது. அதிலும் பச்சை நிறமே, வராகி அம்மனுக்கு பெரிதும் உகந்தது. வராகி அம்மனை வழிபடுபவர்களும், இந்த நவராத்திரி காலங்களில் பச்சை நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும். காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராகி தேவி அருள் பாலிக்கிறாள். அங்கு வராகி அம்மனின் எதிரில் ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர் களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.

    பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வராகி எனும் சப்த மாதா்களில், வராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி ஆவார். இவர் சப்த மாதர்கள் என்னும் எழுவரில், ஐந்தாமானவள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மேல்) அல்லது வராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.

    பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வராகி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள். காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் வராகி அம்மன் அருள்கிறாள். மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் செவ்வாய், பஞ்சமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில், வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானது. அந்த வழிபாட்டின் போது, வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்பி வைத்து, தேங்காய் உடைத்து, அதன் இரு மூடியிலும் பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

    ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக் கோவிலின் அருகே மிகவும் பழமைவாய்ந்த சுயம்பு மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ‘சீதளா தீர்த்தம்’ என்ற தீர்த்தம் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தைப் பற்றி தன்னுடைய திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். மேலும் உத்தரகோசமங்கை ஆலயத்தை அலங்கரிக்கும் இறைவன்- இறைவி இருவருடைய தீர்த்தவாரியும், இந்த சீதளா தீர்த்தத்தில் தான் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் உள்ள சுயம்பு வராகி அம்மனை, ‘ஆதி வராகி’ என்று போற்றுகின்றனர். மங்கை மாகாளி அம்மன் என்பதும் இந்த தேவியின் திருநாமத்தில் ஒன்று.

    வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் ரத்னகிரி பாலமுருகன் திருக்கோவில் அருகிலும் வராகி அம்மனுக்கு மிகவும் பழமையான கோவில் ஒன்று இருக்கிறது.

    மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனாய அரசேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இங்கு தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில், கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராகி அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
    சிறப்பு மிக்க மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான நாள் தான் ஆடி சங்கடஹர சதுர்த்தி தினம். அந்த தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளும், அதனால் உண்டாகும் பலன்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    ஆடி மாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள், தெய்வங்களுக்கான சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் போன்றவை நடைபெறும் ஒரு மாதமாக இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாளாக ஆடி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆடி சங்கடஹர சதுர்த்தி. அதிலும் சனிக்கிழமை அன்று இந்த சங்கடஹர சதுர்த்தி தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்

    ஆடி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

    ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் காரிய தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும். புதிதாக மேற்கொள்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும், நீங்கள் விரும்பிய பலன்களும் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெறும். குழந்தைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி மற்றும் வெற்றியும் பெறுவார்கள். நீண்டகாலமாக வேலை தேடி அலைந்தவர்கள் சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

    பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருமானம் பெருகும். சனிக்கிழமை வருகின்ற ஆடி சங்கடஹர சதுர்த்தி என்பதால் அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சனி கிரக தோஷங்களின் கடுமைதன்மை குறைந்து, நற்பலன்கள் அதிகம் ஏற்பட வழிவகை செய்யும்.
    ஆடி பவுர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
    தமிழ் மாதங்களில் பற்பல சிறப்புகளை கொண்ட ஒரு அற்புத மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த ஆடி மாதத்தில் தான் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் பூஜைகள், போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றன. தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புது வீடு புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகிறது. அத்தகைய ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக அற்புதமான தினம் தான் ஆடிப்பவுர்ணமி தினம். மிக சிறப்பான தினமான ஆடி பவுர்ணமி தினத்தில் அம்மன் வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.

    ஆடி மாத பவுர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல், வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.

    பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அருகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும். மேலும் ஆடி பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லதாக இருக்கின்றது.

    அம்மன்

    மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும்.

    வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இந்த ஆடி பவுர்ணமி தினத்தில் வேதம் அறிந்த பிராமணர்களுக்கு புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்த தொகையை தட்சணையாக தானம் தருவது உங்களின் அத்தனை விதமான தோஷங்களை போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
    நம்முடைய உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த உபவாசத்தை தேர்வுசெய்து அனுஷ்டிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
    1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
     
    2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    3. பசுவின்பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
     
    6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    9. மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப்  பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    19. ஒருநாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
     
    25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறு நாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
     
    26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு  பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக்  குறைப்பது என உபவாசம் இருத்தல்.
     
