என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாது தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.
    பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார். சொர்னாகர்சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார். பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோயிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

    பைரவர்விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. பைரவர்  விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

    1. தலை குனியா வாழ்க்கை.

    2.  சுப மங்களம் ஊர்ஜிதம்.

    3.  தீயவினைகள் முற்றிலும் அழிவு.

    4.  பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.

    5.  தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.

    6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.

    7.  கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.

    8.  வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.

    9.  இறைவனை எளிதாக உணர்தல்.

    10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.


    ஆடி மாதம் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத விரதத்தின் சிறப்புகள் பற்றிய விவரமாக அறிந்து கொள்ளலாம்.
    ஆடி மாதம்   விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத விரதத்தின் சிறப்புகள் பற்றிய விவரம்:-

    *
    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

    * ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

    * ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    * ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ‘அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    * ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப் படுகிறது.

    * ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    * தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.

    * கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

    * ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    * தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    * ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவஎன்பது பக்தர்களின் நம்பிக்கை.

    * ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

    * ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    * ஆடி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    * ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

    * ஆடி மாதம்  விரதம் இருந்து முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    -தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ்
    மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் விரதம் இருந்து துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.
    * அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.

    * துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.

    * துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700  ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

    * பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.

    * கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

    * மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் விரதம் இருந்து துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.

    * துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.

    * ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி மயில்தோகை.

    * ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

    * ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.

    * தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

    * தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

    * ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

    * துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

    * துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.

    * சுவாஸினி பூஜையிலும் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

    * துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.

    * துர்க்கை என்ற சொல்லில் `த்’, `உ’, `ர்’, `க்’, `ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்’ என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.
    இன்றைய தினம் விரதம் இருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி சிவபுராணம் பாடி சிந்தை மகிழ வழிபட்டால் நலம் யாவும் தருவார் நடராஜப் பெருமான்.
    ஆனி மாதம் ஓர் அபூர்வமான மாதமாகும். சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. இம்மாதத்தில் பிறந்தவர்கள், பிறர் ஆச்சரியப்படும் அளவுக்கு புகழ்பெற்றவர்களாக விளங்குவர். காரணம் அந்த மாதத்தில்தான் தெய்வ தரிசனம் நமக்கு கிடைக்கிறது. சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரமன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ஆடல் அரசனைப் பாடிப்பணிந்து வழிபட்டால், கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும். பொதுவாக நடனம் மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்க நடராஜப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

    ஆனிக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆடி. அந்த மாதத்தில் நாம் ஓடி ஆடி சம்பாதித்து வாழ்க்கையில் சிறக்க, ஆனி மாத நடராஜர் தரிசனம் வழிகாட்டுகிறது. மிதுன ராசி, நவக்கிரகங்களில் புதனுக்குரிய வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் நடைபெறும் நடராஜர் தரிசனம் போன்ற விழாக்களில் கலந்து கொண்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

    ஆனி மாதத்தில் உத்ரம் அன்று, நடராஜப் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அவர் சன்னிதியில் சிவபுராணம் படிப்பார்கள். நம்மையும் உலகம் போற்றிக் கொண்டாடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

    அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம், இந்த ஆனி மாதம் ஆகும். நடராஜரை ‘தில்லைக் கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும். அதற்கு உகந்த நாளாக ஆனி மாதம் 31-ந் தேதி (15.7.2021) (இன்று)வியாழக்கிழமை அன்று உத்திர நட்சத்திரம் வருகின்றது. ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெறுகின்ற நாள் அதுவாகும். இன்றைய தினம் விரதம் இருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி சிவபுராணம் பாடி சிந்தை மகிழ வழிபட்டால் நலம் யாவும் தருவார் நடராஜப் பெருமான்.

    சிவாலயங்களில் சிவகாமியம்மன் உடனாய நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். பெரும்பாலான ஆலயங்களில் உற்சவ விக்கிரகமாகவே காட்சி தருவார். ஆனால் பேரையூர், ஊட்டத்தூர் போன்ற சில இடங்களில் ‘கல்’ விக்கிரகமாக நடராஜர், சிவகாமி அம்மன் தோற்றம் இருக்கும். எப்படியிருந்தாலும் கலைத்துறையில் பிரகாசிக்க நினைப்பவர்கள் சிதம்பரம் போன்ற நடராஜப் பெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் ஆலயத்திற்கு வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடலாம். மற்ற நாட்களில் மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்யலாம்.

    நடராஜர் அபிஷேகம் நடைபெறும் பொழுது பால் அபிஷேகம் பார்த்தால் பலன்கள் அதிகம் கிடைக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் நடைபெறும். சந்தன அபிஷேகம் பார்த்தால் சந்தோஷங்கள் அதிகரிக்கும். நாம் வாழ்வாங்கு வாழ வெற்றிகளைக் குவிக்க தில்லைக் கூத்தனை ஆனி உத்திரத்தில் வழிபடுவோம். தேனினும் இனிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதம் ஆனி மாதமாகும். தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரத்தில் நடராசப் பெருமானாக ஆக இருக்கும் சிவபெருமானுக்கு செய்யப்படும் ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பூஜை வழிபாடு தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனித் திருமஞ்சனம் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று செய்யப்படுகிறது. அந்த ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஒரு வருட காலத்தில் சிவபெருமானுக்கு விரதம் மேற்கொண்டு வழிபடுவதற்கு ஆறு நாட்கள் மிக சிறந்த தினங்களாக கூறப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஆனி உத்திர நட்சத்திர தினம். பல சிறப்புகளைக் கொண்ட ஆனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திர தினத்தன்று, சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவது மிகுந்த நன்மை அளிக்கக் கூடியதாகும்.

     தமிழகத்தில் இருக்கும் பல புகழ்பெற்ற சிவாலயங்களில் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று ஆனித் திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று, சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவதால் உடற்பிணிகள் நீங்கும். வாழ்வில் இருக்கின்ற கஷ்ட நிலை குறைந்து வளமை பொங்கும். உத்திரம் நட்சத்திரம் என்பது சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்களின் பாதிப்புகளைக் குறைத்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நாளைய ஆனி உத்திர தினம் முருகப்பெருமானுக்குரிய தினமான சஷ்டி தினத்தில் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் காலையில் சிவபெருமானை வழிபட்டு முடித்தவர்கள், மாலையில் முருகப்பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால் செவ்வாய் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், வீடு நிலம் போன்ற சொத்துகள் அமைப்பு போன்றவை கிடைக்கப் பெறுவார்கள்.
    இன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.
    ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஆனி மாதம் தெய்வ வழிபாடு, விரதங்கள், பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியான இன்று விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினமாகும். இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    இன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறந்ததால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
    சிவாலயங்களுக்கு செல்பவர்கள் அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்து வந்தால், நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.
    சிவன் கோவில்களில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும். ஒரு சில ஆலயங்களில் வன்னி மரமும் இருப்பதைக் காணலாம். சிவாலயங்களுக்கு செல்பவர்கள் அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்து வந்தால், நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் விலகும். வழக்குகள் சாதகமாகும்.

    இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் காணப்படும் நாகர் சிலைக்கு, வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகு காலத்தில் (காலை 10.30 மணி முதல் 12 மணி வரை) மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ அணிவித்து, அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி, தம்பதியர் தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

    குடும்பம் என்று இருந்தால், அனைவருக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் வரத்தான் செய்யும். ஒருவேளை தாங்க முடியாத துன்பங்கள் வந்து, மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது அந்த பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காக்கும்.

    கடன் தொல்லைகள் அதிகரித்து, குடும்பத்தை நடத்த முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடலாம். இதன் மூலம் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிபிறக்கும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை போன்றவை விலகி நன்மைகள் வந்துசேரும்.