    27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.
    ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
    திருமால் அவதரித்த தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம் ஆகும். கூர்மம் என்றால் ஆமை எனப் பொருள்படும். அத்தகைய ஆமை வடிவம் கொண்டு பல நன்மைகள் ஏற்பட காரணமாக இருந்த கூர்ம அவதாரம் எடுத்த தினம் தான் கூர்ம ஜெயந்தி ஆகும். ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    துர்வாச முனிவரின் சாபத்தால் அனைத்து செல்வத்தையும், பதவியையும் தேவேந்திரன் இழந்தார். தேவேந்திரன் பதவி இழந்ததை அறிந்த அசுரர்கள் தேவர்களுடன் போரிட்டனர். தேவர்கள் அசுரர்களை கொல்ல அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சிவபெருமானிடம் பெற்ற சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்தார். இதனால் மிகவும் சோர்ந்த தேவர்கள் விஷ்ணுவை கண்டு இதற்கு ஒரு தீர்வு அளிக்குமாறு வேண்டினார்கள். திருமால் மந்திரமலையை கொண்டு பாற்கடலை கடைய அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மட்டுமே நீங்கள் போரில் வெற்றி பெற இயலும் என்று கூறினார்.

    பாற்கடலை கடைய தேவர்களின் பலம் மட்டும் போதுமானதாக இருக்காது என எண்ணி, இந்திரன் அசுரர்களுடன் சமாதானம் பேச சென்று அவர்களை சம்மதிக்க வைத்தார். திருமால் முன்னிலை நின்று மந்திரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிராகவும் கொண்டு கடைய பருமன் தாங்காமல் மலையானது புரண்டு விழவும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இது பயனற்ற செயலாக கருதினர். தேவர்களின் இன்னல்களை போக்கவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் திருமால் மிகப்பெரிய கூர்மமாக (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்து பாற்கடலில் நுழைந்து மந்திரமலையை தாங்கிக் கொண்டார். அதன் பின் தேவர்களும், அசுரர்களும் மலையை கடைய அதில் இருந்து காமதேனு, கற்பக விருச்சகம், வெண் குதிரை, அப்சர கன்னிகள், ஐரோத வதம், திருமகள் இறுதியாக அமிர்தத்தை ஏந்திய தன்வந்திரியும் வெளிப்பட்டார். தேவர்களும், பூவுலகமும் நன்மை பெற வேண்டும் என எண்ணி கூர்ம மூர்த்தியாக அவதாரம் கொண்டார் திருமால்.

    கூர்ம அவதாரம் என்பது யாரையும் அழிப்பதற்காக எடுக்கப்படாமல் அனைவரும் நல்லமுறையில் வாழ வேண்டும் என எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம் ஆகும். எனவே ஒருவரின் உருவமைப்பு கொண்டு அவரை இகழாமல் அவரிடம் உள்ள உண்மையும், பெருமையையும் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதே கூர்ம அவதாரத்தின் நோக்கமாகும்.

    இந்நாளில் எல்லா வளங்களையும் அளிக்கும் வல்லமை கொண்ட திருமாலை வணங்கினால் சுபிட்சம் உண்டாகும். மேலும் தாயையும், குடும்பத்தை எவ்விதமான துன்பம் நேராமல் காத்து வரும் தந்தையையும் வணங்கி ஆசி பெறுவது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.
    அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.
    அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறை வேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கவுரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன் களைப் பெறலாம்.

    ஆடி செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப் பெற்றுத் தரும்.

    பெண்கள் அனைவரும் ஆடி செவ்வாய்க்கிழமைகளில், எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி நீராடி விரதம் மேற்கொண்டு அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும்.

    ராகுவின் அதிதேவதையாக காளிதேவி இருக்கிறாள். எனவே செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றால் திருமணத் தடை ஏற்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு கால பூஜையில் கலந்துகொள்ளலாம்.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை மட்டுமின்றி, முருகப்பெரு மானையும் வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருந்து தீபம் ஏற்றி, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

    ஆடி மாத செவ்வாய் அன்று அவ்வையார் விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்வையாரை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். பச்சரிசி மாவில், வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து, அதை அவ்வையாருக்கு நைவேத்தியமாக படைப்பார்கள். இரவு நேரத்தில்தான் அவ்வையார் விரதம் இருப்பார்கள். இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருக்கும் போது, நைவேத்தியமாக படைக்கப்பட்ட கொழுக்கட்டையை உண்பார்கள். இந்த விரதத்தை மூத்த சுமங்கலி பெண்களின் வழிகாட்டுதல்படி, இளம் பெண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். இதில் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் அவ்வை யாருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.
    ×