    அம்மன் கோவில்களுக்குச் சென்றால், அங்கு பலிபீடத்தின் முன்பாக, திரிசூலம் வைத்திருப்பார்கள். இந்த திரிசூலத்தில் ஒரு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து, குங்கும பொட்டு வைத்து வழிபட்டு வந்தால், செய்வினை தோஷங்கள் நீங்கும்.

    வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டு வாருங்கள். இதன் மூலமாக வீட்டில் ஏதேனும் ஏவல், பில்லி, பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

    பெருமாளிள் கையில் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதம், சுதர்சன சக்கரம். பெரும்பாலான பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வார் என்ற பெயரில் இவர் தனிச் சன்னிதியில் காட்சி தருவார். இவரது சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வந்து வழிபட்டால், தொழில் மேம்படும். வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட, கொடுத்த கடன் வசூலாகும்.

    சிவபெருமானின் 64 வடிவ மூர்த்தங்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். இவரது சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால், கடன் தொல்லைகள் அகலும்.

    திங்கட்கிழமை வழிபாடு சிவபெருமானுக்கு உகந்தது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு இருந்தால், பால் அபிஷேகம் செய்து, அர்ச்சித்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் விலகும். சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றினாலும், சனி தோஷம் நீங்கும்.

    நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, வெள்ளிக் கிழமைகளில் அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் மறையும்.

    பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை பார்வதிதேவியுடன் வழிபாடு செய்து வந்தால், ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறலாம். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை கண்டு வணங்குவது, நோய் நொடிகளையும், வறுமையையும் அகற்றும்.
    நமது சுய ஜாதகத்தில் எந்த திசை, எந்த புத்தி நடக்கின்றது என்பதைப் பார்த்து அதற்குரிய தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும்.
    நமது சுய ஜாதகத்தில் எந்த திசை, எந்த புத்தி நடக்கின்றது என்பதைப் பார்த்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை நாம் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும்.

    குறிப்பாக செவ்வாய் திசையில் சனி புத்தியோ, வியாழன் திசையில் சுக்ர புத்தியோ நடைபெறுமேயானால் அந்த ஜாதகருக்குத் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. ஆரோக்கியத் தொல்லையும் உண்டு. அருகில் இருப்பவர்களாலும் தொல்லை ஏற்படலாம். இதுபோன்ற பகை கிரகத்தின் திசாபுத்தி நடைபெறும் பொழுது வைரவர் வழிபாடும், வராஹி வழிபாடும், துர்க்கை வழிபாடும், பிரதோஷ காலத்தில் நந்தி தேவர் வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

    பொதுவாக சூரிய திசை நட்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

    சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

    செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் தரும்.

    புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

    வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

    சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

    சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

    ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.
    எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடுவது முக்கியம், அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவிடுதல் மிக மிக முக்கியம்.
    ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைக்கு பித்ரு வழிபாட்டைச் செய்யாமல் விட்டால், நாமும் நம் வம்சமும் பித்ரு சாபத்துக்கும் பித்ரு தோஷத்துக்கும் ஆளாவோம் என்று எச்சரிக்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளயபட்ச காலங்கள், கிரகண காலம், திதி உள்ளிட்டவை என 96 தர்ப்பணங்கள் உள்ளன என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மாதப் பிறப்பு நாளில், தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோரை நினைத்து, அவர்களின் பெயரைச் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடுங்கள். அவர்களின் படங்களுக்கு பூ போட்டு வழிபாடு செய்யுங்க. காகத்துக்கு அவர்களை நினைத்து உணவிடுங்கள். ஆச்சார்யர்களுக்கு அரிசியும் வாழைக்காயும் வெற்றிலை பாக்கு தட்சணையுடன் வழங்குங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடுவது முக்கியம்.

    முடிந்தால், நம் முன்னோர்களுக்குப் பிடித்த உணவைப் படையலிடுங்கள். அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவிடுதல் மிக மிக முக்கியம். தயிர்சாதப் பொட்டலமாவது வழங்குங்கள். வீட்டில், முன்னோரை நினைத்து பூஜையறையில் விளக்கேற்றுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். குடும்பமாக சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார்கள். ஆசீர்வதிப்பார்கள்.

    இன்று மறக்காமல் பித்ருக்களை வணங்குவோம். நாமும் நம் சந்ததியினரும் குறைவின்றி நிறைவுற வாழ்வோம்.
    சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவபெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
    மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்ற சிறப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவ பெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மாத சிவராத்திரியின் முழு பலனை அடைவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் காணலாம்.

    சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம்.

    மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம். சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம் என்கிறது சாஸ்திரம்.
    பிரதோஷ காலத்தில் பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை எனும் பண்டைய நூல் கூறுகிறது.
    சுபகாரியங்கள் செய்வதற்கான சிறந்த மாதங்களில் ஒன்றாக ஆனி மாதம் இருக்கிறது. சூரியன் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் இருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் ஆகும். சூரியன், புதன் இரண்டும் நட்பு கிரகங்கள் என்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் நன்மையான பலன்களை தரவல்ல மாதமாக இருக்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறப்பான நன்மைகளை அளிக்க வல்லதாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தினமாக ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் வருகிறது. இந்த தினத்தில் நாம் சிவபெருமானை எப்படி வழிபட்டால் பல அற்புதமான பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஆனி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். நாளைய ஆனி தேய்பிறை பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருவதால் மிகவும் விசேஷமானதாகும். ஆனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.'

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.'''

    ஆனி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. ஆனி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சூரிய கிரக தோஷங்கள் நீங்குகிறது. கண்பார்வை குறைபாடுகளையும் தீர்க்கிறது. மேலும் பிரதோஷ காலத்தில் காராம் பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை எனும் பண்டைய நூல் கூறுகிறது. வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.
    ‘அபரா’ என்பதற்கு ‘அபாரமான’, ‘அளவில்லாத’ என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.
    பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினமாக ஏகாதசி திதி உள்ளது. தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக, ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். சில நேரங்களில் வருடத்திற்கு 25 ஏகாதசிகள் வருவதும் உண்டு. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் ஆனி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி, ‘அபரா ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஏகாதசி தினத்தில் நோன்பை கடைப்பிடித்து இறைவனை வழிபாடு செய்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

    ‘அபரா’ என்பதற்கு ‘அபாரமான’, ‘அளவில்லாத’ என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.

    அம்பரீஷன் எனும் மன்னன் திருமாலின் அதிதீவிர பக்தன். வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து அருளைப் பெற்று வந்தான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார். விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும் அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர் குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை. விரத காலம் முடிவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து, உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் திருமாலை நினைத்தபடியே துளசி தீர்த்தத்தை அருந்தி தனது உபவாசத்தை முடித்துக்கொண்டான்.

    இதைத் தனது ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு தனது தலைமுடியைப் பிடுங்கி ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி மன்னனைத் துரத்தத் தொடங்கியது. மன்னன் திருமாலின் பாதங்களைச் சரணடைந்தான். திருமால், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு அவரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல் திருமாலிடமே சரணடைந்தார் துர்வாசர். திருமால், “என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    துர்வாசர் வேறு வழியின்றி, அம்பரீஷனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். மன்னன் சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி அவரைக் காப்பாற்றினான். அன்றைய தினத்தில் அம்பரீஷன் மேற்கொண்ட விரதம்தான் ‘அபரா ஏகாதசி’ விரதம். அந்த விரதம் அவனைக் காப்பாற்றியதுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. துர்வாச முனிவரும் அபரா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, திருமால் பக்தனைத் தாக்க பூதத்தை ஏவிய தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார்.

    அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து திருமாலை, திரிவிக்ரமர் (உலகளந்த திருக்கோலம்) உருவத்தில் வழிபட்டால், எல்லா வளங்களும் வந்து சேரும். அவர்கள் இல்லங்களைத் தேடிவந்து லட்சுமி தேவி அருள்புரிவாள். லட்சுமி கடாட்சம் நிறையும், செல்வ வளமும் சேரும்.
    ×